Skip to content

ஸூரா ஸூரத்துத் தவ்பா - Page: 3

At-Tawbah

(at-Tawbah)

௨௧

يُبَشِّرُهُمْ رَبُّهُمْ بِرَحْمَةٍ مِّنْهُ وَرِضْوَانٍ وَّجَنّٰتٍ لَّهُمْ فِيْهَا نَعِيْمٌ مُّقِيْمٌۙ ٢١

yubashiruhum
يُبَشِّرُهُمْ
நற்செய்தி கூறுகிறான்/அவர்களுக்கு
rabbuhum
رَبُّهُم
அவர்களுடைய இறைவன்
biraḥmatin
بِرَحْمَةٍ
கருணையைக்கொண்டு
min'hu
مِّنْهُ
தன்னிடமிருந்து
wariḍ'wānin
وَرِضْوَٰنٍ
இன்னும் பொருத்தம், மகிழ்ச்சி
wajannātin
وَجَنَّٰتٍ
இன்னும் சொர்க்கங்கள்
lahum
لَّهُمْ
அவர்களுக்கு
fīhā
فِيهَا
அவற்றில்
naʿīmun muqīmun
نَعِيمٌ مُّقِيمٌ
இன்பம்/நிலையானது
அவர்களுக்கு அவர்களுடைய இறைவன் தன்னுடைய அன்பையும், திருப்பொருத்தத்தையும் அளித்து சுவனபதிகளையும் தருவதாக நற்செய்தி கூறுகின்றான். அவர்களுக்கு அ(ச்சுவனப)தி (களி)ல் என்றென்றும் நிலையான சுகபோகங்கள் உண்டு. ([௯] ஸூரத்துத் தவ்பா: ௨௧)
Tafseer
௨௨

خٰلِدِيْنَ فِيْهَآ اَبَدًا ۗاِنَّ اللّٰهَ عِنْدَهٗٓ اَجْرٌ عَظِيْمٌ ٢٢

khālidīna
خَٰلِدِينَ
நிரந்தரமானவர்கள்
fīhā
فِيهَآ
அவற்றில்
abadan
أَبَدًاۚ
எப்போதும்
inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
ʿindahu
عِندَهُۥٓ
அவனிடம்
ajrun
أَجْرٌ
கூலி
ʿaẓīmun
عَظِيمٌ
மகத்தானது
என்றென்றும் அவற்றில் அவர்கள் நிலை பெற்றிருப்பார்கள். (இதனை அன்றி) அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக (அவர்களுக்கு இன்னும்) மகத்தான கூலி உண்டு. ([௯] ஸூரத்துத் தவ்பா: ௨௨)
Tafseer
௨௩

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَتَّخِذُوْٓا اٰبَاۤءَكُمْ وَاِخْوَانَكُمْ اَوْلِيَاۤءَ اِنِ اسْتَحَبُّوا الْكُفْرَ عَلَى الْاِيْمَانِۗ وَمَنْ يَّتَوَلَّهُمْ مِّنْكُمْ فَاُولٰۤىِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ ٢٣

