குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௧௪௫
Qur'an Surah Al-Baqarah Verse 145
ஸூரத்துல் பகரா [௨]: ௧௪௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَىِٕنْ اَتَيْتَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ بِكُلِّ اٰيَةٍ مَّا تَبِعُوْا قِبْلَتَكَ ۚ وَمَآ اَنْتَ بِتَابِعٍ قِبْلَتَهُمْ ۚ وَمَا بَعْضُهُمْ بِتَابِعٍ قِبْلَةَ بَعْضٍۗ وَلَىِٕنِ اتَّبَعْتَ اَهْوَاۤءَهُمْ مِّنْۢ بَعْدِ مَاجَاۤءَكَ مِنَ الْعِلْمِ ۙ اِنَّكَ اِذًا لَّمِنَ الظّٰلِمِيْنَ ۘ (البقرة : ٢)
- wala-in
- وَلَئِنْ
- And even if
- atayta
- أَتَيْتَ
- you come
- நீர் வந்தால்
- alladhīna
- ٱلَّذِينَ
- (to) those who
- எவர்கள்
- ūtū
- أُوتُوا۟
- were given
- கொடுக்கப்பட்டார்கள்
- l-kitāba
- ٱلْكِتَٰبَ
- the Book
- வேதம்
- bikulli
- بِكُلِّ
- with all
- எல்லாவற்றையும் கொண்டு
- āyatin
- ءَايَةٍ
- (the) signs
- அத்தாட்சி
- mā tabiʿū
- مَّا تَبِعُوا۟
- not they would follow
- அவர்கள் பின்பற்ற மாட்டார்கள்
- qib'lataka
- قِبْلَتَكَۚ
- your direction of prayer
- உமது கிப்லாவை
- wamā anta
- وَمَآ أَنتَ
- and not (will) you (be)
- இன்னும் இல்லை/நீர்
- bitābiʿin
- بِتَابِعٍ
- a follower
- பின்பற்றுபவராக
- qib'latahum
- قِبْلَتَهُمْۚ
- (of) their direction of prayer
- அவர்களின்கிப்லாவை
- wamā
- وَمَا
- And not
- இன்னும் இல்லை
- baʿḍuhum
- بَعْضُهُم
- some of them
- அவர்களில் சிலர்
- bitābiʿin
- بِتَابِعٍ
- (are) followers
- பின்பற்றுபவராக
- qib'lata
- قِبْلَةَ
- (of the) direction of prayer
- கிப்லாவை
- baʿḍin
- بَعْضٍۚ
- (of each) other
- சிலரின்
- wala-ini ittabaʿta
- وَلَئِنِ ٱتَّبَعْتَ
- And if you followed
- நீர் பின்பற்றினால்
- ahwāahum
- أَهْوَآءَهُم
- their desires
- விருப்பங்களை அவர்களுடைய
- min baʿdi
- مِّنۢ بَعْدِ
- from after
- பின்னர்
- mā
- مَا
- [what]
- எது
- jāaka
- جَآءَكَ
- came to you
- வந்தது/உமக்கு
- mina l-ʿil'mi
- مِنَ ٱلْعِلْمِۙ
- of the knowledge
- கல்வியிலிருந்து
- innaka
- إِنَّكَ
- indeed, you
- நிச்சயமாக நீர்
- idhan
- إِذًا
- (would) then
- அப்போது
- lamina
- لَّمِنَ
- (be) surely among
- தான்/இல்
- l-ẓālimīna
- ٱلظَّٰلِمِينَ
- the wrongdoers
- அநியாயக்காரர்கள்
Transliteration:
Wa la'in ataital lazeena ootul kitaaba bikulli aayatim maa tabi'oo Qiblatak; wa maaa anta bitaabi'in Qiblatahum; wa maa ba'duhum bitaabi''in Qiblata ba'd; wa la'init taba'ta ahwaaa;ahum mim ba'di maa jaaa'aka minal 'ilmi innaka izal laminaz zaalimeen(QS. al-Baq̈arah:145)
English Sahih International:
And if you brought to those who were given the Scripture every sign, they would not follow your qiblah. Nor will you be a follower of their qiblah. Nor would they be followers of one another's qiblah. So if you were to follow their desires after what has come to you of knowledge, indeed, you would then be among the wrongdoers. (QS. Al-Baqarah, Ayah ௧௪௫)
Abdul Hameed Baqavi:
ஆகவே (நபியே!) வேதம் கொடுக்கப்பட்ட அவர்களுக்குத் (திருப்தியளிப்பதற்காக) அத்தாட்சிகள் அனைத்தையும் நீங்கள் கொண்டுவந்த போதிலும் அவர்கள் உங்களுடைய கிப்லாவைப் பின்பற்றப் போவதில்லை. நீங்களும் அவர்களுடைய கிப்லாவைப் பின்பற்றப் போவதில்லை. அன்றி (வேதம் கொடுக்கப்பட்ட) அவர்களிலும் ஒருவர் மற்றொருவரின் கிப்லாவைப் பின்பற்றப் போவதுமில்லை. (ஆதலால், மக்காவை நோக்கித் தொழும்படி) உங்களுக்கு வஹீ(யின் மூலம் உத்தரவு) வந்ததன் பின்னும் அவர்களுடைய விருப்பங்களை நீங்கள் பின்பற்றுவீர்களானால் நிச்சயமாக நீங்களும் அநியாயக்கரர்களில் உள்ளவர்தான் (என்று கருதப்படுவீர்கள்). (ஸூரத்துல் பகரா, வசனம் ௧௪௫)
Jan Trust Foundation
வேதம் கொடுக்கப்பட்டவர்களிடம் நீர் எல்லாவிதமான அத்தாட்சிகளையும் கொண்டுவந்த போதிலும் அவர்கள் உம் கிப்லாவைப் பின்பற்ற மாட்டார்கள்;; நீரும் அவர்களுடைய கிப்லாவைப் பின்பற்றுபவர் அல்லர்; இன்னும் அவர்களில் சிலர் மற்றவர்களின் கிப்லாவைப் பின்பற்றுபவர்களும் அல்லர்; எனவே (இதைப் பற்றிய) ஞானம் உமக்குக் கிடைத்த பின் நீர் அவர்களுடைய விருப்பங்களைப் பின்பற்றி நடப்பீராயின், நிச்சயமாக நீர் அநியாயக்காரர்களில் ஒருவராக இருப்பீர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) வேதம் கொடுக்கப்பட்டவர்களிடம் எல்லா அத்தாட்சியை (களை)யும் நீர் கொண்டு வந்தாலும் அவர்கள் உமது கிப்லாவைப் பின்பற்றமாட்டார்கள். நீரும் அவர்களின் கிப்லாவைப் பின்பற்றுபவராக இல்லை. அவர்களிலும் சிலர் சிலரின் கிப்லாவைப் பின்பற்றுபவராக இல்லை. உமக்குக் கல்வி வந்த பின்னர் அவர்களுடைய விருப்பங்களை நீர் பின்பற்றினால் அப்போது நிச்சயமாக நீர் அநியாயக்காரர்களில் உள்ளவர்தான்.