Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௨௫௩

Qur'an Surah Al-Baqarah Verse 253

ஸூரத்துல் பகரா [௨]: ௨௫௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

تِلْكَ الرُّسُلُ فَضَّلْنَا بَعْضَهُمْ عَلٰى بَعْضٍۘ مِنْهُمْ مَّنْ كَلَّمَ اللّٰهُ وَرَفَعَ بَعْضَهُمْ دَرَجٰتٍۗ وَاٰتَيْنَا عِيْسَى ابْنَ مَرْيَمَ الْبَيِّنٰتِ وَاَيَّدْنٰهُ بِرُوْحِ الْقُدُسِۗ وَلَوْ شَاۤءَ اللّٰهُ مَا اقْتَتَلَ الَّذِيْنَ مِنْۢ بَعْدِهِمْ مِّنْۢ بَعْدِ مَا جَاۤءَتْهُمُ الْبَيِّنٰتُ وَلٰكِنِ اخْتَلَفُوْا فَمِنْهُمْ مَّنْ اٰمَنَ وَمِنْهُمْ مَّنْ كَفَرَ ۗوَلَوْ شَاۤءَ اللّٰهُ مَا اقْتَتَلُوْاۗ وَلٰكِنَّ اللّٰهَ يَفْعَلُ مَا يُرِيْدُ ࣖ (البقرة : ٢)

til'ka
تِلْكَ
These
அந்த
l-rusulu
ٱلرُّسُلُ
(are) the Messengers
தூதர்கள்
faḍḍalnā
فَضَّلْنَا
We (have) preferred
மேன்மையாக்கினோம்
baʿḍahum
بَعْضَهُمْ
some of them
அவர்களில் சிலரை
ʿalā
عَلَىٰ
over
விட
baʿḍin
بَعْضٍۘ
others
சிலரை
min'hum
مِّنْهُم
Among them
அவர்களில்
man
مَّن
(were those with) whom
எவர்
kallama
كَلَّمَ
spoke
பேசினான்
l-lahu
ٱللَّهُۖ
Allah
அல்லாஹ்
warafaʿa
وَرَفَعَ
and He raised
இன்னும் உயர்த்தினான்
baʿḍahum
بَعْضَهُمْ
some of them
அவர்களில் சிலரை
darajātin
دَرَجَٰتٍۚ
(in) degrees
பதவிகளால்
waātaynā
وَءَاتَيْنَا
And We gave
இன்னும் கொடுத்தோம்
ʿīsā
عِيسَى
Isa
ஈஸாவிற்கு
ib'na maryama
ٱبْنَ مَرْيَمَ
son (of) Maryam
மர்யமுடைய மகன்
l-bayināti
ٱلْبَيِّنَٰتِ
the clear proofs
தெளிவான அத்தாட்சிகளை
wa-ayyadnāhu
وَأَيَّدْنَٰهُ
and We supported him
இன்னும் அவருக்கு உதவினோம்
birūḥi
بِرُوحِ
with Spirit
ஆத்மாவைக்கொண்டு
l-qudusi
ٱلْقُدُسِۗ
[the] Holy
பரிசுத்த(மான)
walaw shāa
وَلَوْ شَآءَ
And if (had) willed
நாடியிருந்தால்
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
mā iq'tatala
مَا ٱقْتَتَلَ
not (would have) fought each other
சண்டையிட்டிருக்க மாட்டார்(கள்)
alladhīna
ٱلَّذِينَ
those who
எவர்கள்
min baʿdihim
مِنۢ بَعْدِهِم
(came) from after them
அவர்களுக்குப் பின்
min baʿdi
مِّنۢ بَعْدِ
from after
பின்னர்
mā jāathumu
مَا جَآءَتْهُمُ
[what] came to them
அவர்களிடம் வந்தது
l-bayinātu
ٱلْبَيِّنَٰتُ
the clear proofs
தெளிவான அத்தாட்சிகள்
walākini
وَلَٰكِنِ
[And] but
என்றாலும்
ikh'talafū
ٱخْتَلَفُوا۟
they differed
வேறுபட்டார்கள்
famin'hum
فَمِنْهُم
[so] of them
அவர்களில்
man
مَّنْ
(are some) who
எவர்
āmana
ءَامَنَ
believed
நம்பிக்கை கொண்டார்
wamin'hum
وَمِنْهُم
and of them
இன்னும் அவர்களில்
man
مَّن
(are some) who
எவர்
kafara
كَفَرَۚ
denied
நிராகரித்தார்
walaw shāa
وَلَوْ شَآءَ
And if (had) willed
இன்னும் நாடியிருந்தால்
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
mā iq'tatalū
مَا ٱقْتَتَلُوا۟
not they (would have) fought each other
அவர்கள் சண்டையிட்டிருக்க மாட்டார்கள்
walākinna
وَلَٰكِنَّ
[and] but
என்றாலும்
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்
yafʿalu
يَفْعَلُ
does
செய்தே ஆவான்
مَا
what
எதை
yurīdu
يُرِيدُ
He intends
நாடுவான்

Transliteration:

Tilkar Rusulu faddalnaa ba'dahum 'alaa ba'd; minhum man kallamal laahu wa rafa'a ba'dahum darajaat; wa aatainaa 'Eesab na Maryamal baiyinaati wa ayyadnaahu bi Roohil Qudus; wa law shaaa'al laahu maqtatalal lazeena mimba'dihim mim ba'di maa jaaa'athumul baiyinaatu wa laakinikh talafoo faminhum man aamana wa minhum man kafar; wa law shaaa'al laahu maq tataloo wa laakinnallaaha yaf'alu maa yureed ( (QS. al-Baq̈arah:253)

English Sahih International:

Those messengers – some of them We caused to exceed others. Among them were those to whom Allah spoke, and He raised some of them in degree. And We gave Jesus, the son of Mary, clear proofs, and We supported him with the Pure Spirit [i.e., Gabriel]. If Allah had willed, those [generations] succeeding them would not have fought each other after the clear proofs had come to them. But they differed, and some of them believed and some of them disbelieved. And if Allah had willed, they would not have fought each other, but Allah does what He intends. (QS. Al-Baqarah, Ayah ௨௫௩)

Abdul Hameed Baqavi:

(நம்மால் அனுப்பப்பட்ட) அத்தூதர்கள் (அனைவரும் ஒரே பதவி உடையவர்களல்லர்.) அவர்களில் சிலரை, சிலரைவிட நாம் மேன்மையாக்கி இருக்கின்றோம். அவர்களில் சிலருடன் அல்லாஹ் (நேரடியாகப்) பேசியிருக்கின்றான். அவர்களில் சிலரை (சிலரைவிட) பதவியில் உயர்த்தியும் இருக்கின்றான். தவிர, மர்யமுடைய மகன் ஈஸாவுக்கு நாம் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்து (ஜிப்ரீல் என்னும்) "பரிசுத்த ஆத்மா"வைக் கொண்டு அவருக்கு உதவி செய்தோம். (ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்ளக்கூடாதென்று) அல்லாஹ் நாடியிருந்தால் (அவன் அனுப்பிய தூதர்களான) அவர்களுக்குப் பின் வந்தவர்கள், தங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்த பின்னரும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால், அவர்களோ தங்களுக்குள் வேறுபாடு கொண்டு (பிரிந்து) விட்டனர். அவர்களில் (நம்மையும், நம்முடைய வசனங்களையும்) நம்பிக்கை கொண்டவர்களும் உண்டு. அவர்களில் (அதை) நிராகரிப்பவர்களும் உண்டு. ஆகவே, அல்லாஹ் நாடியிருந்தால் (இவ்வாறு) அவர்கள் சண்டையிட்டிருக்க மாட்டார்கள். ஆனால், அல்லாஹ் தான் நாடியவைகளையே செய்வான். (ஸூரத்துல் பகரா, வசனம் ௨௫௩)

Jan Trust Foundation

அத்தூதர்கள் - அவர்களில் சிலரைச் சிலரைவிட நாம் மேன்மையாக்கி இருக்கின்றோம்; அவர்களில் சிலருடன் அல்லாஹ் பேசியிருக்கின்றான்; அவர்களில் சிலரைப் பதவிகளில் உயர்த்தியும் இருக்கின்றான்; தவிர மர்யமுடைய மகன் ஈஸாவுக்கு நாம் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்தோம்; இன்னும், ரூஹுல் குதுஸி (எனும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு உதவி செய்தோம்; அல்லாஹ் நாடியிருந்தால், தங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்த பின்னரும், அத்தூதுவர்களுக்குப்பின் வந்த மக்கள் (தங்களுக்குள்) சண்டை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்; ஆனால் அவர்கள் வேறுபாடுகள் கொண்டனர்; அவர்களில் ஈமான் கொண்டோரும் உள்ளனர்; அவர்களில் நிராகரித்தோரும் (காஃபிரானோரும்) உள்ளனர்; அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் (இவ்வாறு) சண்டை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்; ஆனால் அல்லாஹ் தான் நாடியவற்றைச் செய்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அத்தூதர்கள், அவர்களில் சிலரை, சிலரைவிட நாம் மேன்மையாக்கினோம். அல்லாஹ் பேசியவரும் அவர்களில் இருக்கிறார். அவர்களில் சிலரைப் பதவிகளால் அவன் உயர்த்தினான். மர்யமுடைய மகன் ஈசாவுக்குத் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்தோம். பரிசுத்த ஆத்மாவைக் கொண்டு அவருக்கு உதவினோம். அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களுக்குப் பின் உள்ளவர்கள் தங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்த பின்னர் சண்டையிட்டிருக்க மாட்டார்கள். என்றாலும், அவர்கள் (தங்களுக்குள்) வேறுபட்டார்கள். அவர்களில் நம்பிக்கை கொண்டவரும் உண்டு. அவர்களில் நிராகரித்தவரும் உண்டு. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் சண்டையிட்டிருக்க மாட்டார்கள். என்றாலும், அல்லாஹ் தான் நாடுவதைச் செய்தே ஆவான்.