اِنْ تُبْدُوا الصَّدَقٰتِ فَنِعِمَّا هِيَۚ وَاِنْ تُخْفُوْهَا وَتُؤْتُوْهَا الْفُقَرَاۤءَ فَهُوَ خَيْرٌ لَّكُمْ ۗ وَيُكَفِّرُ عَنْكُمْ مِّنْ سَيِّاٰتِكُمْ ۗ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ ٢٧١
- in tub'dū
- إِن تُبْدُوا۟
- நீங்கள் வெளிப்படுத்தினால்
- l-ṣadaqāti
- ٱلصَّدَقَٰتِ
- தர்மங்களை
- faniʿimmā
- فَنِعِمَّا
- நன்றே
- hiya wa-in tukh'fūhā
- هِىَۖ وَإِن تُخْفُوهَا
- அவை/நீங்கள் அவற்றை மறைத்தால்
- watu'tūhā
- وَتُؤْتُوهَا
- இன்னும் அவற்றை நீங்கள் கொடுத்தால்
- l-fuqarāa
- ٱلْفُقَرَآءَ
- ஏழைகளுக்கு
- fahuwa
- فَهُوَ
- அது
- khayrun
- خَيْرٌ
- சிறந்தது
- lakum
- لَّكُمْۚ
- உங்களுக்கு
- wayukaffiru
- وَيُكَفِّرُ
- அது அகற்றிவிடும்
- ʿankum
- عَنكُم
- உங்களை விட்டு
- min sayyiātikum
- مِّن سَيِّـَٔاتِكُمْۗ
- உங்கள் பாவங்களில் சிலவற்றை
- wal-lahu
- وَٱللَّهُ
- அல்லாஹ்
- bimā
- بِمَا
- எவற்றை
- taʿmalūna
- تَعْمَلُونَ
- செய்கிறீர்கள்
- khabīrun
- خَبِيرٌ
- ஆழ்ந்தறிபவன்
(நீங்கள் செய்யும்) தர்மங்களை நீங்கள் வெளிப்படையாக செய்தால் அதுவும் நன்றே. (ஏனெனில், அது பிறரையும் தர்மம் செய்யும்படி தூண்டக்கூடும்.) ஆயினும், அதனை நீங்கள் மறைத்தே கொடுப்பது, அதுவும் அதனை ஏழைகளுக்குக் கொடுப்பது உங்களுக்கு மிகவும் நன்மை (பயக்கும்.) மேலும், அது (அதாவது இருவகை தர்மமும்) உங்களுடைய பாவங்களுக்குப் பரிகாரமாகவும் ஆகும். நீங்கள் செய்யும் (வெளிப்படையான மற்றும்) மறைவான அனைத்தையும் அல்லாஹ் மிகவும் நன்கறிவான். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௭௧)Tafseer
۞ لَيْسَ عَلَيْكَ هُدٰىهُمْ وَلٰكِنَّ اللّٰهَ يَهْدِيْ مَنْ يَّشَاۤءُ ۗوَمَا تُنْفِقُوْا مِنْ خَيْرٍ فَلِاَنْفُسِكُمْ ۗوَمَا تُنْفِقُوْنَ اِلَّا ابْتِغَاۤءَ وَجْهِ اللّٰهِ ۗوَمَا تُنْفِقُوْا مِنْ خَيْرٍ يُّوَفَّ اِلَيْكُمْ وَاَنْتُمْ لَا تُظْلَمُوْنَ ٢٧٢
- laysa
- لَّيْسَ
- இல்லை
- ʿalayka
- عَلَيْكَ
- உம்மீது
- hudāhum
- هُدَىٰهُمْ
- அவர்களை நேர்வழி செலுத்துதல்
- walākinna
- وَلَٰكِنَّ
- என்றாலும்
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்
- yahdī
- يَهْدِى
- நேர்வழி செலுத்துகிறான்
- man
- مَن
- எவரை
- yashāu
- يَشَآءُۗ
- நாடுகிறான்
- wamā tunfiqū
- وَمَا تُنفِقُوا۟
- நீங்கள் எதை தர்மம் புரிந்தாலும்
- min khayrin
- مِنْ خَيْرٍ
- செல்வத்தில்
- fali-anfusikum
- فَلِأَنفُسِكُمْۚ
- உங்களுக்குத்தான்
- wamā tunfiqūna
- وَمَا تُنفِقُونَ
- இன்னும் தர்மம் புரியாதீர்கள்
- illā
- إِلَّا
- தவிர
- ib'tighāa
- ٱبْتِغَآءَ
- நாடியே
- wajhi
- وَجْهِ
- முகத்தை
- l-lahi
- ٱللَّهِۚ
- அல்லாஹ்வின்
- wamā tunfiqū
- وَمَا تُنفِقُوا۟
- நீங்கள் எதை தர்மம் புரிந்தாலும்
