سَلْ بَنِيْٓ اِسْرَاۤءِيْلَ كَمْ اٰتَيْنٰهُمْ مِّنْ اٰيَةٍ ۢ بَيِّنَةٍ ۗ وَمَنْ يُّبَدِّلْ نِعْمَةَ اللّٰهِ مِنْۢ بَعْدِ مَا جَاۤءَتْهُ فَاِنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَابِ ٢١١
- sal
- سَلْ
- கேட்பீராக
- banī is'rāīla
- بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
- இஸ்ராயீலின் சந்ததிகளை
- kam
- كَمْ
- எத்தனை
- ātaynāhum
- ءَاتَيْنَٰهُم
- கொடுத்தோம்/அவர்களுக்கு
- min
- مِّنْ
- இருந்து
- āyatin
- ءَايَةٍۭ
- அத்தாட்சி
- bayyinatin
- بَيِّنَةٍۗ
- தெளிவான
- waman
- وَمَن
- இன்னும் எவர்
- yubaddil
- يُبَدِّلْ
- மாற்றுகிறார்
- niʿ'mata
- نِعْمَةَ
- அருட்கொடையை
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வுடைய
- min baʿdi mā jāathu
- مِنۢ بَعْدِ مَا جَآءَتْهُ
- தம்மிடம் அது வந்த பின்னர்
- fa-inna
- فَإِنَّ
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்
- shadīdu
- شَدِيدُ
- கடுமையானவன்
- l-ʿiqābi
- ٱلْعِقَابِ
- தண்டிப்பதில்
(நபியே!) இஸ்ராயீலின் சந்ததிகளை நீங்கள் கேளுங்கள்: எவ்வளவோ தெளிவான அத்தாட்சிகளை நாம் அவர்களுக்குக் கொடுத்திருக்கிறோம். (அவ்வாறிருக்க) எவரேனும் அவைகள் தன்னிடம் வந்ததன் பின் அல்லாஹ்வின் (அத்தாட்சிகளான) அருட்கொடையை மாற்றிவிடுவாரானால் (அவரை) வேதனை செய்வதில் நிச்சயமாக அல்லாஹ் மிகக் கடுமையானவன். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௧௧)Tafseer
زُيِّنَ لِلَّذِيْنَ كَفَرُوا الْحَيٰوةُ الدُّنْيَا وَيَسْخَرُوْنَ مِنَ الَّذِيْنَ اٰمَنُوْا ۘ وَالَّذِيْنَ اتَّقَوْا فَوْقَهُمْ يَوْمَ الْقِيٰمَةِ ۗ وَاللّٰهُ يَرْزُقُ مَنْ يَّشَاۤءُ بِغَيْرِ حِسَابٍ ٢١٢
- zuyyina
- زُيِّنَ
- அலங்கரிக்கப்பட்டுள்ளது
- lilladhīna
- لِلَّذِينَ
- எவர்களுக்கு
- kafarū
- كَفَرُوا۟
- நிராகரித்தார்கள்
- l-ḥayatu
- ٱلْحَيَوٰةُ
- வாழ்க்கை
- l-dun'yā
- ٱلدُّنْيَا
- உலகம்
- wayaskharūna
- وَيَسْخَرُونَ
- இன்னும் பரிகசிக்கிறார்கள்
- mina alladhīna
- مِنَ ٱلَّذِينَ
- எவர்களை
- āmanū
- ءَامَنُواۘ
- நம்பிக்கை கொண்டார்கள்
- wa-alladhīna
- وَٱلَّذِينَ
- இன்னும் எவர்கள்
- ittaqaw
- ٱتَّقَوْا۟
- அல்லாஹ்வை அஞ்சினார்கள்
- fawqahum
- فَوْقَهُمْ
- அவர்களுக்கு மேல்
- yawma l-qiyāmati
- يَوْمَ ٱلْقِيَٰمَةِۗ
- மறுமை நாளில்
- wal-lahu
- وَٱللَّهُ
- இன்னும் அல்லாஹ்
- yarzuqu
- يَرْزُقُ
- வழங்குவான்
- man
- مَن
- எவர்
- yashāu
- يَشَآءُ
- நாடுகிறான்
- bighayri ḥisābin
- بِغَيْرِ حِسَابٍ
- கணக்கின்றி
