குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௫௫
Qur'an Surah An-Nisa Verse 55
ஸூரத்துன்னிஸாவு [௪]: ௫௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَمِنْهُمْ مَّنْ اٰمَنَ بِهٖ وَمِنْهُمْ مَّنْ صَدَّ عَنْهُ ۗ وَكَفٰى بِجَهَنَّمَ سَعِيْرًا (النساء : ٤)
- famin'hum
- فَمِنْهُم
- Then of them
- அவர்களில் உண்டு
- man
- مَّنْ
- (are some) who
- எவர்
- āmana
- ءَامَنَ
- believed
- நம்பிக்கை கொண்டார்
- bihi
- بِهِۦ
- in him
- அதை
- wamin'hum
- وَمِنْهُم
- and of them
- இன்னும் அவர்களில்
- man
- مَّن
- (are some) who
- எவர்
- ṣadda
- صَدَّ
- turned away
- தடுத்தார்
- ʿanhu
- عَنْهُۚ
- from him
- அதை விட்டு
- wakafā
- وَكَفَىٰ
- and sufficient
- போதுமாகும்
- bijahannama
- بِجَهَنَّمَ
- (is) Hell
- நரகமே
- saʿīran
- سَعِيرًا
- (as a) Blazing Fire
- கொழுந்து விட்டெரியும் நெருப்பால்
Transliteration:
Faminhum man aamana bihee wa minhum man sadda 'anh; wa kafaa bi Jahannama sa'eeraa(QS. an-Nisāʾ:55)
English Sahih International:
And some among them believed in it, and some among them were averse to it. And sufficient is Hell as a blaze. (QS. An-Nisa, Ayah ௫௫)
Abdul Hameed Baqavi:
அவ்வாறிருந்தும் அவர்களில் சிலர்தான் அவ்வேதத்தை நம்பிக்கை கொண்டார்கள். மற்றோர் நிராகரித்துவிட்டார்கள். (நிராகரித்த அவர்களுக்கு) கொழுந்து விட்டெரியும் நரகமே தகுமா(ன கூலியா)கும். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௫௫)
Jan Trust Foundation
(அவ்வாறிருந்தும்) அவர்களில் சிலர் நம்பிக்கை கொண்டார்கள்; சிலர் தங்கள் முகங்களை அதைவிட்டும் திருப்பிக் கொண்டார்கள்; (இவ்வாறு முகந் திருப்பிக் கொண்டோருக்கு) கொழுந்து விட்டு எரியும் நரகமே போதுமானது.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்களில் அ(வ்வேதத்)தை நம்பிக்கைகொண்டவரும் உண்டு. அவர்களில் அதைவிட்டு (பிறரைத்) தடுத்தவரும் உண்டு. கொழுந்து விட்டெரியும் நெருப்பால் நரகமே போதுமாகும்.