- min khayrin
- مِنْ خَيْرٍ
- செல்வத்தில்
- yuwaffa
- يُوَفَّ
- முழுமையாக நிறைவேற்றப்படும்
- ilaykum
- إِلَيْكُمْ
- உங்களுக்கு
- wa-antum
- وَأَنتُمْ
- நீங்கள்
- lā tuẓ'lamūna
- لَا تُظْلَمُونَ
- அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள்
(நபியே! மனிதர்களுக்கு நேரான வழியை அறிவிப்பதுதான் உங்களது கடமை.) நேரான வழியில் அவர்களைச் செலுத்துவது உங்களது கடமையல்ல. ஆயினும், அல்லாஹ், தான் நாடியவர் களையே நேரான வழியில் செலுத்துகின்றான். (நம்பிக்கை யாளர்களே!) நல்லதிலிருந்து நீங்கள் எதை செலவு செய்தபோதிலும் அது உங்களுக்கே (நன்மையாக அமையும்). அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைத் தேடுவதற்கன்றி, (பெருமைக்காக) நீங்கள் (எதையும்) செலவு செய்யாதீர்கள். (பெருமையை நாடாமல்) நன்மைக்காக எதை செலவு செய்தபோதிலும் அதன் கூலியை நீங்கள் முழுமையாக அடைவீர்கள், (அதில்) உங்களுக்கு அநீதி இழைக்கப்பட மாட்டாது. ([௨] ஸூரத்துல் பகரா: ௨௭௨)Tafseer
لِلْفُقَرَاۤءِ الَّذِيْنَ اُحْصِرُوْا فِيْ سَبِيْلِ اللّٰهِ لَا يَسْتَطِيْعُوْنَ ضَرْبًا فِى الْاَرْضِۖ يَحْسَبُهُمُ الْجَاهِلُ اَغْنِيَاۤءَ مِنَ التَّعَفُّفِۚ تَعْرِفُهُمْ بِسِيْمٰهُمْۚ لَا يَسْـَٔلُوْنَ النَّاسَ اِلْحَافًا ۗوَمَا تُنْفِقُوْا مِنْ خَيْرٍ فَاِنَّ اللّٰهَ بِهٖ عَلِيْمٌ ࣖ ٢٧٣
- lil'fuqarāi
- لِلْفُقَرَآءِ
- ஏழைகளுக்கு
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- uḥ'ṣirū
- أُحْصِرُوا۟
- தடுக்கப்பட்டார்கள்
- fī sabīli
- فِى سَبِيلِ
- பாதையில்
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- lā yastaṭīʿūna
- لَا يَسْتَطِيعُونَ
- இயலமாட்டார்கள்
- ḍarban
- ضَرْبًا
- பயணிக்க
- fī l-arḍi
- فِى ٱلْأَرْضِ
- பூமியில்
- yaḥsabuhumu
- يَحْسَبُهُمُ
- அவர்களை நினைக்கிறார்
- l-jāhilu
- ٱلْجَاهِلُ
- அறியாதவர்
- aghniyāa
- أَغْنِيَآءَ
- செல்வந்தர்களாக
- mina l-taʿafufi
- مِنَ ٱلتَّعَفُّفِ
- ஒழுக்கத்தால்
- taʿrifuhum
- تَعْرِفُهُم
- நீர் அவர்களை புரியலாம்
- bisīmāhum
- بِسِيمَٰهُمْ
- அவர்களின் அடையாளத்தால்
- lā yasalūna
- لَا يَسْـَٔلُونَ
- யாசிக்க மாட்டார்கள்
- l-nāsa
- ٱلنَّاسَ
- மக்களிடம்
- il'ḥāfan
- إِلْحَافًاۗ
- வலியுறுத்திக் கேட்பது
- wamā
- وَمَا
- எதை
- tunfiqū
- تُنفِقُوا۟
- நீங்கள் தர்மம் புரிந்தாலும்
- min khayrin
- مِنْ خَيْرٍ
- செல்வத்திலிருந்து
- fa-inna l-laha
- فَإِنَّ ٱللَّهَ
- நிச்சயமாக அல்லாஹ்
- bihi
- بِهِۦ
- அதை
- ʿalīmun
- عَلِيمٌ
- நன்கறிந்தவன்
