Skip to content

ஸூரா ஸூரத்துத் தவ்பா - Page: 10

At-Tawbah

(at-Tawbah)

௯௧

لَيْسَ عَلَى الضُّعَفَاۤءِ وَلَا عَلَى الْمَرْضٰى وَلَا عَلَى الَّذِيْنَ لَا يَجِدُوْنَ مَا يُنْفِقُوْنَ حَرَجٌ اِذَا نَصَحُوْا لِلّٰهِ وَرَسُوْلِهٖۗ مَا عَلَى الْمُحْسِنِيْنَ مِنْ سَبِيْلٍ ۗوَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌۙ ٩١

laysa
لَّيْسَ
இல்லை
ʿalā
عَلَى
மீது
l-ḍuʿafāi
ٱلضُّعَفَآءِ
பலவீனர்கள்
walā
وَلَا
இன்னும் இல்லை
ʿalā
عَلَى
மீது
l-marḍā
ٱلْمَرْضَىٰ
நோயாளிகள்
walā
وَلَا
இன்னும் இல்லை
ʿalā
عَلَى
மீது
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
lā yajidūna
لَا يَجِدُونَ
பெறமாட்டார்கள்
mā yunfiqūna
مَا يُنفِقُونَ
எதை/செலவழிப்பார்கள்
ḥarajun
حَرَجٌ
ஒரு சிரமம், குற்றம்
idhā naṣaḥū
إِذَا نَصَحُوا۟
நன்மையை நாடினால்
lillahi
لِلَّهِ
அல்லாஹ்வுக்கு
warasūlihi
وَرَسُولِهِۦۚ
இன்னும் அவனுடைய தூதருக்கு
mā ʿalā
مَا عَلَى
இல்லை/மீது
l-muḥ'sinīna
ٱلْمُحْسِنِينَ
நல்லறம் புரிவோர்
min sabīlin wal-lahu
مِن سَبِيلٍۚ وَٱللَّهُ
வழி ஏதும்/அல்லாஹ்
ghafūrun
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
raḥīmun
رَّحِيمٌ
பெரும் கருணையாளன்
பலவீனர்களும், நோயாளிகளும், போருக்குச் செலவு செய்யும் பொருளை அடையாதவர்களும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கலப்பற்ற நம்பிக்கையாளர்களாக இருந்தால் (அதுவே போதுமானது. அவர்கள் போருக்குச் செல்லாவிட்டாலும் அதனைப் பற்றி அவர்கள் மீது யாதொரு குற்றமுமில்லை.) இத்தகைய நல்லவர்கள் மீது (குற்றம் கூற) யாதொரு வழியும் இல்லை. அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையவனாகவும் இருக்கின்றான். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௯௧)
Tafseer
௯௨

وَّلَا عَلَى الَّذِيْنَ اِذَا مَآ اَتَوْكَ لِتَحْمِلَهُمْ قُلْتَ لَآ اَجِدُ مَآ اَحْمِلُكُمْ عَلَيْهِ ۖتَوَلَّوْا وَّاَعْيُنُهُمْ تَفِيْضُ مِنَ الدَّمْعِ حَزَنًا اَلَّا يَجِدُوْا مَا يُنْفِقُوْنَۗ ٩٢