நிராகரிப்பவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையே அலங்காரமாக(த் தோன்றும்படி) செய்யப்பட்டிருக்கின்றது. ஆதலால், அவர்கள் (ஏழைகளாக இருக்கும்) நம்பிக்கையாளர்களைப் பரிகசிக்கிறார்கள். ஆனால் (நம்பிக்கையாளர்களான) இறையச்சம் உள்ளவர்களோ மறுமையில் அவர்களைவிட (எவ்வளவோ) மேலாக இருப்பார்கள். மேலும், அல்லாஹ் விரும்புகின்ற (இ)வர்களுக்குக் கணக்கின்றியே வழங்குவான். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௧௨)Tafseer
كَانَ النَّاسُ اُمَّةً وَّاحِدَةً ۗ فَبَعَثَ اللّٰهُ النَّبِيّٖنَ مُبَشِّرِيْنَ وَمُنْذِرِيْنَ ۖ وَاَنْزَلَ مَعَهُمُ الْكِتٰبَ بِالْحَقِّ لِيَحْكُمَ بَيْنَ النَّاسِ فِيْمَا اخْتَلَفُوْا فِيْهِ ۗ وَمَا اخْتَلَفَ فِيْهِ اِلَّا الَّذِيْنَ اُوْتُوْهُ مِنْۢ بَعْدِ مَا جَاۤءَتْهُمُ الْبَيِّنٰتُ بَغْيًا ۢ بَيْنَهُمْ ۚ فَهَدَى اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا لِمَا اخْتَلَفُوْا فِيْهِ مِنَ الْحَقِّ بِاِذْنِهٖ ۗ وَاللّٰهُ يَهْدِيْ مَنْ يَّشَاۤءُ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ ٢١٣
- kāna
- كَانَ
- இருந்தார்
- l-nāsu
- ٱلنَّاسُ
- மக்கள்
- ummatan
- أُمَّةً
- ஒரு சமுதாயமாக
- wāḥidatan
- وَٰحِدَةً
- ஒரே
- fabaʿatha
- فَبَعَثَ
- ஆகவே அனுப்பினான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- l-nabiyīna
- ٱلنَّبِيِّۦنَ
- நபிமார்களை
- mubashirīna
- مُبَشِّرِينَ
- நற்செய்தியாளர்களாக
- wamundhirīna
- وَمُنذِرِينَ
- இன்னும் எச்சரிப்பவர்களாக
- wa-anzala
- وَأَنزَلَ
- இன்னும் இறக்கினான்
- maʿahumu
- مَعَهُمُ
- அவர்களுடன்
- l-kitāba
- ٱلْكِتَٰبَ
- வேதத்தை
- bil-ḥaqi
- بِٱلْحَقِّ
- உண்மையான
- liyaḥkuma
- لِيَحْكُمَ
- அது தீர்ப்பளிப்பதற்காக
- bayna
- بَيْنَ
- மத்தியில்
- l-nāsi
- ٱلنَّاسِ
- மக்களுக்கு
- fīmā
- فِيمَا
- எதில்
- ikh'talafū
- ٱخْتَلَفُوا۟
- கருத்து வேறுபட்டார்கள்
- fīhi
- فِيهِۚ
- அதில்
- wamā ikh'talafa
- وَمَا ٱخْتَلَفَ
- கருத்து வேறுபடவில்லை
- fīhi
- فِيهِ
- அதில்
- illā
- إِلَّا
- தவிர
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- ūtūhu
- أُوتُوهُ
- அதைக் கொடுக்கப்பட்டார்கள்
- min baʿdi mā jāathumu
- مِنۢ بَعْدِ مَا جَآءَتْهُمُ
- அவர்களிடம் வந்த பின்னர்
- l-bayinātu
- ٱلْبَيِّنَٰتُ
- தெளிவான சான்றுகள்
- baghyan
- بَغْيًۢا
- பொறாமையினால்
- baynahum
- بَيْنَهُمْۖ
- அவர்களுக்கு மத்தியில்
- fahadā
- فَهَدَى
- ஆகவே நேர்வழிப்படுத்தினான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- alladhīna āmanū
- ٱلَّذِينَ ءَامَنُوا۟
- நம்பிக்கையாளர்களை
- limā ikh'talafū
- لِمَا ٱخْتَلَفُوا۟
- அவர்கள் கருத்து வேறுபட்டதற்கு
- fīhi
- فِيهِ
- அதில்
- mina l-ḥaqi
- مِنَ ٱلْحَقِّ
- உண்மையிலிருந்து
- bi-idh'nihi
- بِإِذْنِهِۦۗ
- தனது கட்டளையினால்
- wal-lahu
- وَٱللَّهُ
