Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௧௫௦

Qur'an Surah Al-Baqarah Verse 150

ஸூரத்துல் பகரா [௨]: ௧௫௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمِنْ حَيْثُ خَرَجْتَ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ ۗ وَحَيْثُ مَا كُنْتُمْ فَوَلُّوْا وُجُوْهَكُمْ شَطْرَهٗ ۙ لِئَلَّا يَكُوْنَ لِلنَّاسِ عَلَيْكُمْ حُجَّةٌ اِلَّا الَّذِيْنَ ظَلَمُوْا مِنْهُمْ فَلَا تَخْشَوْهُمْ وَاخْشَوْنِيْ وَلِاُتِمَّ نِعْمَتِيْ عَلَيْكُمْ وَلَعَلَّكُمْ تَهْتَدُوْنَۙ (البقرة : ٢)

wamin ḥaythu kharajta
وَمِنْ حَيْثُ خَرَجْتَ
And from wherever you start forth
இன்னும் நீர் எங்கிருந்து புறப்பட்டாலும்
fawalli
فَوَلِّ
[so] turn
திருப்புவீராக
wajhaka
وَجْهَكَ
your face
உம் முகத்தை
shaṭra
شَطْرَ
(in the) direction
பக்கம்
l-masjidi
ٱلْمَسْجِدِ
(of) Al-Masjid
அல் மஸ்ஜிது
l-ḥarāmi
ٱلْحَرَامِۚ
Al-Haraam
புனிதமான
waḥaythu mā kuntum
وَحَيْثُ مَا كُنتُمْ
And wherever that you (all) are
நீங்கள் எங்கிருந்தாலும்
fawallū
فَوَلُّوا۟
[so] turn
திருப்புங்கள்
wujūhakum
وُجُوهَكُمْ
your faces
உங்கள் முகங்களை
shaṭrahu
شَطْرَهُۥ
(in) its direction
அதன் பக்கம்
li-allā yakūna
لِئَلَّا يَكُونَ
so that not will be
ஆகாமல் இருப்பதற்காக
lilnnāsi
لِلنَّاسِ
for the people
மக்களுக்கு
ʿalaykum
عَلَيْكُمْ
against you
உங்களுக்கெதிராக
ḥujjatun
حُجَّةٌ
any argument
ஓர் ஆதாரம்
illā
إِلَّا
except
தவிர
alladhīna
ٱلَّذِينَ
those who
எவர்கள்
ẓalamū
ظَلَمُوا۟
wronged
அநியாயம் செய்தார்கள்
min'hum
مِنْهُمْ
among them
அவர்களில்
falā takhshawhum
فَلَا تَخْشَوْهُمْ
so (do) not fear them
ஆகவே, அவர்களைப் பயப்படாதீர்கள்
wa-ikh'shawnī
وَٱخْشَوْنِى
but fear Me
இன்னும் என்னைப் பயப்படுங்கள்
wali-utimma
وَلِأُتِمَّ
And that I complete
இன்னும் நான் முழுமைப்படுத்துவதற்காக
niʿ'matī
نِعْمَتِى
My favor
என் அருட்கொடையை
ʿalaykum
عَلَيْكُمْ
upon you
உங்கள் மீது
walaʿallakum tahtadūna
وَلَعَلَّكُمْ تَهْتَدُونَ
[and] so that you may (be) guided
இன்னும் நீங்கள் நேர்வழி அடைவதற்கு

Transliteration:

Wa min haisu kharajta fawalli wajhaka shatral Masjidil Haraam; wa haisu maa kuntum fawalloo wujoohakum shatrahoo li'allaa yakoona linnaasi 'alaikum hujjatun illal lazeena zalamoo minhum falaa takhshawhum wakhshawnee wa liutimma ni'matee 'alaikum wa la'allakum tahtadoon (QS. al-Baq̈arah:150)

English Sahih International:

And from wherever you go out [for prayer], turn your face toward al-Masjid al-Haram. And wherever you [believers] may be, turn your faces toward it in order that the people will not have any argument against you, except for those of them who commit wrong; so fear them not but fear Me. And [it is] so I may complete My favor upon you and that you may be guided, (QS. Al-Baqarah, Ayah ௧௫௦)

Abdul Hameed Baqavi:

அன்றி, (நபியே!) நீங்கள் எங்குச் சென்றாலும் தொழும் போது) "மஸ்ஜிதுல் ஹராமின்" பக்கமே உங்களுடைய முகத்தைத் திருப்புங்கள். (நம்பிக்கையாளர்களே!) அவர்களில் வரம்பு மீறியவர் களைத் தவிர மற்ற மனிதர்கள் உங்களுடன் (வீண்) விவாதம் செய்ய எந்த ஆதாரமும் இருக்கக்கூடாது என்பதற்காக நீங்களும் எங்கிருந்த போதிலும் "அல் மஸ்ஜிதுல் ஹராமின்" பக்கமே உங்களுடைய முகங்களைத் திருப்புங்கள். அன்றி, அவர்களுக்கு நீங்கள் பயப்பட வேண்டாம். எனக்கே நீங்கள் பயப்படுங்கள். (கிப்லாவைப் பற்றிய இக்கட்டளையின் மூலம்) என்னுடைய அருட்கொடையை நான் உங்கள்மீது முழுமையாக்கி வைப்பேன். (அதனால்) நிச்சயமாக நீங்கள் நேரான வழியை அடைவீர்கள். (ஸூரத்துல் பகரா, வசனம் ௧௫௦)

Jan Trust Foundation

ஆகவே(நபியே!) நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் (தொழுகையின் போது) உம் முகத்தைப் புனிதப் பள்ளிவாயிலின் பக்கமே திருப்பிக் கொள்ளும்; (முஃமின்களே!) உங்களில் அநியாயக்காரர்களைத் தவிர மற்ற மனிதர்கள் உங்களுடன் வீண் தர்க்கம் செய்ய இடங்கொடாமல் இருக்கும் பொருட்டு, நீங்களும் எங்கே இருந்தாலும் புனிதப் பள்ளியின் பக்கமே உங்கள் முகங்களைத் திருப்பிக் கொள்ளுங்கள்; எனவே, அவர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சுங்கள்; இன்னும், என்னுடைய நிஃமத்களை(அருட் கொடைகளை) உங்கள் மீது முழுமையாக்கி வைப்பதற்கும், நீங்கள் நேர்வழியினைப் பெறுவதற்கும் (பிறருக்கு அஞ்சாது, எனக்கே அஞ்சுங்கள்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும், (நபியே!) நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் (தொழுகையில்) ‘அல் மஸ்ஜிதுல் ஹராம்' பக்கம் உம் முகத்தைத் திருப்புவீராக. (நம்பிக்கையாளர்களே!) அவர்களில் அநியாயக்காரர்களைத் தவிர (மற்ற) மக்களுக்கு உங்களுக்கு எதிராக எந்த ஆதாரமும் இருக்கக்கூடாது என்பதற்காகவும், என் அருட்கொடையை நான் உங்கள் மீது முழுமைப்படுத்துவதற்காகவும், நீங்கள் நேர்வழி அடைவதற்காகவும் நீங்கள் எங்கிருந்தாலும் ‘அல் மஸ்ஜிதுல் ஹராம்' பக்கம் உங்கள் முகங்களைத் திருப்புங்கள். ஆகவே, அவர்களைப் பயப்படாதீர்கள்; என்னைப் பயப்படுங்கள்.