walā
وَلَا
இன்னும் இல்லை
ʿalā
عَلَى
மீது
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
idhā mā atawka
إِذَا مَآ أَتَوْكَ
அவர்கள் வந்தால் உம்மிடம்
litaḥmilahum
لِتَحْمِلَهُمْ
நீர் ஏற்றுவதற்காக/அவர்களை
qul'ta
قُلْتَ
கூறினீர்
lā ajidu
لَآ أَجِدُ
நான்பெறவில்லையே
mā aḥmilukum
مَآ أَحْمِلُكُمْ
எதை/ஏற்றுவேன்/உங்களை
ʿalayhi
عَلَيْهِ
அதன் மீது
tawallaw
تَوَلَّوا۟
திரும்பினர்
wa-aʿyunuhum
وَّأَعْيُنُهُمْ
அவர்களுடைய கண்கள்
tafīḍu
تَفِيضُ
பொங்கி வழிகின்றன
mina l-damʿi
مِنَ ٱلدَّمْعِ
கண்ணீரால்
ḥazanan
حَزَنًا
கவலையினால்
allā yajidū
أَلَّا يَجِدُوا۟
பெறமாட்டார்கள் என்பதற்காக
mā yunfiqūna
مَا يُنفِقُونَ
எதை/செலவழிப்பார்கள்
(போருக்குரிய) வாகனத்தை நீங்கள் தருவீர்கள் என உங்களிடம் வந்தவர்களுக்கு "உங்களை ஏற்றிச் செல்லக்கூடிய வாகனம் என்னிடம் இல்லையே" என்று நீங்கள் கூறிய சமயத்தில், தங்களிடமும் செலவுக்குரிய பொருள் இல்லாதுபோன துக்கத்தினால் எவர்கள் தங்கள் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வடித்தவர்களாக (தம் இருப்பிடம்) திரும்பிச் சென்றார்களோ அவர்கள் மீதும் (போருக்குச் செல்லாததைப் பற்றி யாதொரு குற்றமுமில்லை.) ([௯] ஸூரத்துத் தவ்பா: ௯௨)
Tafseer
௯௩

اِنَّمَا السَّبِيْلُ عَلَى الَّذِيْنَ يَسْتَأْذِنُوْنَكَ وَهُمْ اَغْنِيَاۤءُۚ رَضُوْا بِاَنْ يَّكُوْنُوْا مَعَ الْخَوَالِفِۙ وَطَبَعَ اللّٰهُ عَلٰى قُلُوْبِهِمْ فَهُمْ لَا يَعْلَمُوْنَ ۔ ٩٣

innamā l-sabīlu
إِنَّمَا ٱلسَّبِيلُ
வழியெல்லாம்
ʿalā
عَلَى
மீதுதான்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
yastadhinūnaka
يَسْتَـْٔذِنُونَكَ
அனுமதி கோருகின்றனர்/உம்மிடம்
wahum
وَهُمْ
அவர்கள் இருக்க
aghniyāu
أَغْنِيَآءُۚ
செல்வந்தர்களாக
raḍū
رَضُوا۟
திருப்தியடைந்தனர்
bi-an yakūnū
بِأَن يَكُونُوا۟
அவர்கள் ஆகுவது கொண்டு
maʿa
مَعَ
உடன்
l-khawālifi
ٱلْخَوَالِفِ
பின்தங்கிய பெண்கள்
waṭabaʿa
وَطَبَعَ
இன்னும் முத்திரையிட்டான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ʿalā
عَلَىٰ
மீது
qulūbihim
قُلُوبِهِمْ
உள்ளங்கள்/அவர்களுடைய
fahum
فَهُمْ
ஆகவே, அவர்கள்
lā yaʿlamūna
لَا يَعْلَمُونَ
அறியமாட்டார்கள்
எனினும், எவர்கள் பணக்காரர்களாகவும் இருந்து (போருக்குச் செல்லாதிருக்க) உங்களிடம் அனுமதி கோரி (போருக்குச் செல்லாது வீட்டில்) தங்கிவிடுபவர்களுடன் தாங்களும் இருந்துவிட விரும்பினார்களோ அவர்கள் மீதுதான் குற்றம். இவர்களுடைய உள்ளங்களின் மீது அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். ஆகவே, அவர்கள் (இதனால் ஏற்படும் இழிவை) அறிந்து கொள்ள மாட்டார்கள். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௯௩)
Tafseer
௯௪

يَعْتَذِرُوْنَ اِلَيْكُمْ اِذَا رَجَعْتُمْ اِلَيْهِمْ ۗ قُلْ لَّا تَعْتَذِرُوْا لَنْ نُّؤْمِنَ لَكُمْ قَدْ نَبَّاَنَا اللّٰهُ مِنْ اَخْبَارِكُمْ وَسَيَرَى اللّٰهُ عَمَلَكُمْ وَرَسُوْلُهٗ ثُمَّ تُرَدُّوْنَ اِلٰى عٰلِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ٩٤

