Skip to content

ஸூரா ஸூரத்துல் பகரா - Page: 4

Al-Baqarah

(al-Baq̈arah)

௩௧

وَعَلَّمَ اٰدَمَ الْاَسْمَاۤءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلٰۤىِٕكَةِ فَقَالَ اَنْۢبِـُٔوْنِيْ بِاَسْمَاۤءِ هٰٓؤُلَاۤءِ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ ٣١

waʿallama
وَعَلَّمَ
இன்னும் கற்பித்தான்
ādama
ءَادَمَ
ஆதமுக்கு
l-asmāa
ٱلْأَسْمَآءَ
பெயர்களை
kullahā
كُلَّهَا
எல்லாவற்றையும்/ அவை
thumma
ثُمَّ
பிறகு
ʿaraḍahum
عَرَضَهُمْ
வைத்தான்/அவற்றை
ʿalā l-malāikati
عَلَى ٱلْمَلَٰٓئِكَةِ
முன்/வானவர்கள்
faqāla
فَقَالَ
இன்னும் கூறினான்
anbiūnī
أَنۢبِـُٔونِى
அறிவியுங்கள்/எனக்கு
bi-asmāi hāulāi
بِأَسْمَآءِ هَٰٓؤُلَآءِ
பெயர்களை/இவற்றின்
in kuntum
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
ṣādiqīna
صَٰدِقِينَ
உண்மையாளர்களாக
பின்பு (ஆதமைப் படைத்து) ஆதமுக்கு எல்லாப் (பொருள்களின்) பெயர்களையும் (அவற்றின் தன்மைகளையும்) கற்றுக் கொடுத்து, அவைகளை அந்த மலக்குகளுக்கு முன்பாக்கி "(மலக்குகளே! ஆதமுக்கு என்னுடைய பிரதிநிதி ஆவதற்குரிய தகுதியில்லை என்று கூறினீர்களே! இதில்) நீங்கள் உண்மை யானவர்களாக இருந்தால் (இதோ உங்கள் முன்னிருக்கும்) இவற்றின் பெயர்களை எனக்கு அறிவியுங்கள்" எனக் கூறினான். ([௨] ஸூரத்துல் பகரா: ௩௧)
Tafseer
௩௨

قَالُوْا سُبْحٰنَكَ لَا عِلْمَ لَنَآ اِلَّا مَا عَلَّمْتَنَا ۗاِنَّكَ اَنْتَ الْعَلِيْمُ الْحَكِيْمُ ٣٢

qālū
قَالُوا۟
கூறினார்கள்
sub'ḥānaka
سُبْحَٰنَكَ
நீ மகாத்தூயவன்
lā ʿil'ma
لَا عِلْمَ
அறவேஇல்லை/அறிவு
lanā
لَنَآ
எங்களுக்கு
illā
إِلَّا
தவிர
mā ʿallamtanā
مَا عَلَّمْتَنَآۖ
எவை/கற்பித்தாய்/எங்களுக்கு
innaka anta
إِنَّكَ أَنتَ
நிச்சயமாக நீதான்
l-ʿalīmu
ٱلْعَلِيمُ
நன்கறிந்தவன்
l-ḥakīmu
ٱلْحَكِيمُ
மகா ஞானவான்
(அவ்வாறு அறிவிக்க முடியாமல்) அவர்கள் (இறைவனை நோக்கி) "நீ மிகத் தூய்மையானவன். நீ எங்களுக்கு அறிவித்தவற்றைத் தவிர (வேறொன்றையும்) நாங்கள் அறிய மாட்டோம். நிச்சயமாக நீ மிக்க அறிந்தவனும், ஞானம் உடையவனாகவும் இருக்கின்றாய்" எனக் கூறினார்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௩௨)
Tafseer
௩௩

