Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௮௩

Qur'an Surah Al-A'raf Verse 83

ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௮௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاَنْجَيْنٰهُ وَاَهْلَهٗٓ اِلَّا امْرَاَتَهٗ كَانَتْ مِنَ الْغٰبِرِيْنَ (الأعراف : ٧)

fa-anjaynāhu
فَأَنجَيْنَٰهُ
So We saved him
ஆகவே, பாதுகாத்தோம்/அவரை
wa-ahlahu
وَأَهْلَهُۥٓ
and his family
இன்னும் அவருடைய குடும்பத்தை
illā
إِلَّا
except
தவிர
im'ra-atahu
ٱمْرَأَتَهُۥ
his wife
அவருடைய மனைவியை
kānat
كَانَتْ
she was
அவள் ஆகினாள்
mina l-ghābirīna
مِنَ ٱلْغَٰبِرِينَ
of those who stayed behind
தங்கியவர்களில்

Transliteration:

Fa anjainaahu wa ahlahooo illam ra atahoo kaanat minal ghaabireen (QS. al-ʾAʿrāf:83)

English Sahih International:

So We saved him and his family, except for his wife; she was of those who remained [with the evildoers]. (QS. Al-A'raf, Ayah ௮௩)

Abdul Hameed Baqavi:

ஆகவே, அவருடைய மனைவியைத் தவிர, அவரையும் (மற்ற) அவருடைய குடும்பத்தினரையும் பாதுகாத்துக் கொண்டோம். அவருடைய மனைவி (அவரைப்) பின்பற்றாதவர்களுடன் சேர்ந்துவிட்டாள். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௮௩)

Jan Trust Foundation

எனவே, அவருடைய மனைவியைத்தவிர, நாம் அவரையும்,அவர் குடும்பத்தாரையும் காப்பாற்றினோம். அவள் அழிந்து போவோரில் ஒருத்தியாக பின் தங்கி விட்டாள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆகவே, அவரையும் அவருடைய மனைவியைத் தவிர அவருடைய குடும்பத்தையும் பாதுகாத்தோம். அவள் (வேதனையில்) தங்கியவர்களில் ஆகினாள்.