குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௧௨
Qur'an Surah An-Nisa Verse 12
ஸூரத்துன்னிஸாவு [௪]: ௧௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
۞ وَلَكُمْ نِصْفُ مَا تَرَكَ اَزْوَاجُكُمْ اِنْ لَّمْ يَكُنْ لَّهُنَّ وَلَدٌ ۚ فَاِنْ كَانَ لَهُنَّ وَلَدٌ فَلَكُمُ الرُّبُعُ مِمَّا تَرَكْنَ مِنْۢ بَعْدِ وَصِيَّةٍ يُّوْصِيْنَ بِهَآ اَوْ دَيْنٍ ۗ وَلَهُنَّ الرُّبُعُ مِمَّا تَرَكْتُمْ اِنْ لَّمْ يَكُنْ لَّكُمْ وَلَدٌ ۚ فَاِنْ كَانَ لَكُمْ وَلَدٌ فَلَهُنَّ الثُّمُنُ مِمَّا تَرَكْتُمْ مِّنْۢ بَعْدِ وَصِيَّةٍ تُوْصُوْنَ بِهَآ اَوْ دَيْنٍ ۗ وَاِنْ كَانَ رَجُلٌ يُّوْرَثُ كَلٰلَةً اَوِ امْرَاَةٌ وَّلَهٗٓ اَخٌ اَوْ اُخْتٌ فَلِكُلِّ وَاحِدٍ مِّنْهُمَا السُّدُسُۚ فَاِنْ كَانُوْٓا اَكْثَرَ مِنْ ذٰلِكَ فَهُمْ شُرَكَاۤءُ فِى الثُّلُثِ مِنْۢ بَعْدِ وَصِيَّةٍ يُّوْصٰى بِهَآ اَوْ دَيْنٍۙ غَيْرَ مُضَاۤرٍّ ۚ وَصِيَّةً مِّنَ اللّٰهِ ۗ وَاللّٰهُ عَلِيْمٌ حَلِيْمٌۗ (النساء : ٤)
- walakum
- وَلَكُمْ
- And for you
- உங்களுக்கு
- niṣ'fu
- نِصْفُ
- (is) half
- பாதி
- mā taraka
- مَا تَرَكَ
- (of) what (is) left
- எது/விட்டுச் சென்ற
- azwājukum
- أَزْوَٰجُكُمْ
- by your wives
- உங்கள் மனைவிகள்
- in lam yakun
- إِن لَّمْ يَكُن
- if not is
- இல்லையென்றால்
- lahunna
- لَّهُنَّ
- for them
- அவர்களுக்கு
- waladun
- وَلَدٌۚ
- a child
- பிள்ளை
- fa-in kāna
- فَإِن كَانَ
- But if is
- இருந்தால்
- lahunna
- لَهُنَّ
- for them
- அவர்களுக்கு
- waladun
- وَلَدٌ
- a child
- பிள்ளை
- falakumu
- فَلَكُمُ
- then for you
- உங்களுக்கு
- l-rubuʿu
- ٱلرُّبُعُ
- (is) the fourth
- கால்
- mimmā tarakna
- مِمَّا تَرَكْنَۚ
- of what they left
- அவர்கள் விட்டுச் சென்ற
- min baʿdi
- مِنۢ بَعْدِ
- from after
- பின்னர்
- waṣiyyatin
- وَصِيَّةٍ
- any will
- மரண சாசனம்
- yūṣīna
- يُوصِينَ
- they have made
- மரண சாசனம் செய்கின்றனர்
- bihā
- بِهَآ
- [for which]
- அதை
- aw daynin
- أَوْ دَيْنٍۚ
- or any debt
- அல்லது கடன்
- walahunna
- وَلَهُنَّ
- And for them
- இன்னும் அவர்களுக்கு
- l-rubuʿu
- ٱلرُّبُعُ
- (is) the fourth
- கால்
- mimmā taraktum
- مِمَّا تَرَكْتُمْ
- of what you left
- நீங்கள் விட்டுச் சென்ற
- in lam yakun
- إِن لَّمْ يَكُن
- if not is
- இல்லையென்றால்
- lakum
- لَّكُمْ
- for you
- உங்களுக்கு
- waladun
- وَلَدٌۚ
- a child
- பிள்ளை
- fa-in kāna
- فَإِن كَانَ
- But if is
- இருந்தால்
- lakum
- لَكُمْ
- for you
- உங்களுக்கு
- waladun
- وَلَدٌ
- a child
- பிள்ளை
- falahunna
- فَلَهُنَّ
- then for them
- அவர்களுக்கு
- l-thumunu
- ٱلثُّمُنُ
- (is) the eighth
- எட்டில் ஒன்று
- mimmā