قَالَ يٰٓاٰدَمُ اَنْۢبِئْهُمْ بِاَسْمَاۤىِٕهِمْ ۚ فَلَمَّآ اَنْۢبَاَهُمْ بِاَسْمَاۤىِٕهِمْۙ قَالَ اَلَمْ اَقُلْ لَّكُمْ اِنِّيْٓ اَعْلَمُ غَيْبَ السَّمٰوٰتِ وَالْاَرْضِۙ وَاَعْلَمُ مَا تُبْدُوْنَ وَمَا كُنْتُمْ تَكْتُمُوْنَ ٣٣

qāla
قَالَ
கூறினான்
yāādamu
يَٰٓـَٔادَمُ
ஆதமே
anbi'hum
أَنۢبِئْهُم
அறிவிப்பீராக/அவர்களுக்கு
bi-asmāihim
بِأَسْمَآئِهِمْۖ
பெயர்களை/அவற்றின்
falammā
فَلَمَّآ
போது/அறிவித்தார்
anba-ahum
أَنۢبَأَهُم
அவர்களுக்கு
bi-asmāihim
بِأَسْمَآئِهِمْ
பெயர்களை/அவற்றின்
qāla
قَالَ
கூறினான்
alam aqul
أَلَمْ أَقُل
நான் கூறவில்லையா?
lakum
لَّكُمْ
உங்களுக்கு
innī
إِنِّىٓ
நிச்சயமாக நான்
aʿlamu
أَعْلَمُ
அறிவேன்
ghayba
غَيْبَ
மறைவானவற்றை
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்கள்
wal-arḍi
وَٱلْأَرْضِ
இன்னும் பூமி
wa-aʿlamu
وَأَعْلَمُ
இன்னும் அறிவேன்
mā tub'dūna
مَا تُبْدُونَ
எதை/ வெளிப்படுத்துகிறீர்கள்
wamā kuntum taktumūna
وَمَا كُنتُمْ تَكْتُمُونَ
இன்னும் எதை/இருந்தீர்கள்/மறைக்கிறீர்கள்
(பின்னர் இறைவன்) "ஆதமே! நீங்கள் அவற்றின் பெயர்களை அவர்களுக்கு அறிவியுங்கள்" எனக் கூறினான். அவர் அவர்களுக்கு அவற்றின் பெயர்களை அறிவித்தபொழுது அவன் (மலக்குகளை நோக்கி) "பூமியிலும் வானங்களிலும் (உங்களுக்கு) மறைவானவைகளை நிச்சயமாக நான் நன்கறிபவன் என்று நான் உங்களுக்குக் கூறவில்லையா? ஆகவே, நீங்கள் (ஆதமை பற்றி) வெளியிட்டதையும், மறைத்துக் கொண்டதையும் நிச்சயமாக நான் (நன்கு) அறிவேன்" என்றான். ([௨] ஸூரத்துல் பகரா: ௩௩)
Tafseer
௩௪

وَاِذْ قُلْنَا لِلْمَلٰۤىِٕكَةِ اسْجُدُوْا لِاٰدَمَ فَسَجَدُوْٓا اِلَّآ اِبْلِيْسَۗ اَبٰى وَاسْتَكْبَرَۖ وَكَانَ مِنَ الْكٰفِرِيْنَ ٣٤

wa-idh qul'nā
وَإِذْ قُلْنَا
சமயம்/கூறினோம்
lil'malāikati
لِلْمَلَٰٓئِكَةِ
வானவர்களுக்கு
us'judū
ٱسْجُدُوا۟
சிரம் பணியுங்கள்
liādama
لِءَادَمَ
ஆதமுக்கு
fasajadū
فَسَجَدُوٓا۟
ஆகவே சிரம் பணிந்தார்கள்
illā
إِلَّآ
தவிர
ib'līsa
إِبْلِيسَ
இப்லீஸ்
abā
أَبَىٰ
மறுத்தான்
wa-is'takbara
وَٱسْتَكْبَرَ
இன்னும் பெருமையடித்தான்
wakāna
وَكَانَ
இன்னும் ஆகிவிட்டான்
mina l-kāfirīna
مِنَ ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்களில்
பின்னர் நாம் மலக்குகளை (நோக்கி) "ஆதமுக்கு நீங்கள் பணி(ந்து ஸுஜூது செய்)யுங்கள்" எனக் கூறியபோது இப்லீஸைத் தவிர (அனைவரும்) ஸுஜூது செய்தார்கள். அவனோ பெருமை கொண்டு விலகி (நம்முடைய கட்டளையை) நிராகரிப்பவனாகி விட்டான். ([௨] ஸூரத்துல் பகரா: ௩௪)
Tafseer
௩௫