- இன்னும் அல்லாஹ்
- yahdī
- يَهْدِى
- நேர்வழி காட்டுகிறான்
- man
- مَن
- எவரை
- yashāu
- يَشَآءُ
- நாடுகிறான்
- ilā
- إِلَىٰ
- பக்கம்
- ṣirāṭin
- صِرَٰطٍ
- பாதையின்
- mus'taqīmin
- مُّسْتَقِيمٍ
- நேரான
(ஆரம்பத்தில்) மனிதர்கள் (அனைவரும்) ஒரே இனத்தவ ராகவே இருந்தனர். (அவர்கள் நேரான வழியில் செல்வதற்காக நன்மை செய்பவர்களுக்கு) நற்செய்தி கூறும்படியும், (தீமை செய்பவர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும்படியும் அல்லாஹ் நபிமார்களை அனுப்பி வைத்தான். மேலும் அம்மனிதர்களுக்குள் ஏற்படும் கருத்து வேற்றுமைகளைத் தீர்த்து வைப்பதற்காக (சத்திய) வேதத்தையும் அருளினான். இவ்வாறு தெளிவான அத்தாட்சிகள் (உள்ள வேதம்) வந்ததன் பின்னர் அதனைப் பெற்றுக்கொண்ட அவர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட பொறாமையின் காரணமாகவே (அந்த சத்திய வேதத்திற்கு) மாறு (செய்ய முற்)பட்டனர். ஆயினும், அவர்கள் மாறுபட்டு(ப் புறக்கணித்து)விட்ட அந்த சத்தியத்தளவில் செல்லும்படி நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் தன் அருளைக் கொண்டு (நேர்) வழி காட்டினான். இன்னும் (இவ்வாறே) தான் விரும்பியவர்களை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகிறான். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௧௩)Tafseer
اَمْ حَسِبْتُمْ اَنْ تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا يَأْتِكُمْ مَّثَلُ الَّذِيْنَ خَلَوْا مِنْ قَبْلِكُمْ ۗ مَسَّتْهُمُ الْبَأْسَاۤءُ وَالضَّرَّاۤءُ وَزُلْزِلُوْا حَتّٰى يَقُوْلَ الرَّسُوْلُ وَالَّذِيْنَ اٰمَنُوْا مَعَهٗ مَتٰى نَصْرُ اللّٰهِ ۗ اَلَآ اِنَّ نَصْرَ اللّٰهِ قَرِيْبٌ ٢١٤
- am
- أَمْ
- அல்லது
- ḥasib'tum
- حَسِبْتُمْ
- நினைத்துக் கொண்டீர்கள்
- an tadkhulū
- أَن تَدْخُلُوا۟
- நீங்கள் நுழையலாம்
- l-janata
- ٱلْجَنَّةَ
- சொர்க்கத்தில்
- walammā yatikum
- وَلَمَّا يَأْتِكُم
- உங்களுக்கு வராத நிலையில்
- mathalu alladhīna
- مَّثَلُ ٱلَّذِينَ
- போன்று/எவர்கள்
- khalaw
- خَلَوْا۟
- சென்றார்கள்
- min qablikum
- مِن قَبْلِكُمۖ
- உங்களுக்குமுன்
- massathumu
- مَّسَّتْهُمُ
- அவர்களை பீடித்தன
- l-basāu
- ٱلْبَأْسَآءُ
- கொடிய வறுமை
- wal-ḍarāu
- وَٱلضَّرَّآءُ
- இன்னும் நோய்
- wazul'zilū
- وَزُلْزِلُوا۟
- இன்னும் அச்சுறுத்தப்பட்டார்கள்
- ḥattā yaqūla
- حَتَّىٰ يَقُولَ
- வரை/கூறுவார்
- l-rasūlu
- ٱلرَّسُولُ
- தூதர்
- wa-alladhīna
- وَٱلَّذِينَ
- இன்னும் எவர்கள்
- āmanū
- ءَامَنُوا۟
- நம்பிக்கை கொண்டார்கள்
- maʿahu
- مَعَهُۥ
- அவருடன்
- matā
- مَتَىٰ
- எப்போது
- naṣru
- نَصْرُ
- உதவி
- l-lahi
- ٱللَّهِۗ
- அல்லாஹ்வுடைய
- alā
- أَلَآ
- அறிந்துகொள்ளுங்கள்!