(நம்பிக்கையாளர்களே!) சில ஏழைகள் இருக்கின்றனர். அவர்கள் அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்கென்றே தங்களை (முற்றிலும் அர்ப்பணம் செய்து) ஒதுக்கிக் கொண்டதால் (தங்கள் சொந்த வாழ்விற்குத் தேடக்கூட) பூமியில் நடமாட சாத்தியப் படாதவர்களாக இருக்கின்றனர். (அன்றி, அவர்கள்) யாசிக்காததால் (அவர்களின் வறுமை நிலையை) அறியாதவர்கள் அவர்களை செல்வந்தர்களென எண்ணிக் கொள்கின்றனர். அவர்களுடைய (வறுமையின்) அடையாளங்(களாகிய ஆடை, இருப்பிடம் ஆகியவை)களைக் கொண்டு நீங்கள் அவர்களை அறிந்து கொள்ளலாம். அவர்கள் மனிதர்களிடத்தில் வருந்தியும் கேட்க மாட்டார்கள். (இத்தகைய ஏழைகளுக்கு) நீங்கள் நல்லதில் இருந்து எதைச்செலவு செய்தபோதிலும் நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறி(ந்து அதற்குரிய கூலியை உங்களுக்குத் தரு)வான். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௭௩)Tafseer
اَلَّذِيْنَ يُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ بِالَّيْلِ وَالنَّهَارِ سِرًّا وَّعَلَانِيَةً فَلَهُمْ اَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْۚ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ ٢٧٤
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- yunfiqūna
- يُنفِقُونَ
- தர்மம் புரிகிறார்கள்
- amwālahum
- أَمْوَٰلَهُم
- தங்கள் செல்வங்களை
- bi-al-layli
- بِٱلَّيْلِ
- இரவில்
- wal-nahāri
- وَٱلنَّهَارِ
- இன்னும் பகல்
- sirran
- سِرًّا
- இரகசியமாக
- waʿalāniyatan
- وَعَلَانِيَةً
- இன்னும் வெளிப்படையாக
- falahum
- فَلَهُمْ
- அவர்களுக்கு
- ajruhum
- أَجْرُهُمْ
- அவர்களின் கூலி
- ʿinda
- عِندَ
- இடம்
- rabbihim
- رَبِّهِمْ
- அவர்களின் இறைவன்
- walā khawfun
- وَلَا خَوْفٌ
- இன்னும் பயம் இல்லை
- ʿalayhim
- عَلَيْهِمْ
- அவர்கள் மீது
- walā hum yaḥzanūna
- وَلَا هُمْ يَحْزَنُونَ
- இன்னும் அவர்கள் துக்கப்பட மாட்டார்கள்
(நம்பிக்கையாளர்களே!) எவர்கள் தங்கள் பொருளை (பிறருக்கு உதவிடும் நோக்கில்) இரவிலும், பகலிலும், இரகசிய மாகவும், வெளிப்படையாகவும் செலவு செய்கின்றார்களோ அவர்களுக்குரிய கூலி அவர்களின் இறைவனிடம் அவர்களுக்கு உண்டு. தவிர, அவர்களுக்கு (மறுமையில்) எவ்வித பயமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௭௪)Tafseer
اَلَّذِيْنَ يَأْكُلُوْنَ الرِّبٰوا لَا يَقُوْمُوْنَ اِلَّا كَمَا يَقُوْمُ الَّذِيْ يَتَخَبَّطُهُ الشَّيْطٰنُ مِنَ الْمَسِّۗ ذٰلِكَ بِاَنَّهُمْ قَالُوْٓا اِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبٰواۘ وَاَحَلَّ اللّٰهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبٰواۗ فَمَنْ جَاۤءَهٗ مَوْعِظَةٌ مِّنْ رَّبِّهٖ فَانْتَهٰى فَلَهٗ مَا سَلَفَۗ وَاَمْرُهٗٓ اِلَى اللّٰهِ ۗ وَمَنْ عَادَ فَاُولٰۤىِٕكَ اَصْحٰبُ النَّارِ ۚ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ ٢٧٥
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- yakulūna