وَقُلْنَا يٰٓاٰدَمُ اسْكُنْ اَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَاۖ وَلَا تَقْرَبَا هٰذِهِ الشَّجَرَةَ فَتَكُوْنَا مِنَ الظّٰلِمِيْنَ ٣٥

waqul'nā
وَقُلْنَا
இன்னும் கூறினோம்
yāādamu
يَٰٓـَٔادَمُ
ஆதமே
us'kun
ٱسْكُنْ
வசிப்பீராக
anta
أَنتَ
நீர்
wazawjuka
وَزَوْجُكَ
இன்னும் உம் மனைவி
l-janata
ٱلْجَنَّةَ
சொர்க்கத்தில்
wakulā
وَكُلَا
இன்னும் இருவரும் சாப்பிடுங்கள்
min'hā
مِنْهَا
அதிலிருந்து
raghadan
رَغَدًا
தாராளமாக
ḥaythu shi'tumā
حَيْثُ شِئْتُمَا
விதத்தில்/இருவரும் நாடினீர்கள்
walā taqrabā
وَلَا تَقْرَبَا
இன்னும் இருவரும் நெருங்காதீர்கள்
hādhihi
هَٰذِهِ
இந்த
l-shajarata
ٱلشَّجَرَةَ
மரத்தை
fatakūnā
فَتَكُونَا
இருவரும் ஆகிவிடுவீர்கள்
mina l-ẓālimīna
مِنَ ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்களில்
பின்னர் நாம் (ஆதமுக்குத் துணையாக அவர் மனைவியைப் படைத்து ஆதமை நோக்கி) "ஆதமே! நீங்கள் உங்களுடைய மனைவியுடன் இச்சோலையில் வசித்திருங்கள். நீங்கள் இருவரும் இதில் விரும்பும் இடத்தில் (விரும்பியவற்றைத்) தாராளமாகப் புசியுங்கள். ஆனால் இந்த மரத்தை அணுகாதீர்கள். அணுகினால் நீங்கள் இருவரும் (உங்களுக்குத்) தீங்கிழைத்துக் கொண்டவர் களாவீர்கள்" என்று கூறினோம். ([௨] ஸூரத்துல் பகரா: ௩௫)
Tafseer
௩௬

فَاَزَلَّهُمَا الشَّيْطٰنُ عَنْهَا فَاَخْرَجَهُمَا مِمَّا كَانَا فِيْهِ ۖ وَقُلْنَا اهْبِطُوْا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ ۚ وَلَكُمْ فِى الْاَرْضِ مُسْتَقَرٌّ وَّمَتَاعٌ اِلٰى حِيْنٍ ٣٦

