اَلَّذِيْنَ اٰتَيْنٰهُمُ الْكِتٰبَ يَتْلُوْنَهٗ حَقَّ تِلَاوَتِهٖۗ اُولٰۤىِٕكَ يُؤْمِنُوْنَ بِهٖ ۗ وَمَنْ يَّكْفُرْ بِهٖ فَاُولٰۤىِٕكَ هُمُ الْخٰسِرُوْنَ ࣖ ١٢١
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- ātaynāhumu
- ءَاتَيْنَٰهُمُ
- கொடுத்தோம்/அவர்களுக்கு
- l-kitāba
- ٱلْكِتَٰبَ
- வேதத்தை
- yatlūnahu
- يَتْلُونَهُۥ
- ஓதுகிறார்கள்/அதை
- ḥaqqa
- حَقَّ
- முறைப்படி
- tilāwatihi
- تِلَاوَتِهِۦٓ
- ஓதுவதின்/அதை
- ulāika
- أُو۟لَٰٓئِكَ
- அவர்கள்
- yu'minūna
- يُؤْمِنُونَ
- நம்பிக்கை கொள்கிறார்கள்
- bihi
- بِهِۦۗ
- அதை
- waman
- وَمَن
- எவர்(கள்)
- yakfur
- يَكْفُرْ
- நிராகரிப்பார்(கள்)
- bihi
- بِهِۦ
- அதை
- fa-ulāika humu
- فَأُو۟لَٰٓئِكَ هُمُ
- அவர்கள்தான்
- l-khāsirūna
- ٱلْخَٰسِرُونَ
- நஷ்டமடைந்தவர்கள்
(நபியே!) எவர்கள் நாம் கொடுத்த ("தவ்றாத்") வேதத்தை முறைப்படி (அறிந்து) ஓதுகிறார்களோ அவர்கள், (குர்ஆனாகிய) இதனையும் (அவசியம்) நம்பிக்கை கொள்வார்கள். (ஆகவே, அவர்களில்) எவரேனும் இதனை நிராகரித்தால் அவர்கள் நிச்சயமாக நஷ்டமடைந்தவர்களே! ([௨] ஸூரத்துல் பகரா: ௧௨௧)Tafseer
يٰبَنِيْٓ اِسْرَاۤءِيْلَ اذْكُرُوْا نِعْمَتِيَ الَّتِيْٓ اَنْعَمْتُ عَلَيْكُمْ وَاَنِّيْ فَضَّلْتُكُمْ عَلَى الْعٰلَمِيْنَ ١٢٢
- yābanī
- يَٰبَنِىٓ
- சந்ததிகளே
- is'rāīla
- إِسْرَٰٓءِيلَ
- இஸ்ராயீலின்
- udh'kurū
- ٱذْكُرُوا۟
- நினைவு கூறுங்கள்
- niʿ'matiya
- نِعْمَتِىَ
- என் அருளை
- allatī
- ٱلَّتِىٓ
- எது
- anʿamtu
- أَنْعَمْتُ
- அருள் புரிந்தேன்
- ʿalaykum
- عَلَيْكُمْ
- உங்கள் மீது
- wa-annī
- وَأَنِّى
- இன்னும் நிச்சயமாக நான்
- faḍḍaltukum
- فَضَّلْتُكُمْ
- மேன்மையாக்கினேன்/உங்களை
- ʿalā l-ʿālamīna
- عَلَى ٱلْعَٰلَمِينَ
- உலகத்தாரைவிட
இஸ்ராயீலின் சந்ததிகளே! உங்களுக்கு வழங்கியிருந்த என்னுடைய அருட்கொடையையும், நிச்சயமாக உங்களை உலக மக்கள் அனைவரையும் விட மேன்மையாக்கி வைத்திருந்ததையும் நினைத்துப் பாருங்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௨௨)Tafseer
وَاتَّقُوْا يَوْمًا لَّا تَجْزِيْ نَفْسٌ عَنْ نَّفْسٍ شَيْـًٔا وَّلَا يُقْبَلُ مِنْهَا عَدْلٌ وَّلَا تَنْفَعُهَا شَفَاعَةٌ وَّلَا هُمْ يُنْصَرُوْنَ ١٢٣
- wa-ittaqū
- وَٱتَّقُوا۟
- இன்னும் அஞ்சுங்கள்
- yawman
- يَوْمًا
- ஒரு நாளை
- lā tajzī
- لَّا تَجْزِى
- பலனளிக்காது
- nafsun
- نَفْسٌ
- ஓர் ஆன்மா
- ʿan nafsin
