Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௨௭௨

Qur'an Surah Al-Baqarah Verse 272

ஸூரத்துல் பகரா [௨]: ௨௭௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

۞ لَيْسَ عَلَيْكَ هُدٰىهُمْ وَلٰكِنَّ اللّٰهَ يَهْدِيْ مَنْ يَّشَاۤءُ ۗوَمَا تُنْفِقُوْا مِنْ خَيْرٍ فَلِاَنْفُسِكُمْ ۗوَمَا تُنْفِقُوْنَ اِلَّا ابْتِغَاۤءَ وَجْهِ اللّٰهِ ۗوَمَا تُنْفِقُوْا مِنْ خَيْرٍ يُّوَفَّ اِلَيْكُمْ وَاَنْتُمْ لَا تُظْلَمُوْنَ (البقرة : ٢)

laysa
لَّيْسَ
Not
இல்லை
ʿalayka
عَلَيْكَ
on you
உம்மீது
hudāhum
هُدَىٰهُمْ
(is) their guidance
அவர்களை நேர்வழி செலுத்துதல்
walākinna
وَلَٰكِنَّ
[and] but
என்றாலும்
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்
yahdī
يَهْدِى
guides
நேர்வழி செலுத்துகிறான்
man
مَن
whom
எவரை
yashāu
يَشَآءُۗ
He wills
நாடுகிறான்
wamā tunfiqū
وَمَا تُنفِقُوا۟
And whatever you spend
நீங்கள் எதை தர்மம் புரிந்தாலும்
min khayrin
مِنْ خَيْرٍ
of good
செல்வத்தில்
fali-anfusikum
فَلِأَنفُسِكُمْۚ
then it is for yourself
உங்களுக்குத்தான்
wamā tunfiqūna
وَمَا تُنفِقُونَ
and not you spend
இன்னும் தர்மம் புரியாதீர்கள்
illā
إِلَّا
except
தவிர
ib'tighāa
ٱبْتِغَآءَ
seeking
நாடியே
wajhi
وَجْهِ
(the) face
முகத்தை
l-lahi
ٱللَّهِۚ
(of) Allah
அல்லாஹ்வின்
wamā tunfiqū
وَمَا تُنفِقُوا۟
And whatever you spend
நீங்கள் எதை தர்மம் புரிந்தாலும்
min khayrin
مِنْ خَيْرٍ
of good
செல்வத்தில்
yuwaffa
يُوَفَّ
will be repaid in full
முழுமையாக நிறைவேற்றப்படும்
ilaykum
إِلَيْكُمْ
to you
உங்களுக்கு
wa-antum
وَأَنتُمْ
and you
நீங்கள்
lā tuẓ'lamūna
لَا تُظْلَمُونَ
(will) not be wronged
அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள்

Transliteration:

Laisa 'alaika hudaahum wa laakinnal laaha yahdee mai yashaaa'; wa maa tunfiqoo min khairin fali anfusikum; wa maa tunfiqoona illab tighaaa'a wajhil laah; wa maa tunfiqoo min khairiny yuwaffa ilaikum wa antum laa tuzlamoon (QS. al-Baq̈arah:272)

English Sahih International:

Not upon you, [O Muhammad], is [responsibility for] their guidance, but Allah guides whom He wills. And whatever good you [believers] spend is for yourselves, and you do not spend except seeking the face [i.e., approval] of Allah. And whatever you spend of good – it will be fully repaid to you, and you will not be wronged. (QS. Al-Baqarah, Ayah ௨௭௨)

Abdul Hameed Baqavi:

(நபியே! மனிதர்களுக்கு நேரான வழியை அறிவிப்பதுதான் உங்களது கடமை.) நேரான வழியில் அவர்களைச் செலுத்துவது உங்களது கடமையல்ல. ஆயினும், அல்லாஹ், தான் நாடியவர் களையே நேரான வழியில் செலுத்துகின்றான். (நம்பிக்கை யாளர்களே!) நல்லதிலிருந்து நீங்கள் எதை செலவு செய்தபோதிலும் அது உங்களுக்கே (நன்மையாக அமையும்). அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைத் தேடுவதற்கன்றி, (பெருமைக்காக) நீங்கள் (எதையும்) செலவு செய்யாதீர்கள். (பெருமையை நாடாமல்) நன்மைக்காக எதை செலவு செய்தபோதிலும் அதன் கூலியை நீங்கள் முழுமையாக அடைவீர்கள், (அதில்) உங்களுக்கு அநீதி இழைக்கப்பட மாட்டாது. (ஸூரத்துல் பகரா, வசனம் ௨௭௨)

Jan Trust Foundation

(நபியே!) அவர்களை நேர்வழியில் நடத்துவது உம் கடமையல்ல; ஆனால், தான் நாடியவர்களை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகின்றான்; இன்னும், நல்லதில் நீங்கள் எதைச் செலவிடினும், அது உங்களுக்கே நன்மை பயப்பதாகும்; அல்லாஹ்வின் திருமுகத்தை நாடியே அல்லாது (வீண் பெருமைக்காகச்) செலவு செய்யாதீர்கள்; நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதற்குரிய நற்பலன் உங்களுக்குப் பூரணமாகத் திருப்பிக் கொடுக்கப்படும்; நீங்கள் அநியாயம் செய்யப் -படமாட்டீர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே) அவர்களை நேர்வழி செலுத்துவது உம் மீது (பொறுப்பு) அல்ல. என்றாலும் அல்லாஹ், தான் நாடியவரை நேர்வழி செலுத்துகிறான். செல்வத்தில் நீங்கள் எதை தர்மம் புரிந்தாலும் (அது) உங்களுக்கே (நன்மை). அல்லாஹ்வின் முகத்தை நாடியே தவிர, (புகழுக்காக) நீங்கள் தர்மம் செய்யாதீர்கள். (புகழை நாடாமல்) செல்வத்தில் நீங்கள் எதை தர்மம் புரிந்தாலும் அது உங்களுக்கு முழு (நன்)மையாக நிறைவேற்றப்படும். நீங்கள் அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள்.