குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௭௫
Qur'an Surah Al-A'raf Verse 75
ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௭௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالَ الْمَلَاُ الَّذِيْنَ اسْتَكْبَرُوْا مِنْ قَوْمِهٖ لِلَّذِيْنَ اسْتُضْعِفُوْا لِمَنْ اٰمَنَ مِنْهُمْ اَتَعْلَمُوْنَ اَنَّ صٰلِحًا مُّرْسَلٌ مِّنْ رَّبِّهٖۗ قَالُوْٓا اِنَّا بِمَآ اُرْسِلَ بِهٖ مُؤْمِنُوْنَ (الأعراف : ٧)
- qāla
- قَالَ
- Said
- கூறினார்(கள்)
- l-mala-u
- ٱلْمَلَأُ
- the chiefs
- தலைவர்கள்
- alladhīna
- ٱلَّذِينَ
- (of) those who
- எவர்கள்
- is'takbarū
- ٱسْتَكْبَرُوا۟
- were arrogant
- பெருமையடித்தனர்
- min qawmihi
- مِن قَوْمِهِۦ
- among his people
- அவருடைய சமுதாயத்தில்
- lilladhīna us'tuḍ'ʿifū
- لِلَّذِينَ ٱسْتُضْعِفُوا۟
- to those who were oppressed -
- எவர்களுக்கு/பலவீனர்களாக கருதப்பட்டனர்
- liman
- لِمَنْ
- [to] those who
- எவருக்கு
- āmana
- ءَامَنَ
- believed
- நம்பிக்கை கொண்டார்
- min'hum
- مِنْهُمْ
- among them
- அவர்களில்
- ataʿlamūna
- أَتَعْلَمُونَ
- "Do you know
- அறிவீர்களா?
- anna ṣāliḥan
- أَنَّ صَٰلِحًا
- that Salih
- நிச்சயமாக ஸாலிஹ்
- mur'salun
- مُّرْسَلٌ
- (is the) one sent
- அனுப்பப்பட்டவர்
- min rabbihi
- مِّن رَّبِّهِۦۚ
- from his Lord?"
- தன் இறைவனிடமிருந்து
- qālū
- قَالُوٓا۟
- They said
- கூறினார்கள்
- innā
- إِنَّا
- "Indeed we
- நிச்சயமாக நாங்கள்
- bimā
- بِمَآ
- in what
- எதைக் கொண்டு
- ur'sila
- أُرْسِلَ
- he has been sent
- அனுப்பப்பட்டார்
- bihi
- بِهِۦ
- with [it]
- அதைக் கொண்டு
- mu'minūna
- مُؤْمِنُونَ
- (are) believers"
- நம்பிக்கை கொண்டவர்கள்
Transliteration:
Qaalal mala ul lazeenas takbaroo min qawmihee lillazeenas tud'ifoo liman aamana minhum ata'almoona anna Saaliham mursalum mir Rabbih; qaalooo innaa bimaaa ursila bihee mu'minoon(QS. al-ʾAʿrāf:75)
English Sahih International:
Said the eminent ones who were arrogant among his people to those who were oppressed – to those who believed among them, "Do you [actually] know that Saleh is sent from his Lord?" They said, "Indeed we, in that with which he was sent, are believers." (QS. Al-A'raf, Ayah ௭௫)
Abdul Hameed Baqavi:
அதற்கு அவருடைய மக்களில் கர்வம் கொண்டிருந்த தலைவர்கள், தங்களைவிட தாழ்ந்தவர்களென எண்ணிக் கொண்டிருந்த நம்பிக்கையாளர்களை நோக்கி "நிச்சயமாக இந்த ஸாலிஹ் தம் இறைவனால் அனுப்பப்பட்ட ஒரு தூதரென நீங்கள் உறுதியாக நம்புகின்றீர்களா?" என்று கேட்டார்கள். அதற்கவர்கள் "நிச்சயமாக நாங்கள் அவர் கொண்டுவந்த தூதை நம்பிக்கை கொள்கின்றோம்" என்று கூறினார்கள். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௭௫)
Jan Trust Foundation
அவருடைய சமூகத்தாரில், (ஈமான் கொள்ளாமல்) பெருமையடித்துக் கொண்டிருந்த தலைவர்கள் பலஹீனர்களாக கருதப்பட்ட ஈமான் கொண்டவர்களை நோக்கி| “நிச்சயமாக ஸாலிஹ் அவருடைய இறைவனிடமிருந்து அனுப்பப்பட்ட தூதரென நீங்கள் உறுதியாக அறிவீர்களோ?” எனக் கேட்டார்கள் - அதற்கு அவர்கள், “நிச்சயமாக நாங்கள் அவர் மூலம் அனுப்பப்பட்ட தூதை நம்புகிறோம்” என்று (பதில்) கூறினார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவருடைய சமுதாயத்தில் பெருமையடித்த தலைவர்கள், அவர்களில் பலவீனர்களாக கருதப்பட்ட நம்பிக்கை கொண்டவர்களுக்கு (அவர்களை நோக்கி) “நிச்சயமாக ஸாலிஹ் தன் இறைவனிடமிருந்து அனுப்பப்பட்ட (தூது)வர் என்று நீங்கள் அறிவீர்களா?” என்று கூறினார்கள். “நிச்சயமாக நாங்கள் அவர் அனுப்பப்பட்டதைக் கொண்டு நம்பிக்கை கொண்டவர்கள்” என்று (பின்பற்றியவர்கள்) கூறினார்கள்.