- عَن نَّفْسٍ
- ஓர் ஆன்மாவிற்கு
- shayan walā
- شَيْـًٔا وَلَا
- எதையும்
- yuq'balu
- يُقْبَلُ
- இன்னும் ஏற்கப்படாது
- min'hā
- مِنْهَا
- அதனிடமிருந்து
- ʿadlun
- عَدْلٌ
- பரிகாரம்
- walā tanfaʿuhā
- وَلَا تَنفَعُهَا
- இன்னும் அதற்குப் பலனளிக்காது
- shafāʿatun
- شَفَٰعَةٌ
- பரிந்துரை
- walā hum yunṣarūna
- وَلَا هُمْ يُنصَرُونَ
- இன்னும் அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள்
அன்றி, ஒரு நாளைப் பற்றியும் பயந்து கொள்ளுங்கள். அந்நாளில் ஓர் ஆத்மா மற்றொரு ஆத்மாவுக்கு எவ்வித பயனுமளிக்காது. அதனிடமிருந்து யாதொரு பரிகாரமும் ஏற்கப்பட மாட்டாது; எவ்வித பரிந்துரையும் அதற்குப் பயன் தராது. அன்றி, அவர்கள் (யாராலும் எவ்வித) உதவியும் செய்யப்பட மாட்டார்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௨௩)Tafseer
۞ وَاِذِ ابْتَلٰٓى اِبْرٰهٖمَ رَبُّهٗ بِكَلِمٰتٍ فَاَتَمَّهُنَّ ۗ قَالَ اِنِّيْ جَاعِلُكَ لِلنَّاسِ اِمَامًا ۗ قَالَ وَمِنْ ذُرِّيَّتِيْ ۗ قَالَ لَا يَنَالُ عَهْدِى الظّٰلِمِيْنَ ١٢٤
- wa-idhi ib'talā
- وَإِذِ ٱبْتَلَىٰٓ
- இன்னும் சமயம்/சோதித்தான்
- ib'rāhīma
- إِبْرَٰهِۦمَ
- இப்ராஹீமை
- rabbuhu
- رَبُّهُۥ
- அவருடைய இறைவன்
- bikalimātin
- بِكَلِمَٰتٍ
- கட்டளைகளைக் கொண்டு
- fa-atammahunna
- فَأَتَمَّهُنَّۖ
- ஆகவே நிறைவு செய்தார்/அவற்றை
- qāla
- قَالَ
- கூறினான்
- innī
- إِنِّى
- நிச்சயமாக நான்
- jāʿiluka
- جَاعِلُكَ
- ஆக்குகிறேன்/ உன்னை
- lilnnāsi
- لِلنَّاسِ
- மனிதர்களுக்கு
- imāman
- إِمَامًاۖ
- தலைவராக
- qāla
- قَالَ
- கூறினார்
- wamin
- وَمِن
- இன்னும் இருந்து
- dhurriyyatī
- ذُرِّيَّتِىۖ
- என் சந்ததிகள்
- qāla
- قَالَ
- கூறினான்
- lā yanālu
- لَا يَنَالُ
- அடையாது
- ʿahdī
- عَهْدِى
- என் வாக்குறுதி
- l-ẓālimīna
- ٱلظَّٰلِمِينَ
- அநியாயக்காரர்களை
தவிர, இப்ராஹீமை அவருடைய இறைவன் (பெரும் சோதனையான) பல கட்டளைகளையிட்டு சோதித்த சமயத்தில் அவர் அவை யாவையும் நிறைவு செய்தார். (ஆதலால் இறைவன்) "நிச்சயமாக நான் உங்களை மனிதர்களுக்கு (நேர்வழி காட்டக் கூடிய) தலைவராக ஆக்கினேன்" எனக் கூறினான். அதற்கு (இப்ராஹீம்) "என்னுடைய சந்ததிகளையுமா (தலைவர்களாக ஆக்குவாய்?)" எனக் கேட்டார். (அதற்கு "உங்கள் சந்ததியிலுள்ள) அநியாயக்காரரை என்னுடைய (இந்த) உறுதிமொழி சாராது" எனக் கூறினான். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௨௪)Tafseer
وَاِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِّلنَّاسِ وَاَمْنًاۗ وَاتَّخِذُوْا مِنْ مَّقَامِ اِبْرٰهٖمَ مُصَلًّىۗ وَعَهِدْنَآ اِلٰٓى اِبْرٰهٖمَ وَاِسْمٰعِيْلَ اَنْ طَهِّرَا بَيْتِيَ لِلطَّاۤىِٕفِيْنَ وَالْعٰكِفِيْنَ وَالرُّكَّعِ السُّجُوْدِ ١٢٥
- wa-idh jaʿalnā
- وَإِذْ جَعَلْنَا
- இன்னும் சமயம்/ஆக்கினோம்
- l-bayta
- ٱلْبَيْتَ
- (வீடு) கஅபாவை
- mathābatan
- مَثَابَةً
- ஒரு திரும்புமிடமாக
- lilnnāsi
- لِّلنَّاسِ
- மனிதர்களுக்கு
- wa-amnan
- وَأَمْنًا
- இன்னும் பாதுகாப்பாக
- wa-ittakhidhū
- وَٱتَّخِذُوا۟
- இன்னும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்
- min maqāmi
- مِن مَّقَامِ
- நின்ற இடத்தில்
- ib'rāhīma
- إِبْرَٰهِۦمَ
- இப்ராஹீம்
- muṣallan
- مُصَلًّىۖ
- தொழுமிடத்தை
- waʿahid'nā
- وَعَهِدْنَآ
- இன்னும் கட்டளையிட்டோம்
- ilā ib'rāhīma
- إِلَىٰٓ إِبْرَٰهِۦمَ
- இப்ராஹீமுக்கு
- wa-is'māʿīla
- وَإِسْمَٰعِيلَ
- இன்னும் இஸ்மாயீல்
- an ṭahhirā
- أَن طَهِّرَا
- நீங்கள் இருவரும் சுத்தப்படுத்துங்கள்
- baytiya
- بَيْتِىَ
- என் வீட்டை
- lilṭṭāifīna
- لِلطَّآئِفِينَ
- தவாஃப் சுற்றுபவர்களுக்கு
- wal-ʿākifīna
- وَٱلْعَٰكِفِينَ
- இன்னும் தங்குபவர்கள்
- wal-rukaʿi
- وَٱلرُّكَّعِ
- இன்னும் குனிபவர்கள்
- l-sujūdi
- ٱلسُّجُودِ
- சிரம் பணிபவர்கள்
(மக்காவில் இப்ராஹீம் கட்டிய "கஅபா" என்னும்) வீட்டை மனிதர்கள் ஒதுங்கும் இடமாகவும், (அவர்களுக்கு) பாதுகாப்பு அளிக்கக் கூடியதாகவும் நாம் ஆக்கியிருக்கின்றோம். (அதில்) இப்ராஹீம் நின்ற இடத்தை (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் தொழும் இடமாக வைத்துக்கொள்ளுங்கள். "(ஹஜ்ஜு செய்ய அங்கு வந்து) அதை வலம் சுற்றுபவர்களுக்கும், தியானம் புரிய (அதில்) தங்குபவர்களுக்கும், குனிந்து சிரம் பணி(ந்து அதில் தொழு) பவர்களுக்கும் என்னுடைய அந்த வீட்டை சுத்தமானதாக ஆக்கி வையுங்கள்" என்று இப்ராஹீமிடத்திலும் இஸ்மாயீலிடத்திலும் நாம் வாக்குறுதி வாங்கியிருக்கின்றோம். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௨௫)Tafseer
وَاِذْ قَالَ اِبْرٰهٖمُ رَبِّ اجْعَلْ هٰذَا بَلَدًا اٰمِنًا وَّارْزُقْ اَهْلَهٗ مِنَ الثَّمَرٰتِ مَنْ اٰمَنَ مِنْهُمْ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِۗ قَالَ وَمَنْ كَفَرَ فَاُمَتِّعُهٗ قَلِيْلًا ثُمَّ اَضْطَرُّهٗٓ اِلٰى عَذَابِ النَّارِ ۗ وَبِئْسَ الْمَصِيْرُ ١٢٦