fa-azallahumā
فَأَزَلَّهُمَا
பிறழச் செய்தான்/அவ்விருவரை
l-shayṭānu
ٱلشَّيْطَٰنُ
ஷைத்தான்
ʿanhā
عَنْهَا
அதிலிருந்து
fa-akhrajahumā
فَأَخْرَجَهُمَا
வெளியேற்றினான்/அவ்விருவரை
mimmā
مِمَّا
எதிலிருந்து
kānā
كَانَا
இருவரும்இருந்தனர்
fīhi
فِيهِۖ
அதில்
waqul'nā
وَقُلْنَا
இன்னும் கூறினோம்
ih'biṭū
ٱهْبِطُوا۟
இறங்குங்கள்
baʿḍukum
بَعْضُكُمْ
உங்களில் சிலர்
libaʿḍin
لِبَعْضٍ
சிலருக்கு
ʿaduwwun
عَدُوٌّۖ
எதிரி
walakum
وَلَكُمْ
இன்னும் உங்களுக்கு
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
mus'taqarrun
مُسْتَقَرٌّ
வசிக்குமிடம்
wamatāʿun
وَمَتَٰعٌ
இன்னும் இன்பம்
ilā
إِلَىٰ
வரை
ḥīnin
حِينٍ
ஒரு காலம்
எனினும் (இப்லீஸாகிய) ஷைத்தான் அவ்விருவரையும் (தடுக்கப்பட்டிருந்த மரத்தை அணுகித்) தவறிழைக்கும்படிச் செய்து அச்சோலையை விட்டும், அவ்விருவரும் இருந்த (மேலான) நிலைமையிலிருந்தும் அவர்களை வெளியேறும்படி செய்து விட்டான். ஆகவே (அவர்களை நோக்கி) "உங்களில் சிலர் சிலருக்கு எதிரியாவர். (இச்சோலையிலிருந்து) நீங்கள் இறங்கிவிடுங்கள். உங்களுக்கு பூமியில்தான் வசிக்க இடமுண்டு. அதில் சிறிது காலம் வரையில் சுகமும் அனுபவிக்கலாம்" என நாம் கூறினோம். ([௨] ஸூரத்துல் பகரா: ௩௬)
Tafseer
௩௭

فَتَلَقّٰٓى اٰدَمُ مِنْ رَّبِّهٖ كَلِمٰتٍ فَتَابَ عَلَيْهِ ۗ اِنَّهٗ هُوَ التَّوَّابُ الرَّحِيْمُ ٣٧

fatalaqqā
فَتَلَقَّىٰٓ
பெற்றார்
ādamu
ءَادَمُ
ஆதம்
min
مِن
இருந்து
rabbihi
رَّبِّهِۦ
தம் இறைவன்
kalimātin
كَلِمَٰتٍ
(சில) வாக்கியங்களை
fatāba
فَتَابَ
ஆகவே மன்னித்தான்
ʿalayhi
عَلَيْهِۚ
அவரை
innahu huwa
إِنَّهُۥ هُوَ
நிச்சயமாக அவன்தான்
l-tawābu
ٱلتَّوَّابُ
தவ்பாவை அங்கீகரிப்பவன்
l-raḥīmu
ٱلرَّحِيمُ
பேரன்பாளன்
பின்னர் ஆதம் சில வாக்கியங்களைத் தன் இறைவனிட மிருந்து கற்றுக் கொண்டார். (அவ்வாக்கியங்களைக் கொண்டு அவர் பிரார்த்தனை செய்த வண்ணமாகவே இருந்தார்.) அதனால் அவரை (அல்லாஹ்) மன்னித்துவிட்டான். நிச்சயமாக அவன்தான் மிக்க மன்னிப்பவனும் அளவற்ற அன்புடையவனுமாக இருக்கின்றான். ([௨] ஸூரத்துல் பகரா: ௩௭)
Tafseer
௩௮

قُلْنَا اهْبِطُوْا مِنْهَا جَمِيْعًا ۚ فَاِمَّا يَأْتِيَنَّكُمْ مِّنِّيْ هُدًى فَمَنْ تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ ٣٨

