Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௦௨

Qur'an Surah Ali 'Imran Verse 102

ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௧௦௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ حَقَّ تُقٰىتِهٖ وَلَا تَمُوْتُنَّ اِلَّا وَاَنْتُمْ مُّسْلِمُوْنَ (آل عمران : ٣)

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
O you who believe[d]!
நம்பிக்கையாளர்களே
ittaqū
ٱتَّقُوا۟
Fear
அஞ்சுங்கள்
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்வை
ḥaqqa
حَقَّ
(as is His) right
உண்மையான முறை
tuqātihi
تُقَاتِهِۦ
(that) He (should) be feared
அவனைஅஞ்சுதல்
walā tamūtunna
وَلَا تَمُوتُنَّ
and (do) not die
இன்னும் இறந்துவிடாதீர்கள்
illā wa-antum
إِلَّا وَأَنتُم
except [while you]
நீங்கள் இருந்தே தவிர
mus'limūna
مُّسْلِمُونَ
(as) Muslims
முஸ்லிம்கள்

Transliteration:

Yaaa ayyuhal lazeena aamanut taqul laaha haqqa tuqaatihee wa laa tamoontunna illaa wa antum muslimoon (QS. ʾĀl ʿImrān:102)

English Sahih International:

O you who have believed, fear Allah as He should be feared and do not die except as Muslims [in submission to Him]. (QS. Ali 'Imran, Ayah ௧௦௨)

Abdul Hameed Baqavi:

நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்பட வேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் இறந்துவிட வேண்டாம். (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௧௦௨)

Jan Trust Foundation

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்; மேலும், (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரணிக்காதீர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை அவனை அஞ்சவேண்டிய உண்மையான முறையில் அஞ்சுங்கள். நீங்கள் முஸ்லிம்களாக இருந்தே தவிர இறந்து விடாதீர்கள்.