குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௨௬௨
Qur'an Surah Al-Baqarah Verse 262
ஸூரத்துல் பகரா [௨]: ௨௬௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَلَّذِيْنَ يُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ فِيْ سَبِيْلِ اللّٰهِ ثُمَّ لَا يُتْبِعُوْنَ مَآ اَنْفَقُوْا مَنًّا وَّلَآ اَذًىۙ لَّهُمْ اَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْۚ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ (البقرة : ٢)
- alladhīna
- ٱلَّذِينَ
- Those who
- எவர்கள்
- yunfiqūna
- يُنفِقُونَ
- spend
- தர்மம் புரிகிறார்கள்
- amwālahum
- أَمْوَٰلَهُمْ
- their wealth
- தங்கள் செல்வங்களை
- fī sabīli
- فِى سَبِيلِ
- in (the) way
- பாதையில்
- l-lahi
- ٱللَّهِ
- (of) Allah
- அல்லாஹ்வின்
- thumma lā yut'biʿūna
- ثُمَّ لَا يُتْبِعُونَ
- then not they follow
- பிறகு தொடர்ந்து செய்யமாட்டார்கள்
- mā
- مَآ
- what
- எதை
- anfaqū
- أَنفَقُوا۟
- they spend
- தர்மம் புரிந்தார்கள்
- mannan
- مَنًّا
- (with) reminders of generosity
- சொல்லிக் காட்டுவது
- walā adhan
- وَلَآ أَذًىۙ
- and not hurt -
- இன்னும் துன்புறுத்துவதில்லை
- lahum
- لَّهُمْ
- for them
- அவர்களுக்கு
- ajruhum
- أَجْرُهُمْ
- their reward
- அவர்களின் கூலி
- ʿinda
- عِندَ
- (is) with
- இடம்
- rabbihim
- رَبِّهِمْ
- their Lord
- அவர்களின் இறைவன்
- walā khawfun
- وَلَا خَوْفٌ
- and (there will be) no fear
- இன்னும் பயம் இல்லை
- ʿalayhim
- عَلَيْهِمْ
- on them
- அவர்கள் மீது
- walā hum yaḥzanūna
- وَلَا هُمْ يَحْزَنُونَ
- and not they will grieve
- அவர்கள் துக்கப்பட மாட்டார்கள்
Transliteration:
Allazeena yunfiqoona amwaalahum fee sabeelillaahi summa laa yutbi'oona maaa anfaqoo mannanw wa laaa azal lahum ajruhum 'inda Rabbihim; wa laa khawfun 'alaihim wa laa hum yahzanoon(QS. al-Baq̈arah:262)
English Sahih International:
Those who spend their wealth in the way of Allah and then do not follow up what they have spent with reminders [of it] or [other] injury will have their reward with their Lord, and there will be no fear concerning them, nor will they grieve. (QS. Al-Baqarah, Ayah ௨௬௨)
Abdul Hameed Baqavi:
எவர்கள் தங்களுடைய பொருள்களை அல்லாஹ்வுடைய பாதையில் செலவு செய்து (அப்பொருளை வாங்கியவனுக்குத்) தாங்கள் அதைக் கொடுத்ததற்காக இகழ்ச்சியையும், துன்பத்தையும் (அதனோடு) சேர்க்கவில்லையோ அவர்களுக்குரிய கூலி அவர் களின் இறைவனிடம் அவர்களுக்குண்டு. மேலும் அவர்களுக்கு யாதொரு பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். (ஸூரத்துல் பகரா, வசனம் ௨௬௨)
Jan Trust Foundation
அல்லாஹ்வின் பாதையில் எவர் தங்கள் செல்வத்தைச் செலவிட்ட பின்னர், அதைத் தொடர்ந்து அதைச் சொல்லிக் காண்பிக்காமலும், அல்லது (வேறு விதமாக) நோவினை செய்யாமலும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு அதற்குரிய நற்கூலி அவர்களுடைய இறைவனிடத்தில் உண்டு; இன்னும் - அவர்களுக்கு எத்தகைய பயமுமில்லை அவர்கள் துக்கமும் அடையமாட்டார்கள்,
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
தங்கள் செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் தர்மம் புரிந்து, பிறகு தாங்கள் புரிந்த தர்மத்தைத் தொடர்ந்து சொல்லிக்காட்டுவதையும் துன்புறுத்துவதையும் செய்யாதவர்கள் அவர்களுக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உண்டு; அவர்கள் மீது பயமில்லை; அவர்கள் துக்கப்படமாட்டார்கள்.