- مِمَّا
- of what
- எதிலிருந்து
- taraktum
- تَرَكْتُمۚ
- you left
- விட்டுச் சென்றீர்கள்
- min baʿdi
- مِّنۢ بَعْدِ
- from after
- பின்னர்
- waṣiyyatin
- وَصِيَّةٍ
- any will
- மரண சாசனம்
- tūṣūna
- تُوصُونَ
- you have made
- மரண சாசனம் கூறுகிறீர்கள்
- bihā
- بِهَآ
- [for which]
- அதை
- aw daynin
- أَوْ دَيْنٍۗ
- or any debt
- அல்லது கடன்
- wa-in kāna
- وَإِن كَانَ
- And if [is]
- இருந்தால்
- rajulun
- رَجُلٌ
- a man
- ஓர் ஆண்
- yūrathu
- يُورَثُ
- (whose wealth) is to be inherited
- வாரிசாக்கப்படுவான்
- kalālatan
- كَلَٰلَةً
- (has) no parent or child
- வாரிசு இல்லாதவர்
- awi im'ra-atun
- أَوِ ٱمْرَأَةٌ
- or a women
- ஒரு பெண்
- walahu
- وَلَهُۥٓ
- and for him
- இன்னும் அவருக்கு
- akhun
- أَخٌ
- (is) a brother
- சகோதரன்
- aw
- أَوْ
- or
- அல்லது
- ukh'tun
- أُخْتٌ
- a sister
- சகோதரி
- falikulli wāḥidin
- فَلِكُلِّ وَٰحِدٍ
- then for each one
- ஒவ்வொருவருக்கும்
- min'humā
- مِّنْهُمَا
- of (the) two
- அவ்விருவரில்
- l-sudusu
- ٱلسُّدُسُۚ
- (is) the sixth
- ஆறில் ஒன்று
- fa-in kānū
- فَإِن كَانُوٓا۟
- But if they are
- அவர்கள் இருந்தால்
- akthara
- أَكْثَرَ
- more
- அதிகமாக
- min dhālika
- مِن ذَٰلِكَ
- than that
- அதை விட
- fahum
- فَهُمْ
- then they
- அவர்கள்
- shurakāu
- شُرَكَآءُ
- (are) partners
- பங்குதாரர்கள்
- fī l-thuluthi
- فِى ٱلثُّلُثِۚ
- in the third
- மூன்றில் ஒன்றில்
- min baʿdi
- مِنۢ بَعْدِ
- from after
- பின்னர்
- waṣiyyatin
- وَصِيَّةٍ
- any will
- மரண சாசனம்
- yūṣā
- يُوصَىٰ
- was made
- மரண சாசனம் கூறப்படுகிறது
- bihā
- بِهَآ
- [for which]
- அதை
- aw daynin
- أَوْ دَيْنٍ
- or any debt
- அல்லது கடன்
- ghayra
- غَيْرَ
- without
- அல்லாத
- muḍārrin
- مُضَآرٍّۚ
- (being) harmful
- நஷ்டம் ஏற்படுத்துபவர்
- waṣiyyatan
- وَصِيَّةً
- An ordinance
- நல்லுபதேசம்
- mina
- مِّنَ
- from
- இருந்து
- l-lahi
- ٱللَّهِۗ
- Allah
- அல்லாஹ்
- wal-lahu
- وَٱللَّهُ
- And Allah
- அல்லாஹ்
- ʿalīmun
- عَلِيمٌ
- (is) All-Knowing
- நன்கறிந்தவன்
- ḥalīmun
- حَلِيمٌ
- All-Forbearing
- மகா சகிப்பாளன்
Transliteration:
Wa lakum nisfu maa taraka azwaajukum il lam yakul lahunna walad; fa in kaana lahunna waladun falakumur rub'u mimmaa tarakna mim ba'di wasiyyatiny yooseena bihaaa aw dayn; wa lahunnar rubu'u mimmaa tarakum il lam yakul lakum walad; fa in kaana lakum waladun falahunnas sumunu mimmaa taraktum; mim ba'di wasiyyatin toosoona bihaaa aw dayn; wa in kaana rajuluny yoorasu kalaalatan awim ra atunw wa lahooo akhun aw ukhtun falikulli waahidim minhumas sudus; fa in kaanooo aksara min zaalika fahum shurakaaa'u fissulusi mim ba'di wasiyyatiny yoosaa bihaaa aw dainin ghaira mudaaarr; wasiyyatam minal laah; wallaahu 'Aleemun Haleem(QS. an-Nisāʾ:12)
