குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௯௫
Qur'an Surah Al-A'raf Verse 95
ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௯௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
ثُمَّ بَدَّلْنَا مَكَانَ السَّيِّئَةِ الْحَسَنَةَ حَتّٰى عَفَوْا وَّقَالُوْا قَدْ مَسَّ اٰبَاۤءَنَا الضَّرَّاۤءُ وَالسَّرَّاۤءُ فَاَخَذْنٰهُمْ بَغْتَةً وَّهُمْ لَا يَشْعُرُوْنَ (الأعراف : ٧)
- thumma
- ثُمَّ
- Then
- பிறகு
- baddalnā
- بَدَّلْنَا
- We changed
- மாற்றினோம்
- makāna
- مَكَانَ
- (in) place
- இடத்தில்
- l-sayi-ati
- ٱلسَّيِّئَةِ
- (of) the bad
- துன்பத்தின்
- l-ḥasanata
- ٱلْحَسَنَةَ
- the good
- இன்பத்தை
- ḥattā
- حَتَّىٰ
- until
- இறுதியாக
- ʿafaw
- عَفَوا۟
- they increased
- அவர்கள் அதிகரிக்கவே
- waqālū
- وَّقَالُوا۟
- and said
- இன்னும் கூறினர்
- qad massa
- قَدْ مَسَّ
- "Verily (had) touched
- அடைந்திருக்கிறது
- ābāanā
- ءَابَآءَنَا
- our forefathers
- எங்கள் மூதாதைகளை(யும்)
- l-ḍarāu
- ٱلضَّرَّآءُ
- the adversity
- நோய்
- wal-sarāu
- وَٱلسَّرَّآءُ
- and the ease"
- இன்னும் சுகம்
- fa-akhadhnāhum
- فَأَخَذْنَٰهُم
- So We seized them
- ஆகவே பிடித்தோம்/அவர்களை
- baghtatan
- بَغْتَةً
- suddenly
- திடீரென
- wahum lā yashʿurūna
- وَهُمْ لَا يَشْعُرُونَ
- while they (did) not perceive
- அவர்கள் உணராமல் இருக்கும் நிலையில்
Transliteration:
Summa baddalnaa makaa nas saiyi'atil hasanata hattaa 'afaw wa qaaloo qad massa aabaa'anad darraaa'u wassarraaa'u fa akhaznaahum baghtatanw wa hum laa yash'uroon(QS. al-ʾAʿrāf:95)
English Sahih International:
Then We exchanged in place of the bad [condition], good, until they increased [and prospered] and said, "Our fathers [also] were touched with hardship and ease." So We seized them suddenly while they did not perceive. (QS. Al-A'raf, Ayah ௯௫)
Abdul Hameed Baqavi:
பின்னர் நாம் அவர்களுடைய துன்பங்களுக்குப் பதிலாக இன்பங்களை கொடுக்கவே (அதனால்) அவர்களின் தொகை அதிகரித்து (கர்வம் கொண்டு) "நம்முடைய மூதாதைகளுக்குமே இத்தகைய சுக, துக்கம் ஏற்பட்டிருக்கின்றது" என்று (தாங்கள் அனுபவித்த தண்டனையை மறந்து) கூற ஆரம்பித்தனர். ஆதலால், அவர்கள் (ஒரு சிறிதும்) உணர்ந்துகொள்ளாத விதத்தில் நாம் அவர்களை (வேதனையைக் கொண்டு) திடீரென பிடித்துக் கொண்டோம். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௯௫)
Jan Trust Foundation
பின்னர் நாம் (அவர்களுடைய) துன்ப நிலைக்குப் பதிலாக (வசதிகளுள்ள) நல்ல நிலையில் மாற்றியமைத்தோம். அதில் அவர்கள் (செழித்துப் பல்கிப்) பெருகிய போது, அவர்கள்| நம்முடைய மூதாதையர்களுக்கும் தான் இத்தகைய துக்கமும் சுகமும் ஏற்பட்டடிருந்தன” என்று (அலட்சியமாகக்) கூறினார்கள் - ஆகையால் அவர்கள் உணர்ந்து கொள்ளாத நிலையில் அவர்களைத் திடீரென (வேதனையைக் கொண்டு) பிடித்தோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
பிறகு, துன்பத்தின் இடத்தில் இன்பத்தை மாற்றினோம். இறுதியாக அவர்கள் (எண்ணிக்கை) அதிகரிக்கவே “எங்கள் மூதாதைகளை(யும்) நோய், சுகம் (இப்படித்தான்) அடைந்திருக்கிறது” என்று கூறினர். ஆகவே, அவர்கள் உணராமல் இருக்கும் நிலையில் அவர்களைத் திடீரெனப் பிடித்தோம்.