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்களே
lā tattakhidhū
لَا تَتَّخِذُوٓا۟
எடுத்துக் கொள்ளாதீர்கள்
ābāakum
ءَابَآءَكُمْ
உங்கள் தாய் தந்தைகளை
wa-ikh'wānakum
وَإِخْوَٰنَكُمْ
இன்னும் உங்கள் சகோதரர்களை
awliyāa
أَوْلِيَآءَ
பொறுப்பாளர்களாக
ini is'taḥabbū
إِنِ ٱسْتَحَبُّوا۟
அவர்கள் விரும்பினால்
l-kuf'ra
ٱلْكُفْرَ
நிராகரிப்பை
ʿalā l-īmāni
عَلَى ٱلْإِيمَٰنِۚ
விட/இறைநம்பிக்கை
waman
وَمَن
எவர்(கள்)
yatawallahum
يَتَوَلَّهُم
பொறுப்பாளர்களாக ஆக்கிக்கொள்வார்(கள்)/அவர்களை
minkum
مِّنكُمْ
உங்களில்
fa-ulāika humu
فَأُو۟لَٰٓئِكَ هُمُ
அவர்கள்தான்
l-ẓālimūna
ٱلظَّٰلِمُونَ
அநியாயக்காரர்கள்
நம்பிக்கையாளர்களே! உங்களுடைய தந்தைகளும், சகோதரர்களும் நம்பிக்கையை விட்டு நிராகரிப்பை விரும்பினால், நீங்கள் அவர்களை (உங்கள்) பாதுகாப்பாளர்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம். உங்களில் எவரேனும் அவர்களை பாதுகாப்பாளர்களாக எடுத்துக்கொண்டால் நிச்சயமாக அவர்கள் வரம்பு மீறியவர்கள். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௨௩)
Tafseer
௨௪

قُلْ اِنْ كَانَ اٰبَاۤؤُكُمْ وَاَبْنَاۤؤُكُمْ وَاِخْوَانُكُمْ وَاَزْوَاجُكُمْ وَعَشِيْرَتُكُمْ وَاَمْوَالُ ِۨاقْتَرَفْتُمُوْهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَمَسٰكِنُ تَرْضَوْنَهَآ اَحَبَّ اِلَيْكُمْ مِّنَ اللّٰهِ وَرَسُوْلِهٖ وَجِهَادٍ فِيْ سَبِيْلِهٖ فَتَرَبَّصُوْا حَتّٰى يَأْتِيَ اللّٰهُ بِاَمْرِهٖۗ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الْفٰسِقِيْنَ ࣖ ٢٤

qul
قُلْ
கூறுவீராக
in kāna
إِن كَانَ
இருந்தால்
ābāukum
ءَابَآؤُكُمْ
உங்கள் பெற்றோர்
wa-abnāukum
وَأَبْنَآؤُكُمْ
இன்னும் பிள்ளைகள்/உங்கள்
wa-ikh'wānukum
وَإِخْوَٰنُكُمْ
இன்னும் உங்கள் சகோதரர்கள்
wa-azwājukum
وَأَزْوَٰجُكُمْ
இன்னும் உங்கள் மனைவிகள்
waʿashīratukum
وَعَشِيرَتُكُمْ
இன்னும் உங்கள் குடும்பம்
wa-amwālun
وَأَمْوَٰلٌ
இன்னும் செல்வங்கள்
iq'taraftumūhā
ٱقْتَرَفْتُمُوهَا
சம்பாதித்தீர்கள்/அவற்றை
watijāratun
وَتِجَٰرَةٌ
இன்னும் வர்த்தகம்
takhshawna
تَخْشَوْنَ
பயப்படுகிறீர்கள்
kasādahā
كَسَادَهَا
அது மந்தமாகி விடுவதை
wamasākinu
وَمَسَٰكِنُ
இன்னும் வீடுகள்
tarḍawnahā
تَرْضَوْنَهَآ
நீங்கள் விரும்புகிறீர்கள்/அவற்றை
aḥabba
أَحَبَّ
மிக விருப்பமாக
ilaykum
إِلَيْكُم
உங்களுக்கு
mina l-lahi
مِّنَ ٱللَّهِ
அல்லாஹ்விடமிருந்து
warasūlihi
وَرَسُولِهِۦ
இன்னும் அவனுடைய தூதர்
wajihādin
وَجِهَادٍ
இன்னும் போரிடுவது
fī sabīlihi
فِى سَبِيلِهِۦ
அவனுடைய பாதையில்
fatarabbaṣū
فَتَرَبَّصُوا۟
எதிர்பாருங்கள்
ḥattā yatiya
حَتَّىٰ يَأْتِىَ
வரை/வருவான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
bi-amrihi
بِأَمْرِهِۦۗ
தன் கட்டளையைக் கொண்டு
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
lā yahdī
لَا يَهْدِى
நேர்வழி செலுத்த மாட்டான்
l-qawma l-fāsiqīna
ٱلْقَوْمَ ٱلْفَٰسِقِينَ
மக்களை/பாவிகள்
(நபியே! நம்பிக்கையாளர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: உங்களுடைய தந்தைகளும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிகளும், உங்களுடைய குடும்பங்களும், நீங்கள் சம்பாதித்து வைத்திருக்கும் (உங்கள்) பொருள்களும், நஷ்டமாகிவிடுமோ என நீங்கள் பயந்து (மிக எச்சரிக்கையுடன்) செய்து வரும் வர்த்தகமும், உங்களுக்கு மிக்க விருப்பமுள்ள (உங்கள்) வீடுகளும் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் விடவும், அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிவதைவிடவும் உங்களுக்கு மிக விருப்பமானவைகளாக இருந்தால் (நீங்கள் உண்மை நம்பிக்கையாளர்களல்ல. நீங்கள் அடைய வேண்டிய தண்டனையைப் பற்றிய) அல்லாஹ்வுடைய கட்டளை வரும் வரையில் நீங்கள் எதிர்ப்பார்த்திருங்கள். (உங்களைப் போன்ற) பாவிகளை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துவதில்லை. ([௯] ஸூரத்துத் தவ்பா: ௨௪)
Tafseer
௨௫