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- naṣra
- نَصْرَ
- உதவி
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வுடைய
- qarībun
- قَرِيبٌ
- சமீபமானது
(நம்பிக்கையாளர்களே!) உங்களுக்கு முன் சென்றவர்களுக்கு ஏற்பட்டது போன்ற (கஷ்டமான) நிலைமை உங்களுக்கு வராமலே நீங்கள் சுவர்க்கத்தில் நுழைந்து விடலாமென்று நினைத்துக் கொண்டீர்களோ? (உங்களைப் போல) நம்பிக்கை கொண்ட அவர்களையும் அவர்களுடைய தூதரையும், வாட்டும் வறுமையிலும், நோயிலும் பீடித்து (அவர்கள் வருந்தித் தங்களுடைய கஷ்டங்களை நீக்கி வைக்க) "அல்லாஹ்வுடைய உதவி எப்பொழுது (வரும்? எப்பொழுது வரும்?)" என்று கேட்டதற்கு "அல்லாஹ் வுடைய உதவி நிச்சயமாக (இதோ) சமீபத்திலிருக்கிறது" என்று (நாம் ஆறுதல்) கூறும் வரையில் அவர்கள் ஆட்டி வைக்கப்பட்டார்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௧௪)Tafseer
يَسْـَٔلُوْنَكَ مَاذَا يُنْفِقُوْنَ ۗ قُلْ مَآ اَنْفَقْتُمْ مِّنْ خَيْرٍ فَلِلْوَالِدَيْنِ وَالْاَقْرَبِيْنَ وَالْيَتٰمٰى وَالْمَسٰكِيْنِ وَابْنِ السَّبِيْلِ ۗ وَمَا تَفْعَلُوْا مِنْ خَيْرٍ فَاِنَّ اللّٰهَ بِهٖ عَلِيْمٌ ٢١٥
- yasalūnaka
- يَسْـَٔلُونَكَ
- உம்மிடம் கேட்கிறார்கள்
- mādhā yunfiqūna
- مَاذَا يُنفِقُونَۖ
- எதை/அவர்கள் தர்மம் புரியவேண்டும்
- qul
- قُلْ
- கூறு(வீராக)
- mā
- مَآ
- எதை
- anfaqtum
- أَنفَقْتُم
- நீங்கள் தர்மம் புரிந்தாலும்
- min
- مِّنْ
- இருந்து
- khayrin
- خَيْرٍ
- செல்வம்
- falil'wālidayni
- فَلِلْوَٰلِدَيْنِ
- பெற்றோருக்கு
- wal-aqrabīna
- وَٱلْأَقْرَبِينَ
- இன்னும் உறவினர்கள்
- wal-yatāmā
- وَٱلْيَتَٰمَىٰ
- இன்னும் அநாதைகள்
- wal-masākīni
- وَٱلْمَسَٰكِينِ
- இன்னும் ஏழைகள்
- wa-ib'ni l-sabīli
- وَٱبْنِ ٱلسَّبِيلِۗ
- இன்னும் வழிப்போக்கர்(கள்)
- wamā
- وَمَا
- இன்னும் எதை
- tafʿalū
- تَفْعَلُوا۟
- நீங்கள் செய்தாலும்
- min khayrin
- مِنْ خَيْرٍ
- நன்மையிலிருந்து
- fa-inna l-laha
- فَإِنَّ ٱللَّهَ
- நிச்சயமாக அல்லாஹ்
- bihi
- بِهِۦ
- அதை
- ʿalīmun
- عَلِيمٌ
- மிக அறிபவன்
(நபியே! பொருள்களில்) "எதைச் செலவு செய்வது? (யாருக்குக் கொடுப்பது?)" என்று உங்களிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: (நன்மையைக் கருதி) "நீங்கள் எத்தகைய பொருளைச் செலவு செய்தபோதிலும் (அதனைத்) தாய், தந்தை, சுற்றத்தார், அநாதைகள், ஏழைகள், வழிப்போக்கர்கள் ஆகியோருக்குக் கொடுங்கள். இன்னும், நீங்கள் (வேறு) என்ன நன்மையைச் செய்தபோதிலும் அதனையும் நிச்சயமாக அல்லாஹ் அறி(ந்து அதற்குரிய கூலியும் தரு)வான். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௧௫)Tafseer
كُتِبَ عَلَيْكُمُ الْقِتَالُ وَهُوَ كُرْهٌ لَّكُمْ ۚ وَعَسٰٓى اَنْ تَكْرَهُوْا شَيْـًٔا وَّهُوَ خَيْرٌ لَّكُمْ ۚ وَعَسٰٓى اَنْ تُحِبُّوْا شَيْـًٔا وَّهُوَ شَرٌّ لَّكُمْ ۗ وَاللّٰهُ يَعْلَمُ وَاَنْتُمْ لَا تَعْلَمُوْنَ ࣖ ٢١٦
- kutiba
- كُتِبَ
- கடமையாக்கப்பட்டது
