Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௨௨௦

Qur'an Surah Al-Baqarah Verse 220

ஸூரத்துல் பகரா [௨]: ௨௨௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ ۗ وَيَسْـَٔلُوْنَكَ عَنِ الْيَتٰمٰىۗ قُلْ اِصْلَاحٌ لَّهُمْ خَيْرٌ ۗ وَاِنْ تُخَالِطُوْهُمْ فَاِخْوَانُكُمْ ۗ وَاللّٰهُ يَعْلَمُ الْمُفْسِدَ مِنَ الْمُصْلِحِ ۗ وَلَوْ شَاۤءَ اللّٰهُ لَاَعْنَتَكُمْ اِنَّ اللّٰهَ عَزِيْزٌ حَكِيْمٌ (البقرة : ٢)

fī l-dun'yā
فِى ٱلدُّنْيَا
Concerning the world
இம்மையில்
wal-ākhirati
وَٱلْءَاخِرَةِۗ
and the Hereafter
இன்னும் மறுமை
wayasalūnaka
وَيَسْـَٔلُونَكَ
They ask you
இன்னும் உம்மிடம் கேட்கிறார்கள்
ʿani l-yatāmā
عَنِ ٱلْيَتَٰمَىٰۖ
about the orphans
அநாதைகள் பற்றி
qul
قُلْ
Say
கூறுவீராக
iṣ'lāḥun
إِصْلَاحٌ
"Setting right (their affairs)
சீர்திருத்துவது
lahum
لَّهُمْ
for them
அவர்களை
khayrun
خَيْرٌۖ
(is) best
மிக நன்றே
wa-in tukhāliṭūhum
وَإِن تُخَالِطُوهُمْ
And if you associate with them
இன்னும் நீங்கள் சேர்த்துக் கொண்டால்/அவர்களை
fa-ikh'wānukum
فَإِخْوَٰنُكُمْۚ
then they (are) your brothers
உங்கள் சகோதரர்கள்
wal-lahu
وَٱللَّهُ
And Allah
இன்னும் அல்லாஹ்
yaʿlamu
يَعْلَمُ
knows
அறிவான்
l-muf'sida
ٱلْمُفْسِدَ
the corrupter
சீர்கெடுப்பவனை
mina
مِنَ
from
இருந்து
l-muṣ'liḥi
ٱلْمُصْلِحِۚ
the amender
சீர்செய்பவன்
walaw shāa
وَلَوْ شَآءَ
And if (had) willed
(அவன்) நாடினால்
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
la-aʿnatakum
لَأَعْنَتَكُمْۚ
surely He (could have) put you in difficulties
சிரமப்படுத்தி இருப்பான்/உங்களை
inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்
ʿazīzun
عَزِيزٌ
(is) All-Mighty
மிகைத்தவன்
ḥakīmun
حَكِيمٌ
All-Wise"
ஞானவான்

Transliteration:

Fid dunyaa wal aakhirah; wa yas'aloonaka 'anil yataamaa qul islaahullahum khayr, wa in tukhaalitoohum fa ikhwaanukum; wallaahu ya'lamul mufsida minalmuslih; wa law shaaa'al laahu la-a'natakum; innal laaha 'Azeezun Hakeem (QS. al-Baq̈arah:220)

English Sahih International:

To this world and the Hereafter. And they ask you about orphans. Say, "Improvement for them is best. And if you mix your affairs with theirs – they are your brothers. And Allah knows the corrupter from the amender. And if Allah had willed, He could have put you in difficulty. Indeed, Allah is Exalted in Might and Wise." (QS. Al-Baqarah, Ayah ௨௨௦)

Abdul Hameed Baqavi:

(நபியே!) அநாதைகளைப் (வளர்ப்பதைப்) பற்றியும் உங்களிடம் கேட்கிறார்கள். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: அவர்களைச் சீர்திருத்துவது மிகவும் நன்றே! மேலும், நீங்கள் அவர்களுடன் கலந்(து வசித்)திருக்க நேரிட்டால் (அவர்கள்) உங்களுடைய சகோதரர்களே! (ஆதலால் அவர்களுடைய சொத்தில் இருந்து அவசியமான அளவு உங்களுக்காகவும் செலவு செய்து கொள்ளலாம்.) ஆனால், "நன்மை செய்வோம்" என்று (கூறிக் கொண்டு) தீமை செய்பவர்களை அல்லாஹ் நன்கறிவான். அல்லாஹ் நாடினால் உங்களை (மீள முடியாத) கஷ்டத்திற்குள்ளாக்கி விடுவான். நிச்சயமாக அல்லாஹ் (எவ்விதமும் செய்ய) வல்லவனும், நுண்ணறிவுடைய வனுமாக இருக்கின்றான். (ஆகவே, அநாதைகள் விஷயத்தில் மோசம் செய்யாது மிக்க அனுதாபத்துடனும் நீதமாகவும் நடந்து கொள்ளுங்கள்.) (ஸூரத்துல் பகரா, வசனம் ௨௨௦)

Jan Trust Foundation

(மேல்கூறிய இரண்டும்) இவ்வுலகிலும், மறுமையிலும் (என்ன பலன்களைத் தரும் என்பதைப் பற்றி நீங்கள் தெளிவு பெறுவதற்காக தன் வசனங்களை அவ்வாறு விளக்குகிறான்.) “அநாதைகளைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்;” நீர் கூறுவீராக| “அவர்களுடைய காரியங்களைச் சீராக்கி வைத்தல் மிகவும் நல்லது; நீங்கள் அவர்களுடன் கலந்து வசிக்க நேரிட்டால் அவர்கள் உங்கள் சகோதரர்களேயாவார்கள்; இன்னும் அல்லாஹ் குழப்பம் உண்டாக்குபவனைச் சரி செய்பவனின்றும் பிரித்தறிகிறான்; அல்லாஹ் நாடியிருந்தால் உங்களைக் கஷ்டத்திற்குள்ளாக்கியிருப்பான்; நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அநாதைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். கூறுவீராக: "அவர்களைச் சீர்திருத்துவது மிக நன்றே! நீங்கள் அவர்களைச் சேர்த்துக் கொண்டால் (அவர்கள்) உங்கள் சகோதரர்களே! சீர்செய்பவனிலிருந்து சீர்கெடுப்பவனை அல்லாஹ் அறிவான். அல்லாஹ் நாடினால் உங்களைச் சிரமப்படுத்தி இருப்பான். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், ஞானவான் ஆவான்.