Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௧௩௭

Qur'an Surah Al-Baqarah Verse 137

ஸூரத்துல் பகரா [௨]: ௧௩௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاِنْ اٰمَنُوْا بِمِثْلِ مَآ اٰمَنْتُمْ بِهٖ فَقَدِ اهْتَدَوْا ۚوَاِنْ تَوَلَّوْا فَاِنَّمَا هُمْ فِيْ شِقَاقٍۚ فَسَيَكْفِيْكَهُمُ اللّٰهُ ۚوَهُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ ۗ (البقرة : ٢)

fa-in āmanū
فَإِنْ ءَامَنُوا۟
So if they believe[d]
அவர்கள் நம்பிக்கை கொண்டால்
bimith'li
بِمِثْلِ
in (the) like
போன்றே
مَآ
(of) what
எதை
āmantum
ءَامَنتُم
you have believed
நம்பிக்கை கொண்டீர்கள்
bihi
بِهِۦ
in [it]
அதைக் கொண்டு
faqadi
فَقَدِ
then indeed
திட்டமாக
ih'tadaw
ٱهْتَدَوا۟ۖ
they are (rightly) guided
நேர்வழி பெறுவார்கள்
wa-in tawallaw
وَّإِن تَوَلَّوْا۟
But if they turn away
அவர்கள் திரும்பினால்
fa-innamā hum
فَإِنَّمَا هُمْ
then only they
அவர்களெல்லாம்
fī shiqāqin
فِى شِقَاقٍۖ
(are) in dissension
முரண்பாட்டில்தான்
fasayakfīkahumu
فَسَيَكْفِيكَهُمُ
So will suffice you against them
ஆக, பாதுகாப்பான்/உம்மை/அவர்களிடமிருந்து
l-lahu
ٱللَّهُۚ
Allah
அல்லாஹ்
wahuwa
وَهُوَ
and He
இன்னும் அவன்
l-samīʿu
ٱلسَّمِيعُ
(is) the All-Hearing
நன்கு செவியுறுபவன்
l-ʿalīmu
ٱلْعَلِيمُ
the All-Knowing
நன்கறிந்தவன்

Transliteration:

Fa in aamanoo bimisli maaa aamantum bihee faqadih tadaw wa in tawallaw fa innamaa hum fee shiqaaq; fasayakfeekahumul laah; wa Huwas Samee'ul Aleem (QS. al-Baq̈arah:137)

English Sahih International:

So if they believe in the same as you believe in, then they have been [rightly] guided; but if they turn away, they are only in dissension, and Allah will be sufficient for you against them. And He is the Hearing, the Knowing. (QS. Al-Baqarah, Ayah ௧௩௭)

Abdul Hameed Baqavi:

(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் நம்பிக்கை கொண்டவாறே அவர்களும் நம்பிக்கை கொண்டால் நிச்சயமாக அவர்கள் நேரான வழியை அடைந்து விடுவார்கள். அவர்கள் புறக்கணித்துவிட்டால் நிச்சயமாக வீண் பிடிவாதத்தில்தான் அவர்கள் இருக்கின்றனர். அவர்களைப் பற்றி உங்களுக்கு(ப் பயம் வேண்டாம்) அல்லாஹ் போதுமானவன். மேலும், அவன் (அனைத்தையும்) செவியுறுபவனும் அறிபவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துல் பகரா, வசனம் ௧௩௭)

Jan Trust Foundation

ஆகவே, நீங்கள் ஈமான் கொள்வதைப்போல் அவர்களும் ஈமான் கொண்டால் நிச்சயமாக அவர்கள் நேர்வழியை பெற்றுவிடுவார்கள்; ஆனால் அவர்கள் புறக்கணித்துவிட்டால் நிச்சயமாக அவர்கள் பிளவில்தான் இருக்கின்றனர். எனவே அவர்களி(ன் கெடுதல்களி)லிருந்து உம்மைக் காப்பாற்ற அல்லாஹ்வே போதுமானவன்; அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், (எல்லாம்) அறிந்தோனுமாகவும் இருக்கிறான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் எதைக் கொண்டு நம்பிக்கை கொண்டீர்களோ அது போன்றே அவர்கள் நம்பிக்கை கொண்டால் திட்டமாக அவர்கள் நேர்வழி பெறுவார்கள். அவர்கள் (புறக்கணித்து) திரும்பினால் அவர்களெல்லாம் (வீண்) முரண்பாட்டிலில்தான் இருக்கின்றனர். ஆக, அவர்களிடமிருந்து அல்லாஹ் உம்மை பாதுகாப்பான். அவன் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன்.