Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௯௬

Qur'an Surah Al-A'raf Verse 96

ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௯௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَوْ اَنَّ اَهْلَ الْقُرٰٓى اٰمَنُوْا وَاتَّقَوْا لَفَتَحْنَا عَلَيْهِمْ بَرَكٰتٍ مِّنَ السَّمَاۤءِ وَالْاَرْضِ وَلٰكِنْ كَذَّبُوْا فَاَخَذْنٰهُمْ بِمَا كَانُوْا يَكْسِبُوْنَ (الأعراف : ٧)

walaw anna ahla l-qurā
وَلَوْ أَنَّ أَهْلَ ٱلْقُرَىٰٓ
And if [that] people (of) the cities
இருந்தால்/நிச்சயமாக/ஊர்வாசிகள்
āmanū
ءَامَنُوا۟
(had) believed
நம்பிக்கை கொண்டனர்
wa-ittaqaw
وَٱتَّقَوْا۟
and feared Allah
இன்னும் அஞ்சினர்
lafataḥnā
لَفَتَحْنَا
surely We (would have) opened
திறந்திருப்போம்
ʿalayhim
عَلَيْهِم
upon them
அவர்கள் மீது
barakātin
بَرَكَٰتٍ
blessings
அருள்வளங்களை
mina
مِّنَ
from
இருந்து
l-samāi
ٱلسَّمَآءِ
the heaven
வானம்
wal-arḍi
وَٱلْأَرْضِ
and the earth
இன்னும் பூமி
walākin
وَلَٰكِن
but
எனினும்
kadhabū
كَذَّبُوا۟
they denied
பொய்ப்பித்தனர்
fa-akhadhnāhum
فَأَخَذْنَٰهُم
So We seized them
ஆகவே பிடித்தோம்/அவர்களை
bimā kānū yaksibūna
بِمَا كَانُوا۟ يَكْسِبُونَ
for what they used to earn
அல்லது செய்து கொண்டிருந்ததன் காரணமாக

Transliteration:

Wa law anna ahlal quraaa aamanoo wattaqaw lafatahnaa 'alaihim barakaatim minas samaaa'i wal ardi wa laakin kazzaboo fa akhaznaahum bimaa kaanoo yaksiboon (QS. al-ʾAʿrāf:96)

English Sahih International:

And if only the people of the cities had believed and feared Allah, We would have opened [i.e., bestowed] upon them blessings from the heaven and the earth; but they denied [the messengers], so We seized them for what they were earning. (QS. Al-A'raf, Ayah ௯௬)

Abdul Hameed Baqavi:

அவ்வூர்களில் இருந்தவர்கள் நம்பிக்கை கொண்டு (அல்லாஹ்வுக்குப்) பயந்து நடந்திருந்தால், அவர்களுக்காக வானத்திலும், பூமியிலும் உள்ள அருட்கொடைகளின் வாசல்களைத் திறந்து விட்டிருப்போம். எனினும், அவர்களோ (நபிமார்களை நம்பிக்கை கொள்ளாது) பொய்யாக்கினார்கள். ஆகவே, அவர்களுடைய (தீய) செயலின் காரணமாக நாம் (வேதனையைக் கொண்டு) அவர்களைப் பிடித்துக் கொண்டோம். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௯௬)

Jan Trust Foundation

நிச்சயமாக அவ்வூர்வாசிகள் ஈமான் கொண்டு அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்திருந்தால், நாம் அவர்களுக்கு வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் - பரகத்துகளை - பாக்கியங்களைத் திறந்து விட்டிருப்போம்; ஆனால் அவர்கள் (நபிமார்களை நம்பாது) பொய்ப்பித்தனர், ஆகவே அவர்கள் செய்து கொண்டிருந்த (பாவத்)தின் காரணமாக நாம் அவர்களைப் பிடித்தோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஊர்வாசிகள் நம்பிக்கை கொண்டு (அல்லாஹ்வை) அஞ்சி இருந்தால், அவர்கள் மீது வானம் இன்னும் பூமியிலிருந்து அருள்வளங்களை திறந்திருப்போம். எனினும், (அவர்களோ இறைத் தூதர்களைப்) பொய்ப்பித்தனர். ஆகவே, அவர்கள் செய்துகொண்டிருந்ததன் காரணமாக (வேதனையால்) அவர்களைப் பிடித்தோம்.