yaʿtadhirūna
يَعْتَذِرُونَ
புகல் கூறுவார்கள்
ilaykum
إِلَيْكُمْ
உங்களிடம்
idhā rajaʿtum
إِذَا رَجَعْتُمْ
நீங்கள் திரும்பினால்
ilayhim
إِلَيْهِمْۚ
அவர்களிடம்
qul
قُل
கூறுவீராக
lā taʿtadhirū
لَّا تَعْتَذِرُوا۟
புகல் கூறாதீர்கள்
lan nu'mina
لَن نُّؤْمِنَ
நாங்கள் நம்பமாட்டோம்
lakum
لَكُمْ
உங்களை
qad
قَدْ
அறிவித்து விட்டான்
nabba-anā
نَبَّأَنَا
அறிவித்து விட்டான் எங்களுக்கு
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
min
مِنْ
இருந்து (சில)
akhbārikum
أَخْبَارِكُمْۚ
உங்கள் செய்திகள்
wasayarā
وَسَيَرَى
இன்னும் பார்ப்பான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ʿamalakum
عَمَلَكُمْ
உங்கள் செயலை
warasūluhu
وَرَسُولُهُۥ
இன்னும் அவனுடைய தூதர்
thumma
ثُمَّ
பிறகு
turaddūna
تُرَدُّونَ
திருப்பப்படுவீர்கள்
ilā ʿālimi
إِلَىٰ عَٰلِمِ
அறிந்தவனிடம்
l-ghaybi
ٱلْغَيْبِ
மறைவை
wal-shahādati
وَٱلشَّهَٰدَةِ
இன்னும் வெளிப்படை
fayunabbi-ukum
فَيُنَبِّئُكُم
அறிவிப்பான்/உங்களுக்கு
bimā kuntum taʿmalūna
بِمَا كُنتُمْ تَعْمَلُونَ
எதை/இருந்தீர்கள்/செய்கிறீர்கள்
(நம்பிக்கையாளர்களே! போர் செய்து) நீங்கள் (வெற்றியோடும், சுகத்தோடும்) அவர்களிடம் திரும்பிய சமயத்தில், உங்களிடம் அவர்கள் (வந்து போருக்கு வராததைப் பற்றி மன்னிப்பைத்தேடி) புகல் கூறுகின்றனர். (அதற்கு அவர்களைநோக்கி நபியே!) நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் புகல் (சாக்குப்போக்கு) கூறாதீர்கள். நாங்கள் உங்களை நம்பவே மாட்டோம். உங்கள் (வஞ்சக) விஷயங்களை நிச்சயமாக அல்லாஹ் எங்களுக்கு அறிவித்து விட்டான். அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அதிசீக்கிரத்தில் உங்கள் செயலை அறிந்து கொள்வர். முடிவில், மறைவானதையும் வெளிப்படையானதையும் அறிந்தவனிடம் கொண்டு போகப்படுவீர்கள். நீங்கள் செய்து கொண்டிருந்தவைகளை அதுசமயம் அவனே உங்களுக்கு அறிவிப்பான். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௯௪)
Tafseer
௯௫

سَيَحْلِفُوْنَ بِاللّٰهِ لَكُمْ اِذَا انْقَلَبْتُمْ اِلَيْهِمْ لِتُعْرِضُوْا عَنْهُمْ ۗ فَاَعْرِضُوْا عَنْهُمْ ۗ اِنَّهُمْ رِجْسٌۙ وَّمَأْوٰىهُمْ جَهَنَّمُ جَزَاۤءً ۢبِمَا كَانُوْا يَكْسِبُوْنَ ٩٥