- wa-idh qāla
- وَإِذْ قَالَ
- இன்னும் சமயம்/கூறினார்
- ib'rāhīmu
- إِبْرَٰهِۦمُ
- இப்ராஹீம்
- rabbi
- رَبِّ
- என் இறைவா
- ij'ʿal
- ٱجْعَلْ
- ஆக்கு
- hādhā
- هَٰذَا
- இதை
- baladan
- بَلَدًا
- ஒரு பட்டணமாக
- āminan
- ءَامِنًا
- பாதுகாப்பளிக்கக் கூடியது
- wa-ur'zuq
- وَٱرْزُقْ
- இன்னும் உணவளி
- ahlahu
- أَهْلَهُۥ
- அதனுடையவர்களில்
- mina
- مِنَ
- இருந்து
- l-thamarāti
- ٱلثَّمَرَٰتِ
- கனிகளில்
- man
- مَنْ
- எவர்
- āmana
- ءَامَنَ
- நம்பிக்கை கொண்டார்
- min'hum
- مِنْهُم
- அவர்களில்
- bil-lahi
- بِٱللَّهِ
- அல்லாஹ்வைக் கொண்டு
- wal-yawmi l-ākhiri
- وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِۖ
- இன்னும் இறுதி நாளை
- qāla
- قَالَ
- கூறினான்
- waman
- وَمَن
- இன்னும் எவர்
- kafara
- كَفَرَ
- நிராகரிப்பார்
- fa-umattiʿuhu
- فَأُمَتِّعُهُۥ
- சுகம்அனுபவிக்கவைப்பேன்/அவரை
- qalīlan
- قَلِيلًا
- கொஞ்சம்/பிறகு
- thumma aḍṭarruhu
- ثُمَّ أَضْطَرُّهُۥٓ
- நிர்ப்பந்திப்பேன்/ அவரை
- ilā ʿadhābi
- إِلَىٰ عَذَابِ
- வேதனையின் பக்கம்
- l-nāri
- ٱلنَّارِۖ
- நரகம்
- wabi'sa
- وَبِئْسَ
- அது கெட்டது
- l-maṣīru
- ٱلْمَصِيرُ
- செல்லுமிடத்தால்
தவிர, இப்ராஹீம் (இறைவனிடம்) "என் இறைவனே! (மக்காவாகிய) இதை பாதுகாப்பளிக்கும் ஒரு பட்டணமாக ஆக்கி, இதில் வசிப்பவர்களில் எவர் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கைக் கொள்கிறாரோ அவருக்கு உணவாகப் பலவகைக் கனிவர்க்கங்களையும் அளித்துவா!" எனக் கூறியதற்கு (இறைவன் "என்னை நம்பிக்கை கொள்பவருக்கு நான் உணவளிப்பது போல என்னை) நிராகரிப்ப(வனுக்கும் உணவளித்து அவ)னையும் சிறிது காலம் (அங்குச்) சுகமனுபவிக்க விட்டு வைப்பேன். பின்னர் நரக வேதனையின் பக்கம் (செல்லும்படி) அவனை நிர்ப்பந்திப்பேன். அவன் செல்லும் (அந்த) இடம் (மிகக்) கெட்டது" என்று கூறினான். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௨௬)Tafseer
وَاِذْ يَرْفَعُ اِبْرٰهٖمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَاِسْمٰعِيْلُۗ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا ۗ اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْمُ ١٢٧
- wa-idh yarfaʿu
- وَإِذْ يَرْفَعُ
- இன்னும் சமயம்/உயர்த்தினார்
- ib'rāhīmu
- إِبْرَٰهِۦمُ
- இப்ராஹீம்
- l-qawāʿida
- ٱلْقَوَاعِدَ
- அஸ்திவாரங்கள்
- mina l-bayti
- مِنَ ٱلْبَيْتِ
