Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௨௫௫

Qur'an Surah Al-Baqarah Verse 255

ஸூரத்துல் பகரா [௨]: ௨௫௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَللّٰهُ لَآ اِلٰهَ اِلَّا هُوَۚ اَلْحَيُّ الْقَيُّوْمُ ەۚ لَا تَأْخُذُهٗ سِنَةٌ وَّلَا نَوْمٌۗ لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِۗ مَنْ ذَا الَّذِيْ يَشْفَعُ عِنْدَهٗٓ اِلَّا بِاِذْنِهٖۗ يَعْلَمُ مَا بَيْنَ اَيْدِيْهِمْ وَمَا خَلْفَهُمْۚ وَلَا يُحِيْطُوْنَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهٖٓ اِلَّا بِمَا شَاۤءَۚ وَسِعَ كُرْسِيُّهُ السَّمٰوٰتِ وَالْاَرْضَۚ وَلَا يَـُٔوْدُهٗ حِفْظُهُمَاۚ وَهُوَ الْعَلِيُّ الْعَظِيْمُ (البقرة : ٢)

al-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
لَآ
(there is) no
அறவே இல்லை
ilāha
إِلَٰهَ
God
இறைவன்
illā huwa
إِلَّا هُوَ
except Him
அவனைத் தவிர
l-ḥayu
ٱلْحَىُّ
the Ever-Living
உயிருள்ளவன்
l-qayūmu
ٱلْقَيُّومُۚ
the Sustainer of all that exists
நிலையானவன்
lā takhudhuhu
لَا تَأْخُذُهُۥ
Not overtakes Him
அவனைப் பீடிக்காது
sinatun
سِنَةٌ
slumber
சிறு உறக்கம்
walā nawmun
وَلَا نَوْمٌۚ
[and] not sleep
இன்னும் பெரும் நித்திரை
lahu
لَّهُۥ
To Him (belongs)
அவனுக்கு
mā fī l-samāwāti
مَا فِى ٱلسَّمَٰوَٰتِ
what(ever) (is) in the heavens
வானங்களில் உள்ளவை
wamā fī l-arḍi
وَمَا فِى ٱلْأَرْضِۗ
and what(ever) (is) in the earth
இன்னும் பூமியில்உள்ளவை
man
مَن
Who
யார்
dhā alladhī
ذَا ٱلَّذِى
(is) the one who
அவர்/எவர்
yashfaʿu
يَشْفَعُ
(can) intercede
பரிந்துரைப்பார்
ʿindahu
عِندَهُۥٓ
with Him
அவனிடத்தில்
illā
إِلَّا
except
தவிர
bi-idh'nihi
بِإِذْنِهِۦۚ
by His permission
அவனுடைய அனுமதியுடனே
yaʿlamu
يَعْلَمُ
He knows
அறிவான்
مَا
what
எது
bayna aydīhim
بَيْنَ أَيْدِيهِمْ
(is) before them
அவர்களுக்கு முன்னால்
wamā
وَمَا
and what
இன்னும் எது
khalfahum
خَلْفَهُمْۖ
(is) behind them
அவர்களுக்குப் பின்னால்
walā yuḥīṭūna
وَلَا يُحِيطُونَ
And not they encompass
இன்னும் அவர்கள் சூழ மாட்டார்கள்
bishayin
بِشَىْءٍ
anything
எதையும்
min ʿil'mihi
مِّنْ عِلْمِهِۦٓ
of His Knowledge
அவனுடைய அறிவிலிருந்து
illā
إِلَّا
except
தவிர
bimā
بِمَا
[of] what
எதை
shāa
شَآءَۚ
He willed
நாடினான்
wasiʿa
وَسِعَ
Extends
விசாலமாகஇருக்கிறது
kur'siyyuhu
كُرْسِيُّهُ
His Throne
அவனுடைய பாதத்தலம்
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
(to) the heavens
வானங்களை
wal-arḍa
وَٱلْأَرْضَۖ
and the earth
இன்னும் பூமி
walā yaūduhu
وَلَا يَـُٔودُهُۥ
And not tires Him
இன்னும் அவனுக்குச் சிரமமளிக்காது
ḥif'ẓuhumā wahuwa
حِفْظُهُمَاۚ وَهُوَ
(the) guarding of both of them And He
அவ்விரண்டைப் பாதுகாப்பது/இன்னும் அவன்
l-ʿaliyu
ٱلْعَلِىُّ
(is) the Most High
மிக உயர்வானவன்
l-ʿaẓīmu
ٱلْعَظِيمُ
the Most Great
மிக மகத்தானவன்

