Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௯௪

Qur'an Surah Al-A'raf Verse 94

ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௯௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَآ اَرْسَلْنَا فِيْ قَرْيَةٍ مِّنْ نَّبِيٍّ اِلَّآ اَخَذْنَآ اَهْلَهَا بِالْبَأْسَاۤءِ وَالضَّرَّاۤءِ لَعَلَّهُمْ يَضَّرَّعُوْنَ (الأعراف : ٧)

wamā arsalnā
وَمَآ أَرْسَلْنَا
And not We sent
நாம் அனுப்பவில்லை
fī qaryatin
فِى قَرْيَةٍ
in a city
ஓர் ஊரில்
min nabiyyin
مِّن نَّبِىٍّ
[of] any Prophet
எந்த ஒரு நபியையும்
illā akhadhnā
إِلَّآ أَخَذْنَآ
except We seized
தவிர/பிடித்தோம்
ahlahā
أَهْلَهَا
its people
அதில் வசிப்பவர்களை
bil-basāi
بِٱلْبَأْسَآءِ
with adversity
வறுமையைக் கொண்டு
wal-ḍarāi
وَٱلضَّرَّآءِ
and hardship
இன்னும் நோயைக் கொண்டு
laʿallahum yaḍḍarraʿūna
لَعَلَّهُمْ يَضَّرَّعُونَ
so that they may (become) humble
அவர்கள் பணிவதற்காக

Transliteration:

Wa maaa arsalnaa fee qaryatim min Nabiyyin illaaa akhaznaaa ahlahaa bil baasaaa'i waddarraaa'i la'allahum yaddarra'oon (QS. al-ʾAʿrāf:94)

English Sahih International:

And We sent to no city a prophet [who was denied] except that We seized its people with poverty and hardship that they might humble themselves [to Allah]. (QS. Al-A'raf, Ayah ௯௪)

Abdul Hameed Baqavi:

நாம் நபிமார்களை அனுப்பிவைத்த ஒவ்வொரு ஊர் மக்களையும் (அவர்கள் நபிமார்களை நிராகரித்து விட்டால்) அவர்கள் பணிந்து வருவதற்காக வறுமையைக் கொண்டும், நோயைக் கொண்டும் நாம் அவர்களைப் பிடிக்காமல் இருக்கவில்லை. (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௯௪)

Jan Trust Foundation

நாம் நபிமார்களை அனுப்பி வைத்த ஒவ்வோர் ஊரிலுள்ள மக்களையும், (அம் மக்கள்) பணிந்து நடப்பதற்காக, நாம் அவர்களை வறுமையாலும், பிணியாலும் பிடிக்காமல் (சோதிக்காமல்) இருந்ததில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நாம் எந்த ஒரு நபியையும் ஓர் ஊரில் அனுப்பவில்லை அதில் வசிப்பவர்கள் பணி(ந்து நம்மிடம் வரு)வதற்காக வறுமையைக் கொண்டும், நோயைக் கொண்டும் அவர்களை நாம் பிடித்தே தவிர.