sayaḥlifūna
سَيَحْلِفُونَ
சத்தியமிடுவார்கள்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வின் மீது
lakum
لَكُمْ
உங்களிடம்
idhā inqalabtum
إِذَا ٱنقَلَبْتُمْ
நீங்கள் திரும்பினால்
ilayhim
إِلَيْهِمْ
அவர்களிடம்
lituʿ'riḍū
لِتُعْرِضُوا۟
நீங்கள் புறக்கணித்து விடுவதற்காக
ʿanhum
عَنْهُمْۖ
அவர்களை
fa-aʿriḍū
فَأَعْرِضُوا۟
ஆகவே புறக்கணித்து விடுங்கள்
ʿanhum
عَنْهُمْۖ
அவர்களை
innahum
إِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
rij'sun
رِجْسٌۖ
அசுத்தமானவர்கள்
wamawāhum
وَمَأْوَىٰهُمْ
இன்னும் தங்குமிடம்/அவர்களுடைய
jahannamu
جَهَنَّمُ
நரகம்தான்
jazāan
جَزَآءًۢ
கூலியாக
bimā
بِمَا
எதற்கு
kānū
كَانُوا۟
இருந்தனர்
yaksibūna
يَكْسِبُونَ
செய்கின்றனர்
(நம்பிக்கையாளர்களே! போரிலிருந்து வெற்றியுடன்) அவர்களிடம் நீங்கள் திரும்ப வந்தால், நீங்கள் அவர்களை(க் குற்றம் பிடிக்காது) புறக்கணித்து (விட்டு) விட, அவர்கள் அல்லாஹ்வின் மீது உங்களிடம் சத்தியம் செய்வார்கள். ஆகவே, நீங்களும் அவர்களை புறக்கணித்து (விட்டு) விடுங்கள். நிச்சயமாக அவர்கள் அசுத்தமானவர்கள். அவர்கள் செல்லுமிடம் நரகம்தான். (அதுவே) அவர்கள் செய்து கொண்டிருந்த (தீய) செயலுக்குரிய தண்டனையாகும். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௯௫)
Tafseer
௯௬

يَحْلِفُوْنَ لَكُمْ لِتَرْضَوْا عَنْهُمْ ۚفَاِنْ تَرْضَوْا عَنْهُمْ فَاِنَّ اللّٰهَ لَا يَرْضٰى عَنِ الْقَوْمِ الْفٰسِقِيْنَ ٩٦

yaḥlifūna
يَحْلِفُونَ
சத்தியமிடுகின்றனர்
lakum
لَكُمْ
உங்களிடம்
litarḍaw
لِتَرْضَوْا۟
நீங்கள் திருப்தியடைவதற்காக
ʿanhum
عَنْهُمْۖ
அவர்களைப் பற்றி
fa-in tarḍaw
فَإِن تَرْضَوْا۟
நீங்கள் திருப்தியடைந்தாலும்
ʿanhum
عَنْهُمْ
அவர்களைப் பற்றி
fa-inna l-laha
فَإِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
lā yarḍā
لَا يَرْضَىٰ
திருப்தியடைய மாட்டான்
ʿani l-qawmi
عَنِ ٱلْقَوْمِ
மக்களைப் பற்றி
l-fāsiqīna
ٱلْفَٰسِقِينَ
பாவிகளான
(நம்பிக்கையாளர்களே!) அவர்களைப் பற்றி நீங்கள் திருப்தி அடைவதற்காக அவர்கள் உங்களிடம் (இவ்வாறு பொய்) சத்தியம் செய்கின்றனர். அவர்களைப் பற்றி நீங்கள் திருப்தியடைந்த போதிலும் நிச்சயமாக அல்லாஹ் பாவிகளான இந்த மக்களைப் பற்றி திருப்தியடையவே மாட்டான். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௯௬)
Tafseer
௯௭

اَلْاَعْرَابُ اَشَدُّ كُفْرًا وَّنِفَاقًا وَّاَجْدَرُ اَلَّا يَعْلَمُوْا حُدُوْدَ مَآ اَنْزَلَ اللّٰهُ عَلٰى رَسُوْلِهٖ ۗوَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ ٩٧

al-aʿrābu
ٱلْأَعْرَابُ
கிராம அரபிகள்
ashaddu
أَشَدُّ
மிகக் கடுமையானவர்(கள்)
kuf'ran
كُفْرًا
நிராகரிப்பில்
wanifāqan
وَنِفَاقًا
இன்னும் நயவஞ்சகத்தில்
wa-ajdaru
وَأَجْدَرُ
இன்னும் மிகத் தகுதியானவர்(கள்)
allā yaʿlamū
أَلَّا يَعْلَمُوا۟
அவர்கள் அறியாமல் இருக்க
ḥudūda
حُدُودَ
சட்டங்களை
mā anzala
مَآ أَنزَلَ
எது/இறக்கினான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ʿalā
عَلَىٰ
மீது
rasūlihi
رَسُولِهِۦۗ
தன் தூதர்
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
ʿalīmun
عَلِيمٌ
நன்கறிந்தவன்
ḥakīmun
حَكِيمٌ
ஞானவான்
நிராகரிப்பிலும் வஞ்சகத்திலும் கிராமத்து அரபிகள் மிகக் கொடியவர்கள். அன்றி அல்லாஹ் தன் தூதர் மீது அருளியிருக்கும் (வேத) வரம்புகளை அறிந்து கொள்ளவும் வசதியற்றவர்கள். அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந்தவனும், மிக்க ஞானமுடைய வனாகவும் இருக்கின்றான். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௯௭)
Tafseer
௯௮