- ʿalaykumu
- عَلَيْكُمُ
- உங்கள் மீது
- l-qitālu
- ٱلْقِتَالُ
- போர்
- wahuwa
- وَهُوَ
- அதுவோ
- kur'hun
- كُرْهٌ
- சிரமமானது
- lakum
- لَّكُمْۖ
- உங்களுக்கு
- waʿasā an takrahū
- وَعَسَىٰٓ أَن تَكْرَهُوا۟
- இன்னும் நீங்கள் வெறுக்கலாம்
- shayan
- شَيْـًٔا
- ஒன்றை
- wahuwa
- وَهُوَ
- அதுவோ
- khayrun
- خَيْرٌ
- சிறந்தது
- lakum
- لَّكُمْۖ
- உங்களுக்கு
- waʿasā an tuḥibbū
- وَعَسَىٰٓ أَن تُحِبُّوا۟
- இன்னும் நீங்கள் விரும்பலாம்
- shayan
- شَيْـًٔا
- ஒன்றை
- wahuwa
- وَهُوَ
- அதுவோ
- sharrun
- شَرٌّ
- தீமையாகும்
- lakum
- لَّكُمْۗ
- உங்களுக்கு
- wal-lahu
- وَٱللَّهُ
- அல்லாஹ்தான்
- yaʿlamu
- يَعْلَمُ
- அறிவான்
- wa-antum
- وَأَنتُمْ
- நீங்கள்
- lā taʿlamūna
- لَا تَعْلَمُونَ
- அறியமாட்டீர்கள்
(நம்பிக்கையாளர்களே!) போர் செய்வது உங்களுக்கு வெறுப்பாய் இருந்தும் (உங்களையும் உங்கள் மார்க்கத்தையும் காப்பதற்காக) அது உங்கள் மீது கடமையாக்கப்பட்டிருக்கின்றது. ஒன்று உங்களுக்கு மிக நன்மையாக இருந்தும் அதனை நீங்கள் வெறுக்கக்கூடும். ஒன்று உங்களுக்குத் தீங்காக இருந்தும் அதனை நீங்கள் விரும்பக்கூடும். (அவை உங்களுக்கு நன்மை அளிக்குமா தீமையளிக்குமா என்பதை) அல்லாஹ்தான் அறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௧௬)Tafseer
يَسْـَٔلُوْنَكَ عَنِ الشَّهْرِ الْحَرَامِ قِتَالٍ فِيْهِۗ قُلْ قِتَالٌ فِيْهِ كَبِيْرٌ ۗ وَصَدٌّ عَنْ سَبِيْلِ اللّٰهِ وَكُفْرٌۢ بِهٖ وَالْمَسْجِدِ الْحَرَامِ وَاِخْرَاجُ اَهْلِهٖ مِنْهُ اَكْبَرُ عِنْدَ اللّٰهِ ۚ وَالْفِتْنَةُ اَكْبَرُ مِنَ الْقَتْلِ ۗ وَلَا يَزَالُوْنَ يُقَاتِلُوْنَكُمْ حَتّٰى يَرُدُّوْكُمْ عَنْ دِيْنِكُمْ اِنِ اسْتَطَاعُوْا ۗ وَمَنْ يَّرْتَدِدْ مِنْكُمْ عَنْ دِيْنِهٖ فَيَمُتْ وَهُوَ كَافِرٌ فَاُولٰۤىِٕكَ حَبِطَتْ اَعْمَالُهُمْ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ ۚ وَاُولٰۤىِٕكَ اَصْحٰبُ النَّارِۚ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ ٢١٧
- yasalūnaka
- يَسْـَٔلُونَكَ
- உம்மிடம் கேட்கிறார்கள்
- ʿani l-shahri
- عَنِ ٱلشَّهْرِ
- மாதம் பற்றி
- l-ḥarāmi
- ٱلْحَرَامِ
- புனிதமான
- qitālin
- قِتَالٍ
- போர் புரிவது
- fīhi
- فِيهِۖ
- அதில்
- qul
- قُلْ
- கூறுவீராக
- qitālun
- قِتَالٌ
- போர் புரிவது
- fīhi
- فِيهِ
- அதில்
- kabīrun
- كَبِيرٌۖ
- பெரியது
- waṣaddun
- وَصَدٌّ
- இன்னும் தடுப்பது
- ʿan
- عَن
- விட்டு
- sabīli
- سَبِيلِ
- பாதை
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வுடைய
- wakuf'run
- وَكُفْرٌۢ
- இன்னும் நிராகரிப்பது
- bihi
- بِهِۦ
- அவனை
- wal-masjidi
- وَٱلْمَسْجِدِ
- இன்னும் அல்மஸ்ஜிது
- l-ḥarāmi
- ٱلْحَرَامِ
- புனிதமான
- wa-ikh'rāju
- وَإِخْرَاجُ
- இன்னும் வெளியேற்றுவது
- ahlihi
- أَهْلِهِۦ
- அதில் வசிப்போரை
- min'hu
- مِنْهُ
- அதிலிருந்து
- akbaru
- أَكْبَرُ
- மிகப் பெரியது
- ʿinda l-lahi
