குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௧௪
Qur'an Surah An-Nisa Verse 14
ஸூரத்துன்னிஸாவு [௪]: ௧௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَمَنْ يَّعْصِ اللّٰهَ وَرَسُوْلَهٗ وَيَتَعَدَّ حُدُوْدَهٗ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيْهَاۖ وَلَهٗ عَذَابٌ مُّهِيْنٌ ࣖ (النساء : ٤)
- waman
- وَمَن
- And whoever
- இன்னும் எவர்
- yaʿṣi
- يَعْصِ
- disobeys
- மாறு செய்கிறார்
- l-laha
- ٱللَّهَ
- Allah
- அல்லாஹ்விற்கு
- warasūlahu
- وَرَسُولَهُۥ
- and His Messenger
- இன்னும் அவனுடைய தூதருக்கு
- wayataʿadda
- وَيَتَعَدَّ
- and transgresses
- இன்னும் மீறுகிறார்
- ḥudūdahu
- حُدُودَهُۥ
- His limits -
- அவனுடைய சட்டங்களை
- yud'khil'hu
- يُدْخِلْهُ
- He will admit him
- நுழைப்பான்/அவரை
- nāran
- نَارًا
- (to) Fire
- நரகத்தில்
- khālidan fīhā
- خَٰلِدًا فِيهَا
- (will) abide forever in it
- நிரந்தரமானவன்/அதில்
- walahu
- وَلَهُۥ
- And for him
- இன்னும் அவனுக்கு
- ʿadhābun
- عَذَابٌ
- (is) a punishment
- வேதனை
- muhīnun
- مُّهِينٌ
- humiliating
- இழிவுபடுத்தக்கூடியது
Transliteration:
Wa mai ya'sil laaha wa Rasoolahoo wa yata'adda hudoodahoo yudkhilhu Naaran khaalidan feehaa wa lahoo 'azaabum muheen(QS. an-Nisāʾ:14)
English Sahih International:
And whoever disobeys Allah and His Messenger and transgresses His limits – He will put him into the Fire to abide eternally therein, and he will have a humiliating punishment. (QS. An-Nisa, Ayah ௧௪)
Abdul Hameed Baqavi:
எவன் (இவ்விஷயங்களில்) அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்து, அவன் ஏற்படுத்திய வரம்புகளைக் கடக்கின்றானோ அவனை நரகத்தில் புகுத்திவிடுவான். அதிலேயே அவன் (என்றென்றும்) தங்கிவிடுவான். இழிவுபடுத்தும் வேதனையும் அவனுக்கு உண்டு. (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௧௪)
Jan Trust Foundation
எவன் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் மாறு செய்கிறானோ, இன்னும் அவன் விதித்துள்ள வரம்புகளை மீறுகிறானோ அவனை நரகில் புகுத்துவான்; அவன் அங்கு (என்றென்றும்) தங்கி விடுவான்; மேலும் அவனுக்கு இழிவான வேதனையுண்டு.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
எவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்து, அவனுடைய சட்டங்களை மீறுகிறாரோ அவரை (அல்லாஹ்) நரகத்தில் நுழைப்பான். அதில் (அவர்) நிரந்தரமானவராக (தங்குவார்). இழிவுபடுத்தும் வேதனையும் அவருக்கு உண்டு.