وَمِنَ الْاَعْرَابِ مَنْ يَّتَّخِذُ مَا يُنْفِقُ مَغْرَمًا وَّيَتَرَبَّصُ بِكُمُ الدَّوَاۤىِٕرَ ۗعَلَيْهِمْ دَاۤىِٕرَةُ السَّوْءِ ۗوَاللّٰهُ سَمِيْعٌ عَلِيْمٌ ٩٨

wamina
وَمِنَ
இன்னும் இருந்து
l-aʿrābi
ٱلْأَعْرَابِ
கிராம அரபிகள்
man
مَن
எவர்
yattakhidhu
يَتَّخِذُ
எடுத்துக் கொள்வார்
مَا
எதை
yunfiqu
يُنفِقُ
தர்மம் செய்கிறார்
maghraman
مَغْرَمًا
நஷ்டமாக
wayatarabbaṣu
وَيَتَرَبَّصُ
இன்னும் எதிர்பார்க்கின்றனர்
bikumu
بِكُمُ
உங்களுக்கு
l-dawāira
ٱلدَّوَآئِرَۚ
சுழற்சிகளை
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்கள் மீதுதான்
dāiratu
دَآئِرَةُ
சுழற்சி
l-sawi
ٱلسَّوْءِۗ
வேதனையின்
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
samīʿun
سَمِيعٌ
நன்கு செவியுறுபவன்
ʿalīmun
عَلِيمٌ
நன்கறிபவன்
(கல்வி ஞானமற்ற) கிராமத்து அரபிகளில் பலர் இருக்கின்றனர். அவர்கள் (தர்மத்திற்காகச்) செய்யும் செலவை நஷ்டம் என்று கருதி, நீங்கள் (காலச்) சக்கரத்தில் சிக்கி (கஷ்டத்திற்குள்ளாகி) விடுவதை எதிர்பார்க்கின்றனர். எனினும், அவர்கள் (தலை)மீதுதான் வேதனையின் சக்கரம் சுற்றிக்கொண்டு இருக்கிறது. அல்லாஹ் செவியுறுபவனும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௯௮)
Tafseer
௯௯

وَمِنَ الْاَعْرَابِ مَنْ يُّؤْمِنُ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَيَتَّخِذُ مَا يُنْفِقُ قُرُبٰتٍ عِنْدَ اللّٰهِ وَصَلَوٰتِ الرَّسُوْلِ ۗ اَلَآ اِنَّهَا قُرْبَةٌ لَّهُمْ ۗ سَيُدْخِلُهُمُ اللّٰهُ فِيْ رَحْمَتِهٖ ۗاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ ࣖ ٩٩

wamina
وَمِنَ
இன்னும் இருந்து
l-aʿrābi
ٱلْأَعْرَابِ
கிராம அரபிகளில்
man
مَن
எவர்
yu'minu
يُؤْمِنُ
நம்பிக்கைகொள்கிறார்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வை
wal-yawmi l-ākhiri
وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِ
இன்னும் இறுதி நாளை
wayattakhidhu mā
وَيَتَّخِذُ مَا
இன்னும் எடுத்துக் கொள்கிறார்கள்/எதை
yunfiqu
يُنفِقُ
தர்மம் புரிகிறார்(கள்)
qurubātin
قُرُبَٰتٍ
வணக்கங்களாக
ʿinda l-lahi
عِندَ ٱللَّهِ
அல்லாஹ்விடம்
waṣalawāti
وَصَلَوَٰتِ
இன்னும் பிரார்த்தனைகளாக
l-rasūli
ٱلرَّسُولِۚ
தூதரின்
alā
أَلَآ
அறிந்துகொள்ளுங்கள்!
innahā
إِنَّهَا
நிச்சயமாக அது
qur'batun
قُرْبَةٌ
வணக்கம்
lahum
لَّهُمْۚ
அவர்களுக்கு
sayud'khiluhumu
سَيُدْخِلُهُمُ
நுழைப்பான்/அவர்களை
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
fī raḥmatihi
فِى رَحْمَتِهِۦٓۗ
தன் கருணையில்
inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
ghafūrun
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
raḥīmun
رَّحِيمٌ
பெரும் கருணையாளன்
அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்ட (நாட்டுப்புறத்து) அரபிகளில் பலர் இருக்கின்றனர். அவர்கள், தாங்கள் செய்யும் தானங்களை அல்லாஹ்விடம் தங்களை நெருக்கமாக்கி வைக்கும் வணக்கங்களாகவும், (அவனுடைய) தூதரின் பிரார்த்தனை களுக்கு வழியாகவும் எடுத்துக் கொள்கின்றனர். நிச்சயமாக அது அவர்களை (அல்லாஹ்வுக்கு)ச் சமீபமாக்கும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ் அவர்களை அதிசீக்கிரத்தில் தன் அன்பிலும் புகுத்துவான். நிச்சயமாக அல்லாஹ் பிழை பொறுத்துக் கிருபை செய்பவனாக இருக்கின்றான். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௯௯)
Tafseer
௧௦௦

