Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௨௩௪

Qur'an Surah Al-Baqarah Verse 234

ஸூரத்துல் பகரா [௨]: ௨௩௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَالَّذِيْنَ يُتَوَفَّوْنَ مِنْكُمْ وَيَذَرُوْنَ اَزْوَاجًا يَّتَرَبَّصْنَ بِاَنْفُسِهِنَّ اَرْبَعَةَ اَشْهُرٍ وَّعَشْرًا ۚ فاِذَا بَلَغْنَ اَجَلَهُنَّ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيْمَا فَعَلْنَ فِيْٓ اَنْفُسِهِنَّ بِالْمَعْرُوْفِۗ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ (البقرة : ٢)

wa-alladhīna
وَٱلَّذِينَ
And those who
எவர்கள்
yutawaffawna
يُتَوَفَّوْنَ
pass away
இறந்து விடுகிறார்கள்
minkum
مِنكُمْ
among you
உங்களில்
wayadharūna
وَيَذَرُونَ
and leave behind
இன்னும் விட்டுவிடுகிறார்கள்
azwājan
أَزْوَٰجًا
wives
மனைவிகளை
yatarabbaṣna
يَتَرَبَّصْنَ
(the widows) should wait
எதிர்பார்ப்பார்கள்
bi-anfusihinna
بِأَنفُسِهِنَّ
for themselves
தங்களுக்கு
arbaʿata
أَرْبَعَةَ
(for) four
நான்கு
ashhurin
أَشْهُرٍ
months
மாதங்கள்
waʿashran
وَعَشْرًاۖ
and ten (days)
இன்னும் பத்து (நாள்கள்)
fa-idhā balaghna
فَإِذَا بَلَغْنَ
Then when they reach
அவர்கள் அடைந்து விட்டால்
ajalahunna
أَجَلَهُنَّ
their (specified) term
தங்கள் தவணையை
falā junāḥa
فَلَا جُنَاحَ
then (there is) no blame
குற்றமே இல்லை
ʿalaykum
عَلَيْكُمْ
upon you
உங்கள் மீது
fīmā
فِيمَا
for what
எதில்
faʿalna
فَعَلْنَ
they do
செய்கிறார்கள்
fī anfusihinna
فِىٓ أَنفُسِهِنَّ
concerning themselves
தங்களுக்கு
bil-maʿrūfi
بِٱلْمَعْرُوفِۗ
in a fair manner
நல்ல முறையில்
wal-lahu
وَٱللَّهُ
And Allah
அல்லாஹ்
bimā
بِمَا
of what
எதை
taʿmalūna
تَعْمَلُونَ
you do
செய்கிறீர்கள்
khabīrun
خَبِيرٌ
(is) All-Aware
ஆழ்ந்தறிபவன்

Transliteration:

Wallazeena yutawaffawna minkum wa yazaroona azwaajai yatarabbasna bi anfusihinna arba'ata ashhurinw wa 'ashran fa izaa balaghna ajalahunna falaa junaaha 'alaikum feemaa fa'alna feee anfusihinna bilma'roof; wallaahu bimaa ta'maloona Khabeer (QS. al-Baq̈arah:234)

English Sahih International:

And those who are taken in death among you and leave wives behind – they, [the wives, shall] wait four months and ten [days]. And when they have fulfilled their term, then there is no blame upon you for what they do with themselves in an acceptable manner. And Allah is [fully] Aware of what you do. (QS. Al-Baqarah, Ayah ௨௩௪)

Abdul Hameed Baqavi:

உங்களில் எவரேனும் மனைவிகளை விட்டு இறந்தால், மனைவிகள் நான்கு மாதம் பத்து நாட்கள் எதிர்பார்த்திருக்கவும். (இதற்கு "மரண இத்தா" என்று பெயர்.) ஆதலால் அவர்கள் தங்களுடைய (இத்தாவின்) தவணையை முடித்துவிட்டால் (அவர்களில் மறுமணம் செய்ய விருப்பமுள்ளவர்கள்) தங்களை ஒழுங்கான முறையில் (அலங்காரம்) ஏதும் செய்து கொள்வதைப் பற்றி குற்றமில்லை. நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்த வனாகவே இருக்கின்றான். (ஸூரத்துல் பகரா, வசனம் ௨௩௪)

Jan Trust Foundation

உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் அம்மனைவியர் நான்கு மாதம் பத்து நாள் பொறுத்திருக்க வேண்டும்; (இந்த இத்தத்)தவணை பூர்த்தியானதும், அவர்கள் (தங்கள் நாட்டத்துக்கு ஒப்ப) தங்கள் காரியத்தில் ஒழுங்கான முறையில் எதுவும் செய்துகொள்வதில் உங்கள் மீது குற்றமில்லை; அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உங்களில் மனைவிகளை விட்டு விட்டு இறப்பவர்கள் அவர்(களின் மனைவி)கள் நான்கு மாதங்கள், பத்து (நாள்கள்) தங்களுக்கு (இத்தா) எதிர்பார்ப்பார்கள். அவர்கள் தங்கள் தவணையை அடைந்து விட்டால் நல்ல முறையில் அவர்கள் தங்களுக்கு (எதையும்) செய்வதில் உங்கள் மீது குற்றமே இல்லை. நீங்கள் செய்வதை அல்லாஹ் ஆழ்ந்தறிபவன் ஆவான்.