Skip to content

ஸூரா ஸூரத்துத் தவ்பா - Page: 9

At-Tawbah

(at-Tawbah)

௮௧

فَرِحَ الْمُخَلَّفُوْنَ بِمَقْعَدِهِمْ خِلٰفَ رَسُوْلِ اللّٰهِ وَكَرِهُوْٓا اَنْ يُّجَاهِدُوْا بِاَمْوَالِهِمْ وَاَنْفُسِهِمْ فِيْ سَبِيْلِ اللّٰهِ وَقَالُوْا لَا تَنْفِرُوْا فِى الْحَرِّۗ قُلْ نَارُ جَهَنَّمَ اَشَدُّ حَرًّاۗ لَوْ كَانُوْا يَفْقَهُوْنَ ٨١

fariḥa
فَرِحَ
மகிழ்ச்சியடைந்தனர்
l-mukhalafūna
ٱلْمُخَلَّفُونَ
பின்தங்கியவர்கள்
bimaqʿadihim
بِمَقْعَدِهِمْ
தாங்கள் தங்கியதைப் பற்றி
khilāfa rasūli
خِلَٰفَ رَسُولِ
மாறாக/தூதருக்கு
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
wakarihū
وَكَرِهُوٓا۟
இன்னும் வெறுத்தனர்
an yujāhidū
أَن يُجَٰهِدُوا۟
அவர்கள் போரிடுவதை
bi-amwālihim
بِأَمْوَٰلِهِمْ
தங்கள் செல்வங்களால்
wa-anfusihim
وَأَنفُسِهِمْ
இன்னும் தங்கள் உயிர்களால்
fī sabīli
فِى سَبِيلِ
பாதையில்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
waqālū
وَقَالُوا۟
கூறினர்
lā tanfirū
لَا تَنفِرُوا۟
புறப்படாதீர்கள்
fī l-ḥari
فِى ٱلْحَرِّۗ
வெயிலில்
qul
قُلْ
கூறுவீராக
nāru jahannama
نَارُ جَهَنَّمَ
நெருப்பு/நரகத்தின்
ashaddu
أَشَدُّ
மிகக் கடுமையானது
ḥarran
حَرًّاۚ
வெப்பத்தால்
law kānū
لَّوْ كَانُوا۟
அவர்கள் இருக்க வேண்டுமே!
yafqahūna
يَفْقَهُونَ
சிந்தித்து விளங்குபவர்களாக
(போருக்குச் செல்லாது) பின் தங்கிவிட்டவர்கள், அல்லாஹ்வின் தூதரு(டைய கட்டளை)க்கு மாறாக(த் தங்கள் வீடுகளில்) இருந்து கொண்டதைப் பற்றி சந்தோஷமடைகின்றனர். அன்றி, அல்லாஹ்வுடைய பாதையில் தங்கள் பொருள்களையும், உயிர்களையும் தியாகம் செய்து போர் செய்வதை வெறுத்து (மற்றவர்களை நோக்கி) "இந்த வெப்பகாலத்தில் நீங்கள் (போருக்குச்) செல்லாதீர்கள்" என்றும் கூறுகின்றனர். (அதற்கு நபியே! அவர்களை நோக்கி) "நரகத்தின் நெருப்பு (இதைவிட) கொடிய உஷ்ணமானது" என்று நீங்கள் கூறுங்கள். (இதனை) அவர்கள் அறிந்துகொள்ள வேண்டாமா? ([௯] ஸூரத்துத் தவ்பா: ௮௧)
Tafseer
௮௨

فَلْيَضْحَكُوْا قَلِيْلًا وَّلْيَبْكُوْا كَثِيْرًاۚ جَزَاۤءًۢ بِمَا كَانُوْا يَكْسِبُوْنَ ٨٢

falyaḍḥakū
فَلْيَضْحَكُوا۟
அவர்கள் சிரிக்கட்டும்
qalīlan
قَلِيلًا
குறைவாக
walyabkū
وَلْيَبْكُوا۟
அவர்கள் அழட்டும்
kathīran
كَثِيرًا
அதிகமாக
jazāan
جَزَآءًۢ
கூலியாக
bimā kānū
بِمَا كَانُوا۟
இருந்ததற்காக
yaksibūna
يَكْسِبُونَ
செய்வார்கள்
(இம்மையில்) அவர்கள் வெகு குறைவாகவே சிரிக்கவும். ஏனென்றால், அவர்கள் செய்து கொண்டிருந்த (தீய) செயலுக்குப் பிரதிபலனாக (மறுமையில்) அதிகமாகவே அழவேண்டிய (திருக்கின்ற)து! ([௯] ஸூரத்துத் தவ்பா: ௮௨)
Tafseer
௮௩

