Skip to content

ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் - Page: 18

Ali 'Imran

(ʾĀl ʿImrān)

௧௭௧

۞ يَسْتَبْشِرُوْنَ بِنِعْمَةٍ مِّنَ اللّٰهِ وَفَضْلٍۗ وَاَنَّ اللّٰهَ لَا يُضِيْعُ اَجْرَ الْمُؤْمِنِيْنَ ࣖ ١٧١

yastabshirūna
يَسْتَبْشِرُونَ
மகிழ்ச்சியடைவார்கள்
biniʿ'matin
بِنِعْمَةٍ
அருட்கொடையைக் கொண்டு
mina l-lahi
مِّنَ ٱللَّهِ
அல்லாஹ்விடமிருந்து
wafaḍlin
وَفَضْلٍ
இன்னும் அருள்
wa-anna l-laha
وَأَنَّ ٱللَّهَ
இன்னும் நிச்சயமாக அல்லாஹ்
lā yuḍīʿu
لَا يُضِيعُ
வீணாக்க மாட்டான்
ajra
أَجْرَ
கூலியை
l-mu'minīna
ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களின்
அல்லாஹ்வி(ன் அருளி)னால் தாங்கள் அடைந்த பாக்கியத்தைப் பற்றியும், மேன்மையைப் பற்றியும் "நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கையாளர்களின் (நற்)கூலியை (ஒரு சிறிதும்) வீணாக்கிவிடவில்லை" என்றும் மகிழ்ந்து கொண்டிருப்பார்கள். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௭௧)
Tafseer
௧௭௨

اَلَّذِيْنَ اسْتَجَابُوْا لِلّٰهِ وَالرَّسُوْلِ مِنْۢ بَعْدِ مَآ اَصَابَهُمُ الْقَرْحُ ۖ لِلَّذِيْنَ اَحْسَنُوْا مِنْهُمْ وَاتَّقَوْا اَجْرٌ عَظِيْمٌۚ ١٧٢

alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
is'tajābū
ٱسْتَجَابُوا۟
பதிலளித்தார்கள்
lillahi
لِلَّهِ
அல்லாஹ்விற்கு
wal-rasūli
وَٱلرَّسُولِ
இன்னும் தூதர்
min baʿdi
مِنۢ بَعْدِ
இருந்து/பின்னர்
mā aṣābahumu
مَآ أَصَابَهُمُ
ஏற்பட்டது/ அவர்களுக்கு
l-qarḥu
ٱلْقَرْحُۚ
காயம்
lilladhīna
لِلَّذِينَ
எவர்களுக்கு
aḥsanū
أَحْسَنُوا۟
நல்லறம் புரிந்தார்கள்
min'hum
مِنْهُمْ
அவர்களில்
wa-ittaqaw
وَٱتَّقَوْا۟
இன்னும் அஞ்சினார்கள்
ajrun ʿaẓīmun
أَجْرٌ عَظِيمٌ
கூலி/மகத்தானது
அவர்கள் எத்தகையவர்கள் என்றால், காயமடைந்த பின்னரும் அல்லாஹ்வுடைய, (அவனுடைய) தூதருடைய அழைப்பை ஏற்று (போருக்கு)ச் சென்றனர். (அல்லாஹ்வுக்குப்) பயந்து நன்மை செய்த இத்தகையவர்களுக்கு மகத்தான (நற்)கூலி உண்டு. ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௭௨)
Tafseer
௧௭௩

اَلَّذِيْنَ قَالَ لَهُمُ النَّاسُ اِنَّ النَّاسَ قَدْ جَمَعُوْا لَكُمْ فَاخْشَوْهُمْ فَزَادَهُمْ اِيْمَانًاۖ وَّقَالُوْا حَسْبُنَا اللّٰهُ وَنِعْمَ الْوَكِيْلُ ١٧٣

alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
qāla
قَالَ
கூறினார்(கள்)
lahumu
لَهُمُ
அவர்களுக்கு
l-nāsu
ٱلنَّاسُ
மக்கள்
inna
إِنَّ
நிச்சயமாக
l-nāsa
ٱلنَّاسَ
மக்கள்
qad jamaʿū
قَدْ جَمَعُوا۟
உறுதியாக ஒன்று சேர்த்துள்ளனர்
lakum
لَكُمْ
உங்களுக்கு
fa-ikh'shawhum
فَٱخْشَوْهُمْ
ஆகவே பயப்படுங்கள்/ அவர்களைப்
fazādahum
فَزَادَهُمْ
அதிகப்படுத்தியது/ அவர்களுக்கு
īmānan
إِيمَٰنًا
நம்பிக்கையை
waqālū
وَقَالُوا۟
இன்னும் கூறினார்கள்
ḥasbunā
حَسْبُنَا
போதுமானவன்/ எங்களுக்கு
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
waniʿ'ma
وَنِعْمَ
இன்னும் சிறந்து விட்டான்
l-wakīlu
ٱلْوَكِيلُ
பொறுப்பாளன்
அன்றி ஒருசிலர் அவர்களிடம் (வந்து) "உங்களுக்கு எதிராக (போர் புரிய) எல்லா வகுப்பினரும் நிச்சயமாக ஒன்று சேர்ந்திருக்கின்றனர். (ஆதலால்) அவர்களுக்குப் பயந்து கொள்ளுங்கள்" என்று கூறிய சமயத்தில், அவர்களுக்கு (பயம் ஏற்படுவதற்குப் பதிலாக) நம்பிக்கையே அதிகரித்தது. அன்றி "அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன். அவன் சிறந்த பொறுப்பேற்பவனாகவும் (பாதுகாவலனாகவும்) இருக்கின்றான்" என்றும் கூறினார்கள். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௭௩)
Tafseer
௧௭௪

فَانْقَلَبُوْا بِنِعْمَةٍ مِّنَ اللّٰهِ وَفَضْلٍ لَّمْ يَمْسَسْهُمْ سُوْۤءٌۙ وَّاتَّبَعُوْا رِضْوَانَ اللّٰهِ ۗ وَاللّٰهُ ذُوْ فَضْلٍ عَظِيْمٍ ١٧٤

fa-inqalabū
فَٱنقَلَبُوا۟
திரும்பினார்கள்
biniʿ'matin
بِنِعْمَةٍ
அருட்கொடையுடன்
mina l-lahi
مِّنَ ٱللَّهِ
அல்லாஹ்வின்
wafaḍlin
وَفَضْلٍ
இன்னும் அருள்
lam yamsashum
لَّمْ يَمْسَسْهُمْ
அணுகவில்லை/ அவர்களை
sūon
سُوٓءٌ
ஒரு தீங்கு
wa-ittabaʿū
وَٱتَّبَعُوا۟
இன்னும் பின்பற்றினார்கள்
riḍ'wāna
رِضْوَٰنَ
விருப்பத்தை
l-lahi
ٱللَّهِۗ
அல்லாஹ்வின்
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
dhū faḍlin
ذُو فَضْلٍ
அருளுடையவன்
ʿaẓīmin
عَظِيمٍ
மகத்தானது
ஆகவே, அவர்கள் அல்லாஹ்வின் அருட்கொடையையும் பாக்கியத்தையும் பெற்றுத் திரும்பி வந்தார்கள். அவர்களை எத்தகைய தீங்கும் அணுகவில்லை. (ஏனென்றால்) அவர்கள் அல்லாஹ்வின் விருப்பத்தையே பின்பற்றிச் சென்றார்கள். (பொருளை விரும்பிச் செல்லவில்லை.) அல்லாஹ்வோ மகத்தான கொடையுடையவனாக இருக்கின்றான். (ஆகவே பொருளையும் அவர்களுக்கு அளித்தான்.) ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௭௪)
Tafseer
௧௭௫

اِنَّمَا ذٰلِكُمُ الشَّيْطٰنُ يُخَوِّفُ اَوْلِيَاۤءَهٗۖ فَلَا تَخَافُوْهُمْ وَخَافُوْنِ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ ١٧٥

innamā dhālikumu
إِنَّمَا ذَٰلِكُمُ
அவனெல்லாம்
l-shayṭānu
ٱلشَّيْطَٰنُ
ஷைத்தான் தான்
yukhawwifu
يُخَوِّفُ
பயமுறுத்துகிறான்
awliyāahu
أَوْلِيَآءَهُۥ
தன் நண்பர்களை
falā takhāfūhum
فَلَا تَخَافُوهُمْ
ஆகவே பயப்படாதீர்கள்/ அவர்களை
wakhāfūni
وَخَافُونِ
பயப்படுங்கள்/ என்னை
in kuntum
إِن كُنتُم
நீங்கள் இருந்தால்
mu'minīna
مُّؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களாக
இவ்வாறு (அவர்களைப் பயமுறுத்தச்) செய்தது ஒரு ஷைத்தான்தான். அவன் தன் நண்பர்களைப் பற்றி (அவர்களுக்குப்) பயமுறுத்தினான். ஆகவே, நீங்கள் உண்மை நம்பிக்கையாளர்களாக இருந்தால் அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; எனக்கே பயப்படுங்கள். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௭௫)
Tafseer
௧௭௬

