Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௧௩௧

Qur'an Surah An-Nisa Verse 131

ஸூரத்துன்னிஸாவு [௪]: ௧௩௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِۗ وَلَقَدْ وَصَّيْنَا الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ مِنْ قَبْلِكُمْ وَاِيَّاكُمْ اَنِ اتَّقُوا اللّٰهَ ۗوَاِنْ تَكْفُرُوْا فَاِنَّ لِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِۗ وَكَانَ اللّٰهُ غَنِيًّا حَمِيْدًا (النساء : ٤)

walillahi
وَلِلَّهِ
And for Allah
அல்லாஹ் விற்குரியனவே
mā fī l-samāwāti
مَا فِى ٱلسَّمَٰوَٰتِ
(is) whatever (is) in the heavens
எவை/வானங்களில்
wamā
وَمَا
and whatever
இன்னும் எவை
fī l-arḍi
فِى ٱلْأَرْضِۗ
(is) in the earth
பூமியில்
walaqad
وَلَقَدْ
And surely
திட்டவட்டமாக
waṣṣaynā
وَصَّيْنَا
We have instructed
உபதேசித்தோம்
alladhīna
ٱلَّذِينَ
those who
எவர்களுக்கு
ūtū
أُوتُوا۟
were given
கொடுக்கப்பட்டார்கள்
l-kitāba
ٱلْكِتَٰبَ
the Book
வேதம்
min qablikum
مِن قَبْلِكُمْ
from before you
உங்களுக்கு முன்னர்
wa-iyyākum
وَإِيَّاكُمْ
and yourselves
இன்னும் உங்களுக்கு
ani ittaqū
أَنِ ٱتَّقُوا۟
that you fear
அஞ்சுங்கள்
l-laha
ٱللَّهَۚ
Allah
அல்லாஹ்வை
wa-in takfurū
وَإِن تَكْفُرُوا۟
But if you disbelieve
நீங்கள் நிராகரித்தால்
fa-inna lillahi
فَإِنَّ لِلَّهِ
then indeed for Allah
நிச்சயமாக அல்லாஹ்விற்கு
mā fī l-samāwāti
مَا فِى ٱلسَّمَٰوَٰتِ
(is) whatever (is) in the heavens
எவை/வானங்களில்
wamā
وَمَا
and whatever
இன்னும் எவை
fī l-arḍi
فِى ٱلْأَرْضِۚ
(is) in the earth
பூமியில்
wakāna
وَكَانَ
And is
இருக்கிறான்
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
ghaniyyan
غَنِيًّا
Free of need
நிறைவானவனாக, மகா செல்வனாக
ḥamīdan
حَمِيدًا
Praiseworthy
புகழுக்குரியவனாக

Transliteration:

Wa lillaahi maafis samaawaati wa maa fil ard; wa laqad wassainal lazeena ootul Kitaaba min qablikum wa iyyaakum anit taqul laah; wa intakfuroo fa inna lillaahi maa fis samaawaati wa maa fil ard; wa kaanal laahu Ghaniyyan hameedaa (QS. an-Nisāʾ:131)

English Sahih International:

And to Allah belongs whatever is in the heavens and whatever is on the earth. And We have instructed those who were given the Scripture before you and yourselves to fear Allah. But if you disbelieve – then to Allah belongs whatever is in the heavens and whatever is on the earth. And ever is Allah Free of need and Praiseworthy. (QS. An-Nisa, Ayah ௧௩௧)

Abdul Hameed Baqavi:

(ஏனென்றால்) வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும், அல்லாஹ்வுக்குரியனவே! (நம்பிக்கையாளர்களே!) உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்களுக்கும், உங்களுக்கும் "அல்லாஹ் ஒருவனுக்கே பயப்படுங்கள்" என்றே நல்லுபதேசம் செய்திருக்கின்றோம். ஆகவே (அவனுக்கு) நீங்கள் மாறுசெய்தால் (அதனால் அவனுக்கொன்றும் நஷ்டமில்லை.) நிச்சயமாக வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்குரியனவாகவே இருக்கின்றன. அல்லாஹ் தேவையற்ற வனாகவும், (அனைவராலும்) புகழப்பட்டவனுமாக இருக்கின்றான். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௧௩௧)

Jan Trust Foundation

வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் எல்லாம் அல்லாஹ்வுக்கே சொந்தம். உங்களுக்குமுன் வேதம் கொடுக்கப்பட்டவர்களையும், உங்களையும் அல்லாஹ்வுக்கே பயந்து நடக்குமாறு (வஸிய்யத்து) உபதேசம் செய்தோம்; நீங்கள் அவனுக்கு மாறு செய்தால் (அவனுக்கு நஷ்டம் ஒன்றுமில்லை) - நிச்சயமாக வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் எல்லாம் அல்லாஹ்வுக்கே சொந்தம்; மேலும் அல்லாஹ் எவர் தேவையும் அற்றவனாகவும், புகழுக்கு உரியவனாகவும் இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வுக்குரியனவே! உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்களுக்கும், உங்களுக்கும் “அல்லாஹ்வை அஞ்சுங்கள்”என்று திட்டவட்டமாக உபதேசித்தோம். நீங்கள் நிராகரித்தால் (அவனுக்கு நஷ்டமில்லை), வானங்களிலுள்ளவையும், பூமியில் உள்ளவையும் நிச்சயமாக அல்லாஹ்விற்கு உரியன. அல்லாஹ் முற்றிலும் நிறைவானவனாக, புகழுக்குரியவனாக இருக்கிறான்.