குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௧௨
Qur'an Surah Ali 'Imran Verse 112
ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௧௧௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
ضُرِبَتْ عَلَيْهِمُ الذِّلَّةُ اَيْنَ مَا ثُقِفُوْٓا اِلَّا بِحَبْلٍ مِّنَ اللّٰهِ وَحَبْلٍ مِّنَ النَّاسِ وَبَاۤءُوْ بِغَضَبٍ مِّنَ اللّٰهِ وَضُرِبَتْ عَلَيْهِمُ الْمَسْكَنَةُ ۗ ذٰلِكَ بِاَنَّهُمْ كَانُوْا يَكْفُرُوْنَ بِاٰيٰتِ اللّٰهِ وَيَقْتُلُوْنَ الْاَنْبِۢيَاۤءَ بِغَيْرِ حَقٍّۗ ذٰلِكَ بِمَا عَصَوْا وَّكَانُوْا يَعْتَدُوْنَ (آل عمران : ٣)
- ḍuribat
- ضُرِبَتْ
- Struck
- விதிக்கப்பட்டது
- ʿalayhimu
- عَلَيْهِمُ
- on them
- அவர்கள் மீது
- l-dhilatu
- ٱلذِّلَّةُ
- the humiliation
- இழிவு
- ayna mā
- أَيْنَ مَا
- wherever that
- எங்கெல்லாம்
- thuqifū
- ثُقِفُوٓا۟
- they are found
- பெற்றுக் கொள்ளப்பட்டார்கள்
- illā
- إِلَّا
- except
- தவிர
- biḥablin
- بِحَبْلٍ
- with a rope
- கயிற்றைக் கொண்டு
- mina l-lahi
- مِّنَ ٱللَّهِ
- from Allah
- அல்லாஹ்வின்
- waḥablin
- وَحَبْلٍ
- and a rope
- இன்னும் கயிறு
- mina l-nāsi
- مِّنَ ٱلنَّاسِ
- from the people
- மக்களின்
- wabāū
- وَبَآءُو
- And they incurred
- இன்னும் திரும்பி விட்டார்கள்
- bighaḍabin
- بِغَضَبٍ
- wrath
- கோபத்தில்
- mina l-lahi
- مِّنَ ٱللَّهِ
- from Allah
- அல்லாஹ்வின்
- waḍuribat
- وَضُرِبَتْ
- and struck
- இன்னும் விதிக்கப்பட்டது
- ʿalayhimu
- عَلَيْهِمُ
- on them
- அவர்கள் மீது
- l-maskanatu
- ٱلْمَسْكَنَةُۚ
- the poverty
- ஏழ்மை
- dhālika
- ذَٰلِكَ
- That
- அது
- bi-annahum
- بِأَنَّهُمْ
- (is) because
- காரணம்/நிச்சயமாக அவர்கள்
- kānū
- كَانُوا۟
- they used to
- இருந்தார்கள்
- yakfurūna
- يَكْفُرُونَ
- disbelieve
- நிராகரிக்கிறார்கள்
- biāyāti
- بِـَٔايَٰتِ
- in (the) Verses
- வசனங்களை
- l-lahi
- ٱللَّهِ
- (of) Allah
- அல்லாஹ்வின்
- wayaqtulūna
- وَيَقْتُلُونَ
- and they killed
- இன்னும் கொலை செய்கிறார்கள்
- l-anbiyāa
- ٱلْأَنۢبِيَآءَ
- the Prophets
- நபிமார்களை
- bighayri ḥaqqin
- بِغَيْرِ حَقٍّۚ
- without right
- நியாயம் இன்றி
- dhālika
- ذَٰلِكَ
- That
- அது
- bimā ʿaṣaw
- بِمَا عَصَوا۟
- (is) because they disobeyed
- அவர்கள் மாறு செய்த காரணத்தால்
- wakānū
- وَّكَانُوا۟
- and they used to
- இன்னும் இருந்தார்கள்
- yaʿtadūna
- يَعْتَدُونَ
- transgress
- வரம்பு மீறுகிறார்கள்
Transliteration:
Duribat 'alaihimuz zillatu aina maa suqifooo illaa bihablim minal laahi wa hablim minan naasi wa baaa'oo bighadabim minallaahi wa duribat 'alaihimul maskanah; zaalika bi-annahum kaanoo yakfuroona bi Aayaatil laahi wa yaqtuloonal Ambiyaaa'a bighairi haqq; zaalika bimaa 'asaw wa kaanoo ya'tadoon(QS. ʾĀl ʿImrān:112)