وَلَا يَحْزُنْكَ الَّذِيْنَ يُسَارِعُوْنَ فِى الْكُفْرِۚ اِنَّهُمْ لَنْ يَّضُرُّوا اللّٰهَ شَيْـًٔا ۗ يُرِيْدُ اللّٰهُ اَلَّا يَجْعَلَ لَهُمْ حَظًّا فِى الْاٰخِرَةِ وَلَهُمْ عَذَابٌ عَظِيْمٌۚ ١٧٦

walā yaḥzunka
وَلَا يَحْزُنكَ
கவலைப்படுத்த வேண்டாம்/உம்மை
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
yusāriʿūna
يُسَٰرِعُونَ
விரைகிறார்கள்
fī l-kuf'ri
فِى ٱلْكُفْرِۚ
நிராகரிப்பில்
innahum
إِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
lan yaḍurrū
لَن يَضُرُّوا۟
அறவே தீங்கிழைக்க மாட்டார்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்விற்கு
shayan yurīdu
شَيْـًٔاۗ يُرِيدُ
எதையும்/நாடுகிறான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
allā yajʿala
أَلَّا يَجْعَلَ
ஏற்படுத்தாமல் இருக்க
lahum
لَهُمْ
அவர்களுக்கு
ḥaẓẓan
حَظًّا
நற்பாக்கியத்தை
fī l-ākhirati
فِى ٱلْءَاخِرَةِۖ
மறுமையில்
walahum
وَلَهُمْ
இன்னும் அவர்களுக்கு
ʿadhābun
عَذَابٌ
வேதனை
ʿaẓīmun
عَظِيمٌ
மகத்தானது
(நபியே!) நிராகரிப்பில் விரைந்து செல்பவர்களைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். (ஏனென்றால், அதனால்) நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கு யாதொரு தீங்கும் செய்துவிட முடியாது. மறுமையில் அவர்களுக்கு எத்தகைய பாக்கியமும் கிடைக்காமல் இருக்கும்படிச் செய்ய அல்லாஹ் விரும்புகின்றான். (ஆகவேதான் அவர்கள் நிராகரிக்கின்றனர்.) அன்றி, அவர்களுக்கு மகத்தான வேதனையும் உண்டு. ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௭௬)
Tafseer
௧௭௭

اِنَّ الَّذِيْنَ اشْتَرَوُا الْكُفْرَ بِالْاِيْمَانِ لَنْ يَّضُرُّوا اللّٰهَ شَيْـًٔاۚ وَلَهُمْ عَذَابٌ اَلِيْمٌ ١٧٧

inna
إِنَّ
நிச்சயமாக
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
ish'tarawū
ٱشْتَرَوُا۟
வாங்கினார்கள்
l-kuf'ra
ٱلْكُفْرَ
நிராகரிப்பை
bil-īmāni
بِٱلْإِيمَٰنِ
நம்பிக்கைக்குப் பகரமாக
lan yaḍurrū
لَن يَضُرُّوا۟
அறவே தீங்கிழைக்க மாட்டார்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்விற்கு
shayan
شَيْـًٔا
எதையும்
walahum
وَلَهُمْ
இன்னும் அவர்களுக்கு
ʿadhābun
عَذَابٌ
வேதனை
alīmun
أَلِيمٌ
துன்புறுத்தக்கூடியது
எவர்கள் (தங்கள்) நம்பிக்கையைக் கொடுத்து நிராகரிப்பைப் பெற்றுக் கொண்டார்களோ, அவர்கள் (அதனால்) நிச்சயமாக அல்லாஹ்வுக்கு ஒரு அற்ப அளவும் தீங்கிழைத்து விடமுடியாது. ஆனால், அவர்களுக்குத்தான் துன்புறுத்தும் வேதனையும் உண்டு. ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௭௭)
Tafseer
௧௭௮