فَاِنْ رَّجَعَكَ اللّٰهُ اِلٰى طَاۤىِٕفَةٍ مِّنْهُمْ فَاسْتَأْذَنُوْكَ لِلْخُرُوْجِ فَقُلْ لَّنْ تَخْرُجُوْا مَعِيَ اَبَدًا وَّلَنْ تُقَاتِلُوْا مَعِيَ عَدُوًّاۗ اِنَّكُمْ رَضِيْتُمْ بِالْقُعُوْدِ اَوَّلَ مَرَّةٍۗ فَاقْعُدُوْا مَعَ الْخَالِفِيْنَ ٨٣

fa-in rajaʿaka
فَإِن رَّجَعَكَ
திருப்பினால்/உம்மை
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ilā ṭāifatin
إِلَىٰ طَآئِفَةٍ
ஒரு கூட்டத்திடம்
min'hum
مِّنْهُمْ
அவர்களில்
fa-is'tadhanūka
فَٱسْتَـْٔذَنُوكَ
அனுமதி கோரினால்/உம்மிடம்
lil'khurūji
لِلْخُرُوجِ
வெளியேறுவதற்கு
faqul
فَقُل
கூறுவீராக
lan takhrujū
لَّن تَخْرُجُوا۟
அறவே புறப்படாதீர்கள்
maʿiya
مَعِىَ
என்னுடன்
abadan
أَبَدًا
ஒருபோதும்
walan tuqātilū
وَلَن تُقَٰتِلُوا۟
இன்னும் அறவே போரிடாதீர்கள்
maʿiya
مَعِىَ
என்னுடன்
ʿaduwwan
عَدُوًّاۖ
ஒரு எதிரியிடம்
innakum
إِنَّكُمْ
நிச்சயமாக நீங்கள்
raḍītum
رَضِيتُم
விரும்பினீர்கள்
bil-quʿūdi
بِٱلْقُعُودِ
உட்கார்ந்து விடுவதை
awwala marratin
أَوَّلَ مَرَّةٍ
முதல் முறை
fa-uq'ʿudū
فَٱقْعُدُوا۟
ஆகவே உட்கார்ந்து விடுங்கள்
maʿa l-khālifīna
مَعَ ٱلْخَٰلِفِينَ
பின் தங்கி விடுபவர்களுடன்
(நபியே!) நீங்கள் (போரில் வெற்றி பெற்றவராக) அவர்களில் ஒரு கூட்டத்தாரிடம் திரும்ப வரும்படி அல்லாஹ் செய்து (உங்களது வெற்றியையும், நீங்கள் கொண்டு வந்த பொருள்களையும் அவர்கள் கண்டு, உங்களுடன் மற்றொரு போருக்குப்) புறப்பட உங்களிடம் அனுமதி கோரினால் (அவர்களை நோக்கி) "நீங்கள் (போருக்கு) ஒருக்காலத்திலும் என்னுடன் புறப்படவேண்டாம். என்னுடன் சேர்ந்து எந்த எதிரியுடனும் நீங்கள் போர்புரிய வேண்டாம். ஏனென்றால், நிச்சயமாக நீங்கள் முதன் முறையில் (வீட்டில்) தங்கிவிடுவதையே விரும்பினீர்கள். ஆதலால் (இப்பொழுதும்) நீங்கள் (வீட்டில்) தங்கிவிடுபவர்களுடன் இருந்து விடுங்கள்" என்று நபியே! நீங்கள் கூறுங்கள். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௮௩)
Tafseer
௮௪