لَقَدْ نَصَرَكُمُ اللّٰهُ فِيْ مَوَاطِنَ كَثِيْرَةٍۙ وَّيَوْمَ حُنَيْنٍۙ اِذْ اَعْجَبَتْكُمْ كَثْرَتُكُمْ فَلَمْ تُغْنِ عَنْكُمْ شَيْـًٔا وَّضَاقَتْ عَلَيْكُمُ الْاَرْضُ بِمَا رَحُبَتْ ثُمَّ وَلَّيْتُمْ مُّدْبِرِيْنَۚ ٢٥

laqad
لَقَدْ
திட்டவட்டமாக
naṣarakumu
نَصَرَكُمُ
உதவினான் உங்களுக்கு
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
fī mawāṭina
فِى مَوَاطِنَ
போர்க்களங்களில்
kathīratin
كَثِيرَةٍۙ
அதிகமான
wayawma
وَيَوْمَ
இன்னும் அன்று
ḥunaynin
حُنَيْنٍۙ
ஹுனைன்
idh aʿjabatkum
إِذْ أَعْجَبَتْكُمْ
போது/பெருமைப்படுத்தியது/உங்களை
kathratukum
كَثْرَتُكُمْ
நீங்கள் அதிகமாக இருப்பது
falam tugh'ni
فَلَمْ تُغْنِ
பலன் தரவில்லை
ʿankum shayan
عَنكُمْ شَيْـًٔا
உங்களுக்கு/எதையும்
waḍāqat
وَضَاقَتْ
இன்னும் நெருக்கடியாகி விட்டது
ʿalaykumu
عَلَيْكُمُ
உங்கள் மீது
l-arḍu
ٱلْأَرْضُ
பூமி
bimā raḥubat
بِمَا رَحُبَتْ
அது விசாலமாக இருந்தும்
thumma
ثُمَّ
பிறகு
wallaytum
وَلَّيْتُم
திரும்பினீர்கள்
mud'birīna
مُّدْبِرِينَ
புறமுதுகு காட்டியவர்களாக
பல (போர்க்) களங்களில் (உங்கள் தொகைக் குறைவாயிருந்தும்) நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்திருக்கின்றான். எனினும், ஹுனைன் போர் அன்று உங்களை பெருமையில் ஆழ்த்திக் கொண்டிருந்த உங்களுடைய அதிகமான (மக்கள்) தொகை உங்களுக்கு யாதொரு பலனும் அளிக்கவில்லை. பூமி இவ்வளவு விசாலமாக இருந்தும் (அதுசமயம் அது) உங்களுக்கு மிக நெருக்கமாகிவிட்டது. அன்றி, நீங்கள் புறங்காட்டி ஓடவும் தலைப்பட்டீர்கள். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௨௫)
Tafseer
௨௬