- يَأْكُلُونَ
- திண்கிறார்கள்
- l-riba
- ٱلرِّبَوٰا۟
- வட்டியை
- lā yaqūmūna
- لَا يَقُومُونَ
- எழமாட்டார்கள்
- illā
- إِلَّا
- தவிர
- kamā
- كَمَا
- போன்றே
- yaqūmu
- يَقُومُ
- எழுவார்
- alladhī
- ٱلَّذِى
- எவர்
- yatakhabbaṭuhu
- يَتَخَبَّطُهُ
- அவனைத் தாக்குகிறான்
- l-shayṭānu
- ٱلشَّيْطَٰنُ
- ஷைத்தான்
- mina l-masi
- مِنَ ٱلْمَسِّۚ
- பைத்தியத்தால்
- dhālika bi-annahum
- ذَٰلِكَ بِأَنَّهُمْ
- அதற்கு காரணம் நிச்சயமாக அவர்கள்
- qālū
- قَالُوٓا۟
- கூறினார்கள்
- innamā l-bayʿu
- إِنَّمَا ٱلْبَيْعُ
- வியாபாரமெல்லாம்
- mith'lu
- مِثْلُ
- போன்று
- l-riba
- ٱلرِّبَوٰا۟ۗ
- வட்டியை
- wa-aḥalla
- وَأَحَلَّ
- இன்னும் ஆகுமாக்கினான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- l-bayʿa
- ٱلْبَيْعَ
- வியாபாரத்தை
- waḥarrama
- وَحَرَّمَ
- இன்னும் தடுத்தான்
- l-riba
- ٱلرِّبَوٰا۟ۚ
- வட்டியை
- faman
- فَمَن
- எனவே எவர்
- jāahu
- جَآءَهُۥ
- அவரிடம் வந்தது
- mawʿiẓatun
- مَوْعِظَةٌ
- உபதேசம்
- min
- مِّن
- இருந்து
- rabbihi
- رَّبِّهِۦ
- தன் இறைவன்
- fa-intahā
- فَٱنتَهَىٰ
- விலகினார்
- falahu
- فَلَهُۥ
- அவருக்கு
- mā salafa
- مَا سَلَفَ
- முன்சென்றது
- wa-amruhu
- وَأَمْرُهُۥٓ
- இன்னும் அவருடைய காரியம்
- ilā l-lahi
- إِلَى ٱللَّهِۖ
- அல்லாஹ்வின் பக்கம்
- waman
- وَمَنْ
- இன்னும் எவர்
- ʿāda
- عَادَ
- திரும்புவார்(கள்)
- fa-ulāika
- فَأُو۟لَٰٓئِكَ
- அவர்கள்
- aṣḥābu l-nāri
- أَصْحَٰبُ ٱلنَّارِۖ
- நரகவாசிகள்தான்
- hum
- هُمْ
- அவர்கள்
- fīhā
- فِيهَا
- அதில்
- khālidūna
- خَٰلِدُونَ
- நிரந்தரமானவர்கள்
வட்டி (வாங்கித்) தின்பவர்கள் ஷைத்தான் பிடித்துப் பித்தம் கொண்டவர்கள் எழும்புவது போலன்றி (வேறு விதமாக மறுமையில்) எழும்பமாட்டார்கள். காரணமாவது: "வட்டியைப் போலவே நிச்சயமாக வணிகமும் இருக்க, அல்லாஹ் வணிகத்தை ஆகுமாக்கி வைத்து வட்டியை (ஏன்) தடுத்துவிட்டான்?" என்று அவர்கள் (பரிகாசமாகக்) கூறியதுதான். (வட்டி வாங்கக்கூடாது என்று) இறைவனிடமிருந்து வந்த அறிவுரைப்படி யாராவது (உங்களில் அதைவிட்டு) விலகிக் கொண்டால் (அதற்கு) முன் (அவர் வாங்கிச்) சென்றுபோனது அவருக்குரியதே. (இதற்கு முன் வட்டி வாங்கிய) அவருடைய விஷயம் அல்லாஹ்விடமிருக்கின்றது. (அல்லாஹ்வின் உத்தரவு வந்தபின் வட்டியை விட்டுவிட்டதினால் அல்லாஹ் அவரை மன்னித்து விடலாம்.) தவிர, (இந்த உத்தரவு கிடைத்த பின்) எவரேனும் பிறகும் (வட்டியின் பக்கம்) திரும்பினால் அவர்கள் நரகவாசிகளே! அதில் அவர்கள் என்றென்றும் தங்கி விடுவார்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௭௫)Tafseer
يَمْحَقُ اللّٰهُ الرِّبٰوا وَيُرْبِى الصَّدَقٰتِ ۗ وَاللّٰهُ لَا يُحِبُّ كُلَّ كَفَّارٍ اَثِيْمٍ ٢٧٦