وَلَا يَحْسَبَنَّ الَّذِيْنَ كَفَرُوْٓا اَنَّمَا نُمْلِيْ لَهُمْ خَيْرٌ لِّاَنْفُسِهِمْ ۗ اِنَّمَا نُمْلِيْ لَهُمْ لِيَزْدَادُوْٓا اِثْمًا ۚ وَلَهُمْ عَذَابٌ مُّهِيْنٌ ١٧٨

walā yaḥsabanna
وَلَا يَحْسَبَنَّ
நிச்சயமாக எண்ணவேண்டாம்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
kafarū
كَفَرُوٓا۟
நிராகரித்தார்கள்
annamā num'lī
أَنَّمَا نُمْلِى
நாம் அவகாசமளிப்ப தெல்லாம்
lahum khayrun
لَهُمْ خَيْرٌ
அவர்களுக்கு/நல்லது
li-anfusihim
لِّأَنفُسِهِمْۚ
தங்களுக்கு
innamā num'lī
إِنَّمَا نُمْلِى
நாம் அவகாசமளிப்ப தெல்லாம்
lahum
لَهُمْ
அவர்களுக்கு
liyazdādū
لِيَزْدَادُوٓا۟
அவர்கள் அதிகரிப்பதற்காக
ith'man
إِثْمًاۚ
பாவத்தால்
walahum
وَلَهُمْ
இன்னும் அவர்களுக்கு
ʿadhābun muhīnun
عَذَابٌ مُّهِينٌ
வேதனை/ இழிவூட்டக்கூடியது
நிராகரிப்பவர்களை (தண்டிக்காமல்) நாம் தாமதப் படுத்துவது தங்களுக்கு நல்லதென்று நிச்சயமாக அவர்கள் எண்ணிவிட வேண்டாம். (வேதனையை) நாம் அவர்களுக்குத் தாமதப்படுத்துவதெல்லாம் (அவர்களுடைய) பாவம் (மென்மேலும்) அதிகரிப்பதற்காகவேதான். (முடிவில்) அவர்களுக்கு இழிவு தரும் வேதனையுண்டு. ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௭௮)
Tafseer
௧௭௯

مَا كَانَ اللّٰهُ لِيَذَرَ الْمُؤْمِنِيْنَ عَلٰى مَآ اَنْتُمْ عَلَيْهِ حَتّٰى يَمِيْزَ الْخَبِيْثَ مِنَ الطَّيِّبِ ۗ وَمَا كَانَ اللّٰهُ لِيُطْلِعَكُمْ عَلَى الْغَيْبِ وَلٰكِنَّ اللّٰهَ يَجْتَبِيْ مِنْ رُّسُلِهٖ مَنْ يَّشَاۤءُ ۖ فَاٰمِنُوْا بِاللّٰهِ وَرُسُلِهٖ ۚ وَاِنْ تُؤْمِنُوْا وَتَتَّقُوْا فَلَكُمْ اَجْرٌ عَظِيْمٌ ١٧٩

mā kāna
مَّا كَانَ
இல்லை
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
liyadhara
لِيَذَرَ
விட்டுவிடுபவனாக
l-mu'minīna
ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களை
ʿalā
عَلَىٰ
மீது
mā antum
مَآ أَنتُمْ
எது/நீங்கள்
ʿalayhi
عَلَيْهِ
அதன் மீது
ḥattā
حَتَّىٰ
இறுதியாக
yamīza
يَمِيزَ
பிரிப்பான்
l-khabītha
ٱلْخَبِيثَ
தீயவர்(களை)
mina
مِنَ
இருந்து
l-ṭayibi
ٱلطَّيِّبِۗ
நல்லவர்(கள்)
wamā kāna
وَمَا كَانَ
இன்னும் இல்லை
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
liyuṭ'liʿakum
لِيُطْلِعَكُمْ
அறிவிப்பவனாக/உங்களுக்கு
ʿalā l-ghaybi
عَلَى ٱلْغَيْبِ
மறைவானவற்றை
walākinna
وَلَٰكِنَّ
எனினும்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
yajtabī
يَجْتَبِى
தேர்ந்தெடுக்கிறான்
min rusulihi
مِن رُّسُلِهِۦ
தன் தூதர்களில்
man yashāu
مَن يَشَآءُۖ
எவரை/நாடுகிறான்
faāminū
فَـَٔامِنُوا۟
ஆகவே நம்பிக்கை கொள்ளுங்கள்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வை
warusulihi
وَرُسُلِهِۦۚ
இன்னும் அவனுடைய தூதர்களை
wa-in tu'minū
وَإِن تُؤْمِنُوا۟
நீங்கள் நம்பிக்கை கொண்டால்
watattaqū
وَتَتَّقُوا۟
இன்னும் அஞ்சினால்
falakum
فَلَكُمْ
உங்களுக்கு
ajrun
أَجْرٌ
கூலி
ʿaẓīmun
عَظِيمٌ
மகத்தானது
(நயவஞ்சகர்களே!) நீங்கள் இருக்கும் இந்த நிலைமையில் நல்லவர்கள் இன்னாரென்றும் தீயவர்கள் இன்னாரென்றும் பிரித்தறிவிக்கும் வரையில் (உங்களுடன் கலந்திருக்க) அல்லாஹ் (நம்பிக்கையாளர்களை) விட்டுவைக்க மாட்டான். அன்றி மறைவான வற்றையும் அல்லாஹ் உங்களுக்கு அறிவிக்க மாட்டான். எனினும் தன் தூதர்களில் தான் விரும்பியவர்களை (இதனை அறிவிக்க) அல்லாஹ் தேர்ந்தெடுத்துக் கொள்வான். ஆகவே, அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நம்பிக்கை கொள்ளுங்கள். நீங்கள் (உண்மையாகவே அல்லாஹ்வை) நம்பிக்கை கொண்டு (அவனுக்குப்) பயந்து (நடந்து) கொண்டால் உங்களுக்கு மகத்தான (நற்)கூலி உண்டு. ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௭௯)
Tafseer
௧௮௦

