Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௩௧

Qur'an Surah Al-Baqarah Verse 31

ஸூரத்துல் பகரா [௨]: ௩௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَعَلَّمَ اٰدَمَ الْاَسْمَاۤءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلٰۤىِٕكَةِ فَقَالَ اَنْۢبِـُٔوْنِيْ بِاَسْمَاۤءِ هٰٓؤُلَاۤءِ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ (البقرة : ٢)

waʿallama
وَعَلَّمَ
And He taught
இன்னும் கற்பித்தான்
ādama
ءَادَمَ
Adam
ஆதமுக்கு
l-asmāa
ٱلْأَسْمَآءَ
the names
பெயர்களை
kullahā
كُلَّهَا
all of them
எல்லாவற்றையும்/ அவை
thumma
ثُمَّ
Then
பிறகு
ʿaraḍahum
عَرَضَهُمْ
He displayed them
வைத்தான்/அவற்றை
ʿalā l-malāikati
عَلَى ٱلْمَلَٰٓئِكَةِ
to the angels
முன்/வானவர்கள்
faqāla
فَقَالَ
then He said
இன்னும் கூறினான்
anbiūnī
أَنۢبِـُٔونِى
"Inform Me
அறிவியுங்கள்/எனக்கு
bi-asmāi hāulāi
بِأَسْمَآءِ هَٰٓؤُلَآءِ
of (the) names (of) these
பெயர்களை/இவற்றின்
in kuntum
إِن كُنتُمْ
if you are
நீங்கள் இருந்தால்
ṣādiqīna
صَٰدِقِينَ
truthful"
உண்மையாளர்களாக

Transliteration:

Wa 'allama Aadamal asmaaa'a kullahaa summa 'aradahum 'alal malaaa'ikati faqaala ambi'oonee bias maaa'i haaa'ulaaa'i in kuntum saadiqeen (QS. al-Baq̈arah:31)

English Sahih International:

And He taught Adam the names – all of them. Then He showed them to the angels and said, "Inform Me of the names of these, if you are truthful." (QS. Al-Baqarah, Ayah ௩௧)

Abdul Hameed Baqavi:

பின்பு (ஆதமைப் படைத்து) ஆதமுக்கு எல்லாப் (பொருள்களின்) பெயர்களையும் (அவற்றின் தன்மைகளையும்) கற்றுக் கொடுத்து, அவைகளை அந்த மலக்குகளுக்கு முன்பாக்கி "(மலக்குகளே! ஆதமுக்கு என்னுடைய பிரதிநிதி ஆவதற்குரிய தகுதியில்லை என்று கூறினீர்களே! இதில்) நீங்கள் உண்மை யானவர்களாக இருந்தால் (இதோ உங்கள் முன்னிருக்கும்) இவற்றின் பெயர்களை எனக்கு அறிவியுங்கள்" எனக் கூறினான். (ஸூரத்துல் பகரா, வசனம் ௩௧)

Jan Trust Foundation

இன்னும், (இறைவன்) எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான்; பின் அவற்றை வானவர்கள் முன் எடுத்துக்காட்டி, “நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாயிருப்பின் இவற்றின் பெயர்களை எனக்கு விவரியுங்கள்” என்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(பொருள்களின்) பெயர்கள் எல்லாவற்றையும் ஆதமுக்கு கற்பித்தான். பிறகு, அவற்றை அந்த வானவர்கள் முன்வைத்து, "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இவற்றின் பெயர்களை எனக்கு அறிவியுங்கள்" எனக் கூறினான்.