Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௧௧

Qur'an Surah Ali 'Imran Verse 111

ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௧௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لَنْ يَّضُرُّوْكُمْ اِلَّآ اَذًىۗ وَاِنْ يُّقَاتِلُوْكُمْ يُوَلُّوْكُمُ الْاَدْبَارَۗ ثُمَّ لَا يُنْصَرُوْنَ (آل عمران : ٣)

lan
لَن
Never
அறவே அவர்கள் தீங்கு செய்யமுடியாது
yaḍurrūkum
يَضُرُّوكُمْ
will they harm you
உங்களுக்கு
illā
إِلَّآ
except
தவிர
adhan
أَذًىۖ
a hurt
சிரமம்
wa-in
وَإِن
And if
இன்னும் அவர்கள் உங்களிடம் போரிட்டால்
yuqātilūkum
يُقَٰتِلُوكُمْ
they fight you
திருப்புவார்கள்
yuwallūkumu
يُوَلُّوكُمُ
they will turn (towards) you
உங்களுக்கு
l-adbāra
ٱلْأَدْبَارَ
the backs
பின்புறங்களை
thumma
ثُمَّ
then
பிறகு
lā yunṣarūna
لَا يُنصَرُونَ
not they will be helped
உதவி செய்யப்பட மாட்டார்கள்

Transliteration:

Lai yadurrookum 'illaaa azanw wa ai yuqaatilookum yuwallookumul adbaara summa laa yunsaroon (QS. ʾĀl ʿImrān:111)

English Sahih International:

They will not harm you except for [some] annoyance. And if they fight you, they will show you their backs [i.e., retreat]; then they will not be aided. (QS. Ali 'Imran, Ayah ௧௧௧)

Abdul Hameed Baqavi:

(நம்பிக்கையாளர்களே!) இத்தகையவர்கள் ஒரு சொற்பச் சிரமத்தைத் தவிர (அதிகமாக) உங்களுக்கு (ஏதும்) தீங்கு செய்திடமுடியாது. உங்களை எதிர்த்து அவர்கள் போர் புரிய முற்பட்டாலோ புறங்காட்டியே ஓடுவார்கள். பின்னர் அவர்கள் (சென்ற இடத்திலும்) எவருடைய உதவியும் பெற மாட்டார்கள். (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௧௧௧)

Jan Trust Foundation

இத்தகையோர் உங்களுக்குச் சிறிது தொல்லைகள் உண்டு பண்ணுவதைத் தவிர (பெரும்) தீங்கு எதுவும் செய்துவிட முடியாது. அவர்கள் உங்களிடம் போரிட வந்தாலும், அவர்கள் உங்களுக்குப் புறங்காட்டி (ஓடி) விடுவார்கள்; இன்னும் அவர்கள் (எவராலும்) உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(ஒரு சொற்ப) சிரமத்தைத் தவிர உங்களுக்கு அவர்கள் அறவே தீங்கு செய்யமுடியாது. உங்களிடம் அவர்கள் போரிட்டால் உங்களுக்கு (தங்கள்) பின்புறங்களைத் திருப்புவார்கள். (புறமுதுகிட்டு ஓடுவார்கள்.) பிறகு உதவி செய்யப்படமாட்டார்கள்.