Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௧௯௩

Qur'an Surah Al-Baqarah Verse 193

ஸூரத்துல் பகரா [௨]: ௧௯௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَقٰتِلُوْهُمْ حَتّٰى لَا تَكُوْنَ فِتْنَةٌ وَّيَكُوْنَ الدِّيْنُ لِلّٰهِ ۗ فَاِنِ انْتَهَوْا فَلَا عُدْوَانَ اِلَّا عَلَى الظّٰلِمِيْنَ (البقرة : ٢)

waqātilūhum
وَقَٰتِلُوهُمْ
And fight (against) them
இன்னும் அவர்களிடம் போர் புரியுங்கள்
ḥattā lā takūna
حَتَّىٰ لَا تَكُونَ
until not (there) is
நீங்கும் வரை
fit'natun
فِتْنَةٌ
oppression
இணைவைத்தல்
wayakūna l-dīnu
وَيَكُونَ ٱلدِّينُ
and becomes the religion
இன்னும் ஆகும்/வழிபாடு
lillahi
لِلَّهِۖ
for Allah
அல்லாஹ்வுக்கு
fa-ini intahaw
فَإِنِ ٱنتَهَوْا۟
Then if they cease
அவர்கள் விலகிக் கொண்டால்
falā ʿud'wāna
فَلَا عُدْوَٰنَ
then (let there be) no hostility
அறவே இல்லை/அத்துமீறல்
illā ʿalā
إِلَّا عَلَى
except against
தவிர/மீது
l-ẓālimīna
ٱلظَّٰلِمِينَ
the oppressors
அநியாயக்காரர்கள்

Transliteration:

Wa qaatiloohum hatta laa takoona fitnatunw wa yakoonad deenu lillaahi fa-inin tahaw falaa 'udwaana illaa 'alaz zaalimeen (QS. al-Baq̈arah:193)

English Sahih International:

Fight them until there is no [more] fitnah and [until] religion [i.e., worship] is [acknowledged to be] for Allah. But if they cease, then there is to be no aggression [i.e., assault] except against the oppressors. (QS. Al-Baqarah, Ayah ௧௯௩)

Abdul Hameed Baqavi:

அன்றி, (இஸ்லாமிற்கு எதிராக செய்யப்படும்) கலகம் (முற்றிலும்) நீங்கி, அல்லாஹ்வுடைய மார்க்கம் உறுதியாக நிலைபெறும் வரையில் அவர்களை எதிர்த்து போர் புரியுங்கள். ஆனால், அவர்கள் (கலகம் செய்யாது) விலகிக் கொண்டால் (அவர்களுக்கு மன்னிப்பு உண்டு). அநியாயம் செய்பவர்களைத் தவிர (மற்றவர்கள் மீது) அறவே அத்துமீறக்கூடாது. (ஸூரத்துல் பகரா, வசனம் ௧௯௩)

Jan Trust Foundation

ஃபித்னா(குழப்பமும், கலகமும்) நீங்கி அல்லாஹ்வுக்கே மார்க்கம் என்பது உறுதியாகும் வரை, நீங்கள் அவர்களுடன் போரிடுங்கள்; ஆனால் அவர்கள் ஒதுங்கி விடுவார்களானால் - அக்கிரமக்காரர்கள் தவிர(வேறு எவருடனும்) பகை (கொண்டு போர் செய்தல்) கூடாது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இணைவைத்தல் நீங்கி, வழிபாடு அல்லாஹ்விற்கு ஆகும் வரை அவர்களிடம் போர் புரியுங்கள். அவர்கள் விலகிக் கொண்டால் அநியாயக்காரர்கள் மீதே தவிர (மற்றவர்கள் மீது) அறவே அத்துமீறல் இல்லை.