Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௨௨

Qur'an Surah Al-Baqarah Verse 22

ஸூரத்துல் பகரா [௨]: ௨௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

الَّذِيْ جَعَلَ لَكُمُ الْاَرْضَ فِرَاشًا وَّالسَّمَاۤءَ بِنَاۤءً ۖوَّاَنْزَلَ مِنَ السَّمَاۤءِ مَاۤءً فَاَخْرَجَ بِهٖ مِنَ الثَّمَرٰتِ رِزْقًا لَّكُمْ ۚ فَلَا تَجْعَلُوْا لِلّٰهِ اَنْدَادًا وَّاَنْتُمْ تَعْلَمُوْنَ (البقرة : ٢)

alladhī
ٱلَّذِى
The One Who
எவன்
jaʿala
جَعَلَ
made
ஆக்கினான்
lakumu
لَكُمُ
for you
உங்களுக்கு
l-arḍa
ٱلْأَرْضَ
the earth
பூமியை
firāshan
فِرَٰشًا
a resting place
விரிப்பாக
wal-samāa
وَٱلسَّمَآءَ
and the sky
இன்னும் வானத்தை
bināan
بِنَآءً
a canopy
முகடாக
wa-anzala
وَأَنزَلَ
and sent down
இன்னும் இறக்கினான்
mina
مِنَ
from
இருந்து
l-samāi
ٱلسَّمَآءِ
the sky
வானம்
māan
مَآءً
water
நீரை
fa-akhraja
فَأَخْرَجَ
then brought forth
உற்பத்தி செய்தான்
bihi
بِهِۦ
therewith
அதன் மூலம்
mina
مِنَ
[of]
இருந்து
l-thamarāti
ٱلثَّمَرَٰتِ
the fruits
கனிகள்
riz'qan
رِزْقًا
(as) provision
உணவை
lakum
لَّكُمْۖ
for you
உங்களுக்கு
falā tajʿalū
فَلَا تَجْعَلُوا۟
So (do) not set up
ஆகவே, ஏற்படுத்தாதீர்கள்
lillahi
لِلَّهِ
to Allah
அல்லாஹ்வுக்கு
andādan
أَندَادًا
rivals
இணைகளை
wa-antum
وَأَنتُمْ
while you
நீங்கள்
taʿlamūna
تَعْلَمُونَ
[you] know
அறிகிறீர்கள்

Transliteration:

Allazee ja'ala lakumul arda firaashanw wassamaaa'a binaaa 'anw wa anzala minassamaaa'i maaa'an fa akhraja bihee minas samaraati rizqal lakum falaa taj'aloo lillaahi andaadanw wa antum ta'lamoon (QS. al-Baq̈arah:22)

English Sahih International:

[He] who made for you the earth a bed [spread out] and the sky a ceiling and sent down from the sky, rain and brought forth thereby fruits as provision for you. So do not attribute to Allah equals while you know [that there is nothing similar to Him]. (QS. Al-Baqarah, Ayah ௨௨)

Abdul Hameed Baqavi:

அவனே பூமியை நீங்கள் வசிக்கும் இடமாகவும், வானத்தை ஒரு முகடாகவும் அமைத்து, மேகத்திலிருந்து மழையைப் பொழிவித்து, அதனைக் கொண்டு (நீங்கள்) புசிக்கக்கூடிய கனி வர்க்கங்களையும் உங்களுக்கு வெளியாக்குகின்றான். ஆகவே (இவைகளையெல்லாம்) நீங்கள் தெளிவாக அறிந்துகொண்டே அல்லாஹ்வுக்கு எதனையும் இணையாக்காதீர்கள். (ஸூரத்துல் பகரா, வசனம் ௨௨)

Jan Trust Foundation

அ(ந்த இறை)வனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானத்தினின்றும் மழை பொழியச்செய்து; அதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான்; (இந்த உண்மைகளையெல்லாம்) நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவன் பூமியை உங்களுக்கு விரிப்பாகவும், வானத்தை முகடாகவும் ஆக்கினான். இன்னும், வானத்திலிருந்து (மழை) நீரை இறக்கினான். அதன் மூலம் உங்களுக்கு கனிகளிலிருந்து உணவை உற்பத்தி செய்தான். ஆகவே, நீங்கள் அறிய, அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள்.