- yamḥaqu
- يَمْحَقُ
- அழிப்பான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- l-riba
- ٱلرِّبَوٰا۟
- வட்டியை
- wayur'bī
- وَيُرْبِى
- இன்னும் வளர்ப்பான்
- l-ṣadaqāti
- ٱلصَّدَقَٰتِۗ
- தர்மங்களை
- wal-lahu
- وَٱللَّهُ
- இன்னும் அல்லாஹ்
- lā yuḥibbu
- لَا يُحِبُّ
- விரும்ப மாட்டான்
- kulla
- كُلَّ
- எல்லோர்
- kaffārin
- كَفَّارٍ
- மகா நிராகரிப்பாளன்
- athīmin
- أَثِيمٍ
- பெரும் பாவி
அல்லாஹ் வட்டியை அழித்து தர்மங்களை வளர்க்கின்றான். மேலும் (தன் கட்டளையை) நிராகரித்துக்கொண்டே இருக்கும் பாவிகள் அனைவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. ([௨] ஸூரத்துல் பகரா: ௨௭௬)Tafseer
اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَاَقَامُوا الصَّلٰوةَ وَاٰتَوُا الزَّكٰوةَ لَهُمْ اَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْۚ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ ٢٧٧
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- āmanū
- ءَامَنُوا۟
- நம்பிக்கை கொண்டார்கள்
- waʿamilū
- وَعَمِلُوا۟
- இன்னும் செய்தார்கள்
- l-ṣāliḥāti
- ٱلصَّٰلِحَٰتِ
- நற்செயல்களை
- wa-aqāmū
- وَأَقَامُوا۟
- இன்னும் நிலைநிறுத்தினார்கள்
- l-ṣalata
- ٱلصَّلَوٰةَ
- தொழுகையை
- waātawū
- وَءَاتَوُا۟
- இன்னும் கொடுத்தார்கள்
- l-zakata
- ٱلزَّكَوٰةَ
- ஸகாத்தை
- lahum
- لَهُمْ
- அவர்களுக்கு
- ajruhum
- أَجْرُهُمْ
- அவர்களுடைய கூலி
- ʿinda rabbihim
- عِندَ رَبِّهِمْ
- அவர்களின் இறைவனிடம்
- walā khawfun
- وَلَا خَوْفٌ
- இன்னும் பயம் இல்லை
- ʿalayhim
- عَلَيْهِمْ
- அவர்கள் மீது
- walā hum yaḥzanūna
- وَلَا هُمْ يَحْزَنُونَ
- இன்னும் அவர்கள் துக்கப்பட மாட்டார்கள்
எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்து, தொழுகையைக் கடைப்பிடித்து, மார்க்க வரியையும் (ஜக்காத்து) கொடுத்து வருகின்றார்களோ அவர்களுக்குரிய கூலி அவர்களின் இறைவனிடம் அவர்களுக்கு உண்டு. அன்றி அவர்களுக்கு (மறுமையில்) எவ்வித பயமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௭௭)Tafseer
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَذَرُوْا مَا بَقِيَ مِنَ الرِّبٰوٓا اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ ٢٧٨
- yāayyuhā alladhīna āmanū
- يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
- நம்பிக்கையாளர்களே
- ittaqū
- ٱتَّقُوا۟
- அஞ்சுங்கள்
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்வை
- wadharū
- وَذَرُوا۟
- இன்னும் விடுங்கள்
- mā baqiya
- مَا بَقِىَ
- எது/மீதமானது
- mina l-riba
- مِنَ ٱلرِّبَوٰٓا۟
- வட்டியில்
- in kuntum
- إِن كُنتُم
- நீங்கள் இருந்தால்
- mu'minīna
- مُّؤْمِنِينَ
- நம்பிக்கையாளர்களாக