وَلَا تُصَلِّ عَلٰٓى اَحَدٍ مِّنْهُمْ مَّاتَ اَبَدًا وَّلَا تَقُمْ عَلٰى قَبْرِهٖۗ اِنَّهُمْ كَفَرُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَمَاتُوْا وَهُمْ فٰسِقُوْنَ ٨٤

walā tuṣalli
وَلَا تُصَلِّ
தொழாதீர்
ʿalā
عَلَىٰٓ
மீது
aḥadin
أَحَدٍ
ஒருவர்
min'hum
مِّنْهُم
அவர்களில்
māta
مَّاتَ
இறந்தார்
abadan
أَبَدًا
ஒருபோதும்
walā taqum
وَلَا تَقُمْ
நிற்காதீர்
ʿalā
عَلَىٰ
அருகில்
qabrihi innahum
قَبْرِهِۦٓۖ إِنَّهُمْ
அவருடைய புதைகுழிக்கு/நிச்சயமாக அவர்கள்
kafarū
كَفَرُوا۟
நிராகரித்தனர்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வை
warasūlihi
وَرَسُولِهِۦ
இன்னும் அவனுடைய தூதரை
wamātū
وَمَاتُوا۟
இன்னும் இறந்தனர்
wahum fāsiqūna
وَهُمْ فَٰسِقُونَ
அவர்களோ/பாவிகள்
அன்றி, அவர்களில் எவர் இறந்துவிட்டாலும் அவர்கள் மீது ஒருபோதும் (ஜனாஸா) தொழுகையும் தொழாதீர்கள். அவர்களுடைய கப்ரில் (அவர்களுக்காக மன்னிப்புக்கோரி) நிற்காதீர்கள். ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்துவிட்டதுடன் பாவிகளாகவே இறந்தும் இருக்கின்றனர். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௮௪)
Tafseer
௮௫

وَلَا تُعْجِبْكَ اَمْوَالُهُمْ وَاَوْلَادُهُمْۗ اِنَّمَا يُرِيْدُ اللّٰهُ اَنْ يُّعَذِّبَهُمْ بِهَا فِى الدُّنْيَا وَتَزْهَقَ اَنْفُسُهُمْ وَهُمْ كٰفِرُوْنَ ٨٥

walā tuʿ'jib'ka
وَلَا تُعْجِبْكَ
ஆச்சரியப்படுத்த வேண்டாம்/உம்மை
amwāluhum
أَمْوَٰلُهُمْ
செல்வங்கள்/அவர்களுடைய
wa-awlāduhum
وَأَوْلَٰدُهُمْۚ
இன்னும் பிள்ளைகள்/அவர்களுடைய
innamā yurīdu
إِنَّمَا يُرِيدُ
நாடுவதெல்லாம்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
an yuʿadhibahum
أَن يُعَذِّبَهُم
வேதனை செய்வதற்கு/அவர்களை
bihā
بِهَا
அவற்றின் மூலம்
fī l-dun'yā
فِى ٱلدُّنْيَا
உலகில்
watazhaqa
وَتَزْهَقَ
இன்னும் பிரிவதற்கு, அழிவதற்கு
anfusuhum
أَنفُسُهُمْ
அவர்களுடைய உயிர்கள்
wahum
وَهُمْ
அவர்கள் இருக்க
kāfirūna
كَٰفِرُونَ
நிராகரித்தவர்களாக
அவர்களுடைய செல்வங்களும் அவர்களுடைய சந்ததிகளும் (அதிகரித்திருப்பது) உங்களை ஆச்சரியப்படுத்த வேண்டாம். (ஏனென்றால்) அவற்றைக்கொண்டு இவ்வுலகிலேயே அவர்களைத் துன்புறுத்துவதையும், அவர்கள் (கர்வம்கொண்டு) நிராகரித்த வண்ணமே அவர்களின் உயிர் போவதையும் அல்லாஹ் விரும்புகிறான். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௮௫)
Tafseer
௮௬

