Skip to content

ஸூரா ஸூரத்துன்னிஸாவு - Page: 16

An-Nisa

(an-Nisāʾ)

௧௫௧

اُولٰۤىِٕكَ هُمُ الْكٰفِرُوْنَ حَقًّا ۚوَاَعْتَدْنَا لِلْكٰفِرِيْنَ عَذَابًا مُّهِيْنًا ١٥١

ulāika
أُو۟لَٰٓئِكَ
humu
هُمُ
அவர்கள்தான்
l-kāfirūna
ٱلْكَٰفِرُونَ
நிராகரிப்பாளர்கள்
ḥaqqan
حَقًّاۚ
உண்மையில்
wa-aʿtadnā
وَأَعْتَدْنَا
இன்னும் ஏற்படுத்தியுள்ளோம்
lil'kāfirīna
لِلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்களுக்கு
ʿadhāban
عَذَابًا
வேதனையை
muhīnan
مُّهِينًا
இழிவு தரும்
இத்தகையவர்கள் நிச்சயமாக நிராகரிப்பவர்கள்தான். நிராகரிப்பவர்களுக்கு நாம் இழிவு தரும் வேதனையையே சித்தப்படுத்தி வைத்திருக்கின்றோம். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௫௧)
Tafseer
௧௫௨

وَالَّذِيْنَ اٰمَنُوْا بِاللّٰهِ وَرُسُلِهٖ وَلَمْ يُفَرِّقُوْا بَيْنَ اَحَدٍ مِّنْهُمْ اُولٰۤىِٕكَ سَوْفَ يُؤْتِيْهِمْ اُجُوْرَهُمْ ۗوَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِيْمًا ࣖ ١٥٢

wa-alladhīna
وَٱلَّذِينَ
எவர்கள்
āmanū
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வை
warusulihi
وَرُسُلِهِۦ
இன்னும் அவனுடைய தூதர்களை
walam yufarriqū
وَلَمْ يُفَرِّقُوا۟
இன்னும் பிரிவினை செய்யவில்லை
bayna
بَيْنَ
இடையில்
aḥadin
أَحَدٍ
ஒருவர்
min'hum
مِّنْهُمْ
அவர்களில்
ulāika
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
sawfa yu'tīhim
سَوْفَ يُؤْتِيهِمْ
கொடுப்பான்/அவர்களுக்கு
ujūrahum
أُجُورَهُمْۗ
கூலிகளை அவர்களுடைய
wakāna
وَكَانَ
இருக்கிறான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ghafūran
غَفُورًا
மகா மன்னிப்பாளனாக
raḥīman
رَّحِيمًا
மகாகருணையாளனாக
எவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதர்களையும் நம்பிக்கை கொண்டு, அவர்களுக்கிடையில் பிரிவினை செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுக்கு அவர்களுடைய கூலியை (அல்லாஹ் மறுமையில்) கொடுப்பான். அல்லாஹ் மிக்க பிழை பொறுப்பவனும், கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௫௨)
Tafseer
௧௫௩

يَسْـَٔلُكَ اَهْلُ الْكِتٰبِ اَنْ تُنَزِّلَ عَلَيْهِمْ كِتٰبًا مِّنَ السَّمَاۤءِ فَقَدْ سَاَلُوْا مُوْسٰٓى اَكْبَرَ مِنْ ذٰلِكَ فَقَالُوْٓا اَرِنَا اللّٰهَ جَهْرَةً فَاَخَذَتْهُمُ الصَّاعِقَةُ بِظُلْمِهِمْۚ ثُمَّ اتَّخَذُوا الْعِجْلَ مِنْۢ بَعْدِ مَا جَاۤءَتْهُمُ الْبَيِّنٰتُ فَعَفَوْنَا عَنْ ذٰلِكَ ۚ وَاٰتَيْنَا مُوْسٰى سُلْطٰنًا مُّبِيْنًا ١٥٣