ثُمَّ اَنْزَلَ اللّٰهُ سَكِيْنَتَهٗ عَلٰى رَسُوْلِهٖ وَعَلَى الْمُؤْمِنِيْنَ وَاَنْزَلَ جُنُوْدًا لَّمْ تَرَوْهَا وَعَذَّبَ الَّذِيْنَ كَفَرُوْاۗ وَذٰلِكَ جَزَاۤءُ الْكٰفِرِيْنَ ٢٦

thumma anzala
ثُمَّ أَنزَلَ
பிறகு/இறக்கினான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
sakīnatahu
سَكِينَتَهُۥ
தன் அமைதியை
ʿalā rasūlihi
عَلَىٰ رَسُولِهِۦ
தன் தூதர் மீது
waʿalā l-mu'minīna
وَعَلَى ٱلْمُؤْمِنِينَ
இன்னும் மீது/நம்பிக்கை கொண்டவர்கள்
wa-anzala
وَأَنزَلَ
இன்னும் இறக்கினான்
junūdan
جُنُودًا
(சில) படைகளை
lam tarawhā
لَّمْ تَرَوْهَا
நீங்கள் பார்க்கவில்லை/அவற்றை
waʿadhaba
وَعَذَّبَ
இன்னும் வேதனை செய்தான்
alladhīna
ٱلَّذِينَ
எவர்களை
kafarū
كَفَرُوا۟ۚ
நிராகரித்தனர்
wadhālika jazāu
وَذَٰلِكَ جَزَآءُ
இன்னும் இதுதான் கூலி
l-kāfirīna
ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பவர்களின்
(இதன்) பின்னர், அல்லாஹ் தன்னுடைய தூதர் மீதும், நம்பிக்கையாளர்கள் மீதும் தன்னுடைய அமைதியை அளித்து அருள்புரிந்தான். உங்கள் கண்ணுக்குத் தெரியாத ஒரு படையையும் (உங்களுக்கு உதவியாக) இறக்கி வைத்து நிராகரிப்பவர்களை வேதனை செய்தான். இதுதான் நிராகரிப்பவர்களுக்குரிய கூலியாகும். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௨௬)
Tafseer
௨௭

ثُمَّ يَتُوْبُ اللّٰهُ مِنْۢ بَعْدِ ذٰلِكَ عَلٰى مَنْ يَّشَاۤءُۗ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ ٢٧

thumma
ثُمَّ
பிறகு
yatūbu
يَتُوبُ
பிழை பொறுப்பான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
min baʿdi
مِنۢ بَعْدِ
பின்னர்
dhālika
ذَٰلِكَ
அதற்கு
ʿalā
عَلَىٰ
மீது
man
مَن
எவர்
yashāu
يَشَآءُۗ
நாடுகிறான்
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
ghafūrun
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
raḥīmun
رَّحِيمٌ
பெரும் கருணையாளன்
இதன் பின்னரும் (அவர்கள் பாவமன்னிப்புக் கோரினால் அவர்களில்) அல்லாஹ் விரும்பியவர்களை அங்கீகரித்துக் கொள்கின்றான். அல்லாஹ் மிக மன்னிப்பவனும் நிகரற்ற அன்புடையவனாகவும் இருக்கின்றான். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௨௭)
Tafseer
௨௮

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْٓا اِنَّمَا الْمُشْرِكُوْنَ نَجَسٌ فَلَا يَقْرَبُوا الْمَسْجِدَ الْحَرَامَ بَعْدَ عَامِهِمْ هٰذَا ۚوَاِنْ خِفْتُمْ عَيْلَةً فَسَوْفَ يُغْنِيْكُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖٓ اِنْ شَاۤءَۗ اِنَّ اللّٰهَ عَلِيْمٌ حَكِيْمٌ ٢٨

