Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௩௨

Qur'an Surah Al-Baqarah Verse 32

ஸூரத்துல் பகரா [௨]: ௩௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالُوْا سُبْحٰنَكَ لَا عِلْمَ لَنَآ اِلَّا مَا عَلَّمْتَنَا ۗاِنَّكَ اَنْتَ الْعَلِيْمُ الْحَكِيْمُ (البقرة : ٢)

qālū
قَالُوا۟
They said
கூறினார்கள்
sub'ḥānaka
سُبْحَٰنَكَ
"Glory be to You!
நீ மகாத்தூயவன்
lā ʿil'ma
لَا عِلْمَ
No knowledge
அறவேஇல்லை/அறிவு
lanā
لَنَآ
(is) for us
எங்களுக்கு
illā
إِلَّا
except
தவிர
mā ʿallamtanā
مَا عَلَّمْتَنَآۖ
what You have taught us
எவை/கற்பித்தாய்/எங்களுக்கு
innaka anta
إِنَّكَ أَنتَ
Indeed You! You
நிச்சயமாக நீதான்
l-ʿalīmu
ٱلْعَلِيمُ
(are) the All-Knowing
நன்கறிந்தவன்
l-ḥakīmu
ٱلْحَكِيمُ
the All-Wise
மகா ஞானவான்

Transliteration:

Qaaloo subhaanaka laa 'ilma lanaaa illaa maa 'allamtanaaa innaka antal'aleemul hakeem (QS. al-Baq̈arah:32)

English Sahih International:

They said, "Exalted are You; we have no knowledge except what You have taught us. Indeed, it is You who is the Knowing, the Wise." (QS. Al-Baqarah, Ayah ௩௨)

Abdul Hameed Baqavi:

(அவ்வாறு அறிவிக்க முடியாமல்) அவர்கள் (இறைவனை நோக்கி) "நீ மிகத் தூய்மையானவன். நீ எங்களுக்கு அறிவித்தவற்றைத் தவிர (வேறொன்றையும்) நாங்கள் அறிய மாட்டோம். நிச்சயமாக நீ மிக்க அறிந்தவனும், ஞானம் உடையவனாகவும் இருக்கின்றாய்" எனக் கூறினார்கள். (ஸூரத்துல் பகரா, வசனம் ௩௨)

Jan Trust Foundation

அவர்கள் “(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்” எனக் கூறினார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

"நீ மகாத் தூயவன். நீ எங்களுக்கு கற்பித்தவற்றைத் தவிர வேறு அறிவு எங்களுக்கு அறவே இல்லை. நிச்சயமாக நீதான் நன்கறிந்தவன், மகா ஞானவான்" எனக் கூறினார்கள்.