- வீட்டின்
- wa-is'māʿīlu
- وَإِسْمَٰعِيلُ
- இன்னும் இஸ்மாயீல்
- rabbanā
- رَبَّنَا
- எங்கள் இறைவா
- taqabbal
- تَقَبَّلْ
- ஏற்றுக் கொள்
- minnā
- مِنَّآۖ
- எங்களிடமிருந்து
- innaka anta
- إِنَّكَ أَنتَ
- நிச்சயமாக நீதான்
- l-samīʿu
- ٱلسَّمِيعُ
- நன்கு செவியுறுபவன்
- l-ʿalīmu
- ٱلْعَلِيمُ
- மிக அறிந்தவன்
இப்ராஹீமும், இஸ்மாயீலும் அவ்வீட்டின் அஸ்திவாரத்தை உயர்த்தியபொழுது "எங்களுடைய இறைவனே! (உனக்காக நாங்கள் செய்த இப்பணியை) எங்களிடமிருந்து ஏற்றுக்கொள்வாயாக! நிச்சயமாக நீதான் (எங்களுடைய இந்த பிரார்த்தனையைச்) செவியுறுபவனாகவும் அறிந்தவனாகவும் இருக்கின்றாய். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௨௭)Tafseer
رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَآ اُمَّةً مُّسْلِمَةً لَّكَۖ وَاَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا ۚ اِنَّكَ اَنْتَ التَّوَّابُ الرَّحِيْمُ ١٢٨
- rabbanā
- رَبَّنَا
- இறைவா/எங்கள்
- wa-ij'ʿalnā
- وَٱجْعَلْنَا
- ஆக்கு/இன்னும் எங்களை
- mus'limayni
- مُسْلِمَيْنِ
- பணிபவர்களாக
- laka
- لَكَ
- உனக்கு
- wamin
- وَمِن
- இன்னும் இருந்து
- dhurriyyatinā
- ذُرِّيَّتِنَآ
- சந்ததி/எங்கள்
- ummatan
- أُمَّةً
- சமுதாயம்
- mus'limatan laka
- مُّسْلِمَةً لَّكَ
- பணியக்கூடிய/உனக்கு
- wa-arinā
- وَأَرِنَا
- இன்னும் காண்பித்துக் கொடு / எங்களுக்கு
- manāsikanā
- مَنَاسِكَنَا
- எங்கள் ஹஜ்ஜு கிரியைகளை
- watub ʿalaynā
- وَتُبْ عَلَيْنَآۖ
- இன்னும் மன்னித்திடு/ எங்களை
- innaka anta
- إِنَّكَ أَنتَ
- நிச்சயமாக நீதான்
- l-tawābu
- ٱلتَّوَّابُ
- தவ்பாவை அங்கீகரிப்பவன்
- l-raḥīmu
- ٱلرَّحِيمُ
- பேரன்பாளன்
எங்கள் இறைவனே! எங்களிருவரையும் உனக்கு (முற்றிலும்) வழிப்படும் முஸ்லிம்களாகவும், எங்களுடைய சந்ததியிலிருந்தும் ஒரு கூட்டத்தினரை உனக்கு (முற்றிலும்) வழிப்படும் முஸ்லிம்களாகவும் ஆக்கிவைப்பாயாக! ("ஹஜ்ஜு" காலத்தில்) நாங்கள் புரிய வேண்டிய வணக்கங்களையும் அறிவிப்பாயாக! (நாங்கள் தவறிழைத்து விட்டாலும்) எங்களை நீ மன்னிப்பாயாக! நிச்சயமாக நீதான் மிக மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடையவனுமாக இருக்கின்றாய். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௨௮)Tafseer
رَبَّنَا وَابْعَثْ فِيْهِمْ رَسُوْلًا مِّنْهُمْ يَتْلُوْا عَلَيْهِمْ اٰيٰتِكَ وَيُعَلِّمُهُمُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَيُزَكِّيْهِمْ ۗ اِنَّكَ اَنْتَ الْعَزِيْزُ الْحَكِيْمُ ࣖ ١٢٩