وَاِذَآ اُنْزِلَتْ سُوْرَةٌ اَنْ اٰمِنُوْا بِاللّٰهِ وَجَاهِدُوْا مَعَ رَسُوْلِهِ اسْتَأْذَنَكَ اُولُوا الطَّوْلِ مِنْهُمْ وَقَالُوْا ذَرْنَا نَكُنْ مَّعَ الْقٰعِدِيْنَ ٨٦

wa-idhā unzilat
وَإِذَآ أُنزِلَتْ
இறக்கப்பட்டால்
sūratun
سُورَةٌ
ஓர் அத்தியாயம்
an āminū
أَنْ ءَامِنُوا۟
என்று/நம்பிக்கை கொள்ளுங்கள்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வை
wajāhidū
وَجَٰهِدُوا۟
இன்னும் போரிடுங்கள்
maʿa
مَعَ
உடன்
rasūlihi
رَسُولِهِ
அவனுடயை தூதர்
is'tadhanaka
ٱسْتَـْٔذَنَكَ
அனுமதி கோரினார்(கள்) /உம்மிடம்
ulū l-ṭawli
أُو۟لُوا۟ ٱلطَّوْلِ
செல்வந்தர்கள்
min'hum
مِنْهُمْ
அவர்களில்
waqālū
وَقَالُوا۟
இன்னும் கூறுகின்றனர்
dharnā
ذَرْنَا
விட்டுவிடுவீராக/எங்களை
nakun
نَكُن
இருக்கிறோம்
maʿa
مَّعَ
உடன்
l-qāʿidīna
ٱلْقَٰعِدِينَ
உட்கார்ந்தவர்கள்
அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு, அவனுடைய தூதருடன் சேர்ந்து போர் புரியுமாறு யாதொரு அத்தியாயம் இறக்கப்பட்டால், அவர்களிலுள்ள பணக்காரர்கள் (போர் புரிய வராதிருக்க) உங்களிடம் அனுமதிகோரி "எங்களை விட்டுவிடுங்கள்; (வீட்டில்) தங்கி இருப்பவர்களுடன் நாங்களும் தங்கிவிடுகின்றோம்" என்று கூறுகின்றனர். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௮௬)
Tafseer
௮௭

رَضُوْا بِاَنْ يَّكُوْنُوْا مَعَ الْخَوَالِفِ وَطُبِعَ عَلٰى قُلُوْبِهِمْ فَهُمْ لَا يَفْقَهُوْنَ ٨٧

raḍū
رَضُوا۟
திருப்தியடைந்தனர்
bi-an yakūnū
بِأَن يَكُونُوا۟
அவர்கள் ஆகிவிடுவதைக் கொண்டு
maʿa l-khawālifi
مَعَ ٱلْخَوَالِفِ
பின்தங்கிய பெண்களுடன்
waṭubiʿa
وَطُبِعَ
முத்திரையிடப்பட்டது
ʿalā
عَلَىٰ
மீது
qulūbihim
قُلُوبِهِمْ
அவர்களுடைய உள்ளங்கள்
fahum lā yafqahūna
فَهُمْ لَا يَفْقَهُونَ
ஆகவே அவர்கள்/சிந்தித்து விளங்கமாட்டார்கள்
(சிறியோர், முதியோர், பெண்கள் போன்ற போருக்கு வரமுடியாமல் வீட்டில்) தங்கிவிடுபவர்களுடன் தாங்களும் இருந்து விடவே விரும்புகின்றனர். அவர்களுடைய உள்ளங்கள் முத்திரையிடப்பட்டுவிட்டன. (ஆதலால் இதிலுள்ள இழிவை) அவர்கள் உணர்ந்து கொள்ளமாட்டார்கள். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௮௭)
Tafseer
௮௮

لٰكِنِ الرَّسُوْلُ وَالَّذِيْنَ اٰمَنُوْا مَعَهٗ جَاهَدُوْا بِاَمْوَالِهِمْ وَاَنْفُسِهِمْۗ وَاُولٰۤىِٕكَ لَهُمُ الْخَيْرٰتُ ۖوَاُولٰۤىِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ ٨٨

lākini
لَٰكِنِ
எனினும்
l-rasūlu
ٱلرَّسُولُ
தூதர்
wa-alladhīna
وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
āmanū
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
maʿahu
مَعَهُۥ
அவருடன்
jāhadū
جَٰهَدُوا۟
போரிட்டனர்
bi-amwālihim
بِأَمْوَٰلِهِمْ
தங்கள் செல்வங்களாலும்
wa-anfusihim
وَأَنفُسِهِمْۚ
இன்னும் தங்கள் உயிர்களாலும்
wa-ulāika lahumu
وَأُو۟لَٰٓئِكَ لَهُمُ
அவர்களுக்குத்தான்
l-khayrātu
ٱلْخَيْرَٰتُۖ
நன்மைகள்
wa-ulāika humu
وَأُو۟لَٰٓئِكَ هُمُ
இன்னும் அவர்கள்தான்
l-muf'liḥūna
ٱلْمُفْلِحُونَ
வெற்றியாளர்கள்
எனினும் (அல்லாஹ்வுடைய) தூதரும், அவருடனுள்ள நம்பிக்கையாளர்களும் தங்கள் பொருள்களையும் உயிர்களையும் தியாகம் செய்து போர் புரிவார்கள். (இம்மை, மறுமையின்) நன்மைகள் அனைத்தும் இவர்களுக்கு உரியதே. நிச்சயமாக இவர்கள்தான் வெற்றியடைவார்கள். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௮௮)
Tafseer
௮௯

