Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௯

Qur'an Surah Al-A'raf Verse 9

ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَنْ خَفَّتْ مَوَازِيْنُهٗ فَاُولٰۤىِٕكَ الَّذِيْنَ خَسِرُوْٓا اَنْفُسَهُمْ بِمَا كَانُوْا بِاٰيٰتِنَا يَظْلِمُوْنَ (الأعراف : ٧)

waman khaffat
وَمَنْ خَفَّتْ
And (for) those (will be) light
எவர்/இலேசானது
mawāzīnuhu
مَوَٰزِينُهُۥ
his scales
அவருடைய நிறுவைகள்
fa-ulāika
فَأُو۟لَٰٓئِكَ
so those
அவர்கள்
alladhīna khasirū
ٱلَّذِينَ خَسِرُوٓا۟
(will be) the ones who lost
நஷ்டமிழைத்தவர்கள்
anfusahum
أَنفُسَهُم
themselves
தங்களுக்கே
bimā kānū
بِمَا كَانُوا۟
because they were
எதன்காரணமாக/ இருந்தனர்
biāyātinā
بِـَٔايَٰتِنَا
to Our Verses
நம் வசனங்களுக்கு
yaẓlimūna
يَظْلِمُونَ
(doing) injustice
அநீதியிழைக்கின்றனர்

Transliteration:

Wa man khaffat mawaazeenuhoo fa ulaaa'ikal lazeena khasirooo anfusahum bimaa kaanoo bi Aayaatinaa yazlimoon (QS. al-ʾAʿrāf:9)

English Sahih International:

And those whose scales are light – they are the ones who will lose themselves for what injustice they were doing toward Our verses. (QS. Al-A'raf, Ayah ௯)

Abdul Hameed Baqavi:

எவர்களுடைய (நன்மையின்) எடை (கனம் குறைந்து) இலேசாக இருக்கின்றதோ அவர்கள் நம்முடைய வசனங்களுக்கு மாறுசெய்து தங்களுக்குத் தாமே நஷ்டத்தை உண்டுபண்ணிக் கொண்டவர்கள் ஆவர். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௯)

Jan Trust Foundation

யாருடைய (நன்மையின்) எடை (குறைந்து) இலேசாக இருக்கின்றதோ, அவர்கள் நம் வசனங்களுக்கு மாறுசெய்த காரணத்தால், அவர்கள் தமக்கு தாமே நஷ்டம் விளைவித்துக் கொண்டவர்கள் ஆவார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

எவருடைய (நன்மையின்) நிறுவைகள் இலேசானதோ அவர்கள் தங்களுக்கே நஷ்டமிழைத்தவர்கள் ஆவர். காரணம், அவர்கள் நம் வசனங்களுக்கு அநீதியிழைத்துக் கொண்டிருந்தனர்.