Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௧௪௩

Qur'an Surah Al-Baqarah Verse 143

ஸூரத்துல் பகரா [௨]: ௧௪௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَكَذٰلِكَ جَعَلْنٰكُمْ اُمَّةً وَّسَطًا لِّتَكُوْنُوْا شُهَدَاۤءَ عَلَى النَّاسِ وَيَكُوْنَ الرَّسُوْلُ عَلَيْكُمْ شَهِيْدًا ۗ وَمَا جَعَلْنَا الْقِبْلَةَ الَّتِيْ كُنْتَ عَلَيْهَآ اِلَّا لِنَعْلَمَ مَنْ يَّتَّبِعُ الرَّسُوْلَ مِمَّنْ يَّنْقَلِبُ عَلٰى عَقِبَيْهِۗ وَاِنْ كَانَتْ لَكَبِيْرَةً اِلَّا عَلَى الَّذِيْنَ هَدَى اللّٰهُ ۗوَمَا كَانَ اللّٰهُ لِيُضِيْعَ اِيْمَانَكُمْ ۗ اِنَّ اللّٰهَ بِالنَّاسِ لَرَءُوْفٌ رَّحِيْمٌ (البقرة : ٢)

wakadhālika
وَكَذَٰلِكَ
And thus
இன்னும் அவ்வாறுதான்
jaʿalnākum
جَعَلْنَٰكُمْ
We made you
ஆக்கினோம்/உங்களை
ummatan
أُمَّةً
a community
சமுதாயமாக
wasaṭan
وَسَطًا
(of the) middle way
நடுநிலையான
litakūnū
لِّتَكُونُوا۟
so that you will be
நீங்கள் இருப்பதற்காக
shuhadāa
شُهَدَآءَ
witnesses
சாட்சிகளாக
ʿalā l-nāsi
عَلَى ٱلنَّاسِ
over the mankind
மக்களுக்கு
wayakūna
وَيَكُونَ
and will be
இன்னும் இருப்பார்
l-rasūlu
ٱلرَّسُولُ
the Messenger
தூதர்
ʿalaykum
عَلَيْكُمْ
on you
உங்களுக்கு
shahīdan
شَهِيدًاۗ
a witness
சாட்சியாக
wamā jaʿalnā
وَمَا جَعَلْنَا
And not We made
இன்னும் நாம்ஆக்கவில்லை
l-qib'lata
ٱلْقِبْلَةَ
the direction of prayer
கிப்லாவை
allatī
ٱلَّتِى
which
எது
kunta
كُنتَ
you were used to
நீர் இருந்தீர்
ʿalayhā
عَلَيْهَآ
[on it]
அதன் மீது
illā
إِلَّا
except
தவிர
linaʿlama
لِنَعْلَمَ
that We make evident
நாம் அறிவதற்காக
man
مَن
(he) who
எவர்
yattabiʿu
يَتَّبِعُ
follows
பின்பற்றுவார்
l-rasūla
ٱلرَّسُولَ
the Messenger
தூதரை
mimman
مِمَّن
from (he) who
எவரிலிருந்து
yanqalibu
يَنقَلِبُ
turns back
திரும்பி விடுகிறார்
ʿalā
عَلَىٰ
on
மீது
ʿaqibayhi
عَقِبَيْهِۚ
his heels
அவருடைய (இரு) குதிங்கால்கள்
wa-in kānat
وَإِن كَانَتْ
And indeed it was
இன்னும் நிச்சயமாக அது இருந்தது
lakabīratan
لَكَبِيرَةً
certainly a great (test)
பெரிதாக
illā
إِلَّا
except
தவிர
ʿalā alladhīna
عَلَى ٱلَّذِينَ
for those whom
மீது/எவர்கள்
hadā
هَدَى
guided
நேர்வழி நடத்தினான்
l-lahu
ٱللَّهُۗ
(by) Allah
அல்லாஹ்
wamā kāna
وَمَا كَانَ
And not will
இன்னும் இருக்கவில்லை
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
liyuḍīʿa
لِيُضِيعَ
let go waste
அவன் வீணாக்குபவனாக
īmānakum
إِيمَٰنَكُمْۚ
your faith
உங்கள் நம்பிக்கையை
inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்
bil-nāsi
بِٱلنَّاسِ
(is) to [the] mankind
மக்கள் மீது
laraūfun
لَرَءُوفٌ
Full of Kindness
மிக இரக்கமுடையவன்தான்
raḥīmun
رَّحِيمٌ
Most Merciful
மகா கருணையாளன்

Transliteration:

Wa kazaalika ja'alnaakum ummatanw wasatal litakoonoo shuhadaaa'a 'alan naasi wa yakoonar Rasoolu 'alaikum shaheedaa; wa maa ja'alnal qiblatal latee kunta 'alaihaaa illaa lina'lama mai yattabi'ur Rasoola mimmai yanqalibu 'alaa 'aqibayh; wa in kaanat lakabeeratan illaa 'alal lazeena hadal laah; wa maa kaanal laahu liyudee'a eemaanakum; innal laaha binnaasi la Ra'oofur Raheem (QS. al-Baq̈arah:143)

