Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௬௯

Qur'an Surah Ali 'Imran Verse 69

ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௬௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَدَّتْ طَّاۤىِٕفَةٌ مِّنْ اَهْلِ الْكِتٰبِ لَوْ يُضِلُّوْنَكُمْۗ وَمَا يُضِلُّوْنَ اِلَّآ اَنْفُسَهُمْ وَمَا يَشْعُرُوْنَ (آل عمران : ٣)

waddat
وَدَّت
Wished
விரும்பியது
ṭāifatun
طَّآئِفَةٌ
a group
ஒரு கூட்டம்
min ahli l-kitābi
مِّنْ أَهْلِ ٱلْكِتَٰبِ
from (the) People (of) the Book
வேதக்காரர்களில்
law yuḍillūnakum
لَوْ يُضِلُّونَكُمْ
if they could lead you astray
அவர்கள் உங்களை வழிகெடுக்க வேண்டும்
wamā yuḍillūna
وَمَا يُضِلُّونَ
and not they lead astray
வழிகெடுக்க மாட்டார்கள்
illā
إِلَّآ
except
தவிர
anfusahum
أَنفُسَهُمْ
themselves
தங்களை
wamā yashʿurūna
وَمَا يَشْعُرُونَ
and not they perceive
இன்னும் உணரமாட்டார்கள்

Transliteration:

Waddat taaa'ifatum min Ahlil Kitaabi law yudil loonakum wa maa yudilloona illaaa anfusahum wa maa yash'uroon (QS. ʾĀl ʿImrān:69)

English Sahih International:

A faction of the People of the Scripture wish they could mislead you. But they do not mislead except themselves, and they perceive [it] not. (QS. Ali 'Imran, Ayah ௬௯)

Abdul Hameed Baqavi:

வேதத்தையுடையவர்களில் ஒரு கூட்டத்தார் உங்களை வழி கெடுத்திட விரும்புகின்றார்கள். அவர்கள் தங்களையேயன்றி (உங்களை) வழி கெடுத்திட முடியாது. (இதனை) அவர்கள் உணர்ந்துகொள்வதில்லை. (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௬௯)

Jan Trust Foundation

வேதத்தையுடையோரில் ஒரு சாரார் உங்களை வழி கெடுக்க விரும்புகிறார்கள்; ஆனால் அவர்கள் தங்களையே அன்றி வழி கெடுக்க முடியாது; எனினும், (இதை) அவர்கள் உணர்கிறார்களில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

வேதக்காரர்களில் ஒரு கூட்டம் உங்களை வழிகெடுக்க விரும்புகிறது. தங்களைத் தவிர (உங்களை) வழிகெடுக்க மாட்டார்கள். (இதை அவர்கள்) உணரமாட்டார்கள்.