Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௨௧௪

Qur'an Surah Al-Baqarah Verse 214

ஸூரத்துல் பகரா [௨]: ௨௧௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَمْ حَسِبْتُمْ اَنْ تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا يَأْتِكُمْ مَّثَلُ الَّذِيْنَ خَلَوْا مِنْ قَبْلِكُمْ ۗ مَسَّتْهُمُ الْبَأْسَاۤءُ وَالضَّرَّاۤءُ وَزُلْزِلُوْا حَتّٰى يَقُوْلَ الرَّسُوْلُ وَالَّذِيْنَ اٰمَنُوْا مَعَهٗ مَتٰى نَصْرُ اللّٰهِ ۗ اَلَآ اِنَّ نَصْرَ اللّٰهِ قَرِيْبٌ (البقرة : ٢)

am
أَمْ
Or
அல்லது
ḥasib'tum
حَسِبْتُمْ
(do) you think
நினைத்துக் கொண்டீர்கள்
an tadkhulū
أَن تَدْخُلُوا۟
that you will enter
நீங்கள் நுழையலாம்
l-janata
ٱلْجَنَّةَ
Paradise
சொர்க்கத்தில்
walammā yatikum
وَلَمَّا يَأْتِكُم
while not (has) come to you
உங்களுக்கு வராத நிலையில்
mathalu alladhīna
مَّثَلُ ٱلَّذِينَ
like (came to) those who
போன்று/எவர்கள்
khalaw
خَلَوْا۟
passed away
சென்றார்கள்
min qablikum
مِن قَبْلِكُمۖ
from before you?
உங்களுக்குமுன்
massathumu
مَّسَّتْهُمُ
Touched them
அவர்களை பீடித்தன
l-basāu
ٱلْبَأْسَآءُ
[the] adversity
கொடிய வறுமை
wal-ḍarāu
وَٱلضَّرَّآءُ
and [the] hardship
இன்னும் நோய்
wazul'zilū
وَزُلْزِلُوا۟
and they were shaken
இன்னும் அச்சுறுத்தப்பட்டார்கள்
ḥattā yaqūla
حَتَّىٰ يَقُولَ
until said
வரை/கூறுவார்
l-rasūlu
ٱلرَّسُولُ
the Messenger
தூதர்
wa-alladhīna
وَٱلَّذِينَ
and those who
இன்னும் எவர்கள்
āmanū
ءَامَنُوا۟
believed
நம்பிக்கை கொண்டார்கள்
maʿahu
مَعَهُۥ
with him
அவருடன்
matā
مَتَىٰ
"When
எப்போது
naṣru
نَصْرُ
[will] (the) help
உதவி
l-lahi
ٱللَّهِۗ
(of) Allah (come)
அல்லாஹ்வுடைய
alā
أَلَآ
Unquestionably
அறிந்துகொள்ளுங்கள்!
inna
إِنَّ
[Indeed]
நிச்சயமாக
naṣra
نَصْرَ
help
உதவி
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வுடைய
qarībun
قَرِيبٌ
(is) near
சமீபமானது

Transliteration:

Am hasibtum an tadkhulul jannata wa lammaa yaa-tikum masalul lazeena khalaw min qablikum massathumul baasaaa'u waddarraaaa'u wa zulziloo hattaa yaqoolar Rasoolu wallazeena aamanoo ma'ahoo mataa nasrul laah; alaaa inna nasral laahiqareeb (QS. al-Baq̈arah:214)

English Sahih International:

Or do you think that you will enter Paradise while such [trial] has not yet come to you as came to those who passed on before you? They were touched by poverty and hardship and were shaken until [even their] messenger and those who believed with him said, "When is the help of Allah?" Unquestionably, the help of Allah is near. (QS. Al-Baqarah, Ayah ௨௧௪)

Abdul Hameed Baqavi:

(நம்பிக்கையாளர்களே!) உங்களுக்கு முன் சென்றவர்களுக்கு ஏற்பட்டது போன்ற (கஷ்டமான) நிலைமை உங்களுக்கு வராமலே நீங்கள் சுவர்க்கத்தில் நுழைந்து விடலாமென்று நினைத்துக் கொண்டீர்களோ? (உங்களைப் போல) நம்பிக்கை கொண்ட அவர்களையும் அவர்களுடைய தூதரையும், வாட்டும் வறுமையிலும், நோயிலும் பீடித்து (அவர்கள் வருந்தித் தங்களுடைய கஷ்டங்களை நீக்கி வைக்க) "அல்லாஹ்வுடைய உதவி எப்பொழுது (வரும்? எப்பொழுது வரும்?)" என்று கேட்டதற்கு "அல்லாஹ் வுடைய உதவி நிச்சயமாக (இதோ) சமீபத்திலிருக்கிறது" என்று (நாம் ஆறுதல்) கூறும் வரையில் அவர்கள் ஆட்டி வைக்கப்பட்டார்கள். (ஸூரத்துல் பகரா, வசனம் ௨௧௪)

Jan Trust Foundation

உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பீடித்தன; “அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்” என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைகழிக்கப்பட்டார்கள்; “நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது” (என்று நாம் ஆறுதல் கூறினோம்.)

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உங்களுக்கு முன் சென்றவர்களுக்கு (வந்தது) போன்று உங்களுக்கு வராத நிலையில் நீங்கள் சொர்க்கத்தில் நுழையலாமென்று நினைத்துக் கொண்டீர்களா? அவர்களை கொடிய வறுமையும் நோயும் பீடித்தன. "அல்லாஹ்வுடைய உதவி எப்போது...? "என்று தூதரும் அவருடன் நம்பிக்கை கொண்டவர்களும் கூறும் வரை அவர்கள் (எதிரிகளால்) அச்சுறுத்தப்பட்டார்கள். அறிந்து கொள்ளுங்கள்: "நிச்சயமாக அல்லாஹ்வுடைய உதவி சமீபமானதாகும்."