குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௧௧௯
Qur'an Surah An-Nisa Verse 119
ஸூரத்துன்னிஸாவு [௪]: ௧௧௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَّلَاُضِلَّنَّهُمْ وَلَاُمَنِّيَنَّهُمْ وَلَاٰمُرَنَّهُمْ فَلَيُبَتِّكُنَّ اٰذَانَ الْاَنْعَامِ وَلَاٰمُرَنَّهُمْ فَلَيُغَيِّرُنَّ خَلْقَ اللّٰهِ ۚ وَمَنْ يَّتَّخِذِ الشَّيْطٰنَ وَلِيًّا مِّنْ دُوْنِ اللّٰهِ فَقَدْ خَسِرَ خُسْرَانًا مُّبِيْنًا (النساء : ٤)
- wala-uḍillannahum
- وَلَأُضِلَّنَّهُمْ
- "And I will surely mislead them
- இன்னும் நிச்சயம் வழிகெடுப்பேன்/அவர்கû ள
- wala-umanniyannahum
- وَلَأُمَنِّيَنَّهُمْ
- and surely arouse desires in them
- இன்னும் நிச்சயமாக வீண் நம்பிக்கையூட்டுவேன்/அவர்களுக்கு
- walaāmurannahum
- وَلَءَامُرَنَّهُمْ
- and surely I will order them
- இன்னும் நிச்சயம் ஏவுவேன்/அவர்களுக்கு
- falayubattikunna
- فَلَيُبَتِّكُنَّ
- so they will surely cut off
- ஆகவே நிச்சயம் அறுப்பார்கள்
- ādhāna
- ءَاذَانَ
- (the) ears
- காதுகளை
- l-anʿāmi
- ٱلْأَنْعَٰمِ
- (of) the cattle
- கால்நடைகளின்
- walaāmurannahum
- وَلَءَامُرَنَّهُمْ
- and surely I will order them
- இன்னும் நிச்சயம் ஏவுவேன்/அவர்களுக்கு
- falayughayyirunna
- فَلَيُغَيِّرُنَّ
- so they will surely change
- நிச்சயமாக அவர்கள் மாற்றுவார்கள்
- khalqa
- خَلْقَ
- (the) creation
- படைப்புகளை
- l-lahi
- ٱللَّهِۚ
- (of) Allah"
- அல்லாஹ்வின்
- waman
- وَمَن
- And whoever
- எவன்
- yattakhidhi
- يَتَّخِذِ
- takes
- எடுத்துக் கொள்வான்
- l-shayṭāna
- ٱلشَّيْطَٰنَ
- the Shaitaan
- ஷைத்தானை
- waliyyan
- وَلِيًّا
- (as) a friend
- நண்பனாக, பாதுகாவலனாக
- min dūni l-lahi
- مِّن دُونِ ٱللَّهِ
- from besides Allah
- அல்லாஹ்வையன்றி
- faqad khasira
- فَقَدْ خَسِرَ
- then surely he (has) lost
- திட்டமாகநஷ்டமடைந்தான்
- khus'rānan
- خُسْرَانًا
- a loss
- நஷ்டம்
- mubīnan
- مُّبِينًا
- manifest
- பகிரங்கமானது
Transliteration:
Wa la udillannahum wa la umanni yannnahum wa la aamurannahum fala yubat tikunna aazaanal lan'aami wa la aamurannahum fala yughai yirunna khalqal laah; wa mai yattakhizish Shaitaana waliyyam mmin doonil laahi faqad khasira khusraanam mubeena(QS. an-Nisāʾ:119)
English Sahih International:
And I will mislead them, and I will arouse in them [sinful] desires, and I will command them so they will slit the ears of cattle, and I will command them so they will change the creation of Allah." And whoever takes Satan as an ally instead of Allah has certainly sustained a clear loss. (QS. An-Nisa, Ayah ௧௧௯)
Abdul Hameed Baqavi:
அன்றி "நிச்சயமாக நான் அவர்களை வழி கெடுப்பேன். அவர்களுக்கு வீண் நம்பிக்கைகளை உண்டுபண்ணி (பிசாசு களுக்காக பிரார்த்தனை செய்துவிடப்பட்ட) ஆடு, மாடுகளின் காதுகளை அறுத்து விடும்படியும் அவர்களை ஏவுவேன். அல்லாஹ் லிவின் படைப்பினங்(களின் கோலங்)களை மாற்றும்படியாகவும் நிச்சயமாக நான் அவர்களை ஏவுவேன்" (என்று கூறினான்.) ஆகவே, எவன் அல்லாஹ்வையன்றி (இத்தகைய) ஷைத்தானை (தனக்கு) பாதுகாவலனாக எடுத்துக் கொள்கின்றானோ அவன் நிச்சயமாக பகிரங்கமான நஷ்டத்தையே அடைந்து விடுவான். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௧௧௯)
Jan Trust Foundation
“இன்னும் நிச்சயமாக நான் அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களிடம் வீணான எண்ணங்களையும் உண்டாக்குவேன்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளின் காதுகளை அறுத்து விடும்படியும் அவர்களை ஏவுவேன். இன்னும் அல்லாஹ்வின் படைப்புகளையுடைய கோலங்களை மாற்றும்படியும் ஏவுவேன்” என்றும் ஷைத்தான் கூறினான்; எனவே எவன் அல்லாஹ்வை விட்டு ஷைத்தானை உற்ற நண்பனாக ஆக்கிக் கொள்கிறானோ, அவன் நிச்சயமாக பகிரங்கமான பெரு நஷ்டத்தை அடைந்தவன் ஆவான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
“நிச்சயம் அவர்களை வழி கெடுப்பேன். நிச்சயம் அவர்களுக்கு வீண் நம்பிக்கைகளை ஊட்டுவேன்; நிச்சயம் அவர்களுக்கு (தீமையை) ஏவுவேன். ஆகவே, (சிலைகளுக்கு நேர்ச்சை செய்யப்பட்ட) கால்நடைகளின் காதுகளை நிச்சயம் அறுப்பார்கள். நிச்சயம் அவர்களுக்கு ஏவுவேன். ஆகவே, அல்லாஹ்வின் படைப்பு(களின் கோலங்)களை நிச்சயமாக மாற்றுவார்கள்” (என்று கூறினான்). எவன் அல்லாஹ்வையன்றி ஷைத்தானை நண்பனாக எடுத்துக் கொள்வானோ அவன் திட்டமாக பகிரங்கமான நஷ்டமடைந்தான்.