குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௮௪
Qur'an Surah Ali 'Imran Verse 84
ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௮௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قُلْ اٰمَنَّا بِاللّٰهِ وَمَآ اُنْزِلَ عَلَيْنَا وَمَآ اُنْزِلَ عَلٰٓى اِبْرٰهِيْمَ وَاِسْمٰعِيْلَ وَاِسْحٰقَ وَيَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَمَآ اُوْتِيَ مُوْسٰى وَعِيْسٰى وَالنَّبِيُّوْنَ مِنْ رَّبِّهِمْۖ لَا نُفَرِّقُ بَيْنَ اَحَدٍ مِّنْهُمْۖ وَنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ (آل عمران : ٣)
- qul
- قُلْ
- Say
- கூறுவீராக
- āmannā
- ءَامَنَّا
- "We believed
- நம்பிக்கை கொண்டோம்
- bil-lahi
- بِٱللَّهِ
- in Allah
- அல்லாஹ்வை
- wamā unzila
- وَمَآ أُنزِلَ
- and what (is) revealed
- இன்னும் இறக்கப்பட்டதை
- ʿalaynā
- عَلَيْنَا
- on us
- எங்கள் மீது
- wamā unzila
- وَمَآ أُنزِلَ
- and what was revealed
- இன்னும் இறக்கப்பட்டதை
- ʿalā
- عَلَىٰٓ
- on
- மீது
- ib'rāhīma
- إِبْرَٰهِيمَ
- Ibrahim
- இப்றாஹீம்
- wa-is'māʿīla
- وَإِسْمَٰعِيلَ
- and Ismail
- இன்னும் இஸ்மாயீல்
- wa-is'ḥāqa
- وَإِسْحَٰقَ
- and Ishaq
- இன்னும் இஸ்ஹாக்
- wayaʿqūba
- وَيَعْقُوبَ
- and Yaqub
- இன்னும் யஃகூப்
- wal-asbāṭi
- وَٱلْأَسْبَاطِ
- and the descendents
- இன்னும் சந்ததிகள்
- wamā
- وَمَآ
- and what
- இன்னும் எது/
- ūtiya
- أُوتِىَ
- was given
- கொடுக்கப்பட்டார்
- mūsā waʿīsā
- مُوسَىٰ وَعِيسَىٰ
- (to) Musa and Isa
- மூஸா/இன்னும் ஈஸா
- wal-nabiyūna
- وَٱلنَّبِيُّونَ
- and the Prophets
- இன்னும் நபிமார்கள்
- min rabbihim
- مِن رَّبِّهِمْ
- from their Lord
- தங்கள் இறைவனிடமிருந்து
- lā nufarriqu
- لَا نُفَرِّقُ
- Not we make distinction
- பிரிக்க மாட்டோம்
- bayna aḥadin
- بَيْنَ أَحَدٍ
- between any
- ஒருவருக்கு மத்தியில்
- min'hum
- مِّنْهُمْ
- of them
- இவர்களில்
- wanaḥnu
- وَنَحْنُ
- and we
- இன்னும் நாங்கள்
- lahu
- لَهُۥ
- to Him
- அவனுக்கே
- mus'limūna
- مُسْلِمُونَ
- (are) submissive
- முற்றிலும் பணிந்தவர்கள்
Transliteration:
Qul aamannaa billaahi wa maaa unzila 'alainaa wa maaa unzila 'alaaa Ibraaheema wa Ismaa'eela wa Ishaaqa wa Ya'qooba wal Asbaati wa maaa ootiya Moosaa wa 'Eesaa wan Nabiyyoona mir Rabbihim laa nufarriqu baina ahadim minhum wa nahnu lahoo muslimoon(QS. ʾĀl ʿImrān:84)
English Sahih International:
Say, "We have believed in Allah and in what was revealed to us and what was revealed to Abraham, Ishmael, Isaac, Jacob, and the Descendants [al-Asbat], and in what was given to Moses and Jesus and to the prophets from their Lord. We make no distinction between any of them, and we are Muslims [submitting] to Him." (QS. Ali 'Imran, Ayah ௮௪)
Abdul Hameed Baqavi:
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "அல்லாஹ்வையும், நம்மீது அருளப்பட்டதையும்; இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் ஆகியவர்கள் மீதும், அவர்கள் சந்ததிகள் மீது அருளப்பட்டவை களையும்; மூஸா, ஈஸா மற்றும் அனைத்து நபிமார்களுக்கு அவர்கள் இறைவனால் அளிக்கப்பட்டவைகளையும் நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம். இவர்களில் ஒருவரையும் (நபியல்ல என்று) நாம் பிரித்துவிட மாட்டோம். அல்லாஹ் ஒருவனுக்கே நாங்கள் (முற்றிலும்) கீழ்ப்படிந்து நடப்போம் (என்றும் கூறுங்கள்.) (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௮௪)
Jan Trust Foundation
“அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும், இன்னும் மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் விசுவாசங் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டமாட்டோம்; நாங்கள் அவனுக்கே (முற்றிலும் சரணடையும்) முஸ்லிம்கள் ஆவோம்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) கூறுவீராக: "அல்லாஹ்வையும், எங்கள் மீது இறக்கப்பட்டதையும்; இப்றாஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப், (இன்னும் அவர்களுடைய) சந்ததிகள் மீது இறக்கப்பட்டதையும்; மூஸா, ஈஸா இன்னும் (அனைத்து) நபிமார்கள் தங்கள் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்பிக்கை கொண்டோம். இவர்களில் ஒருவருக்கு மத்தியிலும் (அவரை நபியல்ல என்று) பிரிக்கமாட்டோம். நாங்கள் அவனுக்கே முற்றிலும் பணிந்தவர்கள் (முஸ்லிம்கள்).