குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௯௩
Qur'an Surah Al-A'raf Verse 93
ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௯௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَتَوَلّٰى عَنْهُمْ وَقَالَ يٰقَوْمِ لَقَدْ اَبْلَغْتُكُمْ رِسٰلٰتِ رَبِّيْ وَنَصَحْتُ لَكُمْۚ فَكَيْفَ اٰسٰى عَلٰى قَوْمٍ كٰفِرِيْنَ ࣖ (الأعراف : ٧)
- fatawallā
- فَتَوَلَّىٰ
- So he turned away
- ஆகவே விலகினார்
- ʿanhum
- عَنْهُمْ
- from them
- அவர்களை விட்டு
- waqāla
- وَقَالَ
- and said
- இன்னும் கூறினார்
- yāqawmi
- يَٰقَوْمِ
- "O my people!
- என் சமுதாயமே
- laqad ablaghtukum
- لَقَدْ أَبْلَغْتُكُمْ
- Verily I (have) conveyed to you
- திட்டமாக எடுத்துரைத்தேன்/உங்களுக்கு
- risālāti
- رِسَٰلَٰتِ
- (the) Messages
- தூதுகளை
- rabbī
- رَبِّى
- (of) my Lord
- என் இறைவனின்
- wanaṣaḥtu
- وَنَصَحْتُ
- and advised
- இன்னும் உபதேசித்தேன்
- lakum
- لَكُمْۖ
- [to] you
- உங்களுக்கு
- fakayfa
- فَكَيْفَ
- So how could
- ஆகவே எவ்வாறு
- āsā
- ءَاسَىٰ
- I grieve
- துயர்கொள்வேன் மீது
- ʿalā
- عَلَىٰ
- for
- சமுதாயத்தின்
- qawmin
- قَوْمٍ
- a people
- நிராகரிப்பாளர்களான
- kāfirīna
- كَٰفِرِينَ
- (who are) disbelievers?"
- Err
Transliteration:
Fatawalla 'anhum wa qaala yaa qawmi laqad ablaghtukum Risaalaati Rabbee wa nasahtu lakum fakaifa aasaa'alaa qawmin kaafireen(QS. al-ʾAʿrāf:93)
English Sahih International:
And he [i.e., Shuaib] turned away from them and said, "O my people, I had certainly conveyed to you the messages of my Lord and advised you, so how could I grieve for a disbelieving people?" (QS. Al-A'raf, Ayah ௯௩)
Abdul Hameed Baqavi:
(அது சமயம்) ஷுஐப் அவர்களிலிருந்து விலகி (அவர்களை நோக்கி) "என்னுடைய மக்களே! நிச்சயமாக நான் இறைவனின் தூதையே உங்களுக்கு எடுத்துரைத்து உங்களுக்கு நல்லுபதேசமும் செய்தேன். ஆகவே (அதனை) நிராகரித்த மக்களுக்காக நான் எவ்வாறு கவலை கொள்வேன்" என்று கூறினார். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௯௩)
Jan Trust Foundation
இதனால் (ஷுஐபு) அவர்களை விட்டு விலகிக்கொண்டார்; மேலும், “என் சமூகத்தவர்களே! மெய்யாகவே நான் உங்களுக்கு என் இறைவனுடைய தூதை எடுத்துக் கூறி வந்தேன், உங்களுக்கு நற்போதனையும் செய்தேன் - ஆனால் நிராகரிக்கும் மக்களுக்காக நான் எவ்வாறு கவலைப்படுவேன்” என்று அவர் கூறினார்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஆக, (ஷுஐப்) அவர்களை விட்டு விலகினார். “என் சமுதாயமே! என் இறைவனின் தூது (செய்தி)களை திட்டவட்டமாக உங்களுக்கு எடுத்துரைத் தேன். இன்னும், உங்களுக்கு உபதேசித்தேன். ஆகவே நிராகரிப்பாளர்களான சமுதாயத்தின் மீது எவ்வாறு துயர்கொள்வேன்” என்று (ஷுஐப்) கூறினார்.