- rabbanā
- رَبَّنَا
- எங்கள் இறைவா
- wa-ib'ʿath
- وَٱبْعَثْ
- இன்னும் அனுப்பு
- fīhim
- فِيهِمْ
- அவர்களில்
- rasūlan
- رَسُولًا
- ஒரு தூதரை
- min'hum
- مِّنْهُمْ
- அவர்களிலிருந்து
- yatlū
- يَتْلُوا۟
- ஓதுவார்
- ʿalayhim
- عَلَيْهِمْ
- அவர்களுக்கு
- āyātika
- ءَايَٰتِكَ
- உன் வசனங்களை
- wayuʿallimuhumu
- وَيُعَلِّمُهُمُ
- கற்பிப்பார்/இன்னும் அவர்களுக்கு
- l-kitāba
- ٱلْكِتَٰبَ
- வேதத்தை
- wal-ḥik'mata
- وَٱلْحِكْمَةَ
- இன்னும் ஞானத்தை
- wayuzakkīhim
- وَيُزَكِّيهِمْۚ
- பரிசுத்தப்படுத்துவார்/இன்னும் அவர்களை
- innaka anta
- إِنَّكَ أَنتَ
- நிச்சயமாக நீதான்
- l-ʿazīzu
- ٱلْعَزِيزُ
- மிகைத்தவன்
- l-ḥakīmu
- ٱلْحَكِيمُ
- மகா ஞானவான்
எங்கள் இறைவனே! (என் சந்ததிகளாகிய) அவர்களில் இருந்து உன்னுடைய வசனங்களை அவர்களுக்கு ஓதிக்காண்பித்து, வேதத்தையும் ஆழ்ந்த கருத்துக்களையும் அவர்களுக்குக் கற்றுக்கொடுத்து அவர்களைப் பரிசுத்தமாக்கி வைக்கும் ஒரு தூதரை அவர்களுக்கு அனுப்புவாயாக! நிச்சயமாக நீதான் மிக்க வல்லவன் நுண்ணறிவுடையவன்" (என்றும் பிரார்த்தித்தனர்.) ([௨] ஸூரத்துல் பகரா: ௧௨௯)Tafseer
وَمَنْ يَّرْغَبُ عَنْ مِّلَّةِ اِبْرٰهٖمَ اِلَّا مَنْ سَفِهَ نَفْسَهٗ ۗوَلَقَدِ اصْطَفَيْنٰهُ فِى الدُّنْيَا ۚوَاِنَّهٗ فِى الْاٰخِرَةِ لَمِنَ الصّٰلِحِيْنَ ١٣٠
- waman
- وَمَن
- இன்னும் யார்
- yarghabu
- يَرْغَبُ
- வெறுப்பார்
- ʿan millati
- عَن مِّلَّةِ
- விட்டு/மார்க்கத்தை
- ib'rāhīma
- إِبْرَٰهِۦمَ
- இப்ராஹீமுடைய
- illā
- إِلَّا
- தவிர
- man
- مَن
- எவன்
- safiha
- سَفِهَ
- மடையனாக ஆனான்
- nafsahu
- نَفْسَهُۥۚ
- அவனே
- walaqadi
- وَلَقَدِ
- திட்டவட்டமாக
- iṣ'ṭafaynāhu
- ٱصْطَفَيْنَٰهُ
- தேர்ந்தெடுத்தோம்/அவரை
- fī l-dun'yā
- فِى ٱلدُّنْيَاۖ
- இவ்வுலகில்
- wa-innahu
- وَإِنَّهُۥ
- நிச்சயமாக அவர்
- fī l-ākhirati
- فِى ٱلْءَاخِرَةِ
- மறுமையில்
- lamina l-ṣāliḥīna
- لَمِنَ ٱلصَّٰلِحِينَ
- நல்லோரில்தான்
தன்னைத்தானே மூடனாக்கிக் கொண்டவனைத் தவிர இப்ராஹீமுடைய (இஸ்லாம்) மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்? நிச்சயமாக நாம் அவரை இந்த உலகில் தேர்ந்தெடுத்தோம், மறுமையிலும் நிச்சயமாக அவர் நல்லடியார்களில் இருப்பார். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௩௦)Tafseer