yasaluka
يَسْـَٔلُكَ
கேட்கிறார்(கள்)/உம்மிடம்
ahlu l-kitābi
أَهْلُ ٱلْكِتَٰبِ
வேதக்காரர்கள்
an tunazzila
أَن تُنَزِّلَ
நீர் இறக்கும்படி
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்கள் மீது
kitāban
كِتَٰبًا
ஒரு வேதத்தை
mina l-samāi
مِّنَ ٱلسَّمَآءِۚ
வானத்திலிருந்து
faqad
فَقَدْ
திட்டமாக
sa-alū
سَأَلُوا۟
கேட்டனர்
mūsā
مُوسَىٰٓ
மூஸா(விடம்)
akbara
أَكْبَرَ
மிகப் பெரியதை
min dhālika
مِن ذَٰلِكَ
இதை விட
faqālū
فَقَالُوٓا۟
கூறினர்
arinā
أَرِنَا
எங்களுக்குக் காண்பி
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
jahratan
جَهْرَةً
கண்கூடாக
fa-akhadhathumu
فَأَخَذَتْهُمُ
ஆகவே, அவர்களைப் பிடித்தது
l-ṣāʿiqatu
ٱلصَّٰعِقَةُ
இடிமுழக்கம்
biẓul'mihim
بِظُلْمِهِمْۚ
அவர்களின் அநியாயத்தினால்
thumma
ثُمَّ
பிறகு
ittakhadhū
ٱتَّخَذُوا۟
எடுத்துக் கொண்டனர்
l-ʿij'la
ٱلْعِجْلَ
காளைக் கன்றை
min baʿdi
مِنۢ بَعْدِ
பின்னர்
mā jāathumu
مَا جَآءَتْهُمُ
அவர்களிடம் வந்த(து)
l-bayinātu
ٱلْبَيِّنَٰتُ
தெளிவான அத்தாட்சிகள்
faʿafawnā
فَعَفَوْنَا
மன்னித்தோம்
ʿan dhālika
عَن ذَٰلِكَۚ
அதை
waātaynā
وَءَاتَيْنَا
இன்னும் கொடுத்தோம்
mūsā
مُوسَىٰ
மூஸாவிற்கு
sul'ṭānan
سُلْطَٰنًا
சான்றை
mubīnan
مُّبِينًا
தெளிவான(து)
(நபியே!) வேதத்தையுடையவர்கள் (தாங்கள் விரும்புகின்ற படி) வானத்திலிருந்து தங்கள்மீது ஒரு வேதத்தை இறக்கி வைக்குமாறு உங்களிடம் கேட்கின்றனர். நிச்சயமாக இதைவிடப் பெரியதொன்றையே மூஸாவிடம் அவர்கள் கேட்டு "அல்லாஹ்வை எங்களுக்குக் கண்கூடாகக் காண்பியுங்கள்" என்று கூறினார்கள். ஆகவே, அவர்களின் அநியாயத்தின் காரணமாக அவர்களை இடி முழக்கம் பிடித்துக் கொண்டது. (இதுமட்டுமா?) அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்ததன் பின்னரும் காளைக்கன்றை(த் தெய்வமாக) எடுத்துக் கொண்டனர். இதனையும் நாம் மன்னித்து (அவர்களுடைய நபி) மூஸாவுக்கு (பின்னும்) தெளிவான அத்தாட்சியைக் கொடுத்தோம். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௫௩)
Tafseer
௧௫௪

وَرَفَعْنَا فَوْقَهُمُ الطُّوْرَ بِمِيْثَاقِهِمْ وَقُلْنَا لَهُمُ ادْخُلُوا الْبَابَ سُجَّدًا وَّقُلْنَا لَهُمْ لَا تَعْدُوْا فِى السَّبْتِ وَاَخَذْنَا مِنْهُمْ مِّيْثَاقًا غَلِيْظًا ١٥٤