நம்பிக்கையாளர்களே! நீங்கள் (உண்மையாகவே) நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வுக்குப் பயந்து வட்டியில் (இதுவரை வாங்கியது போக) மீதமிருப்பதை (வாங்காமல்) விட்டுவிடுங்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௭௮)Tafseer
فَاِنْ لَّمْ تَفْعَلُوْا فَأْذَنُوْا بِحَرْبٍ مِّنَ اللّٰهِ وَرَسُوْلِهٖۚ وَاِنْ تُبْتُمْ فَلَكُمْ رُءُوْسُ اَمْوَالِكُمْۚ لَا تَظْلِمُوْنَ وَلَا تُظْلَمُوْنَ ٢٧٩
- fa-in lam tafʿalū
- فَإِن لَّمْ تَفْعَلُوا۟
- நீங்கள் செய்யவில்லையென்றால்
- fadhanū biḥarbin
- فَأْذَنُوا۟ بِحَرْبٍ
- அறியுங்கள்/போரை
- mina l-lahi
- مِّنَ ٱللَّهِ
- அல்லாஹ்விடமிருந்து
- warasūlihi
- وَرَسُولِهِۦۖ
- இன்னும் அவனுடைய தூதர்
- wa-in tub'tum
- وَإِن تُبْتُمْ
- நீங்கள் திருந்தினால்
- falakum
- فَلَكُمْ
- உங்களுக்கு
- ruūsu
- رُءُوسُ
- முதல்கள்
- amwālikum
- أَمْوَٰلِكُمْ
- உங்கள்செல்வங்களின்
- lā taẓlimūna
- لَا تَظْلِمُونَ
- அநீதி இழைக்க மாட்டீர்கள்
- walā tuẓ'lamūna
- وَلَا تُظْلَمُونَ
- அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள்
இவ்வாறு நீங்கள் நடந்து கொள்ளாவிடில் அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் போர் செய்யத் தயாராகி விடுங்கள். ஆயினும், நீங்கள் (வட்டி வாங்கியது பற்றி மனம் வருந்தி திருந்தி) பாவமன்னிப்பு கோரினால், உங்கள் பொருள்களின் அசல் தொகைகள் உங்களுக்கு உண்டு. (எவரும் அதை எடுத்துக்கொண்டு) உங்களுக்கு அநியாயம் செய்துவிட முடியாது. (அவ்வாறே) நீங்களும் (வட்டி வாங்கி) அநியாயம் செய்தவர்களாக மாட்டீர்கள்! ([௨] ஸூரத்துல் பகரா: ௨௭௯)Tafseer
وَاِنْ كَانَ ذُوْ عُسْرَةٍ فَنَظِرَةٌ اِلٰى مَيْسَرَةٍ ۗ وَاَنْ تَصَدَّقُوْا خَيْرٌ لَّكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ ٢٨٠
- wa-in kāna
- وَإِن كَانَ
- இருந்தால்
- dhū ʿus'ratin
- ذُو عُسْرَةٍ
- வறியவன்
- fanaẓiratun
- فَنَظِرَةٌ
- அவகாசமளித்தல்
- ilā maysaratin
- إِلَىٰ مَيْسَرَةٍۚ
- வசதி ஏற்படும் வரை
- wa-an taṣaddaqū
- وَأَن تَصَدَّقُوا۟
- இன்னும் நீங்கள் தர்மம் செய்வது
- khayrun
- خَيْرٌ
- மிகச் சிறந்தது
- lakum
- لَّكُمْۖ
- உங்களுக்கு
- in kuntum taʿlamūna
- إِن كُنتُمْ تَعْلَمُونَ
- நீங்கள் அறிந்திருந்தால்
அன்றி, (கடன் வாங்கியவன் அதனைத் தவணைப்படி தீர்க்க முடியாமல்) அவன் கஷ்டத்திலிருந்தால் (அவனுக்கு) வசதி ஏற்படும் வரையில் எதிர்பார்த்திருங்கள். மேலும், (இதிலுள்ள நன்மைகளை) நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் (அதை அவனுக்கே) நீங்கள் தானம் செய்துவிடுவது (பிறருக்கு தானம் செய்வதைவிட) உங்களுக்கு மிகவும் நன்மையாகும். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௮௦)Tafseer