English Sahih International:
And for you is half of what your wives leave if they have no child. But if they have a child, for you is one fourth of what they leave, after any bequest they [may have] made or debt. And for them [i.e., the wives] is one fourth if you leave no child. But if you leave a child, then for them is an eighth of what you leave, after any bequest you [may have] made or debt. And if a man or woman leaves neither ascendants nor descendants but has a brother or a sister, then for each one of them is a sixth. But if they are more than two, they share a third, after any bequest which was made or debt, as long as there is no detriment [caused]. [This is] an ordinance from Allah, and Allah is Knowing and Forbearing. (QS. An-Nisa, Ayah ௧௨)
Abdul Hameed Baqavi:
உங்கள் மனைவி(கள் இறந்து அவர்)களுக்கு பிள்ளைகளும் இல்லாவிட்டால் அவர்கள் விட்டுச் சென்ற சொத்தில் உங்களுக்குப் பாதி உண்டு. அவர்களுக்கு பிள்ளைகள் இருந்தாலோ அவர்கள் விட்டுச் சென்றதில் உங்களுக்குக் கால் பாகம்தான் (கிடைக்கும்.) அதுவும் (அவருடைய) மரண சாஸனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னரே! உங்களுக்குப் பிள்ளைகள் இல்லாத நிலைமையில் (நீங்கள் இறந்துவிட்டாலோ) உங்கள் மனைவிகளுக்கு நீங்கள் விட்டுச்சென்ற (சொத்)தில் கால் பாகம்தான் (கிடைக்கும்.) உங்களுக்குப் பிள்ளைகள் இருந்தாலோ நீங்கள் விட்டுச் சென்ற சொத்தில் எட்டில் ஒரு பாகம்தான் அவர்களுக்கு உண்டு. அதுவும் (உங்கள்) மரண சாஸனத்தையும், கடனையும் நீங்கள் கொடுத்த பின்னரே! (தந்தை, பாட்டன், பிள்ளை, பேரன் ஆகிய) வாரிசுகள் இல்லாத ஒரு ஆணோ அல்லது ஒரு பெண்ணோ இறந்து (அவர்களுக்கு) ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி இருந்தால், ஒவ்வொருவருக்கும் (இறந்தவர் விட்டுச் சென்றதில்) ஆறில் ஒரு பாகமுண்டு. இதற்கு அதிகமாக (அதாவது ஒருவருக்கு மேற்பட்டு ஒரு சகோதரனும், ஒரு சகோதரியும் அல்லது இரு சகோதரர்களும், இரு சகோதரிகளும்) இருந்தால் (சொத்தில்) மூன்றில் ஒரு பாகத்தில் அவர்கள் அனைவரும் சமமான பங்குதாரர்கள். இதுவும் (அவருடைய) மரண சாஸனம், கடன் ஆகியவைகளைக் கொடுத்த பின்னரே! எனினும், (இந்தக் கடன், மற்றும் மரண சாஸனத்தாலும் வாரிசுகளில் எவருக்கும்) நஷ்டம் ஏற்படுத்தாதவராக இருக்க வேண்டும். (இது) அல்லாஹ்வுடைய நல்லுபதேசமாகும். அல்லாஹ் மிக அறிந்தவனும் பொறுமையுடையவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௧௨)
Jan Trust Foundation