warafaʿnā
وَرَفَعْنَا
மேலும் உயர்த்தினோம்
fawqahumu
فَوْقَهُمُ
அவர்களுக்கு மேல்
l-ṭūra
ٱلطُّورَ
மலையை
bimīthāqihim
بِمِيثَٰقِهِمْ
அவர்களுடைய வாக்குறுதியின் காரணமாக
waqul'nā
وَقُلْنَا
இன்னும் கூறினோம்
lahumu
لَهُمُ
அவர்களுக்கு
ud'khulū
ٱدْخُلُوا۟
நுழையுங்கள்
l-bāba
ٱلْبَابَ
வாசலில்
sujjadan
سُجَّدًا
தலை குணிந்தவர்களாக
waqul'nā
وَقُلْنَا
இன்னும் கூறினோம்
lahum
لَهُمْ
அவர்களுக்கு
lā taʿdū
لَا تَعْدُوا۟
வரம்பு மீறாதீர்கள்
fī l-sabti
فِى ٱلسَّبْتِ
சனிக்கிழமையில்
wa-akhadhnā
وَأَخَذْنَا
இன்னும் எடுத்தோம்
min'hum
مِنْهُم
அவர்களிடம்
mīthāqan
مِّيثَٰقًا
வாக்குறுதியை
ghalīẓan
غَلِيظًا
உறுதியானது
அவர்களிடம் வாக்குறுதி வாங்குவதற்காகத் "தூர்" (ஸீனாய்) என்னும் மலையை அவர்கள் மீது உயர்த்திய சமயத்தில் "(இந்நகரத்தின்) வாயிலில் தலைகுனிந்து வணங்கியவர்களாகவே செல்லுங்கள்" என்று நாம் அவர்களுக்கு கூறினோம். (மீன் வேட்டையாட) சனிக்கிழமையில் நீங்கள் வரம்பு மீறாதீர்கள் என்றும் அவர்களுக்குக் கூறி (இவற்றிற்காகவும்) உறுதியான வாக்குறுதியை நாம் அவர்களிடம் பெற்றிருந்தோம். (எனினும் அவர்கள் மாறி விட்டனர்.) ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௫௪)
Tafseer
௧௫௫

فَبِمَا نَقْضِهِمْ مِّيْثَاقَهُمْ وَكُفْرِهِمْ بِاٰيٰتِ اللّٰهِ وَقَتْلِهِمُ الْاَنْۢبِيَاۤءَ بِغَيْرِ حَقٍّ وَّقَوْلِهِمْ قُلُوْبُنَا غُلْفٌ ۗ بَلْ طَبَعَ اللّٰهُ عَلَيْهَا بِكُفْرِهِمْ فَلَا يُؤْمِنُوْنَ اِلَّا قَلِيْلًاۖ ١٥٥

fabimā naqḍihim
فَبِمَا نَقْضِهِم
ஆகவே, அவர்கள் முறித்ததாலும்
mīthāqahum
مِّيثَٰقَهُمْ
தங்கள் வாக்குறுதியை
wakuf'rihim
وَكُفْرِهِم
இன்னும் அவர்கள் நிராகரித்ததாலும்
biāyāti
بِـَٔايَٰتِ
வசனங்களை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
waqatlihimu
وَقَتْلِهِمُ
இன்னும் அவர்கள் கொலை செய்ததாலும்
l-anbiyāa
ٱلْأَنۢبِيَآءَ
நபிமார்களை
bighayri ḥaqqin
بِغَيْرِ حَقٍّ
நியாயமின்றி
waqawlihim
وَقَوْلِهِمْ
இன்னும் அவர்கள் கூறியதாலும்
qulūbunā
قُلُوبُنَا
எங்கள் உள்ளங்கள்
ghul'fun
غُلْفٌۢۚ
திரையிடப்பட்டுள்ளன
bal
بَلْ
மாறாக
ṭabaʿa
طَبَعَ
முத்திரையிட்டான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ʿalayhā
عَلَيْهَا
அவற்றின் மீது
bikuf'rihim
بِكُفْرِهِمْ
அவர்களுடைய நிராகரிப்பின் காரணமாக
falā yu'minūna
فَلَا يُؤْمِنُونَ
ஆகவே நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்
illā qalīlan
إِلَّا قَلِيلًا
சிலரைத் தவிர
ஆகவே, அவர்கள் தங்கள் வாக்குறுதிகளுக்கு மாறு செய்ததினாலும், அல்லாஹ்வுடைய வசனங்களை அவர்கள் நிராகரித்ததாலும், நியாயமின்றி நபிமார்களைக் கொலை செய்து கொண்டிருந்ததாலும் "எங்களுடைய உள்ளங்கள் திரையிடப்பட்டு விட்டன. (ஆகவே, எவருடைய உபதேசமும் பலனளிக்காது) என்று அவர்கள் கூறிவந்ததாலும் (நாம் அவர்களைச் சபித்து விட்டோம்). அவர்கள் கூறியதைப்போல் அல்ல! மாறாக, அல்லாஹ்தான் அவர்களுடைய நிராகரிப்பின் காரணமாக அவர்களுடைய உள்ளங்களின் மீது முத்திரையிட்டு விட்டான். ஆதலால் (அவர்களில் நல்லோர்) சிலரைத் தவிர (மற்றவர்கள்) நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௫௫)
Tafseer
௧௫௬