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟
நம்பிக்கையாளர்களே!
innamā
إِنَّمَا
எல்லாம்
l-mush'rikūna
ٱلْمُشْرِكُونَ
இணைவைப்பவர்கள்
najasun
نَجَسٌ
அசுத்தமானவர்கள்
falā yaqrabū
فَلَا يَقْرَبُوا۟
நெருங்கக் கூடாது
l-masjida
ٱلْمَسْجِدَ
மஸ்ஜிதை
l-ḥarāma
ٱلْحَرَامَ
புனிதமானது
baʿda
بَعْدَ
பின்னர்
ʿāmihim hādhā
عَامِهِمْ هَٰذَاۚ
அவர்களுடைய ஆண்டு/இந்த
wa-in khif'tum
وَإِنْ خِفْتُمْ
நீங்கள் பயந்தால்
ʿaylatan
عَيْلَةً
வறுமையை
fasawfa yugh'nīkumu
فَسَوْفَ يُغْنِيكُمُ
நிறைவாக்குவான்/உங்களை
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
min faḍlihi
مِن فَضْلِهِۦٓ
தனது அருளினால்
in shāa
إِن شَآءَۚ
நாடினால்
inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
ʿalīmun
عَلِيمٌ
நன்கறிந்தவன்
ḥakīmun
حَكِيمٌ
ஞானவான்
நம்பிக்கையாளர்களே! நிச்சயமாக இணைவைத்து வணங்குபவர்கள் அசுத்தமானவர்களே. ஆகவே, அவர்கள் இவ்வருடத்திற்குப் பின்னர் இனி சிறப்புற்ற இப்பள்ளியை நெருங்க வேண்டாம். (அவர்களைத் தடை செய்தால் அவர்களால் கிடைத்து வந்த செல்வம் நின்று உங்களுக்கு) வறுமை வந்து விடுமோ என்று நீங்கள் பயந்தால் (அதைப் பற்றி பாதகமில்லை.) அல்லாஹ் நாடினால், அதிசீக்கிரத்தில் தன் அருளைக்கொண்டு உங்களை செல்வந்தர்கள் ஆக்கி விடுவான் (என்பதை அறிந்துகொள்ளுங்கள்.) நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந்தவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௨௮)
Tafseer
௨௯

قَاتِلُوا الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَلَا بِالْيَوْمِ الْاٰخِرِ وَلَا يُحَرِّمُوْنَ مَا حَرَّمَ اللّٰهُ وَرَسُوْلُهٗ وَلَا يَدِيْنُوْنَ دِيْنَ الْحَقِّ مِنَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ حَتّٰى يُعْطُوا الْجِزْيَةَ عَنْ يَّدٍ وَّهُمْ صَاغِرُوْنَ ࣖ ٢٩