English Sahih International:

And thus We have made you a median [i.e., just] community that you will be witnesses over the people and the Messenger will be a witness over you. And We did not make the qiblah which you used to face except that We might make evident who would follow the Messenger from who would turn back on his heels. And indeed, it is difficult except for those whom Allah has guided. And never would Allah have caused you to lose your faith [i.e., your previous prayers]. Indeed Allah is, to the people, Kind and Merciful. (QS. Al-Baqarah, Ayah ௧௪௩)

Abdul Hameed Baqavi:

(நம்பிக்கையாளர்களே!) அவ்வாறே (ஏற்றத்தாழ்வற்ற) நடுநிலையான வகுப்பினராகவும் நாம் உங்களை ஆக்கினோம். ஆகவே, நீங்கள் (மற்ற) மனிதர்களுக்கு (வழிகாட்டக் கூடிய) சாட்சிகளாக இருங்கள். (நம்முடைய) தூதர் உங்களுக்கு (வழி காட்டக் கூடிய) சாட்சியாக இருப்பார். (நபியே!) நீங்கள் (இதுவரை முன்நோக்கித் தொழுதுகொண்டு) இருந்த (பைத்துல் முகத்தஸின்) திசையை (மாற்றாமல் நீங்கள் அதையே நோக்கித் தொழுது வரும்படி இதுவரை) நாம் விட்டு வைத்திருந்ததெல்லாம் (அதை மாற்றிய பின் நம்) தூதரைப் பின்பற்றுபவர் யார்? பின்பற்றாது தன் குதிங்கால் புறமாகவே (புறமுதுகிட்டு) திரும்பி(ச் சென்று) விடுகிறவர் யார்? என்பதை நாம் அறி(வித்து விடு)வதற்காகத்தான். ஆனால் எவர்களை அல்லாஹ் நேர்வழியில் நடத்துகின்றானோ அவர்களைத் தவிர மற்றவர்களுக்கு அ(வ்வாறு கிப்லாவை மாற்றுவ)து நிச்சயமாக மிகப்பளுவாக இருக்கும். தவிர, (நம்பிக்கையாளர்களே! இதற்கு முன்னர் நீங்கள் பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழுது வந்த) உங்களுடைய நம்பிக்கையையும் அல்லாஹ் வீணாக்கிவிட மாட்டான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிகக் கருணையாளன், நிகரற்ற அன்புடையவன். (ஸூரத்துல் பகரா, வசனம் ௧௪௩)

Jan Trust Foundation

இதே முறையில் நாம் உங்களை ஒரு நடு நிலையுள்ள உம்மத்தாக (சமுதாயமாக) ஆக்கியுள்ளோம்; (அப்படி ஆக்கியது) நீங்கள் மற்ற மனிதர்களின் சாட்சியாளர்களாக இருப்பதற்காகவும், ரஸூல் (நம் தூதர்) உங்கள் சாட்சியாளராக இருப்பதற்காகவுமேயாகும்; யார் (நம்) தூதரைப் பின்பற்றுகிறார்கள் யார் (அவரைப் பின்பற்றாமல்) தம் இரு குதிங் கால்கள் மீது பின்திரும்பி செல்கிறார்கள் என்பதை அறி(வித்து விடு)வான் வேண்டி கிப்லாவை நிர்ணயித்தோம்; இது அல்லாஹ் நேர்வழி காட்டியோருக்குத் தவிர மற்றவர்களுக்கு நிச்சயமாக ஒரு பளுவாகவே இருந்தது; அல்லாஹ் உங்கள் ஈமானை (நம்பிக்கையை) வீணாக்கமாட்டான்; நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிகப்பெரும் கருணை காட்டுபவன், நிகரற்ற அன்புடையவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நம்பிக்கையாளர்களே!) அவ்வாறுதான், நீங்கள் மக்களுக்கு சாட்சிகளாக இருப்பதற்காகவும், உங்களுக்கு தூதர் சாட்சியாக இருப்பதற்காகவும் நடுநிலைச் சமுதாயமாக உங்களை ஆக்கினோம். தம் குதிங்கால்கள் மீது திரும்பிவிடுவோரிலிருந்து தூதரைப் பின்பற்றுபவர் யார்? என்பதை நாம் அறிவதற்காகவே தவிர நீர் இருந்த (பைத்துல் முகத்தஸ்) கிப்லாவை நாம் ஆக்கவில்லை. அல்லாஹ் நேர்வழி நடத்தியவர்கள் மீதே தவிர (மற்றவர் களுக்கு) நிச்சயமாக அது பெரிதாகவே இருந்தது. உங்கள் நம்பிக்கையை அல்லாஹ் வீணாக்கி விடுபவனாக இல்லை. நிச்சயமாக அல்லாஹ் மக்கள் மீது மிக இரக்கமுடையவன், மகா கருணையாளன்தான்.