وَّبِكُفْرِهِمْ وَقَوْلِهِمْ عَلٰى مَرْيَمَ بُهْتَانًا عَظِيْمًاۙ ١٥٦

wabikuf'rihim
وَبِكُفْرِهِمْ
இன்னும் அவர்கள் நிராகரித்ததாலும்
waqawlihim
وَقَوْلِهِمْ
இன்னும் அவர்கள் கூறியதாலும்
ʿalā
عَلَىٰ
மீது
maryama
مَرْيَمَ
மர்யம்
buh'tānan
بُهْتَٰنًا
அவதூறை
ʿaẓīman
عَظِيمًا
மாபெரும்
அவர்களின் (இத்தகைய) நிராகரிப்பினாலும், மர்யமின் மீது அபாண்டமான அவதூறைக் கூறியதனாலும் அவர்களை நாம் சபித்தோம். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௫௬)
Tafseer
௧௫௭

وَّقَوْلِهِمْ اِنَّا قَتَلْنَا الْمَسِيْحَ عِيْسَى ابْنَ مَرْيَمَ رَسُوْلَ اللّٰهِۚ وَمَا قَتَلُوْهُ وَمَا صَلَبُوْهُ وَلٰكِنْ شُبِّهَ لَهُمْ ۗوَاِنَّ الَّذِيْنَ اخْتَلَفُوْا فِيْهِ لَفِيْ شَكٍّ مِّنْهُ ۗمَا لَهُمْ بِهٖ مِنْ عِلْمٍ اِلَّا اتِّبَاعَ الظَّنِّ وَمَا قَتَلُوْهُ يَقِيْنًاۢ ۙ ١٥٧

waqawlihim
وَقَوْلِهِمْ
இன்னும் அவர்கள் கூறியதாலும்
innā
إِنَّا
நிச்சயமாக நாம்
qatalnā
قَتَلْنَا
கொன்றோம்
l-masīḥa
ٱلْمَسِيحَ
மஸீஹை
ʿīsā ib'na
عِيسَى ٱبْنَ
ஈஸா/மகன்
maryama
مَرْيَمَ
மர்யமுடைய
rasūla
رَسُولَ
தூதர்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
wamā qatalūhu
وَمَا قَتَلُوهُ
அவர்கள் கொல்லவில்லை/ அவரை
wamā ṣalabūhu
وَمَا صَلَبُوهُ
இன்னும் அவர்கள் சிலுவையில் அறையவில்லை/அவரை
walākin
وَلَٰكِن
எனினும்
shubbiha
شُبِّهَ
தோற்றமாக்கப்பட்டான்
lahum
لَهُمْۚ
அவர்களுக்கு
wa-inna alladhīna
وَإِنَّ ٱلَّذِينَ
நிச்சயமாக/எவர்கள்
ikh'talafū
ٱخْتَلَفُوا۟
முரண்பட்டனர்
fīhi
فِيهِ
அவர் விஷயத்தில்
lafī shakkin
لَفِى شَكٍّ
சந்தேகத்தில்தான்
min'hu
مِّنْهُۚ
அதில்
mā lahum
مَا لَهُم
அவர்களுக்கு இல்லை
bihi
بِهِۦ
அதில்
min ʿil'min
مِنْ عِلْمٍ
ஓர் அறிவும்
illā ittibāʿa
إِلَّا ٱتِّبَاعَ
தவிர/பின்பற்றுவது
l-ẓani
ٱلظَّنِّۚ
சந்தேகத்தை
wamā qatalūhu
وَمَا قَتَلُوهُ
அவர்கள் கொல்லவில்லை/ அவரை
yaqīnan
يَقِينًۢا
உறுதியாக
அன்றி "அல்லாஹ்வுடைய தூதர், மர்யமுடைய மகன் ஈஸா மஸீஹை நிச்சயமாக நாம் (சிலுவையில் அறைந்து) கொலை செய்து விட்டோம்" என்று அவர்கள் கூறியதனாலும் அவர்களைச் சபித்தோம். அவரை அவர்கள் கொலை செய்யவும் இல்லை. அவரை அவர்கள் சிலுவையில் அறையவும் இல்லை. (அவர் இருந்த அறைக்குள் அவரைத் தேடிச் சென்றவன் அவரைப்போல் ஆக்கப்பட்டு விட்டான். தேடிச்சென்ற மற்றவர்கள் அவனையே சிலுவையில் அறைந்தனர். இதனால்) அவர்கள் சந்தேகத்திற் குள்ளாக்கப்பட்டு விட்டனர். ஆகவே, எவர்கள் இதற்கு மாறான அபிப்பிராயம் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் வீண் சந்தேகத்திலேயே ஆழ்ந்து விட்டனர். வீண் சந்தேகத்தைப் பின்பற்று வதன்றி அதில் அவர்களுக்கு உண்மையான ஞான(ஆதார)ம் கிடையாது. நிச்சயமாக அவர்கள் அவரைக் கொலை செய்யவே இல்லை. ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௫௭)
Tafseer
௧௫௮