وَالسّٰبِقُوْنَ الْاَوَّلُوْنَ مِنَ الْمُهٰجِرِيْنَ وَالْاَنْصَارِ وَالَّذِيْنَ اتَّبَعُوْهُمْ بِاِحْسَانٍۙ رَّضِيَ اللّٰهُ عَنْهُمْ وَرَضُوْا عَنْهُ وَاَعَدَّ لَهُمْ جَنّٰتٍ تَجْرِيْ تَحْتَهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَآ اَبَدًا ۗذٰلِكَ الْفَوْزُ الْعَظِيْمُ ١٠٠

wal-sābiqūna
وَٱلسَّٰبِقُونَ
முந்தியவர்கள்
l-awalūna
ٱلْأَوَّلُونَ
முதலாமவர்கள்
mina l-muhājirīna
مِنَ ٱلْمُهَٰجِرِينَ
முஹாஜிர்களில்
wal-anṣāri
وَٱلْأَنصَارِ
இன்னும் அன்ஸாரிகள்
wa-alladhīna
وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
ittabaʿūhum
ٱتَّبَعُوهُم
பின்பற்றினார்கள் இவர்களை
bi-iḥ'sānin
بِإِحْسَٰنٍ
நல்லறத்தில்
raḍiya
رَّضِىَ
திருப்தியடைந்தான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ʿanhum
عَنْهُمْ
இவர்களைப் பற்றி
waraḍū
وَرَضُوا۟
இன்னும் திருப்தியடைந்தனர்
ʿanhu
عَنْهُ
அவனைப் பற்றி
wa-aʿadda
وَأَعَدَّ
இன்னும் ஏற்படுத்தினான்
lahum
لَهُمْ
இவர்களுக்கு
jannātin
جَنَّٰتٍ
சொர்க்கங்களை
tajrī
تَجْرِى
ஓடும்
taḥtahā
تَحْتَهَا
அவற்றின் கீழ்
l-anhāru
ٱلْأَنْهَٰرُ
நதிகள்
khālidīna
خَٰلِدِينَ
நிரந்தரமானவர்கள்
fīhā
فِيهَآ
அவற்றில்
abadan
أَبَدًاۚ
எப்போதும்
dhālika
ذَٰلِكَ
இது
l-fawzu l-ʿaẓīmu
ٱلْفَوْزُ ٱلْعَظِيمُ
வெற்றி/மகத்தானது
முஹாஜிர்களிலும் அன்ஸார்களிலும் எவர்கள் (இஸ்லாமில்) முதலாவதாக முந்திக் (கொண்டு நம்பிக்கை) கொண்டார்களோ அவர்களையும் நற்செயல்களில் (மெய்யாகவே) இவர்களைப் பின்பற்றியவர்களையும் பற்றி அல்லாஹ் திருப்தியடைகின்றான். இவர்களும் அல்லாஹ்வைப் பற்றி திருப்தியடைகின்றனர். அன்றி, தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகளை இவர்களுக்கென தயார்படுத்தி வைத்திருக்கின்றான். அவற்றிலேயே அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள். இதுதான் மகத்தான பெரும் வெற்றியாகும். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௧௦௦)
Tafseer