Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௧௮௨

Qur'an Surah Al-Baqarah Verse 182

ஸூரத்துல் பகரா [௨]: ௧௮௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَمَنْ خَافَ مِنْ مُّوْصٍ جَنَفًا اَوْ اِثْمًا فَاَصْلَحَ بَيْنَهُمْ فَلَآ اِثْمَ عَلَيْهِ ۗ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ ࣖ (البقرة : ٢)

faman
فَمَنْ
But whoever
எவர்
khāfa
خَافَ
fears
பயந்தார்
min mūṣin
مِن مُّوصٍ
from (the) testator
மரணசாசனம்கூறுபவரிடத்தில்
janafan
جَنَفًا
(any) error
அநீதியை
aw
أَوْ
or
அல்லது
ith'man
إِثْمًا
sin
தவறை
fa-aṣlaḥa
فَأَصْلَحَ
then reconciles
சீர்திருத்தம் செய்தார்
baynahum
بَيْنَهُمْ
between them
அவர்களுக்கு மத்தியில்
falā ith'ma
فَلَآ إِثْمَ
then (there is) no sin
அறவே குற்றமில்லை
ʿalayhi
عَلَيْهِۚ
on him
அவர் மீது
inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்
ghafūrun
غَفُورٌ
(is) Oft-Forgiving
மகா மன்னிப்பாளன்
raḥīmun
رَّحِيمٌ
All-Merciful
மகா கருணையாளன்

Transliteration:

Faman khaafa mim moosin janafan aw isman fa aslaha bainahum falaaa ismaa 'alayh; innal laaha Ghafooru Raheem (QS. al-Baq̈arah:182)

English Sahih International:

But if one fears from the bequeather [some] error or sin and corrects that which is between them [i.e., the concerned parties], there is no sin upon him. Indeed, Allah is Forgiving and Merciful. (QS. Al-Baqarah, Ayah ௧௮௨)

Abdul Hameed Baqavi:

ஆனால் மரணசாசனம் கூறியவரி(ன் சாசனத்தி)ல் அநீதம் அல்லது தவறு இருப்பதை எவரேனும் பார்த்து பயந்து, அந்த சாசனப் பொருளை அடையக்கூடிய)வர்களுக்கிடையே சமாதானம் செய்து அதனை மாற்றிவிட்டால் அவர் மீது குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துல் பகரா, வசனம் ௧௮௨)

Jan Trust Foundation

ஆனால் வஸிய்யத்து செய்பவரிடம்(பாரபட்சம் போன்ற) தவறோ அல்லது மன முரண்டான அநீதமோ இருப்பதையஞ்சி ஒருவர் (சம்பந்தப்பட்டவர்களிடையே) சமாதானம் செய்து (அந்த வஸிய்யத்தை) சீர் செய்தால் அ(ப்படிச் செய்ப)வர் மீது குற்றமில்லை; நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனுமாகவும் இருக்கிறான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

எவர் மரணசாசனம் கூறுபவரிடத்தில் அநீதி அல்லது தவறைப் பயந்து, அவர்களுக்கு மத்தியில் சீர்திருத்தத்தை செய்தாரோ அவர் மீது அறவே குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன்.