குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௭௫
Qur'an Surah Al-Baqarah Verse 75
ஸூரத்துல் பகரா [௨]: ௭௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
۞ اَفَتَطْمَعُوْنَ اَنْ يُّؤْمِنُوْا لَكُمْ وَقَدْ كَانَ فَرِيْقٌ مِّنْهُمْ يَسْمَعُوْنَ كَلَامَ اللّٰهِ ثُمَّ يُحَرِّفُوْنَهٗ مِنْۢ بَعْدِ مَا عَقَلُوْهُ وَهُمْ يَعْلَمُوْنَ (البقرة : ٢)
- afataṭmaʿūna
- أَفَتَطْمَعُونَ
- Do you hope
- ஆசைப்படுகிறீர்களா?
- an yu'minū
- أَن يُؤْمِنُوا۟
- that they will believe
- அவர்கள் நம்பிக்கைகொள்வதை
- lakum
- لَكُمْ
- [for] you
- உங்களுக்காக
- waqad kāna
- وَقَدْ كَانَ
- while indeed (there) has been
- திட்டமாக இருக்கின்றனர்
- farīqun
- فَرِيقٌ
- a party
- ஒரு பிரிவினர்
- min'hum
- مِّنْهُمْ
- of them
- அவர்களில்
- yasmaʿūna
- يَسْمَعُونَ
- (who used to) hear
- செவியுறுகின்றனர்
- kalāma
- كَلَٰمَ
- (the) words
- பேச்சை
- l-lahi
- ٱللَّهِ
- (of) Allah
- அல்லாஹ்வுடைய
- thumma
- ثُمَّ
- then
- பிறகு
- yuḥarrifūnahu
- يُحَرِّفُونَهُۥ
- they distort it
- மாற்றுகின்றனர்/அதை
- min baʿdi
- مِنۢ بَعْدِ
- from after
- பின்னர்
- mā ʿaqalūhu
- مَا عَقَلُوهُ
- [what] they understood it
- சிந்தித்து புரிந்தனர்/அதை
- wahum
- وَهُمْ
- while they
- அவர்கள்
- yaʿlamūna
- يَعْلَمُونَ
- know?
- அறிகின்றனர்
Transliteration:
Afatatma'oona ai yu'minoo lakum wa qad kaana fareequm minhum yasma'oona Kalaamal laahi summa yuharri foonahoo mim ba'di maa'aqaloohu wa hum ya'lamoon(QS. al-Baq̈arah:75)
English Sahih International:
Do you covet [the hope, O believers], that they would believe for you while a party of them used to hear the words of Allah and then distort it [i.e., the Torah] after they had understood it while they were knowing? (QS. Al-Baqarah, Ayah ௭௫)
Abdul Hameed Baqavi:
(நம்பிக்கையாளர்களே!) உங்(கள் வார்த்தை)களுக்காக இவர்கள் நம்பிக்கை கொள்வார்களென நீங்கள் எதிர்பார்க் கின்றீர்களா? அல்லாஹ்வின் வசனத்தைக் கேட்டு அதை நன்கு புரிந்த பின்னரும், (அதன் சரியான பொருளை) அறிந்துகொண்டே அதை மாற்றிவிடும் ஒரு பிரிவினரும் அவர்களில் இருந்தனர். (ஸூரத்துல் பகரா, வசனம் ௭௫)
Jan Trust Foundation
(முஸ்லிம்களே!) இவர்கள் (யூதர்கள்) உங்களுக்காக நம்பிக்கை கொள்வார்கள் என்று ஆசை வைக்கின்றீர்களா? இவர்களில் ஒருசாரார் இறைவாக்கைக் கேட்டு; அதை விளங்கிக் கொண்ட பின்னர், தெரிந்து கொண்டே அதை மாற்றி விட்டார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
உங்களுக்காக அவர்கள் நம்பிக்கை கொள்வதை ஆசைப்படுகிறீர்களா? திட்டமாக அவர்களில் ஒரு பிரிவினர் இருக்கின்றனர். அவர்கள் அல்லாஹ்வுடைய பேச்சை செவியுறுகின்றனர். பிறகு, அதை அவர்கள் சிந்தித்து புரிந்த பின்னர் அவர்கள் அறிந்தே அதை மாற்றுகின்றனர்.