குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௪௫
Qur'an Surah Ali 'Imran Verse 45
ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௪௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِذْ قَالَتِ الْمَلٰۤىِٕكَةُ يٰمَرْيَمُ اِنَّ اللّٰهَ يُبَشِّرُكِ بِكَلِمَةٍ مِّنْهُۖ اسْمُهُ الْمَسِيْحُ عِيْسَى ابْنُ مَرْيَمَ وَجِيْهًا فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ وَمِنَ الْمُقَرَّبِيْنَۙ (آل عمران : ٣)
- idh qālati
- إِذْ قَالَتِ
- When said
- கூறியசமயம்
- l-malāikatu
- ٱلْمَلَٰٓئِكَةُ
- the Angels
- வானவர்கள்
- yāmaryamu
- يَٰمَرْيَمُ
- "O Maryam!
- மர்யமே!
- inna l-laha
- إِنَّ ٱللَّهَ
- Indeed Allah
- நிச்சயமாக அல்லாஹ்
- yubashiruki
- يُبَشِّرُكِ
- gives you glad tidings
- உமக்கு நற்செய்தி கூறுகிறான்
- bikalimatin
- بِكَلِمَةٍ
- of a word
- ஒரு வார்த்தையைக் கொண்டு
- min'hu
- مِّنْهُ
- from Him
- அவனிடமிருந்து
- us'muhu
- ٱسْمُهُ
- his name
- அதன் பெயர்
- l-masīḥu
- ٱلْمَسِيحُ
- (is) the Messiah
- அல் மஸீஹ்
- ʿīsā
- عِيسَى
- Isa
- ஈஸா
- ub'nu maryama
- ٱبْنُ مَرْيَمَ
- son (of) Maryam
- மர்யமுடைய மகன்
- wajīhan
- وَجِيهًا
- honored
- கம்பீரமானவராக
- fī l-dun'yā
- فِى ٱلدُّنْيَا
- in the world
- இம்மையில்
- wal-ākhirati
- وَٱلْءَاخِرَةِ
- and (in) the Hereafter
- இன்னும் மறுமை
- wamina l-muqarabīna
- وَمِنَ ٱلْمُقَرَّبِينَ
- and of those brought near (to Allah)
- நெருக்கமானவர்களில்
Transliteration:
Iz qaalatil malaaa'ikatu yaa Maryamu innal laaha yubashshiruki bi Kalimatim minhus muhul Maseeh u 'Eesab nu Maryama wajeehan fid dunyaa wal Aakhirati wa minal muqarrabeen(QS. ʾĀl ʿImrān:45)
English Sahih International:
[And mention] when the angels said, "O Mary, indeed Allah gives you good tidings of a word from Him, whose name will be the Messiah, Jesus, the son of Mary – distinguished in this world and the Hereafter and among those brought near [to Allah]. (QS. Ali 'Imran, Ayah ௪௫)
Abdul Hameed Baqavi:
(மேலும், மர்யமை நோக்கி) மலக்குகள் "மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னுடைய (ஆகுக! என்ற) ஒரு வார்த்தையைக் கொண்டு உங்களுக்கு (ஒரு குழந்தையை அளிக்க) நற்செய்தி கூறுகின்றான்" என்றும் "அதன் பெயர் அல் மஸீஹ் ஈஸா இப்னு மர்யம்" என்பதாகும். அவர் இம்மை மறுமையில் மிக்க கம்பீரமானவராகவும், (இறைவனுக்கு) மிக்க நெருங்கியவர்களில் ஒருவராகவும் இருப்பார்" என்றும் கூறினார்கள். (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௪௫)
Jan Trust Foundation
மலக்குகள் கூறினார்கள்; “மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்; மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்;
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
"மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து (ஆகுக! என்ற) ஒரு வார்த்தையைக் கொண்டு உமக்கு (ஒரு குழந்தையை அளிக்க) நற்செய்தி கூறுகிறான். அதன் பெயர் அல் மஸீஹ் ஈஸா இப்னு மர்யம் ஆகும். (அவர்) இம்மை, மறுமையில் கம்பீரமானவராகவும், (அல்லாஹ்விற்கு) நெருக்கமானவர்களிலும் இருப்பார்" என்று வானவர்கள் கூறிய சமயத்தை நினைவு கூறுவீராக!