இன்னும் உங்கள் மனைவியர் விட்டுச் சென்றதில் - அவர்களுக்குப் பிள்ளை இல்லாதிருந்தால் உங்களுக்குப் பாதி பாகம் உண்டு; அவர்களுக்குப் பிள்ளை இருந்தால் அவர்கள் விட்டுச் சென்றவற்றிலிருந்து உங்களுக்கு கால் பாகம்தான் - (இதுவும்) அவர்கள் செய்திருக்கிற மரண சாஸனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான் - தவிர உங்களுக்குப் பிள்ளையில்லாதிருப்பின் நீங்கள் விட்டுச் சென்றதிலிருந்து அவர்களுக்குக் கால் பாகம்தான்; உங்களுக்குப் பிள்ளை இருந்தால், அப்போது அவர்களுக்கு நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம்தான்; (இதுவும்) நீங்கள் செய்திருக்கும் மரண சாஸனத்தையும் கடனையும் நிறைவேற்றிய பின்னரேதான்; தந்தை, பாட்டன் போன்ற முன் வாரிசுகளோ அல்லது பிள்ளை, பேரன் போன்ற பின் வாரிசுகளோ இல்லாத ஓர் ஆணோ அல்லது பெண்ணோ - இவர்களுக்கு ஒரு சகோதரனோ அல்லது சகோதரியோ இருந்தால் - அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உண்டு; ஆனால் இதற்கு அதிகமாக இருந்தால் அவர்கள் மூன்றில் ஒரு பாகத்தில் சமமாகப் பங்கிட்டுக் கொள்ளவேண்டும் - (இதுவும்) அவர்களின் மரண சாஸனமும் கடனும் நிறைவேற்றிய பின்னர்தான்; ஆனால் (மரண சாஸனத்தைக் கொண்டு வாரிசுகள்) எவருக்கும் நஷ்டம் ஏற்படக் கூடாது (இது) அல்லாஹ்வினால் விதிக்கப்பட்டதாகும்; இன்னும் அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும், மிக்க பொறுமையுடையோனுமாகவும் இருக்கின்றான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
உங்கள் மனைவி விட்டுச் சென்ற (சொத்)தில் - அவர்களுக்குப் பிள்ளை இல்லையென்றால் - உங்களுக்குப் பாதி உண்டு. அவர்களுக்குப் பிள்ளை இருந்தால் அவர்கள் விட்டுச் சென்றதில் உங்களுக்குக் கால் (பாகம்) உண்டு அவர்கள் செய்கின்ற மரண சாசனம், அல்லது கடனுக்குப் பின்னர். உங்களுக்குப் பிள்ளை இல்லையென்றால் நீங்கள் விட்டுச் சென்ற (சொத்)தில் கால் (பாகம்) அவர்களுக்கு உண்டு. உங்களுக்குப் பிள்ளை இருந்தால் நீங்கள் விட்டுச் சென்ற (சொத்)தில் எட்டில் ஒன்று அவர்களுக்கு உண்டு. நீங்கள் செய்யும் மரண சாசனம், அல்லது கடனுக்குப் பின்னர். (தந்தை, பாட்டன், பிள்ளை, பேரன் ஆகிய) வாரிசுகள் இல்லாத ஓர் ஆண் அல்லது ஒரு பெண் (மரணித்து) இருந்தால் இன்னும் அவருக்கு ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி இருந்தால், அவ்விருவரில் ஒவ்வொருவருக்கும் (இறந்தவர் சொத்தில்) ஆறில் ஒன்று உண்டு. இதைவிட அதிகமாக அவர்கள் இருந்தால் அவர்கள் மூன்றில் ஒன்றில் (சமமான) பங்குதாரர்கள் ஆவர். செய்யப்படும் மரண சாசனம், அல்லது கடனுக்குப் பின்னர். (இந்தக் கடன், மற்றும் மரண சாசனத்தாலும் வாரிசுகளில் எவருக்கும் இறந்தவர்) நஷ்டம் ஏற்படுத்தாதவராக (இருக்க வேண்டும்). அல்லாஹ்விடமிருந்து நல்லுபதேசமாக (இந்த சட்டங்கள் உங்களுக்கு உபதேசிக்கப்படுகின்றன). அல்லாஹ் நன்கறிந்தவன், மகா சகிப்பாளன்.