English Sahih International:
They have been put under humiliation [by Allah] wherever they are overtaken, except for a rope [i.e., covenant] from Allah and a rope [i.e., treaty] from the people [i.e., the Muslims]. And they have drawn upon themselves anger from Allah and have been put under destitution. That is because they disbelieved in [i.e., rejected] the verses of Allah and killed the prophets without right. That is because they disobeyed and [habitually] transgressed. (QS. Ali 'Imran, Ayah ௧௧௨)
Abdul Hameed Baqavi:
அவர்கள் எங்கு சென்றபோதிலும் அவர்கள் மீது இழிவு விதிக்கப்பட்டு விட்டது. (இவ்வேதமாகிய) அல்லாஹ்வின் கயிற்றைக் கொண்டும் (நம்பிக்கை கொண்ட) மனிதர்கள் (அளிக்கும் அபயமென்னும்) கயிற்றைக் கொண்டுமே அன்றி (அவர்கள் தப்பித்துக் கொள்ள முடியாது.) அல்லாஹ்வின் கோபத்திலும் அவர்கள் சிக்கிக் கொண்டார்கள். (வீழ்ச்சி என்னும்) துர்ப்பாக்கியமும் அவர்கள் மீது விதிக்கப்பட்டு விட்டது. இதன் காரணம், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை (எப்பொழுதுமே) நிராகரித்துக் கொண்டும், நியாயமின்றி இறைத் தூதர்களைக் கொலை செய்துகொண்டும் இருந்ததுதான். தவிர, வரம்பு கடந்து பாவம் செய்துகொண்டிருந்ததும் இதற்குக் காரணமாகும். (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௧௧௨)
Jan Trust Foundation
அவர்கள், எங்கிருப்பினும் அவர்கள் மீது இழிவு விதிக்கப்பட்டுள்ளது; அல்லாஹ்விடமிருந்தும், மனிதர்களிடமிருந்தும் அவர்களுக்கு(ப் பாதுகாவலான) ஒப்பந்தமின்றி (அவர்கள் தப்ப முடியாது); அல்லாஹ்வின் கோபத்தில் அவர்கள் சிக்கிக் கொண்டார்கள்; ஏழ்மையும் அவர்கள் மீது விதிக்கப்பட்டு விட்டது; இது ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வின் ஆயத்களை நிராகரித்தார்கள்; அநியாயமாக நபிமார்களை கொலை செய்தார்கள்; இன்னும் அவர்கள் பாவம் செய்து கொண்டும் (இறையாணையை ) மீறி நடந்து கொண்டும் இருந்ததுதான் (காரணமாகும்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் எங்கு பெற்றுக் கொள்ளப்பட்டாலும் அவர்கள் மீது இழிவு விதிக்கப்பட்டது. அல்லாஹ்வின் கயிற்றைக் கொண்டும் மக்களின் கயிற்றைக் கொண்டுமே தவிர (அவர்கள் தப்பமுடியாது). அல்லாஹ்வின் கோபத்திலும் திரும்பிவிட்டார்கள். ஏழ்மையும் அவர்கள் மீது விதிக்கப்பட்டது. அது, நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்துக் கொண்டும், நியாயமின்றி நபிமார்களைக் கொலை செய்துகொண்டும் இருந்த காரணத்தாலாகும். அது, அவர்கள் மாறுசெய்தார்கள், இன்னும் வரம்புமீறிக் கொண்டிருந்தார்கள் என்ற காரணத்தாலாகும்.