Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௭௩

Qur'an Surah Al-A'raf Verse 73

ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௭௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِلٰى ثَمُوْدَ اَخَاهُمْ صٰلِحًاۘ قَالَ يٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَكُمْ مِّنْ اِلٰهٍ غَيْرُهٗۗ قَدْ جَاۤءَتْكُمْ بَيِّنَةٌ مِّنْ رَّبِّكُمْۗ هٰذِهٖ نَاقَةُ اللّٰهِ لَكُمْ اٰيَةً فَذَرُوْهَا تَأْكُلْ فِيْٓ اَرْضِ اللّٰهِ وَلَا تَمَسُّوْهَا بِسُوْۤءٍ فَيَأْخُذَكُمْ عَذَابٌ اَلِيْمٌ (الأعراف : ٧)

wa-ilā thamūda
وَإِلَىٰ ثَمُودَ
And to Thamud
‘ஸமூது’க்கு
akhāhum
أَخَاهُمْ
(We sent) their brother
அவர்களுடைய சகோதரர்
ṣāliḥan
صَٰلِحًاۗ
Salih
ஸாலிஹை
qāla
قَالَ
He said
கூறினார்
yāqawmi
يَٰقَوْمِ
"O my people!
என் சமுதாயமே
uʿ'budū
ٱعْبُدُوا۟
Worship
வணங்குங்கள்
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்வை
mā lakum
مَا لَكُم
not for you
உங்களுக்கில்லை
min ilāhin
مِّنْ إِلَٰهٍ
any god
வணங்கப்படும் ஒரு கடவுள்
ghayruhu
غَيْرُهُۥۖ
other than Him
அவனையன்றி
qad jāatkum
قَدْ جَآءَتْكُم
Verily has come to you
வந்து விட்டது/உங்களிடம்
bayyinatun
بَيِّنَةٌ
a clear proof
ஓர் அத்தாட்சி
min
مِّن
from
இருந்து
rabbikum
رَّبِّكُمْۖ
your Lord
உங்கள் இறைவன்
hādhihi
هَٰذِهِۦ
This
இது
nāqatu
نَاقَةُ
(is) a she-camel
ஒட்டகம்
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வுடைய
lakum
لَكُمْ
(it is) for you
உங்களுக்கு
āyatan
ءَايَةًۖ
a Sign
ஓர் அத்தாட்சியாக
fadharūhā
فَذَرُوهَا
So you leave her
ஆகவே, விட்டு விடுங்கள்/அதை
takul
تَأْكُلْ
(to) eat
அது மேயும்
fī arḍi
فِىٓ أَرْضِ
on (the) earth
பூமியில்
l-lahi
ٱللَّهِۖ
(of) Allah
அல்லாஹ்வுடைய
walā tamassūhā
وَلَا تَمَسُّوهَا
and (do) not touch her
அதை தொடாதீர்கள்
bisūin
بِسُوٓءٍ
with harm
தீமையைக் கொண்டு
fayakhudhakum
فَيَأْخُذَكُمْ
lest seizes you
பிடிக்கும்/உங்களை
ʿadhābun
عَذَابٌ
a punishment
வேதனை
alīmun
أَلِيمٌ
painful"
துன்புறுத்தும்

Transliteration:

Wa ilaa Samooda akhaahum Saalihaa; qaala yaa qawmi' budul laaha maa lakum min ilaahin ghairuhoo qad jaaa'atkum baiyinatum mir Rabbikum haazihee naaqatul laahi lakum Aayatan fazaroohaa taakul feee ardil laahi wa laa tamassoohaa bisooo'in fa yaakhuzakum 'azaabun aleem (QS. al-ʾAʿrāf:73)

English Sahih International:

And to the Thamud [We sent] their brother Saleh. He said, "O my people, worship Allah; you have no deity other than Him. There has come to you clear evidence from your Lord. This is the she-camel of Allah [sent] to you as a sign. So leave her to eat within Allah's land and do not touch her with harm, lest there seize you a painful punishment. (QS. Al-A'raf, Ayah ௭௩)

Abdul Hameed Baqavi:

"ஸமூத்" (என்னும்) மக்களிடம் அவர்களுடைய சகோதரர் "ஸாலிஹை" (நம்முடைய தூதராக அனுப்பி வைத்தோம்.) அவர் (அவர்களை நோக்கி) "என்னுடைய மக்களே! அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். உங்களுக்கு அவனைத் தவிர வேறு இறைவனில்லை. (இதற்காக) உங்கள் இறைவனிடம் இருந்து தெளிவான ஓர் அத்தாட்சியும் உங்களிடம் வந்திருக்கின்றது. இது அல்லாஹ்வுடைய ஒட்டகமாகும். (இது) உங்களுக்கோர் அத்தாட்சியாகவும் இருக்கின்றது. ஆகவே, அதனை அல்லாஹ் வுடைய பூமியில் (எங்கும் தடையின்றி தாராளமாக) மேய விடுங்கள். அதற்கு எத்தகைய தீங்கும் செய்யாதீர்கள். (அவ்வாறு செய்தால்) துன்புறுத்தும் வேதனை உங்களைப் பிடித்துக் கொள்ளும்" என்று கூறினார். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௭௩)

Jan Trust Foundation

“ஸமூது” கூட்டத்தாரிடம், அவர்கள் சகோதரராகிய ஸாலிஹை (நம் தூதராக அனுப்பி வைத்தோம்); அவர் (அவர்களை நோக்கி) “என் சமூகத்தார்களே! அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனன்றி உங்களுக்கு வேறு நாயனில்லை; இதற்காக, நிச்சயமாக உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒரு தெளிவான அத்தாட்சியும் வந்துள்ளது; அல்லாஹ்வுடைய இந்த ஒட்டகமானது உங்களுக்கு ஓர் அத்தாட்சியாக வந்துள்ளது; எனவே இதை அல்லாஹ்வின் பூமியில் (தடையேதுமின்றி) மேய விடுங்கள் - அதை எத்தகைய தீங்கும் கொண்டு தீண்டாதீர்கள், அப்படிச்செய்தால் உங்களை நோவினை செய்யும் கடும் வேதனை பிடித்துக் கொள்ளும்” என்று கூறினார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

‘ஸமூது’ (சமுதாயத்தினரு)க்கு அவர்களுடைய சகோதரர் ‘ஸாலிஹ்’ ஐ (அனுப்பி வைத்தோம்). “என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள். அவன் அன்றி வணங்கப்படும் (எந்த) ஒரு கடவுளும் உங்களுக்கில்லை. உங்கள் இறைவனிடம் இருந்து ஓர் அத்தாட்சி உங்களிடம் வந்துவிட்டது. இது உங்களுக்கு ஓர் அத்தாட்சியாக (வந்த) அல்லாஹ்வுடைய ஒட்டகமாகும். ஆகவே, அதை (தொந்தரவின்றி) விட்டு விடுங்கள், அல்லாஹ்வுடைய பூமியில் அது (சுற்றித்திரிந்து) மேயும். அதை தீமையைக் கொண்டு தொடாதீர்கள். (அவ்வாறு செய்தால்) துன்புறுத்தும் வேதனை உங்களைப் பிடிக்கும்”என்று (அவர்) கூறினார்.