Transliteration:

Allahu laaa ilaaha illaa Huwal Haiyul Qaiyoom; laa taakhuzuhoo sinatunw wa laa nawm; lahoo maa fissamaawaati wa maa fil ard; man zal lazee yashfa'u indahooo illaa bi-iznih; ya'lamu maa baina aydeehim wa mww khalfahum wa laa yuheetoona bishai'im min 'ilmihee illaa bimaa shaaa'; wasi'a Kursiyyuhus samaawaati wal arda wa laa ya'ooduho hifzuhumaa; wa Huwal Aliyyul 'Azeem (QS. al-Baq̈arah:255)

English Sahih International:

Allah – there is no deity except Him, the Ever-Living, the Self-Sustaining. Neither drowsiness overtakes Him nor sleep. To Him belongs whatever is in the heavens and whatever is on the earth. Who is it that can intercede with Him except by His permission? He knows what is [presently] before them and what will be after them, and they encompass not a thing of His knowledge except for what He wills. His Kursi extends over the heavens and the earth, and their preservation tires Him not. And He is the Most High, the Most Great. (QS. Al-Baqarah, Ayah ௨௫௫)

Abdul Hameed Baqavi:

அல்லாஹ் (எவ்வித மகத்துவமுடையவனென்றால்) அவனைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் வேறு யாரும் (இல்லவே) இல்லை. அவன் (மரணமில்லா) உயிருள்ளவன்; என்றும் நிலையானவன்; அவனை சிறு உறக்கமும் பீடிக்காது; பெரும் நித்திரையும் பீடிக்காது. வானங்கள், பூமியில் உள்ளவை அனைத்தும் அவனுடையதே. அவனுடைய அனுமதியின்றி அவனிடத்தில் (எவருக்காகிலும்) யார்தான் பரிந்து பேசக்கூடும்? அவர்களுக்கு முன் இருப்பவற்றையும் அவர்களுக்குப் பின் இருப்பவற்றையும் அவன் நன்கறிவான். அவனுடைய விருப்பமின்றி அவனுக்குத் தெரிந்த வற்றிலிருந்து யாதொன்றையும் (மற்றெவரும் தங்கள் அறிவால்) அறிந்துகொள்ள முடியாது. அவனுடைய "குர்ஸி" வானங்கள், பூமியை விட விசாலமாய் இருக்கின்றது. அவ்விரண்டையும் பாதுகாப்பது அவனுக்குச் சிரமமன்று. மேலும், அவன்தான் மிக உயர்ந்தவன்; மிக மகத்தானவன். (ஸூரத்துல் பகரா, வசனம் ௨௫௫)

Jan Trust Foundation

அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை; அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன்; என்றென்றும் நிலைத்திருப்பவன்; அவனை அரி துயிலோ, உறக்கமோ பீடிக்கா; வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன; அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்; அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது; அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது; அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை - அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ், அவனைத் தவிர (வணக்கத்திற்குத் தகுதியான) இறைவன் அறவே இல்லை. அவன் (என்றும்) உயிருள்ளவன்; (தன்னில்) நிலையானவன்; (படைப்புகளை நிர்வகிப்பவன்.) அவனைச் சிறு உறக்கமும் பெரும் நித்திரையும் பீடிக்காது; வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அவனுக்குரியனவே; அவனுடைய அனுமதியுடனே தவிர அவனிடம் (எவருக்கும்) யார் பரிந்துரைப்பார்? அவர்களுக்கு முன்னுள்ளதையும் அவர்களுக்குப் பின்னுள்ளதையும் அவன் அறிவான்; அவன் நாடியதைத் தவிர அவனுடைய அறிவிலிருந்து எதையும் அவர்கள் சூழமாட்டார்கள்; (அறிய மாட்டார்கள்.) அவனுடைய பாதத்தலம் வானங்களையும் பூமியையும் விட விசாலமாக இருக்கிறது; (அது அவற்றைவிட பெரியது.) அவ்விரண்டையும் பாதுகாப்பது அவனுக்குச் சிரமமளிக்காது; அவன் மிக உயர்வானவன், மிக மகத்தானவன்.