qul'nā
قُلْنَا
கூறினோம்
ih'biṭū
ٱهْبِطُوا۟
இறங்குங்கள்
min'hā
مِنْهَا
அதிலிருந்து
jamīʿan
جَمِيعًاۖ
அனைவரும்
fa-immā yatiyannakum
فَإِمَّا يَأْتِيَنَّكُم
நிச்சயமாக வரும்/உங்களுக்கு
minnī
مِّنِّى
என்னிடமிருந்து
hudan
هُدًى
நேர்வழி
faman
فَمَن
எவர்(கள்)
tabiʿa
تَبِعَ
பின்பற்றினார்(கள்)
hudāya
هُدَاىَ
நேர்வழியை/என்
falā khawfun
فَلَا خَوْفٌ
அச்சமில்லை
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்கள் மீது
walā hum yaḥzanūna
وَلَا هُمْ يَحْزَنُونَ
இன்னும் அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்
(பின்னர்) நாம் கூறினோம்: "நீங்கள் அனைவரும் இதில் இருந்து இறங்கிவிடுங்கள். என்னிடமிருந்து உங்களுக்கு (என்னுடைய தூதர்கள் மூலம்) நேர்வழி நிச்சயமாக வரும். (உங்களில்) எவர்கள் என்னுடைய அந்நேர்வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு யாதொரு பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௩௮)
Tafseer
௩௯

وَالَّذِيْنَ كَفَرُوْا وَكَذَّبُوْا بِاٰيٰتِنَآ اُولٰۤىِٕكَ اَصْحٰبُ النَّارِ ۚ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ ࣖ ٣٩

wa-alladhīna
وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
kafarū
كَفَرُوا۟
நிராகரித்தார்கள்
wakadhabū
وَكَذَّبُوا۟
இன்னும் பொய்ப்பித்தார்கள்
biāyātinā
بِـَٔايَٰتِنَآ
வசனங்களை/நம்
ulāika
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
aṣḥābu l-nāri
أَصْحَٰبُ ٱلنَّارِۖ
நரகவாசிகள்
hum fīhā
هُمْ فِيهَا
அவர்கள்/அதில்
khālidūna
خَٰلِدُونَ
நிரந்தரமானவர்கள்
(அன்றி) எவர்கள் (என்னுடைய நேர்வழியை) நிராகரித்து என்னுடைய வசனங்களைப் பொய்யாக்குகின்றார்களோ அவர்கள் நரகவாசிகளே! அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்." ([௨] ஸூரத்துல் பகரா: ௩௯)
Tafseer
௪௦

يٰبَنِيْٓ اِسْرَاۤءِيْلَ اذْكُرُوْا نِعْمَتِيَ الَّتِيْٓ اَنْعَمْتُ عَلَيْكُمْ وَاَوْفُوْا بِعَهْدِيْٓ اُوْفِ بِعَهْدِكُمْۚ وَاِيَّايَ فَارْهَبُوْنِ ٤٠

yābanī is'rāīla
يَٰبَنِىٓ إِسْرَٰٓءِيلَ
சந்ததிகளே/இஸ்ராயீலின்
udh'kurū
ٱذْكُرُوا۟
நினைவு கூறுங்கள்
niʿ'matiya
نِعْمَتِىَ
என் அருளை
allatī anʿamtu
ٱلَّتِىٓ أَنْعَمْتُ
எது/அருள் புரிந்தேன்
ʿalaykum
عَلَيْكُمْ
உங்கள் மீது
wa-awfū
وَأَوْفُوا۟
இன்னும் நிறைவேற்றுங்கள்
biʿahdī
بِعَهْدِىٓ
வாக்கை/என்
ūfi
أُوفِ
நிறைவேற்றுவேன்
biʿahdikum
بِعَهْدِكُمْ
வாக்கை/உங்கள்
wa-iyyāya
وَإِيَّٰىَ
இன்னும் என்னையே
fa-ir'habūni
فَٱرْهَبُونِ
பயப்படுங்கள்/என்னை
இஸ்ராயீலின் சந்ததிகளே! உங்களுக்கு நான் அளித்திருந்த என்னுடைய அருட்கொடையை நினைத்துப் பாருங்கள். நீங்கள் எனக்களித்த வாக்கை நிறைவேற்றுங்கள். நானும் உங்களுக்களித்த வாக்கை நிறைவேற்றுவேன். என்னையே (பயந்து) அஞ்சுங்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௪௦)
Tafseer