குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௧௭௫
Qur'an Surah An-Nisa Verse 175
ஸூரத்துன்னிஸாவு [௪]: ௧௭௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَاَمَّا الَّذِيْنَ اٰمَنُوْا بِاللّٰهِ وَاعْتَصَمُوْا بِهٖ فَسَيُدْخِلُهُمْ فِيْ رَحْمَةٍ مِّنْهُ وَفَضْلٍۙ وَّيَهْدِيْهِمْ اِلَيْهِ صِرَاطًا مُّسْتَقِيْمًاۗ (النساء : ٤)
- fa-ammā
- فَأَمَّا
- So as for
- ஆகவே
- alladhīna
- ٱلَّذِينَ
- those who
- எவர்கள்
- āmanū
- ءَامَنُوا۟
- believed
- நம்பிக்கை கொண்டனர்
- bil-lahi
- بِٱللَّهِ
- in Allah
- அல்லாஹ்வை
- wa-iʿ'taṣamū
- وَٱعْتَصَمُوا۟
- and held fast
- இன்னும் பற்றிப்பிடித்தார்கள்
- bihi
- بِهِۦ
- to Him
- அவனை
- fasayud'khiluhum
- فَسَيُدْخِلُهُمْ
- then He will admit them
- நுழைப்பான்/ அவர்களை
- fī raḥmatin
- فِى رَحْمَةٍ
- in Mercy
- கருணையில்
- min'hu
- مِّنْهُ
- from Himself
- தன் புறத்திலிருந்து
- wafaḍlin
- وَفَضْلٍ
- and Bounty
- இன்னும் அருள்
- wayahdīhim
- وَيَهْدِيهِمْ
- and will guide them
- இன்னும் வழிகாட்டுவான்/அவர்களுக்கு
- ilayhi
- إِلَيْهِ
- to Himself
- தன் பக்கம்
- ṣirāṭan
- صِرَٰطًا
- (on) a way
- வழியை
- mus'taqīman
- مُّسْتَقِيمًا
- straight
- நேரானது
Transliteration:
Fa ammal lazeena aamanoo billaahi wa'tasamoo bihee fasa yudkhiluhum fee rah matim minhu wa fadlinw wa yahdeehim ilaihi Siraatam Mustaqeema(QS. an-Nisāʾ:175)
English Sahih International:
So those who believe in Allah and hold fast to Him – He will admit them to mercy from Himself and bounty and guide them to Himself on a straight path. (QS. An-Nisa, Ayah ௧௭௫)
Abdul Hameed Baqavi:
ஆகவே, எவர்கள் அல்லாஹ்வை உண்மையாகவே நம்பிக்கை கொண்டு, அவ(னது வழியி)னைப் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்கின்றார்களோ அவர்களை அவன் தன்னுடைய அன்பிலும், அருளிலும் செலுத்தி விடுகின்றான். அன்றி, தன்னிடம் வருவதற்குரிய நேரான வழியிலும் அவர்களைச் செலுத்துகின்றான். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௧௭௫)
Jan Trust Foundation
ஆகவே, யார் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு, அவ(ன் அருளிய நேர் வழியி)னை பலமாகப் பிடித்துக் கொள்கிறார்களோ, அவர்களைத் தன் ரஹ்மத்திலும், அருளிலும் புகச் செய்கிறான்; இன்னும் தன்னிடம் (அவர்கள் வந்து) சேரக்கூடிய நேரான வழியிலும் அவர்களைச் செலுத்துவான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஆகவே, எவர்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு, அவனைப் (பலமாகப்) பற்றிப் பிடித்தார்களோ அவர்களை தன் புறத்திலிருந்து கருணையிலும், அருளிலும் நுழைப்பான். இன்னும், தன் பக்கம் நேரான வழியையும் அவர்களுக்கு வழிகாட்டுவான்.