اَعَدَّ اللّٰهُ لَهُمْ جَنّٰتٍ تَجْرِيْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَاۗ ذٰلِكَ الْفَوْزُ الْعَظِيْمُ ࣖ ٨٩

aʿadda
أَعَدَّ
ஏற்படுத்தினான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
lahum
لَهُمْ
அவர்களுக்காக
jannātin
جَنَّٰتٍ
சொர்க்கங்களை
tajrī
تَجْرِى
ஓடும்
min taḥtihā
مِن تَحْتِهَا
அவற்றின் கீழ்
l-anhāru
ٱلْأَنْهَٰرُ
நதிகள்
khālidīna
خَٰلِدِينَ
நிரந்தரமானவர்கள்
fīhā
فِيهَاۚ
அவற்றில்
dhālika
ذَٰلِكَ
அதுதான்
l-fawzu
ٱلْفَوْزُ
வெற்றி
l-ʿaẓīmu
ٱلْعَظِيمُ
மகத்தானது
அல்லாஹ், அவர்களுக்காக சுவனபதிகளை தயார்செய்து வைத்திருக்கின்றான். அவற்றில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக் கொண்டேயிருக்கும். அவற்றில் அவர்கள் (என்றென்றும்) தங்கி விடுவார்கள். இதுவோ மாபெரும் பாக்கியமாகும். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௮௯)
Tafseer
௯௦

وَجَاۤءَ الْمُعَذِّرُوْنَ مِنَ الْاَعْرَابِ لِيُؤْذَنَ لَهُمْ وَقَعَدَ الَّذِيْنَ كَذَبُوا اللّٰهَ وَرَسُوْلَهٗ ۗسَيُصِيْبُ الَّذِيْنَ كَفَرُوْا مِنْهُمْ عَذَابٌ اَلِيْمٌ ٩٠

wajāa
وَجَآءَ
இன்னும் வந்தார்(கள்)
l-muʿadhirūna
ٱلْمُعَذِّرُونَ
புகல் கூறுபவர்கள்
mina l-aʿrābi
مِنَ ٱلْأَعْرَابِ
கிராமவாசிகளில்
liyu'dhana
لِيُؤْذَنَ
அனுமதி அளிக்கப்படுவதற்கு
lahum
لَهُمْ
தங்களுக்கு
waqaʿada
وَقَعَدَ
இன்னும் உட்கார்ந்தார்(கள்)
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
kadhabū
كَذَبُوا۟
பொய்யுரைத்தனர்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்விடம்
warasūlahu
وَرَسُولَهُۥۚ
இன்னும் அவனுடைய தூதர்
sayuṣību
سَيُصِيبُ
அடையும்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
kafarū
كَفَرُوا۟
நிராகரித்தனர்
min'hum
مِنْهُمْ
இவர்களில்
ʿadhābun
عَذَابٌ
வேதனை
alīmun
أَلِيمٌ
துன்புறுத்தும்
கிராமத்து அரபிகளில் சிலர், (போருக்குச் செல்லாதிருக்க) அனுமதி கோரி (உங்களிடம்) வந்து புகல் கூறுகின்றனர். எனினும், அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் பொய்யாக்கியவர்களோ (அனுமதி கோராமலேயே வீட்டில்) உட்கார்ந்து கொண்டனர். ஆகவே, இவர்களிலுள்ள (இந்)நிராகரிப்பவர்களை அதிசீக்கிரத்தில் மிகத் துன்புறுத்தும் வேதனை வந்தடையும். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௯௦)
Tafseer