குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௨௩௬
Qur'an Surah Al-Baqarah Verse 236
ஸூரத்துல் பகரா [௨]: ௨௩௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
لَا جُنَاحَ عَلَيْكُمْ اِنْ طَلَّقْتُمُ النِّسَاۤءَ مَا لَمْ تَمَسُّوْهُنَّ اَوْ تَفْرِضُوْا لَهُنَّ فَرِيْضَةً ۖ وَّمَتِّعُوْهُنَّ عَلَى الْمُوْسِعِ قَدَرُهٗ وَعَلَى الْمُقْتِرِ قَدَرُهٗ ۚ مَتَاعًا ۢبِالْمَعْرُوْفِۚ حَقًّا عَلَى الْمُحْسِنِيْنَ (البقرة : ٢)
- lā junāḥa
- لَّا جُنَاحَ
- (There is) no blame
- குற்றமே இல்லை
- ʿalaykum
- عَلَيْكُمْ
- upon you
- உங்கள் மீது
- in ṭallaqtumu
- إِن طَلَّقْتُمُ
- if you divorce
- நீங்கள் விவாகரத்து செய்தால்
- l-nisāa
- ٱلنِّسَآءَ
- [the] women
- பெண்களை
- mā lam tamassūhunna
- مَا لَمْ تَمَسُّوهُنَّ
- whom not you have touched
- அவர்களை நீங்கள் தொடாமல்
- aw
- أَوْ
- nor
- அல்லது
- tafriḍū
- تَفْرِضُوا۟
- you specified
- நீங்கள் நிர்ணயிக்காமல்
- lahunna
- لَهُنَّ
- for them
- அவர்களுக்கு
- farīḍatan
- فَرِيضَةًۚ
- an obligation (dower)
- மஹ்ரை
- wamattiʿūhunna
- وَمَتِّعُوهُنَّ
- And make provision for them
- பொருள் கொடுங்கள் அவர்களுக்கு
- ʿalā
- عَلَى
- upon
- மீது
- l-mūsiʿi
- ٱلْمُوسِعِ
- the wealthy
- செல்வந்தர்
- qadaruhu
- قَدَرُهُۥ
- according to his means
- அவருடைய அளவு
- waʿalā
- وَعَلَى
- and upon
- இன்னும் மீது
- l-muq'tiri
- ٱلْمُقْتِرِ
- the poor
- ஏழை
- qadaruhu
- قَدَرُهُۥ
- according to his means
- அவருடைய அளவு
- matāʿan
- مَتَٰعًۢا
- a provision
- பொருள்
- bil-maʿrūfi
- بِٱلْمَعْرُوفِۖ
- in a fair manner
- நல்ல முறையில்
- ḥaqqan
- حَقًّا
- a duty
- கடமை
- ʿalā
- عَلَى
- upon
- மீது
- l-muḥ'sinīna
- ٱلْمُحْسِنِينَ
- the good-doers
- நல்லறம் புரிவோர்
Transliteration:
Laa junaaha 'alaikum in tallaqtumun nisaaa'a maa lam tamassoohunna aw tafridoo lahunna fareedah; wa matti'oona 'alal moosi'i qadaruhoo wa 'alal muqtiri qadaruhoo matta'am bilma'roofi haqqan 'alalmuhsineen(QS. al-Baq̈arah:236)
English Sahih International:
There is no blame upon you if you divorce women you have not touched nor specified for them an obligation. But give them [a gift of] compensation – the wealthy according to his capability and the poor according to his capability – a provision according to what is acceptable, a duty upon the doers of good. (QS. Al-Baqarah, Ayah ௨௩௬)
Abdul Hameed Baqavi:
பெண்களின் மஹரைக் குறிப்பிடாமல் (திருமணம் செய்து) அவர்களுடன் நீங்கள் வீடு கூடாமல் தலாக்குக் கூறிவிட்டாலும் உங்கள்மீது குற்றமில்லை. ஆயினும் அவர்களுக்கு ஏதும் கொடுத்துப் பயனடையச் செய்யவும். பணக்காரன் தன் தகுதிக்கேற்பவும், ஏழை தன் சக்திக்கேற்பவும் கண்ணியத்தோடு (அவர்களுக்குக் கொடுத்து) பயனடையச் செய்ய வேண்டியது நல்லோர்கள் மீது கடமையாகும். (ஸூரத்துல் பகரா, வசனம் ௨௩௬)
Jan Trust Foundation
பெண்களை நீங்கள் தீண்டுவதற்கு முன், அல்லது அவர்களுடைய மஹரை நிச்சயம் செய்வதற்கு முன், தலாக் சொன்னால் உங்கள் மீது குற்றமில்லை ஆயினும் அவர்களுக்குப் பலனுள்ள பொருள்களைக் கொடு(த்து உதவு)ங்கள் - அதாவது செல்வம் படைத்தவன் அவனுக்குத் தக்க அளவும், ஏழை அவனுக்குத் தக்க அளவும் கொடுத்து, நியாயமான முறையில் உதவி செய்தல் வேண்டும்; இது நல்லோர் மீது கடமையாகும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
பெண்களை நீங்கள் விவாகரத்து செய்தால் - அவர்களை நீங்கள் தொடாமல் இருக்கும்போது அல்லது அவர்களுக்கு மஹ்ரை நிர்ணயிக்காமல் இருக்கும்போது - (அது) உங்கள் மீது குற்றமே இல்லை. அவர்களுக்கு நல்ல முறையில் பொருள் கொடுங்கள். செல்வந்தர் மீது அவருடைய அளவு(க்கு)ம் ஏழை மீது அவருடைய அளவு(க்கு)ம் கடமையாகும். நல்லறம் புரிவோர் மீது (இது) கடமையாகும்.