Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௮௫

Qur'an Surah Al-A'raf Verse 85

ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௮௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِلٰى مَدْيَنَ اَخَاهُمْ شُعَيْبًاۗ قَالَ يٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَكُمْ مِّنْ اِلٰهٍ غَيْرُهٗۗ قَدْ جَاۤءَتْكُمْ بَيِّنَةٌ مِّنْ رَّبِّكُمْ فَاَوْفُوا الْكَيْلَ وَالْمِيْزَانَ وَلَا تَبْخَسُوا النَّاسَ اَشْيَاۤءَهُمْ وَلَا تُفْسِدُوْا فِى الْاَرْضِ بَعْدَ اِصْلَاحِهَاۗ ذٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَۚ (الأعراف : ٧)

wa-ilā madyana
وَإِلَىٰ مَدْيَنَ
And to Madyan
‘மத்யன்’க்கு
akhāhum
أَخَاهُمْ
his brother
சகோதரர்/அவர்களுடைய
shuʿayban
شُعَيْبًاۗ
Shuaib
‘ஷுஐப்’ஐ
qāla
قَالَ
He said
கூறினார்
yāqawmi
يَٰقَوْمِ
"O my people!
என் சமுதாயமே
uʿ'budū
ٱعْبُدُوا۟
Worship
வணங்குங்கள்
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்வை
mā lakum
مَا لَكُم
not for you
உங்களுக்கில்லை
min ilāhin
مِّنْ إِلَٰهٍ
any god
வணங்கப்படும் ஒரு கடவுள்
ghayruhu
غَيْرُهُۥۖ
other than Him
அவனையன்றி
qad jāatkum
قَدْ جَآءَتْكُم
Verily has came to you
வந்துவிட்டது/உங்களுக்கு
bayyinatun
بَيِّنَةٌ
a clear proof
ஓர் அத்தாட்சி
min
مِّن
from
இருந்து
rabbikum
رَّبِّكُمْۖ
your Lord
உங்கள் இறைவன்
fa-awfū
فَأَوْفُوا۟
So give full
ஆகவே முழுமையாக்குங்கள்
l-kayla
ٱلْكَيْلَ
[the] measure
அளவை
wal-mīzāna
وَٱلْمِيزَانَ
and the weight
இன்னும் நிறுவையை
walā tabkhasū
وَلَا تَبْخَسُوا۟
and (do) not deprive
குறைக்காதீர்கள்
l-nāsa
ٱلنَّاسَ
[the] people
மக்களுக்கு
ashyāahum
أَشْيَآءَهُمْ
in their things
பொருள்களில் அவர்களுடைய
walā tuf'sidū
وَلَا تُفْسِدُوا۟
and (do) not cause corruption
கலகம் செய்யாதீர்கள்
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
in the earth
பூமியில்
baʿda
بَعْدَ
after
பின்னர்
iṣ'lāḥihā
إِصْلَٰحِهَاۚ
its reformation
அது சீர்திருத்தப்பட்ட
dhālikum
ذَٰلِكُمْ
That
இவை
khayrun
خَيْرٌ
(is) better
சிறந்தது
lakum
لَّكُمْ
for you
உங்களுக்கு
in kuntum
إِن كُنتُم
if you are
நீங்கள் இருந்தால்
mu'minīna
مُّؤْمِنِينَ
believers
நம்பிக்கை கொள்பவர்களாக

Transliteration:

Wa ilaa Madyana akhaahum Shu'aybaa; qaala yaa qawmi' budul laaha maa lakum min ilaahin ghairuhoo qad jaaa'atkum baiyinatum mir Rabbikum fa awful kaila walmeezaana wa laa tabkhasun naasa ashyaa'ahum wa laa tufsidoo fil ardi ba'da islaahihaa; zaalikum khairul lakum in kuntum mu'mineen (QS. al-ʾAʿrāf:85)

English Sahih International:

And to [the people of] Madyan [We sent] their brother Shuaib. He said, "O my people, worship Allah; you have no deity other than Him. There has come to you clear evidence from your Lord. So fulfill the measure and weight and do not deprive people of their due and cause not corruption upon the earth after its reformation. That is better for you, if you should be believers. (QS. Al-A'raf, Ayah ௮௫)

Abdul Hameed Baqavi:

"மத்யன்" (என்னும்) நகரத்தாரிடம் அவர்களுடைய சகோதரர் "ஷுஐபை" (நம்முடைய தூதராக அனுப்பி வைத்தோம்.) அவர் (அவர்களை நோக்கி) "என்னுடைய மக்களே! அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு இறைவனில்லை. உங்கள் இறைவனிடமிருந்து நிச்சயமாக உங்களுக்குத் தெளிவான அத்தாட்சி வந்திருக்கின்றது. ஆகவே அளவை முழுமையாக அளந்து எடையை சரியாக நிறுங்கள். (நீங்கள் கொடுக்க வேண்டிய) மனிதர்களுடைய பொருள்களில் யாதொன்றையும் குறைத்து விடாதீர்கள். பூமியில் சமாதானமும் அமைதியும் ஏற்பட்டு) சீர்திருந்திய பின்னர் அதில் குழப்பத்தை உண்டுபண்ணாதீர்கள். மெய்யாகவே நீங்கள் (என் வார்த்தையை) நம்புபவர்களாக இருந்தால் இவைதான் உங்களுக்கு நன்மை பயக்கும்" என்று கூறினார். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௮௫)

Jan Trust Foundation

மத்யன் நகரவாசிகளிடம் அவர்களுடைய சகோதரராகிய ஷுஐபை (நம் தூதராக அனுப்பிவைத்தோம்) அவர் (தம் கூட்டத்தாரை நோக்கி,) “என் சமூகத்தார்களே! அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனன்றி உங்களுக்கு வேறு நாயனில்லை; நிச்சயமாக உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒரு தெளிவான (அத்தாட்சி) வந்துள்ளது; அளவை முழுமையாக அளந்து, எடையைச் சரியாக நிறுத்துக் கொடுங்கள். மனிதர்களுக்கு அவர்களுக்கு உரிய பொருட்களை (கொடுப்பதில்) குறைத்து விடாதீர்கள்; பூமியில் சீர் திருத்தம் ஏற்பட்ட பின்னர், அதில் குழப்பம் உண்டாக்காதீர்கள், நீங்கள் முஃமின்களாக இருந்தால், இதுவே உங்களுக்கு நன்மையாக இருக்கும்” என்று கூறினார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

‘மத்யன்’க்கு அவர்களுடைய சகோதரர் ‘ஷுஐப்’ஐ (தூதராக அனுப்பினோம்). அவர் “என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள். அவன் அன்றி வணங்கப்படும் (வேறு எந்த) ஒரு கடவுளும் உங்களுக்கு இல்லை. உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு ஓர் அத்தாட்சி வந்து விட்டது. ஆகவே, அளவையும் நிறுவையையும் முழுமையாக்குங்கள். மக்களுக்கு அவர்களுடைய பொருள்களைக் குறைக்காதீர்கள். பூமியில் அது சீர்திருத்தப்பட்(டு சமாதானம் ஏற்பட்)டப் பின்னர் கலகம் செய்யாதீர்கள். நீங்கள் நம்பிக்கை கொள்பவர்களாக இருந்தால் இவை உங்களுக்கு சிறந்ததாகும்”என்று கூறினார்.