Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௪௮

Qur'an Surah Al-Baqarah Verse 48

ஸூரத்துல் பகரா [௨]: ௪௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاتَّقُوْا يَوْمًا لَّا تَجْزِيْ نَفْسٌ عَنْ نَّفْسٍ شَيْـًٔا وَّلَا يُقْبَلُ مِنْهَا شَفَاعَةٌ وَّلَا يُؤْخَذُ مِنْهَا عَدْلٌ وَّلَا هُمْ يُنْصَرُوْنَ (البقرة : ٢)

wa-ittaqū
وَٱتَّقُوا۟
And fear
இன்னும் அஞ்சுங்கள்
yawman
يَوْمًا
a day
ஒரு நாளை
lā tajzī
لَّا تَجْزِى
(will) not avail
பலனளிக்காது
nafsun
نَفْسٌ
any soul
ஓர் ஆன்மா
ʿan nafsin
عَن نَّفْسٍ
for (another) soul
ஓர் ஆன்மாவிற்கு
shayan walā
شَيْـًٔا وَلَا
anything and not
ஒன்றையும் இன்னும் ஏற்கப்படாது
yuq'balu
يُقْبَلُ
will be accepted
அதனிடமிருந்து
min'hā
مِنْهَا
from it
பரிந்துரை
shafāʿatun walā
شَفَٰعَةٌ وَلَا
any intercession and not
இன்னும் வாங்கப்படாது
yu'khadhu
يُؤْخَذُ
will be taken
அதனிடமிருந்து
min'hā
مِنْهَا
from it
பரிகாரம்
ʿadlun walā hum
عَدْلٌ وَلَا هُمْ
a compensation and not they
இன்னும் அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள்
yunṣarūna
يُنصَرُونَ
will be helped
Err

Transliteration:

Wattaqoo Yawmal laa tajzee nafsun 'an nafsin shai'anw wa laa yuqbalu minhaa shafaa'atunw wa laa yu'khazu minhaa 'adlunw wa laa hum yunsaroon (QS. al-Baq̈arah:48)

English Sahih International:

And fear a Day when no soul will suffice for another soul at all, nor will intercession be accepted from it, nor will compensation be taken from it, nor will they be aided. (QS. Al-Baqarah, Ayah ௪௮)

Abdul Hameed Baqavi:

நீங்கள் ஒருநாளைப் பற்றியும் பயந்து கொள்ளுங்கள்: (அந்நாளில்) எந்த ஆத்மாவும் எந்த ஆத்மாவுக்கும் யாதொன்றையும் (கொடுத்து அதன் கஷ்டத்தைத்) தீர்க்க மாட்டாது. அதற்காக (எவருடைய) பரிந்துரையும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அதற்காக யாதொரு பரிகாரத்தையும் (ஈடாகப்) பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அன்றி, அவர்கள் (எவராலும் எவ்வித) உதவியும் செய்யப்பட மாட்டார்கள். (ஸூரத்துல் பகரா, வசனம் ௪௮)

Jan Trust Foundation

இன்னும், ஒர் ஆத்மா மற்றோர் ஆத்மாவிற்கு சிறிதும் பயன்பட முடியாதே (அந்த) ஒரு நாளை நீங்கள் அஞ்சி நடப்பீர்களாக! (அந்த நாளில்) எந்தப் பரிந்துரையும் அதற்காக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது; அதற்காக எந்தப் பதிலீடும் பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது; அன்றியும் (பாவம் செய்த) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஒரு நாளை அஞ்சுங்கள்: (அதில்) ஓர் ஆன்மா (வேறு) ஓர் ஆன்மாவுக்கு ஒன்றையும் பலனளிக்காது; அதனிடமிருந்து பரிந்துரை ஏற்கப்படாது; அதனிடமிருந்து பரிகாரம் (பிணைத் தொகை) வாங்கப்படாது; அவர்கள் (எவராலும்) உதவி செய்யப்பட மாட்டார்கள்.