Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௩

Qur'an Surah Ali 'Imran Verse 3

ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

نَزَّلَ عَلَيْكَ الْكِتٰبَ بِالْحَقِّ مُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيْهِ وَاَنْزَلَ التَّوْرٰىةَ وَالْاِنْجِيْلَۙ (آل عمران : ٣)

nazzala
نَزَّلَ
He revealed
இறக்கினான்
ʿalayka
عَلَيْكَ
to you
உம்மீது
l-kitāba
ٱلْكِتَٰبَ
the Book
வேதத்தை
bil-ḥaqi
بِٱلْحَقِّ
in [the] truth
சத்தியத்துடன்
muṣaddiqan
مُصَدِّقًا
confirming
உண்மைப்படுத்தக் கூடியதாக
limā bayna yadayhi
لِّمَا بَيْنَ يَدَيْهِ
that which (was) before it
தனக்கு முன்னுள்ளதை
wa-anzala
وَأَنزَلَ
and He revealed
இன்னும் இறக்கினான்
l-tawrāta
ٱلتَّوْرَىٰةَ
the Taurat
தவ்றாத்தை
wal-injīla
وَٱلْإِنجِيلَ
and the Injeel
இன்னும் இன்ஜீலை

Transliteration:

Nazzala 'alaikal Kitaaba bilhaqqi musaddiqal limaa baina yadaihi wa anzalat Tawraata wal Injeel (QS. ʾĀl ʿImrān:3)

English Sahih International:

He has sent down upon you, [O Muhammad], the Book in truth, confirming what was before it. And He revealed the Torah and the Gospel (QS. Ali 'Imran, Ayah ௩)

Abdul Hameed Baqavi:

(நபியே!) இதற்கு முன்னுள்ள (வேதங்கள் யா)வற்றையும் உறுதிப்படுத்துகின்ற (முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை அவன்தான் உங்கள் மீது இறக்கி வைத்தான். இதற்கு முன்னரும் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டியாக இருந்த தவ்றாத்தையும் இன்ஜீலையும் அவனே இறக்கி வைத்தான். (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௩)

Jan Trust Foundation

(நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இந்த வேதத்தைப் (படிப்படியாக) அவன் தான் உம் மீது இறக்கி வைத்தான்; இது-இதற்கு முன்னாலுள்ள (வேதங்களை) உறுதிப்படுத்தும் தவ்ராத்தையும் இன்ஜீலையும் அவனே இறக்கி வைத்தான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

தனக்கு முன்னுள்ளதை உண்மைப்படுத்தக்கூடிய (இவ்)வேதத்தை சத்தியத்துடன் (நபியே!) உம்மீது இறக்கினான்; (இதற்கு முன்னர் மக்களுக்கு நேர்வழி காட்டியாக) தவ்றாத்தையும் இன்ஜீலையும் இறக்கினான்.