- عِندَ ٱللَّهِۚ
- அல்லாஹ்விடத்தில்
- wal-fit'natu
- وَٱلْفِتْنَةُ
- இன்னும் இணைவைத்தல்
- akbaru
- أَكْبَرُ
- மிகப் பெரியது
- mina l-qatli
- مِنَ ٱلْقَتْلِۗ
- கொலையை விட
- walā yazālūna yuqātilūnakum
- وَلَا يَزَالُونَ يُقَٰتِلُونَكُمْ
- உங்களிடம் ஓயாது போர் புரிந்துகொண்டே இருப்பார்கள்
- ḥattā
- حَتَّىٰ
- வரை
- yaruddūkum
- يَرُدُّوكُمْ
- உங்களைத் திருப்புவார்கள்
- ʿan
- عَن
- விட்டு
- dīnikum
- دِينِكُمْ
- உங்கள் மார்க்கம்
- ini is'taṭāʿū
- إِنِ ٱسْتَطَٰعُوا۟ۚ
- அவர்கள் சக்தி பெற்றால்
- waman
- وَمَن
- இன்னும் எவர்
- yartadid
- يَرْتَدِدْ
- மாறிவிடுகிறார்(கள்)
- minkum
- مِنكُمْ
- உங்களிலிருந்து
- ʿan
- عَن
- விட்டு
- dīnihi
- دِينِهِۦ
- அவருடைய மார்க்கம்
- fayamut
- فَيَمُتْ
- அவர் இறக்கிறார்
- wahuwa
- وَهُوَ
- அவர்(கள்)
- kāfirun
- كَافِرٌ
- நிராகரிப்பாளர்(கள்)
- fa-ulāika
- فَأُو۟لَٰٓئِكَ
- அவர்கள்
- ḥabiṭat
- حَبِطَتْ
- அழிந்துவிடும்
- aʿmāluhum
- أَعْمَٰلُهُمْ
- அவர்களின் செயல்கள்
- fī l-dun'yā
- فِى ٱلدُّنْيَا
- இம்மையில்
- wal-ākhirati
- وَٱلْءَاخِرَةِۖ
- இன்னும் மறுமை
- wa-ulāika
- وَأُو۟لَٰٓئِكَ
- இன்னும் அவர்கள்
- aṣḥābu l-nāri
- أَصْحَٰبُ ٱلنَّارِۖ
- நரகவாசிகள்
- hum fīhā
- هُمْ فِيهَا
- அவர்கள்/அதில்
- khālidūna
- خَٰلِدُونَ
- நிரந்தரமானவர்கள்
(நபியே! துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய இச்)சிறப்புற்ற மாதங்களில் போர் செய்வதைப் பற்றி உங்களிடம் அ(ந்நிராகரிப்ப)வர்கள் கேட்கின்றனர். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: "அவைகளில் போர் புரிவது பெரும் பாவம்(தான்.) ஆனால், (மனிதர்கள்) அல்லாஹ்வுடைய மார்க்கத்(தில் சேருவ)தை (நீங்கள்) தடுப்பதும், அல்லாஹ்வை நீங்கள் நிராகரிப்பதும், (ஹஜ்ஜுக்கு வருபவர்களை) மஸ்ஜிதுல் ஹராமுக்கு வரவிடாது தடுப்பதும், அதில் வசிப்போ(ரில் நம்பிக்கை கொண்டோ)ரை அதிலிருந்து வெளியேற்றுவதும் அல்லாஹ்விடத்தில் (அதைவிட) மிகப் பெரும் பாவங்களாக இருக்கின்றன. தவிர (நம்பிக்கையாளர்களுக்கு நீங்கள் செய்துவரும்) விஷமம் கொலையைவிட மிகக் கொடியது. மேலும் (நம்பிக்கையாளர்களே! காஃபிர்களாகிய) அவர்களுக்குச் சாத்தியப்பட்டால் உங்களை உங்களுடைய மார்க்கத்திலிருந்து திருப்பிவிடும் வரையில் உங்களை எதிர்த்து ஓயாது போர் செய்து கொண்டே இருப்பார்கள். ஆகவே, உங்களில் எவரேனும் தன்னுடைய மார்க்கத்தை (நிராகரித்து)விட்டு மாறி (அதை அவ்வாறு) நிராகரித்(ததைப்பற்றி வருத்தப்பட்டு மீளா)தவராகவே இறந்துவிட்டால் அவருடைய (நற்)செயல்கள் எல்லாம் இம்மையிலும் மறுமையிலும் அழிந்துவிடும். தவிர, அவர்கள் நரகவாசிகளாகி, என்றென்றுமே அதில் தங்கி விடுவார்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௧௭)Tafseer
اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَالَّذِيْنَ هَاجَرُوْا وَجَاهَدُوْا فِيْ سَبِيْلِ اللّٰهِ ۙ اُولٰۤىِٕكَ يَرْجُوْنَ رَحْمَتَ اللّٰهِ ۗوَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ ٢١٨