qātilū
قَٰتِلُوا۟
போர் புரியுங்கள்
alladhīna
ٱلَّذِينَ
எவர்களிடம்
lā yu'minūna
لَا يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வை
walā
وَلَا
இன்னும் இல்லை
bil-yawmi l-ākhiri
بِٱلْيَوْمِ ٱلْءَاخِرِ
மறுமை நாளை
walā yuḥarrimūna
وَلَا يُحَرِّمُونَ
இன்னும் தடை செய்ய மாட்டார்கள்
mā ḥarrama
مَا حَرَّمَ
எதை/தடை செய்தான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
warasūluhu
وَرَسُولُهُۥ
இன்னும் அவனுடைய தூதர்
walā yadīnūna
وَلَا يَدِينُونَ
மார்க்கமாக ஏற்க மாட்டார்கள்
dīna
دِينَ
மார்க்கத்தை
l-ḥaqi
ٱلْحَقِّ
உண்மை, சத்தியம்
mina
مِنَ
இருந்து
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
ūtū
أُوتُوا۟
கொடுக்கப்பட்டார்கள்
l-kitāba
ٱلْكِتَٰبَ
வேதம்
ḥattā
حَتَّىٰ
வரை
yuʿ'ṭū
يُعْطُوا۟
கொடுப்பார்கள்
l-jiz'yata
ٱلْجِزْيَةَ
வரியை (ஜிஸ்யா)
ʿan yadin
عَن يَدٍ
உடனே
wahum
وَهُمْ
அவர்கள் இருக்க
ṣāghirūna
صَٰغِرُونَ
பணிந்தவர்கள்
(நம்பிக்கையாளர்களே!) வேதம் அருளப்பட்டவர்களில் எவர்கள் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பிக்கை கொள்ளாமல், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் தடை செய்தவைகளை தடையாகக் கருதாமல், மேலும் இந்த சத்திய மார்க்கத்தைப் பின்பற்றாமலும் இருக்கின்றனரோ அவர்கள், (தங்கள்) கையால் பணிவுடன் "ஜிஸ்யா" (என்னும் கப்பம்) கட்டும் வரையில் நீங்கள் அவர்களுடன் போர் புரியுங்கள். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௨௯)
Tafseer
௩௦

وَقَالَتِ الْيَهُوْدُ عُزَيْرُ ِۨابْنُ اللّٰهِ وَقَالَتِ النَّصٰرَى الْمَسِيْحُ ابْنُ اللّٰهِ ۗذٰلِكَ قَوْلُهُمْ بِاَفْوَاهِهِمْۚ يُضَاهِـُٔوْنَ قَوْلَ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ قَبْلُ ۗقَاتَلَهُمُ اللّٰهُ ۚ اَنّٰى يُؤْفَكُوْنَ ٣٠

waqālati
وَقَالَتِ
கூறுகிறா(ர்க)ள்
l-yahūdu
ٱلْيَهُودُ
யூதர்கள்
ʿuzayrun
عُزَيْرٌ
உஜைர்
ub'nu
ٱبْنُ
மகன்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
waqālati
وَقَالَتِ
இன்னும் கூறுகிறா(ர்க)ள்
l-naṣārā
ٱلنَّصَٰرَى
கிறித்தவர்கள்
l-masīḥu
ٱلْمَسِيحُ
மஸீஹ்
ub'nu
ٱبْنُ
மகன்
l-lahi
ٱللَّهِۖ
அல்லாஹ்வுடைய
dhālika
ذَٰلِكَ
இது
qawluhum
قَوْلُهُم
அவர்களின் கூற்று
bi-afwāhihim
بِأَفْوَٰهِهِمْۖ
அவர்களின் வாய்களிலிருந்து
yuḍāhiūna
يُضَٰهِـُٔونَ
ஒப்பாகின்றனர்
qawla
قَوْلَ
கூற்றுக்கு
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
kafarū
كَفَرُوا۟
நிராகரித்தனர்
min qablu
مِن قَبْلُۚ
முன்னர்
qātalahumu
قَٰتَلَهُمُ
அவர்களை அழிப்பான்
l-lahu
ٱللَّهُۚ
அல்லாஹ்
annā
أَنَّىٰ
எப்படி
yu'fakūna
يُؤْفَكُونَ
திருப்பப்படுகின்றனர்
யூதர்கள் (நபி) "உஜைரை" அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகின்றனர். (இவ்வாறே) கிறிஸ்தவர்கள் "மஸீஹை" அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகின்றனர். இவர்கள் தங்கள் வாய்களால் கூறும் இக்கூற்றானது இவர்களுக்கு முன்னிருந்த நிராகரிப்பவர்களின் கூற்றையே ஒத்திருக்கின்றது. அல்லாஹ் இவர்களை அழித்து விடுவான். (சத்தியத்தைப் புறக்கணித்து) இவர்கள் எங்கு வெருண்டோடுகின்றனர்? ([௯] ஸூரத்துத் தவ்பா: ௩௦)
Tafseer