وَلَا يَحْسَبَنَّ الَّذِيْنَ يَبْخَلُوْنَ بِمَآ اٰتٰىهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ هُوَ خَيْرًا لَّهُمْ ۗ بَلْ هُوَ شَرٌّ لَّهُمْ ۗ سَيُطَوَّقُوْنَ مَا بَخِلُوْا بِهٖ يَوْمَ الْقِيٰمَةِ ۗ وَلِلّٰهِ مِيْرَاثُ السَّمٰوٰتِ وَالْاَرْضِۗ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ ࣖ ١٨٠

walā yaḥsabanna
وَلَا يَحْسَبَنَّ
எண்ண வேண்டாம்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
yabkhalūna
يَبْخَلُونَ
கஞ்சத்தனம் செய்கிறார்கள்
bimā
بِمَآ
எதில்
ātāhumu
ءَاتَىٰهُمُ
கொடுத்தான்/அவர்களுக்கு
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
min
مِن
இருந்து
faḍlihi
فَضْلِهِۦ
தன் அருள்
huwa
هُوَ
அது
khayran lahum
خَيْرًا لَّهُمۖ
நல்லது/அவர்களுக்கு
bal huwa
بَلْ هُوَ
மாறாக/அது
sharrun lahum
شَرٌّ لَّهُمْۖ
தீமை/அவர்களுக்கு
sayuṭawwaqūna
سَيُطَوَّقُونَ
அரிகண்டமாக மாட்டப்படுவார்கள்
mā bakhilū
مَا بَخِلُوا۟
எதை/கஞ்சத்தனம் செய்தார்கள்
bihi
بِهِۦ
அதை
yawma l-qiyāmati
يَوْمَ ٱلْقِيَٰمَةِۗ
மறுமை நாளில்
walillahi
وَلِلَّهِ
அல்லாஹ்விற்கு
mīrāthu
مِيرَٰثُ
வாரிசுரிமை
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களில்
wal-arḍi
وَٱلْأَرْضِۗ
இன்னும் பூமி
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
bimā taʿmalūna
بِمَا تَعْمَلُونَ
எதை/செய்கிறீர்கள்
khabīrun
خَبِيرٌ
ஆழ்ந்தறிபவன்
எவர்கள், அல்லாஹ் தன் அருளால் தங்களுக்கு வழங்கிய பொருள்களில் கஞ்சத்தனம் செய்கின்றார்களோ அவர்கள் அது தங்களுக்கு நல்லதென்று எண்ணிட வேண்டாம். அது அவர் களுக்குத் தீங்காகவே இருக்கும். கஞ்சத்தனத்தால் சேர்த்த பொருள் மறுமையில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக (இரும்பு வளையமாக) மாட்டப்படும். வானங்கள் பூமியின் வாரிசுரிமை அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை எல்லாம் நன்கறிந்தவனாகவே இருக்கின்றான். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௮௦)
Tafseer