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- āmanū
- ءَامَنُوا۟
- நம்பிக்கை கொண்டார்கள்
- wa-alladhīna
- وَٱلَّذِينَ
- இன்னும் எவர்கள்
- hājarū
- هَاجَرُوا۟
- ஹிஜ்ரத் செய்தார்கள்
- wajāhadū
- وَجَٰهَدُوا۟
- இன்னும் ஜிஹாது செய்தார்கள்
- fī sabīli
- فِى سَبِيلِ
- பாதையில்
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வுடைய
- ulāika
- أُو۟لَٰٓئِكَ
- அவர்கள்
- yarjūna
- يَرْجُونَ
- ஆதரவு வைக்கிறார்கள்
- raḥmata
- رَحْمَتَ
- கருணையை
- l-lahi
- ٱللَّهِۚ
- அல்லாஹ்வுடைய
- wal-lahu
- وَٱللَّهُ
- இன்னும் அல்லாஹ்
- ghafūrun
- غَفُورٌ
- மகா மன்னிப்பாளன்
- raḥīmun
- رَّحِيمٌ
- மகா கருணையாளன்
எவர்கள் மெய்யாகவே நம்பிக்கை கொண்டிருக்கிறார்களோ அவர்களும்; எவர்கள் (காஃபிர்களின் துன்பத்தால் "மக்கா"வாகிய) தம் ஊரைவிட்டும் வெளியேறினார்களோ அவர்களும்; எவர்கள் அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிகின்றார்களோ அவர்களும் தான் அல்லாஹ்வின் கருணையை நிச்சயமாக எதிர்பார்க்கின்றனர். மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடைய வனுமாக இருக்கின்றான். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௧௮)Tafseer
۞ يَسْـَٔلُوْنَكَ عَنِ الْخَمْرِ وَالْمَيْسِرِۗ قُلْ فِيْهِمَآ اِثْمٌ كَبِيْرٌ وَّمَنَافِعُ لِلنَّاسِۖ وَاِثْمُهُمَآ اَكْبَرُ مِنْ نَّفْعِهِمَاۗ وَيَسْـَٔلُوْنَكَ مَاذَا يُنْفِقُوْنَ ەۗ قُلِ الْعَفْوَۗ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَكُمُ الْاٰيٰتِ لَعَلَّكُمْ تَتَفَكَّرُوْنَۙ ٢١٩
- yasalūnaka
- يَسْـَٔلُونَكَ
- உம்மிடம் கேட்கிறார்கள்
- ʿani l-khamri
- عَنِ ٱلْخَمْرِ
- மதுவைப் பற்றி
- wal-maysiri
- وَٱلْمَيْسِرِۖ
- இன்னும் சூதாட்டம்
- qul
- قُلْ
- கூறுவீராக
- fīhimā
- فِيهِمَآ
- அவ்விரண்டிலும்
- ith'mun kabīrun
- إِثْمٌ كَبِيرٌ
- பாவம்/பெரியது
- wamanāfiʿu
- وَمَنَٰفِعُ
- இன்னும் பலன்கள்
- lilnnāsi
- لِلنَّاسِ
- மக்களுக்கு
- wa-ith'muhumā
- وَإِثْمُهُمَآ
- அவ்விரண்டின்பாவம்
- akbaru
- أَكْبَرُ
- மிகப் பெரியது
- min
- مِن
- விட
- nafʿihimā
- نَّفْعِهِمَاۗ
- அவ்விரண்டின் பலன்
- wayasalūnaka
- وَيَسْـَٔلُونَكَ
- இன்னும் உம்மிடம் கேட்கிறார்கள்
- mādhā
- مَاذَا
- எது
- yunfiqūna
- يُنفِقُونَ
- தர்மம் செய்வார்கள்
- quli
- قُلِ
- கூறுவீராக
- l-ʿafwa
- ٱلْعَفْوَۗ
- மீதமுள்ளதை
- kadhālika
- كَذَٰلِكَ
- இவ்வாறே
- yubayyinu
- يُبَيِّنُ
- விவரிக்கிறான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- lakumu
- لَكُمُ
- உங்களுக்கு
- l-āyāti
- ٱلْءَايَٰتِ
- வசனங்களை
- laʿallakum tatafakkarūna
- لَعَلَّكُمْ تَتَفَكَّرُونَ
- நீங்கள் சிந்திப்பதற்காக