بَلْ رَّفَعَهُ اللّٰهُ اِلَيْهِ ۗوَكَانَ اللّٰهُ عَزِيْزًا حَكِيْمًا ١٥٨

bal
بَل
மாறாக
rafaʿahu
رَّفَعَهُ
உயர்த்தினான்/அவரை
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ilayhi
إِلَيْهِۚ
தன்னளவில்
wakāna
وَكَانَ
இன்னும் இருக்கிறான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ʿazīzan
عَزِيزًا
மிகைத்தவனாக
ḥakīman
حَكِيمًا
மகா ஞானவானாக
எனினும், அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௫௮)
Tafseer
௧௫௯

وَاِنْ مِّنْ اَهْلِ الْكِتٰبِ اِلَّا لَيُؤْمِنَنَّ بِهٖ قَبْلَ مَوْتِهٖ ۚوَيَوْمَ الْقِيٰمَةِ يَكُوْنُ عَلَيْهِمْ شَهِيْدًاۚ ١٥٩

wa-in
وَإِن
இல்லை (இருக்கமாட்டார்)
min ahli l-kitābi
مِّنْ أَهْلِ ٱلْكِتَٰبِ
வேதக்காரர்களில் எவரும்
illā
إِلَّا
தவிர
layu'minanna
لَيُؤْمِنَنَّ
நிச்சயமாக நம்பிக்கை கொள்வார்
bihi
بِهِۦ
அவரை
qabla
قَبْلَ
முன்னர்
mawtihi
مَوْتِهِۦۖ
அவர் இறப்பதற்கு
wayawma l-qiyāmati
وَيَوْمَ ٱلْقِيَٰمَةِ
இன்னும் மறுமை நாளில்
yakūnu
يَكُونُ
இருப்பார்
ʿalayhim
عَلَيْهِمْ
இவர்களுக்கு எதிராக
shahīdan
شَهِيدًا
சாட்சி கூறுபவராக
வேதத்தையுடையவர்களில் ஒவ்வொருவரும் அவர் இறப்பதற்கு முன்னதாக அவரை நம்பிக்கை கொள்ளாமல் இருப்பதில்லை. எனினும், மறுமை நாளில் இவர்களுக்கு எதிராகவே அவர் சாட்சியம் கூறுவார். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௫௯)
Tafseer
௧௬௦

فَبِظُلْمٍ مِّنَ الَّذِيْنَ هَادُوْا حَرَّمْنَا عَلَيْهِمْ طَيِّبٰتٍ اُحِلَّتْ لَهُمْ وَبِصَدِّهِمْ عَنْ سَبِيْلِ اللّٰهِ كَثِيْرًاۙ ١٦٠

fabiẓul'min
فَبِظُلْمٍ
அநியாயத்தின் காரணமாக
mina alladhīna hādū
مِّنَ ٱلَّذِينَ هَادُوا۟
யூதர்களின்
ḥarramnā
حَرَّمْنَا
விலக்கினோம்
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்களுக்கு
ṭayyibātin
طَيِّبَٰتٍ
நல்லவற்றை
uḥillat
أُحِلَّتْ
அனுமதிக்கப்பட்டன
lahum
لَهُمْ
அவர்களுக்கு
wabiṣaddihim
وَبِصَدِّهِمْ
இன்னும் அவர்கள் தடுப்பது
ʿan sabīli
عَن سَبِيلِ
பாதையை விட்டு
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
kathīran
كَثِيرًا
அதிகமானவர்களை
யூதர்களின் (இத்தகைய) அநியாயங்களின் காரணமாகவும், (அவ்வாறே) அல்லாஹ்வின் பாதையில் (செல்ல முடியாதவாறு) பலரைத் தடுத்துக் கொண்டிருந்ததின் காரணமாகவும் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்தவைகளில் நல்லவைகளை நாம் அவர்களுக்கு விலக்கி விட்டோம். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௬௦)
Tafseer