(நபியே!) மதுவைப் பற்றியும் சூதாட்டத்தைப் பற்றியும் உங்களிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: "அவ்விரண்டிலும் பெரும் பாவங்களும் இருக்கின்றன; மனிதர் களுக்குச் சில பயன்களும் இருக்கின்றன. ஆனால், அவைகளில் உள்ள பாவம் அவைகளிலுள்ள பயனைவிட மிகப் பெரிது. அன்றி, (நபியே! தர்மத்திற்காக) எவ்வளவு செலவு செய்வதென உங்களிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீங்கள் "(அவசியத்திற்கு வேண்டியது போக) மீதமுள்ளதை(ச் செலவு செய்யுங்கள்)" என கூறுங்கள். (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் இம்மை, மறுமை(யின் நன்மை) களை கவனத்தில் வைத்துக் கொள்வதற்காக உங்களுக்கு அல்லாஹ் தன்னுடைய வசனங்களை இவ்வாறு விவரிக்கின்றான். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௧௯)Tafseer
فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ ۗ وَيَسْـَٔلُوْنَكَ عَنِ الْيَتٰمٰىۗ قُلْ اِصْلَاحٌ لَّهُمْ خَيْرٌ ۗ وَاِنْ تُخَالِطُوْهُمْ فَاِخْوَانُكُمْ ۗ وَاللّٰهُ يَعْلَمُ الْمُفْسِدَ مِنَ الْمُصْلِحِ ۗ وَلَوْ شَاۤءَ اللّٰهُ لَاَعْنَتَكُمْ اِنَّ اللّٰهَ عَزِيْزٌ حَكِيْمٌ ٢٢٠
- fī l-dun'yā
- فِى ٱلدُّنْيَا
- இம்மையில்
- wal-ākhirati
- وَٱلْءَاخِرَةِۗ
- இன்னும் மறுமை
- wayasalūnaka
- وَيَسْـَٔلُونَكَ
- இன்னும் உம்மிடம் கேட்கிறார்கள்
- ʿani l-yatāmā
- عَنِ ٱلْيَتَٰمَىٰۖ
- அநாதைகள் பற்றி
- qul
- قُلْ
- கூறுவீராக
- iṣ'lāḥun
- إِصْلَاحٌ
- சீர்திருத்துவது
- lahum
- لَّهُمْ
- அவர்களை
- khayrun
- خَيْرٌۖ
- மிக நன்றே
- wa-in tukhāliṭūhum
- وَإِن تُخَالِطُوهُمْ
- இன்னும் நீங்கள் சேர்த்துக் கொண்டால்/அவர்களை
- fa-ikh'wānukum
- فَإِخْوَٰنُكُمْۚ
- உங்கள் சகோதரர்கள்
- wal-lahu
- وَٱللَّهُ
- இன்னும் அல்லாஹ்
- yaʿlamu
- يَعْلَمُ
- அறிவான்
- l-muf'sida
- ٱلْمُفْسِدَ
- சீர்கெடுப்பவனை
- mina
- مِنَ
- இருந்து
- l-muṣ'liḥi
- ٱلْمُصْلِحِۚ
- சீர்செய்பவன்
- walaw shāa
- وَلَوْ شَآءَ
- (அவன்) நாடினால்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- la-aʿnatakum
- لَأَعْنَتَكُمْۚ
- சிரமப்படுத்தி இருப்பான்/உங்களை
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்
- ʿazīzun
- عَزِيزٌ
- மிகைத்தவன்
- ḥakīmun
- حَكِيمٌ
- ஞானவான்
(நபியே!) அநாதைகளைப் (வளர்ப்பதைப்) பற்றியும் உங்களிடம் கேட்கிறார்கள். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: அவர்களைச் சீர்திருத்துவது மிகவும் நன்றே! மேலும், நீங்கள் அவர்களுடன் கலந்(து வசித்)திருக்க நேரிட்டால் (அவர்கள்) உங்களுடைய சகோதரர்களே! (ஆதலால் அவர்களுடைய சொத்தில் இருந்து அவசியமான அளவு உங்களுக்காகவும் செலவு செய்து கொள்ளலாம்.) ஆனால், "நன்மை செய்வோம்" என்று (கூறிக் கொண்டு) தீமை செய்பவர்களை அல்லாஹ் நன்கறிவான். அல்லாஹ் நாடினால் உங்களை (மீள முடியாத) கஷ்டத்திற்குள்ளாக்கி விடுவான். நிச்சயமாக அல்லாஹ் (எவ்விதமும் செய்ய) வல்லவனும், நுண்ணறிவுடைய வனுமாக இருக்கின்றான். (ஆகவே, அநாதைகள் விஷயத்தில் மோசம் செய்யாது மிக்க அனுதாபத்துடனும் நீதமாகவும் நடந்து கொள்ளுங்கள்.) ([௨] ஸூரத்துல் பகரா: ௨௨௦)Tafseer